31 December 2013

பெண்களையும் விடுவதில்லை பெண் கொசுக்கள் !

கொசுத் தொல்லையை  ஒழிக்க என்ன செய்தாலும் பலன் இருப்பதாகத் தெரியவில்லை ...
நம் அரசுத் தரப்பிலும் கொசு முட்டை நிலையில் இருக்கும்போதே தின்றுவிடக் கூடிய மீன்களை நீர்நிலைகளில் விட்டுப் பார்த்தார்கள் ...

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டலே,ஆணுக்கு மட்டும்தானா?

''சிறைக்குப் போன தலைவர்  கஞ்சாவுக்கு  அடிமை ஆயிட்டாராமே ?''
'' சிறைக்'கஞ்சா 'சிங்கம்ங்கிற  பட்டம் இப்பத்தான் அவருக்கு ரொம்ப பொருத்தமாயிருக்கு !''30 December 2013

ஆணா ,பெண்ணா என்று ஸ்கேனில் நாமே தெரிஞ்சுக்கலாமே !

கருவில் வளர்வது ஆணா ,பெண்ணா என்று அறிந்து கொள்வதில் பெற்றோர்கள் மட்டுமல்ல ,மற்றோர்களும் அறிந்து கொள்ள விரும்புவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை ...
ஆனால் ,இப்படி பாலினத்தை வெளியே சொல்வது குற்றமென்று ஸ்கேன் சென்டர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது ...
கர்ப்பிணிப் பெண் முகம் பளபளப்பாக ஆனாலும் ...
இனிப்பை சாப்பிட ஆர்வம் அதிகமானாலும் ...
வாந்தி,மயக்கம் இல்லாமல் போனாலும் ...
சிசுவின் இதயத் துடிப்பு 140ஆக இருந்தால் ...
பெண் குழந்தை பிறக்குமென்றும் ...
வலது கையை ஊன்றி எழுந்தாலும் ...
வலது புற நாசி வழியாக சுவாசம் இருந்தாலும் ...
ஆண் குழந்தை பிறக்குமென்றும் நம்பப் படுகிறது ...
நமக்கு மிகவும் அறிமுகமான ...
அமெரிக்காவில் சேவை செய்துவரும் டாக்டர் நம்பள்கி தனது அனுபவத்தின் மூலம் ...
கருவில் வளர்வது ஆணா ,பெண்ணா என்பதை அறிய தரும் விளக்கத்தையும் படிங்க...
Number one: 
Absence of scrotal shadows; ஆண் இல்லை என்று ஓரளவு உறுதி படுத்திக்கொள்ளலாம்.
Number 2:
குழந்தை நேராக இருக்கும் போது, படம் எடுத்து...மூன்று கோடுகள் இருந்தால் பெருமாள் பக்தர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் பெண் குழந்தை என்று! குழந்தை பக்கவாட்டில் படுத்து இருந்தால் மூன்று கோடுகளை சைவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் பெண் குழந்தை என்று!

அப்படியும் கண்டு பிடிக்கத் தெரியாத பெற்றோர்களுக்கு....
நல்ல நேரம் பார்த்து வந்து ரிப்போர்ட் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்குள்ளவர்கள் சொல்வார்கள்.அதன் அர்த்தம் அது ஆண் குழந்தை!

ரிப்போர்ட் நாளைக்கு வந்து வாங்க்கிக் கொள்ளுங்கள் என்று மொட்டையாக (நல்ல நேரம் என்ற சொல்லை சொல்லமால்) சொன்னால் பெண்குழந்தை.

நல்ல நேரம் பார்த்து ரிப்போர்ட் வாங்கியாதல் ஆண் குழந்தை நமக்கு பிறக்கும் என்று நினைக்கும் முட்டாள்களே நம் மூடநம்பிக்கியின் ஆணி வேர்!

"நல்ல நேரம்" என்பது உலகறிந்த secret word---open secret! -- ஆண் குழந்தை!

கணவனின் பயத்தால் மனைவிக்கென்ன நட்டம் ?

