31 December 2012

'சிரி'கவிதை!நின்று கொல்லும் சிலந்தி !

படை எங்கும் செல்லாமல் எதிரியைக் கொல்கிறது ...
நூலாம் படை !


தின 'சிரி ' ஜோக்!யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிறே?''நடுவிலே கொஞ்சம் பக்கத்தை காணாம் ,நீ  பார்த்தியா ?''
''காணாம்னா கிழிச்சவங்க கிட்டே தான் கேக்கணும் ,எனக்கென்ன  தெரியும் ?''


30 December 2012

'சிரி'கவிதை!இரண்டு கொள்கைக்கும் வித்தியாசம் ,,?திட்டமிட்டு கொள்ளை அடிப்பவன் கொள்ளைக்காரன் !
திட்டத்தின் பேரால் கொள்ளை அடிப்பவன்  அரசியல்வாதி !

தின 'சிரி ' ஜோக்!இவரோட கொள்கைப் பிடிப்பு யாருக்கு இருக்கு ?

''பிச்சைப் போடும் போது இடது கையை  பின்னாலே  வைச்சுக்கிரிங்களே ,ஏன்?''
''வலது கை கொடுப்பது  இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு நினைக்கிறேன் !''


29 December 2012

'சிரி'கவிதை!நடு இரவில் இளம்பெண் தனியாக நடக்க முடிக்கிறதா ?உண்மை சுதந்திரம் இன்னும் வரவில்லை ...
தேசப் பிதாவின் தீர்க்கத் தரிசன வார்த்தைகள் ...
நடு இரவில்சாலையில்  இளம்பெண்  தனியாக நடக்க முடியும்
நாளே உண்மையான சுதந்திர நாள் ! 

தின 'சிரி ' ஜோக்!கொள்ளையர்களுக்கு பொருத்தமானப் பட்டம்!


''கீ  ஹோல்  ஆபரேஷன்  எக்ஸ்பெர்ட் ன்னு  டாக்டர்களை சொல்ற மாதிரி கொள்ளையர்களையும் சொல்லலாம் !''
''ஏன் ?''
''சாவியே இல்லாமே எந்த கதவையும் திறந்துடுறாங்களே !''28 December 2012

தின 'சிரி ' ஜோக்!கோளாறு எங்கேன்னு கண்டுப் பிடிங்க !

''ரோஜா செடி இருந்த  பூந்தொட்டியை ஏன்  உடைக்கிறிங்க ?''
''ஒரு லிட்டர்  தண்ணி  ஊத்தினா  நாலு லிட்டர் தண்ணி வழிஞ்சு  தரையெல்லாம் ஈரமாகுதே !''


'சிரி'கவிதை!கட்டிக் கிட்டாலும் ,வைச்சுக் கிட்டாலும் தப்புதானே?!ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நமது பண்பாடு என 
மேடை தோறும்  முழங்கும்  தலைவருக்கு  இருப்பதோ ...
ஊருக்கு  ஒருத்தி !

27 December 2012

'சிரி'கவிதை!இது ஜோக்காளியின் 'copy right 'கண்டுபிடிப்பு!விட்டுக் கொடுப்பவர்கள் மட்டுமல்ல ...
'விட் 'டு  அடிப்பவர்களும் கெட்டுப் போவதில்லை !

தின 'சிரி ' ஜோக்!லாபம்தான் முக்கியம் ,உயிர்களைப் பற்றி கவலையில்லை போலிருக்கே !

''பட்டாலும் புரியாது ,பட்டாசு வெடிச்சாலும் புரியாதுன்னு  சொல்றிங்களே ,ஏன்?''
''தொடர்ந்து பட்டாசு ஆலை விபத்துக்கள் நடக்குது !முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கிற மாதிரி தெரியலேயே ?''


26 December 2012

சிரி'கவிதை!தேர்தல் ..தொடக்கமும் ,முடிவும் !

தேர்தல் ...
மனுத் தாக்கலில் தொடங்கி 
மனுசத் தாக்குதலில்  முடிவது !

 

தின 'சிரி ' ஜோக்!குண்டம்மா தடை சட்டம் வருமா ?


