Thursday, 25 August 2016

கனவுக் கன்னி தெரியாமல் போயிருப்பாளா :)

             ''என்னங்க , தூங்குறப்போ எதுக்கு கண்ணாடியை  போட்டுக்கிறீங்க  ?''
            ''கனவுலே எல்லாமே கலங்கலாத்  தெரியுதே !''
நல்ல வேளை,தமிழில் மொழிபெயர்க்கலே :)
         '' நம்ம சென்னை ஏர்போர்ட்டில்,மேற்கூரை ,கண்ணாடி எல்லாம் அடிக்கடி இடிந்து விழுதுன்னு சொல்றாங்க,நீங்களும் எதுக்கு இடிந்து போய் உட்கார்ந்து இருக்கீங்க ?'' 
         ''எல்லாம் இந்த போர்டைப் படித்துதான் !''
இது பாசமில்லே ,பயம் !
          ''பெண்டாட்டி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறீங்களே ,அவ்வளவு பாசமா ?''
          ''அட நீங்க வேற ,ஆசையா கேட்டதை வாங்கித் தரலைன்னா ஏழு ஜென்மத்திலேயும் இவதான் பெண்டாட்டியா வருவான்னு ஜோதிடர் சொல்றாரே !''

ராதா எப்பவுமே ராதாதான் !
           ''ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லத் தெரியலே ,உங்க தெருவிலே இருக்கிற பொண்ணுங்க பேரை கேட்டா மட்டும் தலை கீழா சொல்லுவே !''
            ''அதெல்லாம் இல்லை சார் !''
            ''என்னாஅதெல்லாம் இல்லே ?''
             ''ராதாவை  ராதான்னுதான் சொல்லுவேன் ...தாரான்னு சொல்லமாட்டேன் சார் !''

சினிமா மோகம் படுத்தும் பாடு :)
       சாத்தானின் சமையல் அறையை  ...
       கேள்விப்பட்டு இருப்போம் ,பார்த்தும் இருப்போம் 
       ஆனாலும் எதுவென்று நினைவுக்கு வராது ...
        ஏன்னா,அதையும் நாம் குணா குகை ஆக்கிவிட்டோமே ! 
---------------------------------------------------------------------------------------------------------
    குறிப்பு ...கொடைக்கானல் குணா குகையின் உண்மையான பெயர் 'Devil's kitchen ,தமிழில் சாத்தானின்  சமையல் அறை ,சரிதானே ?

Wednesday, 24 August 2016

ரதியை எதிர்பார்த்து ஏமாந்த மன்மதன் :)

             ''இவ்வளவு அசிங்கமா ஒரு பொண்ணை  வச்சுகிட்டு ,எங்களை எதுக்கு பெண் பார்க்க  வரச் சொன்னீங்க ?''
             ''அழகான மணப்பெண் தேவைன்னு விளம்பரம் கொடுத்த மன்மதன் யார்னு  பார்க்கத்தான்  !'' 
இவர்  மனோதத்துவ டாக்டர்  ஆச்சே :)             
     ''நர்ஸிங் படிக்காத அழகான பெண் வேலைக்கு தேவைன்னு எதுக்கு டாக்டர் கேட்கிறீங்க ?''
     ''பீஸ் வசூலிக்கத்தான்....நான் கேட்டா , நூறு ரூபாய் தரவும்  அழுவுறாங்களே!''

டேட்டிங் காதல் எல்லாம் இப்படித்தான் புட்டுக்குமோ ?
       ''காதலனை நம்பி அவன் பெயரை பச்சைக் குத்திக்கிட்டியே ...இப்போ விட்டுட்டு போயிட்டானே ,என்னடி  செய்யப் போறே ?''
      ''அதே பெயருள்ள வரனைப் பாருங்க ,கல்யாணம் கட்டிக்கிறேன் !''

இந்த குணம் புருஷ லட்சணம் ஆகுமா ?
'        'என்  புருஷனை மாதிரி ஒரு அல்பத்தை பார்த்ததே இல்லை...செருப்பு அறுந்துப் போச்சுன்னு சொன்னா ,நாலு நாள் பொறுத்துக்கோன்னு சொல்றார்டி !''
         ''ஒண்ணாம் தேதி வரணுமாமா ?''
        ''இல்லே ,கல்யாணத்துக்கு போற இடத்திலே பார்த்துக்கலாமாம் !''