''டாக்டர் ,பாரதியார் சாவுக்குக் காரணம் ஒரு யானைதான்னு கேள்விபட்டதில் இருந்து ,என் வீட்டுக்காரர் யானைன்னா பயந்து சாகிறார் !''
''அதனாலே இப்ப என்ன பிரச்சினை ?''
''மதயானைக் கூட்டம் படத்திற்கு கூட்டிட்டுப் போகச் சொன்னா மாட்டேங்கிறாரே !''

29 December 2013

ரயில் லேட் நேரத்திலே யோசித்து இருப்பாரோ ?

''எவ்வளவுப் பெரிய பணக்காரன் ஆனாலும்  பிளாட்பார்முக்கு வந்தே தீருவான்னு  எப்படிச் சொல்றீங்க ?''
''ரயிலைப்  பிடிக்கணும்ன்னா வேற  வழியில்லையே !''

கருவில் வளர்வது மகனா ,மகளா ,காண்பதும் தவறா ?

''கர்ப்பமா இருக்கிற உங்க மனைவியை  ஸ்கேன் பண்ணும்போது  டாக்டர் எதுக்கு உங்களை வெளியே போங்கன்னு சத்தம் போட்டார் ?''
'' வயிற்றிலே வளர்றது ஆணா ,பெண்ணான்னு  சட்டப் படி அவர் சொல்லக்கூடாதாம் ...சரி ,கருவை போகஸ் பண்ணுங்க ,நானே  பார்த்துக்கிறேன்னு  சொன்னது  அவருக்கு பிடிக்கலே போலிருக்கு  !''


28 December 2013

நடிகைக்கு முற்றும் துறந்த நிலை சாத்தியமா?

''நடிகைக்கு தீட்சை கொடுத்த குருவுக்குகண்டனம் தெரிவிப்பதில் அர்த்தமேஇல்லைன்னு ஏன் சொல்றே ?''
'' முற்றும் துறந்த நிலைக்கு உயர்த்துவது 
அவர் கடமை ஆச்சே !''


டெங்கு காய்ச்சல் வர உண்மைக்காரணம் ,கசப்பை நாம் சுவைக்காததுதான் !

''என்னங்க ,நம்ம வீட்டிலே நீங்க மட்டும்தான் பாவக்காய்கசக்கும்னு சாப்பிடுறதேயில்லே ஆனா டெங்கு காய்ச்சல் உங்களுக்கு மட்டும்  வரமாட்டேங்குதே .எப்படி ?'' 
''இத்தனைக் காலமும் நான் கசப்போடுதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் ?''

27 December 2013

புருசங்காரனுக்கு பெண்டாட்'டீ'யைத் தவிர வேற வழியில்லை

''வேலைக்காரி பிளாஸ்க்கில் கொண்டு வந்து கொடுத்த  டீயைக்  குடிச்சிட்டு,வேலைக்காரியை   ஏன் நிறுத்திட்டே ?''
''நான் எப்பவும் இப்படி ஸ்ட்ராங்கான டீயை குடிச்சுத்தான் பழக்கம்ன்னு சொல்றாளே !''

26 December 2013

மந்திரி செருப்படி வாங்கியதில் தவறே இல்லை !

'' பொதுமக்கள்கிட்டே  மந்திரி என்ன சொன்னார் ...இப்படி அவர் மேலே செருப்பை எறியுறாங்க ?''
''இப்போது வாழைத் 'தார் 'விடும் சீசன் ஆரம்பித்து விட்டதால் விரைவில் ரோடுகள் போடப்படும்னு சொன்னாராம் !''தோல்வியை தழுவிய வருத்தப் படாத வாலிபர் சங்கம் ?

''வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை தலைவர் ஏன் கலைச்சுட்டார் ?''
''அவர் ஆக்சிடென்ட்ஆகி  ஆறுமாசமா கோமா ஸ்டேஜிலே  ஆஸ்பத்திரியில்  கிடந்தப்போ ,எவனுமே அவரை வந்து பார்க்கலையாம் !''

25 December 2013

பாங்க் பாலன்சை மறைத்த கணவருக்கு மறை கழன்று விட்டதா ?