''மை  லார்ட் !என் கட்சிக்காரர்  பெண்மணி என்பதால் குண்டர் தடை சட்டத்தின்  கீழ் அவரை கைது செய்தது செல்லாது என அறிவிக்க கோருகிறேன் ''25 December 2012

'சிரி'கவிதை!இதுக்கு காவிரித் தண்ணீர் தேவையில்லை!திருமணம் ஆயிரம் காலத்து பயிர் ...
வரதட்சனைத் தண்ணீரால் 
வாடாமல் வளரும் அபூர்வப் பயிர் !

தின 'சிரி ' ஜோக்!நாட்டுப் பற்றிலே இது ஒருவகை !''நாட்டுப் பற்று அதிகமா இருப்பதால்தான் குடிக்கிறேன்னு சொல்றியே ,ஏன்?''
''டாஸ்மாக் வியாபாரம் நொடிச்சுப் போச்சுன்னா அரசாங்கம் பணத்துக்கு எங்கே போகுங்கிறனாலே தான் !''

24 December 2012

'சிரி'கவிதை!கணவன் ,மனைவிகள் கற்பூர வாசனை அறியாதவர்களா?கழுதைகள் உதைக்கும் காரணம் புரிந்தது ...
கணவன் ,மனைவிகள் எல்லாம் 
'கழுதைக்கு வாழ்க்கைப் பட்டாச்சு 'என்றபோது !

தின 'சிரி ' ஜோக்! வங்கி கணக்குமா கரெண்ட் கட் ?''அவர் கொடுத்த செக் எல்லாம் பணம் இல்லாமே திரும்ப வருதே ,ஏன்?''
''அவர் பேங்க் கரண்ட் அக்கௌன்ட் ,கரண்ட்கட்  அக்கௌன்ட்ஆகி இருக்கும் !''

23 December 2012

'சிரி'கவிதை!பொன் நகைகளின் இருப்பிடம் !


கோடீஸ்வரர்களின் நகைகளும் 
நடுத்தர வர்க்க நகைகளும் 
வங்கிகளில்தான் அடைக்கலம் ...
ஒன்று சேப்டி லாக்கரில் ,
இன்னொன்று நகைகடன் கணக்கில்!

தின 'சிரி ' ஜோக்!நடிகைன்னா எதுவும் வரக்கூடாதாஅந்தநடிகைக்கு  டான்சில் ஆப்ரேசன்னு சொன்னா டைரக்டர் கமெண்ட் அடிக்கிறாரே ,என்னது ?''
''டான்சில் தான் வீக் ,டான்சிலுமா வீக்னு கேக்கிறார் ''

22 December 2012

'சிரி'கவிதை!எல்லோர் கண்ணிலும் வந்தால் அது 'மெட்ராஸ் eye !நான்கு விழிகள் சந்தித்த கணத்திலேயே 
 பற்றிக் 'கொல்லும் 'தொற்று நோயா ...காதல் ?

தின 'சிரி ' ஜோக்!வடிவேலு ..புண்ணாக்கு ஆன புலிகேசியா ?


வடிவேலு ..புண்ணாக்கு ஆன புலிகேசியா ?
''நம்ம வடிவேலு சுயசரிதை எழுதினா ,புண்ணாக்கு ஆன புலிகேசின்னு வைப்பார்னு சொல்றியே ,ஏன்?''
''சினிமாவில் அவர் உச்சத்தில் இருக்கும்போது 'புலிகேசிஆன புண்ணாக்குன்னு எழுதியவர் ஆச்சே !''

21 December 2012

'சிரி'கவிதை!பழமொழி சொன்னவன் தீர்க்கதரிசி !ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு ...
திராவிடத் தலைவர்களுக்காவே சொல்லப் பட்டதா?

தின 'சிரி ' ஜோக்!இரண்டு தொழிலும் இரண்டு கண்ணு மாதிரி !
''கல்யாண தரகர் வெல்டிங் பட்டறையும் வைச்சுக்கிட்டு இருக்கார் போலிருக்கு !''
''ஏன்?''
''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே போட்டுக்கிட்டு இருக்காரே!''