சாப்ட்வேர் வேலைக்கு சம்பளம் அதிகம் ,நியாயம்தானே ?
      வியர்க்க வியர்க்க ஹார்ட்வேர் வேலை செய்பவனை விட ...
      ஏசியில் உட்கார்ந்து சாப்ட்வேர் வேலை செய்பவனுக்கு சம்பளம் அதிகம் !
      காரணம் என்னவென்றால் ...
      தேக வேலைக்கு லட்சம் பேர்என்றால்
      மூளை வேலைக்கு சிலபேர்கள்தான்  FIT ! 

Tuesday, 23 August 2016

ஷ என்றாலே ஷகிலா நினைப்புதானா :)

பஞ்ச்  டயலாக்  சொன்னாதான் பயபிள்ளே  மண்டையில் ஏறுது  :)
             ''என்னடா ,ஸ்கூலுக்கு சீக்கிரமா கிளம்பிட்டே ?''
             ''புதுசா வந்திருக்கிற  வாத்தியார் 'எனக்கு எல்லா  மதமும் பிடிக்கும்  ,தாமதம் மட்டும் பிடிக்கவே பிடிக்காது'ன்னு சொல்றாரே !''

இருந்தால் தானே சலவை செய்ய :)                  
         ''என்னங்க ,நம்ம பையன் சரியா படிக்க மாட்டேங்கிறான் ,தீவிரவாதி ஆயிடுவான் போலிருக்குங்க !''
          'ஒண்ணும்  கவலைப் படாதே ,யாரும் அவனை 'மூளைச் சலவை 'செய்ய முடியாது !''
                                                                                                
 ஷ என்றாலே ஷகிலா நினைப்புதானா ?                    
              ''தமிழ் வாத்தியார்  எதுக்கு உன்னை வகுப்பை விட்டு வெளியே போகச் சொன்னார் ?''       
             ''ஷ என்பது வடஎழுத்து நாம பயன்படுத்தக் கூடாதுன்னு அவர் சொன்னப்போ...ஷகிலாவுக்கு வர்ற ஷ தானேன்னு கேட்டேன்  !''
என்னவோ ஏதோன்னு பயந்தே போனேன் !           
        ''நாலாவது மாடி ஜன்னலிலே பெயிண்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன் ,மேலேயிருந்து கீழே விழுந்து ...''
        ''அய்யய்யோ என்னாச்சு ?''
        ''பெயிண்ட் எல்லாம் கொட்டிப் போச்சு !''

மனைவியினால் அதுவும் கிடைக்கும் ,இதுவும் கிடைக்கும் !
        மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான் ...
        சில வீடுகளில், கணவன்மார்களுக்கு வாய்க்கு ருசியா சாப்பாடும்...
        சில வீடுகளில் ,கணவன்மார்கள் வலி தாங்க முடியாமல் போடும்     கூப்பாடும் ...
        எல்லாமே மனைவி கையில் இருக்கும் கரண்டியின் 'கை'ங்கர்யத்தால் !

Monday, 22 August 2016

மாமியார் மேல் இம்புட்டு பாசமா:)

பதவிக்கு தகுந்த மரியாதை வேண்டாமா :)
            ''பத்தாயிரம் ரூபாய் லஞ்சம்  வாங்கி பிடிபட்ட நீதிபதியை ,அவரோட மனைவியே டைவர்ஸ் பண்ணிட்டாங்களாமே!''
         ''கேவலம் ஒரு பத்தாயிரம் ரூபாய் வாங்கியா மாட்டிக்கிறது என்று அவருக்கு வருத்தமாம் !''
   