'உங்க வீட்டுக்காரர்  மெண்டாலிட்டி  சரியா  
இருக்கான்னு ஏன் செக் பண்ணச் சொல்றீங்க ?''
'' ATM ல் பணம் எடுத்தவர் பணத்தை 
குப்பைக்கூடையில் கிழிச்சுப்போட்டுட்டு 
,பாலன்ஸ் சிலிப்பை கொண்டு வந்திருக்கிறாரே !''

24 December 2013

சன்னி லியோன் பிறந்ததும் மதுரையில் தானா ?

உயிருடன் உள்ள அமைச்சருக்கும் ,MLAக்கும் இறப்புச் சான்றிதழ் வழங்கி சாதனைப் படைத்த மதுரை மாநகராட்சி ...
தற்போது பிறப்புச் சான்றிதழ் வழங்கியதிலும் சாதனை படைத்து இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது ...

அழகான டீச்சர் முகத்தில் கோழி தெரிவதேன் ?

''இவ்வளவு அழகான டீச்சரைப் பார்த்தா ,உனக்கு மட்டும் ஏண்டா கோழி ஞாபகம் வருது ?''
''இவங்களும்  முட்டைதானே போடுறாங்க !''

23 December 2013

மையல் ராணி சமையல் ராணியாய் மாறுவாளா ?

''உன் புதுபெண்டாட்டி சமையல் எப்படின்னு  கேட்டா ,தலைலே ஏண்டா அடிச்சுக்கிறே?''
''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே!''


22 December 2013

உண்மைக் காதலன் கூட செய்யாத சூரசம்ஹார லீலைகள் !

'நான் எல்லாத்தையும் யமுனாவுக்காக மட்டும்தான் செஞ்சேன் ,ஆனா அவளே என்னைப் புரிஞ்சுக்கலேன்னு வேதனையா இருக்கு ...நிச்சயம் ஒருநாள் என்னைப் புரிஞ்சுக்குவா '

வேளா வேளைக்கு மருந்து கொடுக்க மனைவி தேவை ?

''டாக்டர் ,ஞாபக மறதிக்கு மருந்து கேட்டேன் ,பில்லிலே SMS சார்ஜ் முன்னூறு ரூபாய்னு போட்டிருக்கே,ஏன் ?''
''மருந்து சாப்பிடுங்கன்னு ஞாபகப்படுத்தி நாலு வேளையும்  SMS அனுப்புவோம் ,அதுக்குதான் !''
''அதுக்கு முன்னூறு  ரூபாயா ?''
''கால் பண்ணியும் சொல்வோம் ,அதுக்கு ஐநூறு ரூபாயாகும் ,பரவாயில்லையா ?''

21 December 2013

பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் மட்டுமில்லை ....!

''இன்ஸ்பெக்டர் அய்யா ,உங்க மக வாழ்க்கைப் படப் போறது வசதியான இடத்தில் தானா ?''
''என்ன அப்படி கேட்டுட்டீங்க ,பையனோட அப்பா மாசமானா நமக்கே லட்ச ரூபா மாமூல் கொடுத்துக்கிட்டு இருக்காரே !''

20 December 2013

மனுஷன் 'காக்கா ' பிடிச்சா ,காக்கா எதைப் பிடிச்சுக்கும் ?

''ஒண்ணா சாப்பிடுறதை காக்காகிட்டே  இருந்து  மனுசங்க கத்துக்கணும்னு  சொல்வீங்களே ,இப்ப அதுங்களும் தனிதனியா பங்கைப் பிச்சுகிட்டு பறக்குதுங்களே ,ஏன் ?''
''மனுசங்களைப் பார்த்து அது கத்துக்கிச்சோ என்னவோ ?''

19 December 2013

மனைவி கதவை திறக்கணும்னு கண்டக்டரின் ஐடியாவோ ?

''காலிங் பெல் பக்கத்திலே ஒரு விசிலை தொங்க விட்டு ,ஏதோ எழுதிப் போட்டிருக்கீங்களே ,என்னது ?''
''கரண்ட் கட் நேரத்தில் இந்த விசிலை ஊதி அழைக்கவும்ன்னு எழுதி இருக்கேன் !''

18 December 2013

யார் சொல்வதை நம்பலாம் ?