20 December 2012

'சிரி'கவிதை!பேங்க் பாலன்சை சொல்லலீங்க


கயிற்றின் மேல்  அடி மேல் அடி வைத்து 
கழைக் கூத்தாடி  கற்று தந்தான் ...
'பாலன்ஸ் 'வந்தால் பயம் போய்விடுமென்று !

தின 'சிரி ' ஜோக்!கரெண்ட் கட் நேரத்திலே யோசிப்பாங்களோ ?''ஆந்தைக் கண்களை எடுத்து மனுசனுக்கு வைக்க முடிஞ்சா நல்லதுன்னு சொல்றிங்களே ,ஏன்?''
''கரெண்ட் போனாலும்  பார்க்க முடியும்ன்னுதான் ''


19 December 2012

'சிரி'கவிதை!லாட்டிரி யோகம் எல்லோருக்கும் உண்டா ?


லாட்டிரி யோகம் எல்லோருக்கும் உண்டா ?

விட்டதை விட்ட இடத்தில் பிடிக்க வேண்டுமென 
விட்டத்தை பிடித்த அப்பாவின் நிழல் ..
அவர் விட்டுசென்ற பெட்டியில் 
கட்டு கட்டாய் லாட்டிரி சீட்டுகளில் !

தின 'சிரி ' ஜோக்!நாராயண சாமிகள் மன்னிப்பார்களாக!


''அவர்கிட்டே கொடுத்த கடனை எப்பக்  கேட்டாலும் பதினைந்து நாள் கழித்து தர்றேன்னு சொல்றார் ,
அதனாலே நான் ஒரு முடிவு எடுத்துட்டேன் !''
''எப்படி?''
''நாராயணசாமின்னு பெயர் உள்ளவங்களுக்கு கடன் தர்றதில்லைன்னு தான் !''

18 December 2012

'சிரி'கவிதை!தேவதாஸ்களின் புலம்பல் !


பெண்ணின் மனதை அறியவே முடியாதாம் ...
ஆணின் மனதில் உள்ளது மட்டும் ...
நெற்றியில் 'டைட்டில் 'போல தெரிகிறதா  என்ன ?

தின 'சிரி ' ஜோக்!பயத்துக்கும் ஒரு அளவில்லையா?''ஊரெல்லாம் டெங்கு காய்ச்சல் 'கடையிலே பாக்கெட் வாங்கக்கூட பயமா இருக்கு !''
என்ன பாக்கெட் ?''
''புளிக் ' காய்ச்சல்' பாக்கெட்தான் !''
17 December 2012

'சிரி'கவிதை! இளைஞர்களின்காலத்திற்கு ஏற்ற கோலம்!
இளைஞர்களின்  இதய ஸ்வரம் 
'லப் டப் ''லப் டப் ' என்பது மாறி 
'லேப்டாப் ''லேப்டாப் 'என்றே துடிக்கிறது !


தின 'சிரி ' ஜோக்!திட்டம் இட்டு செய்யும் போதே இப்படின்னா ....
''அவரை என்கவுண்டர் டீமில் இருந்து ஏன்  நீக்கிட்டாங்க ?''
''ரவுடியை  தப்பவிட்டு சுடச்  சொன்னாகூட ஆடு மாடுதான் சாகிறதாம் !''16 December 2012

தின 'சிரி ' ஜோக்!படமும் நீளம் ..படப் பேரும் நீளம் !


''நகொபகா  படம்  நல்லா  இருக்கு !''
''ஜப்பான் படமா ?''
''இல்லை !'நடுவிலே கொஞ்சம் பக்கத்தை காணாம் 'ங்கிறதை  சுருக்கிச் சொன்னேன் !''
'சிரி'கவிதை!வாய் உள்ள நடிகை ...வாய்ப்பில்லா நடிகையின் 
வாய் 'மை '  மாறா  பேட்டி ....
'கேரக்டர்  பிடித்தால்தான் நடிப்பேன் !'

15 December 2012

சிரி'கவிதை!மனிதப் பச்சோந்திகளை நம்பலாமா?


 பச்சோந்திகள்  பரவாயில்லை ..
எதிரிகளிடமிருந்து  தப்பிக்க  மட்டுமே 
நிறம் மாறுகின்றன !

