31 January 2013

தின 'சிரி ' ஜோக்!உண்மை ஜோதிடம் ஜனன நேரமும் ,ஜனகனமன நேரமும் சொல்லும் !


''கவலைக்கிடமா இருக்கிற நம்ம தலைவர் பிழைக்க மாட்டார்ன்னு  சொல்றியே ,எப்படி ?''
''ஜாதகத்தைப்  பார்த்த  ஜோதிடர் தலைவரோட 'ஜனகனமன நேரம் 'நெருங்கிடுச்சின்னு சொல்றாரே !'' 


'சிரி'கவிதை!கேள்விக் குறியாகும் மரியாதை !


புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்கள் 
இருட்டில் செய்கின்ற லீலைகள் எல்லாம் 
வெளிச்சத்திற்கு வரும்போது ...
மரியாதை   கேள்விக் குறியாகி  விடுகிறது !

30 January 2013

தின 'சிரி ' ஜோக்!அடுத்தவன் தவறுதான் தெரியும் !

''தப்பை  தப்புன்னு உணர முடிஞ்சா  நீங்க மனுசனில்லே, தெய்வம் சார் !''
''அடுத்தவங்க பண்ற தப்பை உணர முடியுதுன்னு  சொல்ல வந்தேன் ,நீங்க தப்பா புரிஞ்சிக்கிறீங்களே !!


ஒரு சந்தோசமான விசயம் [யாருக்கு என்று கேக்காதீங்க !] நீங்கள் வாசித்தது என் 'வெட்டி 'கரமான  200வது  பதிவு !இந்த இமாலய 'சோதனைக்கு 'ஊக்கம் அளித்த உலகெங்கும் வாழும்  ஜோக்காளியின் சொந்தங்களுக்கு நன்றி! [நன்றின்னு நான் ஒரு தடவை சொன்னா 200 தடவைசொன்ன மாதிரி நீங்க நினைச்சுக்கணும் !] 

'சிரி'கவிதை!கவலைகள் ஓய்வதே இல்லை !

மாசக் கடைசியில் ...
நடுத்தர வர்க்கத்தின்  கவலை ஒன்று கூடியது  ...
காசும் குறைகிறது,
நெட் ஸ்பீடும்  குறைகிறதே!  


29 January 2013

தின 'சிரி ' ஜோக்!தலைப்பைப் பார்த்ததும் அதிர்ச்சி


''என்னது ,எப்படி கொலை செய்வதுன்னு  TV ல்  தொடரா,என்ன டைட்டில் ?''
''தெரிந்து  கொல்வோம் தான் !'' 


சிரி'கவிதை! கற்பு எனப்படுவது இதுதானோ ?


அவனவன்  நெஞ்சிலே ஆயிரம்  கனவுக் கன்னிகள் ...
அவளின் நெஞ்சிலோ  ஒரேயொரு ....கண்ணன்தான் !

28 January 2013

தின 'சிரி ' ஜோக்!ஒட்டுக் கேட்பதிலே சுகம் இருக்கா ?


''புருசன்  பொண்டாட்டி சண்டைப் போடுறாங்கன்னா  ,நாம ஒரு தப்பு  செய்யலாம் ,ஒரு தப்பு செய்யக்கூடாது !''
''காதை  நல்லா  தீட்டிக்கிட்டு  ஒட்டுக்  கேக்கலாம் ,சமாதானம் பண்ணுறோம்னு மட்டும் போயிடக் கூடாது !'சிரி'கவிதை!பேய் ஒண்ணு இருக்குதுன்னா ...!குழியில் போட்டு மூடினாலும் 
சாகாமல் பேய்  ஒண்ணு இருக்குதுன்னா...
அது  நிச்சயமாய்  'பிளாஸ்டிக் பேப்பர்  பேய்தான் !

27 January 2013

தின 'சிரி ' ஜோக்!நடிகைன்னு வந்த பின்னாடி ...?

''எல்லா நடிகைகளும் மணிரத்தினம்  படத்தில் நடிக்க  விரும்புகிறார்களே,ஏன் ?''
''  அப்பவாவது நடிப்பு வருமாங்கிறதை  தெரிஞ்சுக்கத்தான்  ! ''சிரி'கவிதை!அவரவர் கஷ்டம் அவரவர்களுக்கு !