''இன்னைக்கு விவாதிக்கிற லோக் பால் பற்றி ,யார் சொல்றதை நம்புறதுன்னு தெரியலேன்னு ஏன் சொல்றீங்க ?''
''அதை நல்ல மசோதான்னு அன்னாஹசாரேயும், அது வலு இல்லாத 'சோதா'ன்னு அரவிந்த் கேஜ்ரிவாலும் சொல்றாங்களே !''

நோயாளிக்கு பேச்சு வராது ,டாக்டருக்குமா ?

''நாலு மாசத்திலே எட்டு லட்ச ரூபாய் செலவு செய்ஞ்சும் உங்கப்பாவுக்கு பேச்சு வரலேன்னா ,டிஸ்சார்ஜ் செய்யச் சொல்ல வேண்டியது தானே ?''
''மூச்சு இருக்கிறவரைக்கும் டிஸ்சார்ஜ் என்கிற பேச்சுக்கே இடமில்லைன்னு சொல்றாரே !''

17 December 2013

மனைவிக்கு தெரியாத அங்க அடையாளங்களைச் சொன்னதால் ...?

''வீட்டிலே திருடு போனதுக்கும் ,உங்க  மனைவியோட டைவர்ஸ் நோட்டீசுக்கும் என்ன சம்பந்தம் ?''
''வேலைக்காரியை சந்தேகப் பட்ட போலீஸ் கிட்டே ,அவ அங்க அடையாளங்களை நான் சொன்னதுதான் வில்லங்கமாயிடுச்சு !''

16 December 2013

ஊழியரின் மனைவி நலத்தையும் யோசிக்கும் மேனேஜர் /HRO ?

''எவரி நைட் டூட்டிக்கு வர்றேன்னு சொல்றவனை எதுக்கு செக்சாலஜிஸ்ட் டாக்டரைப் பார்க்கச் சொல்றீங்க ?''
''அவனுக்கு கல்யாணமாகி மூணு மாசம்தானே ஆவுது ?''

மார்க் வராத காரணம் மங்கைகள் தானா ?

''நம்ம பையன்  பொண்ணுங்க பின்னாலே திரியும்போதே எனக்குத் தெரியும் !''
''என்ன தெரியும் ?''
''அவன் மதி முழுதும் பெண்கள்னா ... தேர்விலே  மதிப்பெண்கள்  வரப்போறதில்லைன்னு தான் !''

15 December 2013

மனைவி குத்துக் கல்லா இருந்தா ....?

''என்னங்க ,குத்துக் கல்லாட்டம் நான் இருக்கேன் ,அங்கே என்னா பார்வை வேண்டிக்கிடக்கு ?''
''சிலையை ரசிக்கிறேன் ,குத்துக்கல்லை என்ன பண்றது ?''

மருமகள் கோபத்திற்கு பயப்படும் டாக்டர் ?

''மருமகளை மட்டும் வெளியே நில்லுங்கன்னு சொல்லிட்டு டாக்டர் என்ன சொல்லப் போறார் ?''
'' மாமியாருக்கு நடந்த ஆப்ரேசன் சக்சஸ்ன்னு சொல்லத்தான் !''

14 December 2013

நடிகர் அஜீத்தைச் சொல்லலைங்க !

''அடுத்து  ரீலீசாகப் போற படம் வெற்றி அடையணும்னு ஹீரோ மொட்டைப் போட்டுகிட்டாறாமே?''
''அவருக்கு இருக்கிற வசதிக்கு ,அவராவே  மொட்டைப் போட்டுகிட்டார்ன்னு சொல்றதைதாங்க என்னாலே நம்ப முடியலே !''

மனைவி காதில் எதிரொலியா கணவனின் முணுமுணுப்பும் ?

''பையன்கிட்டே என்னைப் பற்றி என்ன சொல்லிக்கிட்டு இருந்தீங்க ?''
''பாம்புக் காதுன்னா என்னான்னு விளக்கம் கேட்டான் ...அதான் !''


13 December 2013

பஸ்ஸிலே ஜாலிக்கு எதுவும் இருக்குமோ ?