தின 'சிரி ' ஜோக்!கமலின் விஸ்வரூபம் ..சின்னத் திரையிலா ?
''விஸ்வரூபம் படத்தை டிவியில்  போட்டா பார்க்க மாட்டேன்னு சொல்றியே ,ஏன் ?''
''விஸ்வரூபத்தை 70 mm திரையில் பார்த்தாதானே  பொருத்தமா இருக்கும் !
14 December 2012

'சிரி'கவிதை!நடுத்தர வர்க்க கொதிப்பு அடங்குமா ? காஸ்   ஸ்டவ்வில் வெந்நீர் 
கொதிக்கும் முன்பே ....
கொதிக்க ஆரம்பித்து விடுகிறது மனம் ...
ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் போதுமா என்று !

தின 'சிரி ' ஜோக்!கணவனின் புத்தி மனைவிக்கு தெரியும்!


''என்கிளாஸ்  டீச்சரை  பார்த்துவிட்டு வந்ததில் இருந்து அப்பா என்னை அடித்து கொண்டே 
இருக்கிறார் ,ஏன்னு  கேளு அம்மா !''
''உன் கிளாஸ்  டீச்சரை நீ மிஸ் ன்னு சொன்னதை அவர் மிஸ்டேக்கா புரிஞ்சிக்கிட்டு 
ஏமாந்து விட்டார் போல் இருக்கு !''


13 December 2012

தின 'சிரி ' ஜோக்!லிரில் மாடல் லிசாரேயும்.காங்கிரசை டிரில் வாங்கும் ஹசாரேயும் .....!

''என் பையனுக்கு நாட்டு நடப்பையும் தெரிஞ்சுக்க சொல்றீங்களே ,ஏன்?'
''லிசா ரேயை தெரியும் ,ஹசாரேன்னா  யாருன்னு  கேக்கிறானே !'' 

'சிரி'கவிதை! பேஸ்ட்டு கூட வேஸ்ட் ஆகாது ...ஆனால் ?

பேஸ்ட்டு கூட வேஸ்ட் ஆகாது ...ஆனால் ?

வெளியே வந்த பேஸ்ட்டும் பேச்சும் 
ஒரு விதத்தில்  ஒன்றுதான் ...
மறுபடியும் உள்ளே போகாது !

12 December 2012

'சிரி'கவிதை! இது திருமண வாழ்த்தா ..சாபமா ?இது திருமண வாழ்த்தா ..சாபமா ?

இரயில்வே தண்டவாளம் போல் 
இணை பிரியாமல் தம்பதியர் வாழ்கவென 
வாழ்த்தியவர்  சிந்திக்கவில்லை ...
தண்டவாளங்கள்  ஒன்று சேருவதே இல்லையென்று !

தின 'சிரி ' ஜோக்! ரஜினிக்கே தெரியாத ரகசியப் பொருத்தம்

''ரஜினியே  தலைகீழாய்  நின்றாலும் இப்படி ஒரு பொருத்தம் இனி அமையாதுன்னு சொல்றீயே ,ஏன்?''
''12+12+12=36,36யை  மாத்திப் போட்டா 63,இன்னைக்கி அவரது 63 வது  பிறந்த நாள் ஆச்சே !


இது ஜோக்காளியின் 100வது பதிவு !ஜோக்காளியை  இரசித்தவர்கள்  ஒரு  o [ஜீரோ அல்ல]போடுங்களேன் !
11 December 2012

சிரி'கவிதை!தொடையில் மச்சம் ...ராசி இல்லையோ?


அங்க அடையாளத்தை காட்டு என்று 
யாராவது கேக்கும் போதுதான் ....
தொடையில் மச்சமாய் சிரிக்கும் அப்பாவை 
கிள்ளி எறிய வேண்டும் போல் இருக்கிறது !

தின 'சிரி ' ஜோக், !கொசு ஒழிக்க திட்டம் ..ஆனா மக்கள் ஒத்துழைப்பு ???
''தண்ணி தேங்கிற இடத்தில் ,கொசு முட்டையை  சாப்பிடுற மீன்களை விட்டும்கொசு குறையலையே ,ஏன்?''
''அந்த மீன்களை எல்லாம் பிடித்து மக்கள் தின்னுட்டாங்களே !  