ஒற்றுமையாய் இருந்த என்னைப் பிரித்து 
தலையிலே பலமாய்  அழுத்தி 
 குழியிலே  என்னைத் தள்ளி 
அகலக்கால்  வைக்க விடாமல் 
உள்புரமாய்  மடக்கி ...
 உன்   தேவையை  தீர்த்துக் கொண்டாயே ,
நான்படும்   கஷ்டம்  உனக்கு புரியாதா ?
எனக் கேட்ட 'ஸ்டாப்பிளர்  பின்னிடம் '
முதிர் இளைஞன்  சொன்னான் ...
வேலைக் கிடைக்கும் வரை  என் கஷ்டமே 
எனக்குப்  பெரிது !


26 January 2013

தின 'சிரி ' ஜோக்!எதிர் காலத்தில் இப்படியும் சொல்வார்கள் !

''ஜாதகத்தில் செவ்வாய் தோஷம்ன்னா பரிகாரம்  என்ன செய்யணும் ?''
''ஒரு நடை செவ்வாய் கிரகத்திற்கு  போயிட்டு  வந்துடுங்கோ !''


'சிரி'கவிதை!நாக்குக்கு நல்ல ருசி 'ராட்டை 'மீன் !புலால் மறுத்த காந்தியவாதிகளும் 
விரும்பியிருந்தால் உண்டு இருப்பார் ...
'ராட்டை ' மீனை !

25 January 2013

தின 'சிரி ' ஜோக்!ஷேர் மார்க்கெட் எல்லோருக்கும் கை கொடுக்குமா ?


'' உங்க வீட்டுக்காரர்  ஷேர் ஆட்டோவிலே கூட ஏற மாட்டாரா ,ஏன்?''
''ஷேர் மார்க்கெட்லே போட்ட பணம் போனதில் இருந்து இப்படி ஆயிட்டார் !''


சிரி'கவிதை!வாயாடி, பெரியவள் ஆனதும் ,,,FM ரேடியோவில் கலாய்க்கும் 
 ரேடியோ  ஜாக்கி  சின்ன வயதிலேயே 
'பெரிய வாயாடி'!

24 January 2013

தின 'சிரி ' ஜோக்!மாமூல் படுத்தும் பாடு !''கொள்ளைக் காரங்களுக்கு கூட  போலிஸ்ன்னா  பயம் இல்லாமப் போயிடுச்சா ,ஏன் ?''
'' நம்ம ஏரியாவிலே எந்தந்த  வீடு பூட்டிக் கிடக்குன்னு  போலிஸ் ஸ்டேசனுக்கே  போன் போட்டுக் கேக்கிறாங்களாம் !'''சிரி'கவிதை!சுயநலமே உலகமாகி விட்டதா ?
சிலுவைகள் ஆயிரம் செய்தோம் 
சுமப்பதற்கு  யாரும்  தயாராய் இல்லை ! 

23 January 2013

தின 'சிரி ' ஜோக்!ஆம்லேட் தின்னும் ஆசையே போச்சு !
''ஏம்பா சர்வர் ,ஆம்லேட் உடனே  கிடைக்காதா ?''
''ஆம் 'லேட் ' டாகும்  சார் !
'சிரி'கவிதை!வலி ஒன்றுதான் !பேர்தான் வேறு வேறு !HEADACHE என ஆபீஸில் லீவ்
 சொல்ல   நினைத்தபோது ...
செல் அழைத்தது ..
'மண்டைக் குத்து வலி ,வேலைக்கு வர முடியாது '
ஒலித்தது  வேலைக் காரியின்  குரல் !

22 January 2013

'சிரி'கவிதை!ஒ[பிசிட்டி]ரே கல்லில் இரண்டு மாங்காய் !

பிசிட்டி  குறைப்பதற்கு மிஷினில் ஏறி 
கையை ,காலை ஆட்டி பயிற்சி செய்பவர்கள் ...
நெசவு மிஷினை வாங்கி நெய்தாலாவது 
 பருமனும்.குறையும் ,கைத்தறி புரட்சியும் ஏற்படும் !