 ஆஹா ,என்ன பொருத்தம் :)
         ''இத்தனை வருடமா  டார்வின் தியரி தப்புன்னு இருந்த ,உங்களை ஒரு படம் மாத்திடுச்சா ,அப்படியென்ன  படம் ?''
        ''இதோ ,இந்த படம்தான் !''
மாமியார் மேல் இம்புட்டு பாசமா :)
         ''கல்யாணம் ஆனதும் பிள்ளையைப் பெத்துக்கணும்னுஅவசரப் படுறீயே,ஏண்டி ?''
         ''பேரப்பிள்ளையே கண்ணாறப் பார்த்த பிறகுதான் ,நிம்மதியா கண்ணை மூடுவேன்னு என் மாமியார் சொல்றாங்களே !''

 மனுஷன் ,மனைவிகிட்டே நிறைய வாங்குபட்டிருப்பாரோ :)
          ''மாப்பிள்ளே ,நீதிபதியா இருந்த  நான்  ,இதுவரை யாருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததில்லை.... அதை நீங்க ஏன்  ஏத்துக்க  மறுக்கிறீங்க ? '' 
         ''அந்தக் கொடுமையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே !''

தண்டவாளத்தில் தலை வைத்தும் மரணிக்காத தலைவர்கள் :)
   கையைக் காட்டினால் நிற்கும்  மினி பஸ் மாதிரி 
  நூறு  கிமீ வேகத்தில் செல்கின்ற  ரயிலும் நிற்கும் என 
  நினைக்கும் பாமர ஜனங்கள் ...
  ரயில் மறியல் செய்யும் நம்ம ஊர் அரசியல்வாதிகளிடம் இருந்து 
 நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது !

Sunday, 21 August 2016

தாலி கட்டிகிட்டவளுக்கு இல்லாத உரிமையா :)

நாக்கு மூக்க நாக்கு மூக்க தத்துவம் :)             
           ''அவருக்கு ஜலதோஷம்  வந்தாலும் வந்தது  தத்துவமா சொல்ல ஆரம்பித்து விட்டாரா ,எப்படி ?'' 
             ''ஜல தோஷம் கூட மூணு நாள் இருக்கும் ,சந்தோஷம்  வர்றதும் போறதும் தெரியாதுன்னு சொல்றாரே !''

கணவன் கையாலே பாஸ்ட் புட் சாப்பிட ஆசை :)
          ''உங்க லேடீஸ் கிளப் பக்கம்  என்னை வரவே கூடானுன்னு சொல்லுவே ,இப்ப எதுக்கு வரச் சொல்றே ?''
         ''சமையல் கலை நிபுணர் வந்து பாஸ்ட் புட் ஐட்டம் சமைக்க கற்றுக் கொடுக்கிறார்,நீங்க தெரிஞ்சுக்க வேணாமா ?''

இவருக்கு திட்டு வாங்கிறதே பொழப்பாப் போச்சு:)
         ''ஏண்டா ,கிடைச்ச கண்டக்டர் வேலையே ராஜினாமா பண்ணிட்டே ?''
         ''பஸ்ஸை ஸ்டாப்பில் நிறுத்தாம போனா வெளியே நிற்கிறவங்க திட்டுறாங்க ,எல்லா ஸ்டாப்பிலும்  நிறுத்தினா உள்ளே இருக்கிறவங்க திட்டுறாங்களே !"

தாலி கட்டிகிட்டவளுக்கு இல்லாத உரிமையா :)
          ''ஒரு நடிகையை உங்க பைலட் சீட்டிலே உட்கார வச்சதுக்காக சஸ்பென்ட் ஆகி  இருக்கீங்க  ,இதுக்காக வருத்தப் படுறீங்களா ?''
           ''இன்னொரு தரம் சஸ்பென்ட் ஆனாலும் பரவாயில்லே ,நானும் அந்த சீட்டிலே உட்கார்ந்தே ஆகணும்னு என் பெண்டாட்டி சொல்றதுதான் வருத்தமா இருக்கு !
நினைச்சாலே கண்ணீர் தருதே வெங்காயம் :)
         கவுன்ட் டௌன் ஆரம்பித்த பிறகும் 
        மேலே போக மறுக்கிறது GSLV ராக்கெட் ...
        அது அடைய வேண்டிய உயரத்தை 
        வெங்காயம்  அடிக்கடி தொடுவதாலா ?