10 December 2012

'சிரி'கவிதை!நாடு வளர்கிறதா?


நாடு  வளர்கிறதா?

நான் வளர்ந்துள்ளேன் ...
என் சிறிய வயதில் இல்லை 
மின் வெட்டு!

9 December 2012

தின 'சிரி ' ஜோக்!மருமகள் துடிப்பது ....நடிப்பா?''உன்  மாமியாருக்கு இரக்கமே இல்லையா ,ஏன்?''
''நான் காக்கா வலிப்புலே துடிக்கிறப்போ கூட ,தன் இடுப்புலே 
இருக்கிற இரும்பு சாவியை என் கையிலே தரவே இல்லையே!''

'சிரி'கவிதை!தேவதைகள் உலா வரும் நேரம் !அந்தி மாலை ,விளக்கேற்றும் நேரம் ..
தேவதைகள்  உலா வரும் நேரம் என 
கதவு ஜன்னலை திறந்து வைத்ததெல்லாம் 
அந்தகாலம் !
தேவை இல்லாதவை எல்லாம் நுழையுமென 
எல்லாவற்றையும் இழுத்து மூடுவது 
இந்தகாலம் !

8 December 2012

'சிரி'கவிதை!ரீசார்ஜ் ஆகுமா காதல் ?

மூன்றாண்டு காதல் முறிந்தது 
மூன்று நாளாய் முடங்கியது செல்போன் ...
அவளுக்காக ,அவன்  ரீசார்ஜ்  செய்யாததால்!
..........................................................................................................................................................

தின 'சிரி ' ஜோக்,! விஜய்யின் துப்பாக்கியை சத்தியமா நான் பார்க்கலே!
''விஜய்யோட  துப்பாக்கியை  பார்த்தியா ?''
''அவர் எப்போ தொலைச்சாரு ?துப்பாக்கி லைசென்ஸ் அவருக்கு 
இருக்கா ?''

7 December 2012

'சிரி'கவிதை!வீட்டில் எப்பவும் கொண்டாட்டம்தான் !


நாம் வீட்டில் இருந்தால் 
கொசுவுக்கு  கொண்டாட்டம் !
இல்லாவிட்டால் 
கொள்ளைக்காரனுக்கு   கொண்டாட்டம் !

தின 'சிரி ' ஜோக்!மனைவி அமைவதெல்லாம் ..........?


மனைவி  அமைவதெல்லாம்  ..........?

''உங்களுக்கு உங்க மனைவியை பிடிக்கலையா ?''
''ஆமா ,எப்படி  கண்டுப்பிடிச்சிங்க ?
''மனைவி அமைவதெல்லாம் இறைவன் கெடுத்த வரம்ன்னு 
பாடிக்கிட்டு இருந்ததை கேட்டேன் !

6 December 2012

'சிரி'கவிதை!டெங்கு ...அந்த பயம் இருக்கட்டும் !

டெங்கு ...அந்த பயம்  இருக்கட்டும் !

எல்லோர் வீட்டு கதவும் ஜன்னலும் 
மூடிக் கிடப்பது ,,திருடனுக்கு பயந்து அல்ல ,
கொசுவுக்கு பயந்துதான் !

தின 'சிரி ' ஜோக்!குருவிடம் கேக்கக் கூடாத கேள்வி!

குருவிடம் கேக்கக் கூடாத கேள்வி!

''அந்த சீடரை கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுறாங்களே ,குருகிட்டே 
என்ன கேட்டார்?''
''இந்திரன் கெட்டதும் பெண்ணாலேன்னு சொல்றாங்களே உண்மையான்னு கேட்டாராம்!

5 December 2012

'சிரி'கவிதை!காணாமல் போன ரெண்டு !


காணாமல் போன ரெண்டு !

மெத்தை  வாங்கினேன் 
தூக்கத்தை வாங்கலே ..
இன்வெர்ட்டர் வாங்கினேன் 
கரண்ட்டை  காணலே!