''டைம் பாஸ் ரைடர்ன்னா  என்னான்னு
தெரிஞ்சுக்காம  அந்த பஸ்லே ஏறினது தப்பாப் போச்சா ,ஏன் ?''
''ஒரு மணி நேரத்திலே போக வேண்டிய ஊருக்கு மூணு மணி நேரமாகுதே !''

12 December 2013

பிள்ளைங்க விளையாட்டுலே பெத்தவன் தலையிடலாமா ?

''என்னங்க ,நீங்கதான் போலீஸாச்சே ,நம்ம புள்ளைங்க போலீஸ் திருடன் விளையாட்டு விளையாடினா ஏன் எறிஞ்சு விழறீங்க ?''
''மாசம் பொறந்தா மாமூல் கொண்டு வந்து தரத் தெரியாதா நாயேன்னு கேக்கிறானே !''

11 December 2013

11.12 .13ஐ மறக்க முடியாத நாளாக மாற்றும் கணவன் ?

''என்னங்க ,இன்னைக்கு தேதி 11.12 .13 ஆச்சே ...நிறைய பேர் இன்னைக்கு கல்யாணம் பண்ணிக்கிறாங்களாம் ,நாமளும் மறக்க முடியாதபடி என்ன  காரியத்தைச்  செய்யலாம் ,சொல்லுங்க !''
''டைவர்ஸ்வேன்னா  பண்ணிக்குவோம் !''

புருஷனுக்கு வேண்டியதை வாங்கி வந்த மனைவி !

''ஷாப்பிங் போன உங்க மனைவி நெக்லஸ் வாங்கிகிட்டாங்க சரி ,உங்களுக்கு ?''
'' பனியன்தான்,அதுலேயும் நெக்லஸ் !''

10 December 2013

பெண்களை எப்படி திருப்தி படுத்துவாரோ ?

''என்னங்க ,உங்க சலூன் முன் புறம் நாய்களாத் திரியுது ?''
''அடிக்கடி கட்டாகி விழுகிற காதுகளைத் தின்ன வந்திருக்கும் ,நீங்க தைரியமா உள்ளே வாங்க !''
இப்படி ஜோக் எழுத முடியாமல் செய்துவிட்டார் ...
இங்கிலாந்தை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் டயானாகெண்டல் என்ற பெண்மணி ...
இவரது பார்வை சுத்தமாக பறிபோன நிலையிலும் ...
நாற்பது வருட அனுபவத்தில் சிகை அலங்கார வேலையை சரியாக செய்து வருகிறாராம் ...
வாடிக்கையாளர்களும் இவரது துணிச்சலையும் ,விடாமுயற்சியையும் பாராட்டி ...
தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறார்களாம் ...
இங்கே நம் பெண்களுக்கு ...
இப்படி பார்வை இழந்த ஒருவர் சிகை அலங்காரம் செய்து திருப்தி படுத்தி விட முடியுமா ?
ஓட்டு போடும் ஆர்வம் உண்மையில் கூடியிருக்கா ?

''நடந்த இடைத் தேர்தல்லே 90சதம் ஓட்டு பதிவாகி இருந்தும் 'நோட்டா 'ஓட்டு மூவாயிரம் கூட விழலையே ,இதிலேர்ந்து என்ன தெரியுது  ?''
''நிறையப் பேர்  ரூபா நோட்டை  வாங்கிகிட்டு ஓட்டு போட்டிருக்காங்கன்னு தெரியுது !''

9 December 2013

காதலுக்கு மரியாதை இதுதானா ?

பூண்டிலே ஒருதலைப்பூண்டு ஆரோக்கியத்திற்கு நல்லதுதான் ...
ஆனால் ,காதலில் ஒருதலைக் காதல் இருக்கே ,எந்தக் கொடுமையையும் செய்யத் தயங்காது என்று பஞ்சாப்பில் நடந்த கொடூரம் மூலம் மீண்டும் தெரிகிறது ...

ஜப்பானில் பிறக்க நினைக்கும் நம்ம ஊர் சோம்பேறி !

'' ஜப்பானியனா பொறந்து இருக்கலாம்னு உங்க பையன்  அடிக்கடி சொல்றதைப்பார்த்தா ,அவங்க சுறுசுறுப்பு  இவனுக்கு பிடிக்கும் போலிருக்கே !''
''நீங்க வேற ,ஜப்பான் தேசீய கீதம் நாலே  வரிதானாம் ...அதை ஒழுங்கா பாடி வாத்தியாரிடம்  அடி வாங்கிறதில் இருந்து தப்பிச்சு இருக்கலாம்னு நினைப்பான் !''


8 December 2013

பெண்ணுமா இப்படி ,யாரைத்தான் நம்புவதோ ?

Multy Level Marketing எம்பதை சுருக்கமாக M L M என்பார்கள் ...
அந்த M L M யை கணினியில் தமிழில் தட்டச்சுச் செய்தால் ...
மலம் என்று வரும் ...உண்மையும் அதுதான் ...

நகைக் கடை 'வால்கிளாக்'காவது சரியாய் நேரம் காட்டுமா ?

''நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன் ,யார் டைம் கேட்டாலும் ,பத்து நிமிஷம் குறைவாவே சொல்றீங்களே ...'டைம் இஸ் கோல்ட் 'ன்னு உங்களுக்கு தெரியாதா ?''
''நகைக்கடை வச்சுருக்கிற எனக்கும் அது தெரியும் ...சேதாரம் போக தோராயமா ஒரு டயத்தைச் சொல்றேன் ,தப்பா ?''

7 December 2013

அவர் மூலம் காதல் கடிதங்கள் அனுப்பியவர்களாவது வருந்தி இருப்பார்களா?

காதல் கடிதமோ ,வேறெந்தக் கடிதமோ சம்பந்தப் பட்டவர்களிடம்
 சரியாக கொண்டு சேர்க்கும் பணியை செய்த தபால்காரர் ஒருவர் ...
சரியாக இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப்பில் இறங்காததாலேயே  ...
இறந்து போனார்னு சொன்னால் நம்பமுடிகிறதா ?

இப்படியும் மனைவி மேல் பாசமாய் இருக்கக் கூடாது !

''டூ வீலரில் போன உங்க மனைவி விபத்திலே மாட்டிகிட்டாங்களா,அய்யய்யோ என்னாச்சு ?''
''நல்ல வேளை ,வண்டிக்கு  ஒரு கீறலும் இல்லையாம் !''
''உங்க மனைவிக்கு ?''
''ஒரு கைதான் உடைஞ்சுப் போச்சாம் !''

6 December 2013

சேலையில் மட்டும் கவனம் இருந்தால் போதாது !

நாம் விரும்புகின்ற ஒன்றில் மனம்  லயித்துப் போகும்போது ...
நம்மை நாமே இழந்து விடுகிறோம் ...
இது காதலில் வேண்டுமானால் சுகமாய் இருக்கலாம் ...

கணவனின் காதில் விழுவதும் ,விழாததும்!

''பசி மயக்கத்தில் காது கேக்காதுன்னு சொல்றதிலே ,உண்மையில்லேன்னு எப்படி சொல்றே ?''
''வெங்காயம் நறுக்குங்கங்கிறதை கேட்காத உங்க காதுக்கு ,டிபன் ரெடின்னா மட்டும் நல்லாக் கேக்குதே !''


5 December 2013

பொண்ணு பார்க்கையில் இதையெல்லாம் விசாரிக்க முடியுமா ?

கல்யாணமான  சில நாட்களிலேயே ...
இளம் மனைவியை இங்கே விட்டு விட்டு பொருளாதார நிர்பந்தம் காரணமாக வெளிநாட்டு வேலைக்கு செல்வோரின் மனக் கஷ்டத்தை வெறும் வார்த்தையில் வடித்து விட முடியாது ...
அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும் ...

தங்கம் இப்படி கிடைத்தால் கசக்கவா செய்யும் ?

''ஏண்டா ,உங்கம்மா இன்னைக்கி வாங்கின   முழு பாட்டில் ஹார்லிக்சையும் பால்லே கலந்து வடிச்சு வடிச்சுப் பார்த்துகிட்டு இருக்கா ?''
''தங்கத்தை தூளாக்கி  ஹார்லிக்ஸில் கலந்து கடத்துறதா பேப்பரில் நியூஸ் வந்திருக்காம், அதான் ஏதாவது தேறுமான்னு பார்க்கிறா !''