தின 'சிரி ' ஜோக்!இப்படியும் சினிமா வரலாம் !


இப்படியும் சினிமா வரலாம் !

''நான் எடுக்கிற படத்துக்குபேர்  'பர்கர் '!எப்படி இருக்கு?''
''ஹை பட்ஜெட் படம்னா ok ,லோ பட்ஜெட் படம்னா 
'பீடா ,,பீடி தான் பொருத்தமா இருக்கும் !4 December 2012

'சிரி'கவிதை,!பாம்பை அல்ல ,பயத்தைக் கொல்வோம் !
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்றால் 
பாம்பாட்டிதான் அரசனாக இருந்து இருக்க வேண்டும் !

தின 'சிரி ' ஜோக்!வாக்கு [போட்டவனை ]சாவடி !


'வாக்கு சாவடின்னு பெயர் வைத்தவன் தீர்க்கதரிசி !''
''ஏன்?''
''நம்ம வாக்கை வாங்கிட்டு ,இந்த அரசியல்வாதிங்க நம்மையே சாவடிக்கிறாங்களே !''
..........................................................................................................................
நான்  எழுதிய இந்த ஜோக்கை பல வருடங்களுக்கு  முன்  பிரசுரித்த  ஜூனியர் விகடனுக்கு நன்றி !

எனது புகைப்படம்

3 December 2012

'சிரி'கவிதை!மரம் சாயலாம்...மனம் ...?


மரம் சாயலாம்...மனம் ...?

மனதைக் கொத்தும்  துயரங்களால் 
மனிதன்  சாய்ந்து விடலாமா ...
மரம் கொத்தும் பறவையா 
மரத்தை சாய்த்து விடும் ? 

தின 'சிரி ' ஜோக்!மனைவி இப்படின்னா ..கஷ்டம்தான்!


மனைவி இப்படின்னா ..கஷ்டம்தான்!

''உன் மனைவி உன்னை சந்தேகப்படுறான்னு சொல்றியே ஏன்?''

''புரை ஏறும்போது யாரோ என்னை நினைக்கிறாங்கன்னு சொன்னா ,
'நான் இங்கே இருக்கும் போதுஎந்த சிறுக்கி உங்களை நினைக்கிறான்'னு கேக்கிறாளே !

2 December 2012

தின 'சிரி ' ஜோக்!வடிவேலிடம் ஒரு கேள்வி !


வடிவேலிடம் ஒரு கேள்வி !


''கூடங்குளம் கரண்ட் வருமான்னு கேட்டா,என்னத்தே கன்னையா போய் விட்டார்  ,இருக்கிற வடிவேலு கிட்டே கேளுங்கன்னு சொல்றிங்களே ,ஏன்?''

''வர்ர்ர்ரும்...ஆனா வர்ர்ர்ராதுன்னு அவர்தான் கரெக்டா சொல்வார் !'சிரி'கவிதை!ASH TRAY கேள்விக்கு பதில் ஏது ?


இந்தக் கேள்விக்கு பதில் ஏது ?

சுற்றுப்புறம் சுத்தமாய் இருக்க 
என்னைக் கண்டுபிடித்த மனிதனால் ....
தன் நுரையீரலை சுத்தமாக்கும் வழி ஏன் தெரியவில்லை ..
எனக் கேட்டது  ' ASH TRAY !

1 December 2012

சிரி கதை!முதல் இரவிலும் தூக்கம் போகாதா?'சிரி'கவிதை, !!சுய ஒளி சூரியனாய் இருக்கணும் !


இரவில் நிலா மின்னுவது 
இரவல் ஒளியால் ..
இரவல் வாங்கி ,வாங்கியே 
ஒருநாள்  ஓடி ஒளிந்துக் கொள்கிறதா?

தின 'சிரி 'ஜோக் !!!,,இவர் நம்மஊர் சர்தார்ஜி போலிருக்கு!

''ஆனந்தவிகடன்  வாங்கவா வாராவாரம் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு  வந்து போறிங்க?''
''அங்கே வாங்கினா19ரூபாய்!இங்கேவாங்கினா   17ரூபாய் ரெண்டு ரூபாய்லாபம்  ஆச்சே !