4 December 2013

ஓஹோதானாம் இந்தியச் சரக்கு,சொல்வது பிரிட்டிஷ் பயணி !

நம்ம ஊர் குடிமகன்கள் சாலையில் மட்டையாகி விழுந்துக் கிடப்பது ஒன்றும் காணக் கிடைக்காத அரிய காட்சியல்ல ...

வடிவேலுவின் ஔவ்வ்வ்வ் வள்ளுவருக்குப் பிடிக்குமா ?

''திருவள்ளுவர் இப்போ வந்தா ,வடிவேலு அடிக்கடி சொல்ற பஞ்ச் வார்த்தையை ரசிக்கமாட்டார்ன்னு எப்படி சொல்றே ?''
''1330 குறள்லே எங்கேயும் 'ஔ 'என்ற  எழுத்து வரவே இல்லையே !''

3 December 2013

அந்தரங்கத்தைப் படம் பிடிக்க அனுமதிக்ககூடாது !

அந்தரங்கம் புனிதமானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது ...
ஆனால் ,கேரள பல் டாக்டர் ஒருவருக்கு இதில் உடன் பாடில்லைப் போலிருக்கிறது ...

மனைவியின் கோபத்திலும் நியாயம் இருக்கே !

''ஜாலியா மனைவியை இமய மலையில் 26000 அடிக்கு மேல் கூட்டிச் சென்று ,அங்கே தாவிக் குதித்த தவளையைக் காட்டினது தப்பாப் போச்சா ,ஏண்டா ?''
''இனிமே என்னை கிணத்துத் தவளைன்னு சொன்னா கெட்ட கோபம் வரும்னு சொல்றாளே !''

2 December 2013

புது மணத்தம்பதிகளிடம் புதுவிதக் கொள்ளை !

முன்பெல்லாம் கொள்ளையர்கள் ஆளில்லா வீடுகளைப் பார்த்து கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள் ...
சமீப காலமாக அதிலும் நல்ல முன்னேற்றம் ...

கணவரின் தப்பை கண்டுக்காம விட முடியுமா ?

''டாக்டர் ,என் வீட்டுக்காரர் அரிசியில் கிடக்கிற  கல்லை பொறுக்கி தின்கிறார் !''
'' தப்பாச்சே ,ஒரு மாசமா  இப்படி திங்கிறார்னா முன்னாடியே  ஏன்  வரலே ?''
''ரெண்டு மூடை அரிசியாச்சே,இன்னைக்கிதான் முடிச்சார் டாக்டர்  !''

1 December 2013

மு'கூர் 'த்த போட்டோவில் வேறெதையும் தேடக்கூடாது !

''அந்த அகராதிகிட்டே  கல்யாண ஆல்பத்தைக் காட்டாதேன்னு சொன்னா கேட்டியா ?''
''இப்போ அதுக்கென்ன ?''
''பஸ்ட் நைட்  போட்டோ ஒண்ணுமே இல்லையேங்கிறான் !''

30 November 2013

டாடி எனக்கு ஒரு டவுட்டு !

'' பஸ்களில்  டிரைவர்கள் எதுக்குப்பா?''
''ஏண்டா ,இப்படி கேட்கிறே ?''
''கண்டக்டர் விசிலை  ஒருதரம் ஊதினா நிக்குது ,ரெண்டாவது தரம் ஊதினா போகுதே !''

உயிருக்கு உயிரான நண்பர்கள் போலிருக்கே !

''ஹலோ ,யாரு தினேஷா ?''
''இல்லேப்பா , தினேஷ் அம்மா நான்,அவன் குளிச்சுக்கிட்டிருக்கானே !'' 
''சாரி ,ராங் நம்பர் !''


29 November 2013

சுயநலமில்லா விருந்தாளிகளாய் ஆக்கியது,எது ?

''சர்க்கரை நோயாளிகள்  பெருகிட்டாங்கன்னு  டாக்டர்கள் சொன்னப்போ கூட  நம்பலே ,விருந்து பரிமாறுகிறவர் சொல்லும் போது நம்பத்தான் வேண்டியிருக்கா ,ஏன் ?''
''பக்கத்து இலைக்கு பாயாசம் ஊற்றச் சொல்லி இப்போ யாருமே சொல்றதில்லையாம் !''

டைவர்ஸ் அதிர்ச்சி மனைவிக்கா ,கணவனுக்கா ?

''அதிர்ச்சியான செய்தியைச் சொன்னால் விக்கல் நின்னுடும்னு ,என் மனைவிகிட்டே உன்னை டைவர்ஸ் செய்யப் போறேன்னு சொன்னேன் ...''
''விக்கல் நின்றதா ?''
''விக்கல் நின்னுடுச்சு ,எப்போ டைவர்ஸ் பண்ணப் போறீங்கன்னு அனத்த ஆரம்பிச்சுட்டாளே !''
                                           

28 November 2013

அன்று ஆனுக்கு 17,ஜானுக்கு 21... இன்றுவரை ஜாலிதான் !

 ஓடிப்  போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா என்று நம்ம ஊர் இளசுகள் இப்போதுதான் பாடிக்கொண்டிருக்கிறார்கள் ...

வேண்டாத மேனேஜரை விரட்டும் வழி ?

''ஆபீசுக்கு போகும்போது ,வெங்காய வெடியை ஏண்டா என் கையிலே கொடுக்கிறே ?''
''புதுசா வந்த மானேஜர் ரொம்ப மோசம் ,அவருக்கு  சீக்கிரம் வேட்டு வைக்கணும்னு நீங்க தானேப்பா சொல்லிக்கிட்டு இருந்தீங்க !''

 

27 November 2013

பாரத ரத்னா வாங்கினால் நடிகை மார்க்கெட் போயிடுமா ?

'' முதல் படத்திலேயே என் நடிப்புக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப் போறாங்களாம் ,என்ன செய்யலாம் அம்மா  ?''
''சம்பாதிக்கவேண்டிய இந்த வயசுலே 
பாரத ரத்னா விருதா...வேண்டாம்னு சொல்லிடும்மா !''

26 November 2013

அகலக்கால் வைக்கிறது என்னைக்கும் ஆபத்துதான் !

''கண்டக்டர்  அகலக்கால் வச்சுக்கிறது வழக்கம்தானே ,இதுக்காகவா சஸ்பென்ட் பண்ணிட்டாங்க ?''
''அகலக்கால் வைச்சு டிக்கெட் போட்டு கொடுத்து இருந்தா பரவாயில்லை ,காசை  மட்டும்தானே   வாங்கி போட்டுகிட்டாரு? ''


25 November 2013

ஆக்கிரமிப்பு நடப்பதன் காரணம் இதுதானா ?

சென்ற வெள்ளிக்கிழமை சென்னை 
உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் அனைத்தும் ...
பொதுமக்கள் யாரும் நுழைய முடியாதபடி இழுத்து மூடப் பட்டனவாம் ...
நீதிபதிகள் ,வக்கீல்கள் யாரும் வரவில்லையா ...
இல்லை கோர்ட் புறக்கணிப்பா ...

மருமகளின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா ?

''சாரி ஆண்ட்டி ,நான் எறிந்த ரப்பர் பால்தான்  உங்க மாமியார் நெற்றியில் பட்டது ...நல்ல வேளை ஒண்ணும் ஆகலே,அதுக்கு நீங்க ஏன் நூறு ரூபாய் கொடுக்கிறீங்க  !''
''நல்ல கார்க் பால் வாங்கி இனிமேல் விளையாடுங்க !''


24 November 2013

மனைவியின் மீதான ஆசை ,அவதியாய் ஆனதேன் ?

''வர வர உன் வீட்டுக்காரர் உன்னை பார்க்கப் பிடிக்காம கிண்டல் அடிக்கிறாரா ,எப்படிடீ?''
''ரூபாவதிங்கிற என் பெயரை ரூப அவதின்னு சொல்றாரே !''