தின 'சிரி ' ஜோக்! இதுதான் உண்மையான 'அண்மைச் செய்தி '!

'' கொருக்குப் பேட்டையில்  நடந்த கொலை,கொள்ளை ,கற்பழிப்பு செய்திகளை  மட்டும்அந்த TV ல் 'அண்மைசெய்திகள்'னுகாட்டுவதற்கு     என்ன காரணம் ?''
''அந்த TV  ஆபீஸ்  அங்கேதானே இருக்கு!''
21 January 2013

'சிரி' ப்பாக்கம்! JOKKAALI BLOG ன் நிறத்திற்கு மனதை மாற்றும் சக்தி உண்டு !

              நிறத்திற்கு  மனதை மாற்றும் சக்தி  உண்டு !

தினமலர் பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஜோக்காளி ,ஜல்லிக்கட்டு காளையை அடக்கி விட்டவரைப் போல் துள்ளிக் குதித்தார் .
''சௌதாமினி  ,சௌதாமினி  ,சீக்கிரம் இங்கே வாயேன் ''என்று தன் சகதர்ம பத்தினியை அழைத்தார் .
''என்னாச்சு உங்களுக்கு ?காவிரியில் தண்ணி வந்த மாதிரி உற்சாகம் கரை புரண்டு ஓடுது !''
''நீ சந்தோசமா இருக்கியா ,சொல்லு ?''
''நீங்க  தாலியைக் கட்டுன நாள்லே இருந்து அது எங்கே இருக்கு ?''
''இப்படி புலம்பிக் கிட்டே  திருமண வெள்ளி   விழா வையும்  கொண்டாடியாச்சு !அது கிடக்கட்டும் ,  உன்னை அறியாமலே நீ சந்தோசமா இருக்க ஒரு வழி இருக்கு  !''
''அது நான் எங்க அம்மா வீ ட்டுக்கு போற வழியாதான் இருக்கும் !''   
''அதுமட்டுமில்லை !ஈசியான இன்னொரு வழி   ,ஜோக்காளி ப்ளாக்கை நீ படிக்க கூட வேணாம் ,பார்த்துக் கிட்டு இருந்தாலே போதும் ,ஆட்டோமேடிக்ககா  உன் மனசிலே இனம் புரியாத சந்தோசம் உண்டாகும் !''
''நீங்க  ப்ளாக்கை ஆரம்பித்தப் பிறகு ,  கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிறவங்க எண்ணிக்கை கூடிஇருக்குதுன்னு 'லயோலா ' புள்ளி விபரம் சொல்லுதே !''
''சென்னையில் மட்டுமா ப்ளாக் தெரியுது ?ஆப்ரிக்கா பக்கம் சர்வதேச எல்லையில் ,சாட்டிலைட் ரீசிவர் மூலமா  கப்பலில் இருந்தும் பார்த்து ரசிக்கிறாங்கன்னு தெரியாதா உனக்கு?''
''அவங்க  கீழ்ப்பாக்கம் பக்கம் வரலேன்னு சொல்ல  வர்றிங்களா ?''
''ஆமா !''என்றார் ஜோக்காளி 'செவ்வாயில் 'தண்ணீர் கண்டுப் பிடித்த மாதிரி !
''எதுக்கும் ப்ளாக் விவூவர் மேப்பை  செக் பண்ணுங்க ,அப்பாவி மனுஷன் எவனாவது கடல்லே விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டிருக்கப் போறான் !''
''ப்ளாக் எழுதுற நானே ,பவர் ஸ்டார்  ரேஞ்சுக்கு பல்லைக் காட்டிக் கிட்டு சந்தோசமா இருக்கேன் ,என் விவூவர்சைப்  பற்றி நீ ஒண்ணும் கவலைப் படாதே ,நல்லா  இருப்பாங்க !அது சரி ,உன்னோட  தைராய்ட் பிரச்சினை ரெகுலேட்  ஆகணுமா ?என்ப்ளாக்கைப் பாரு !''
''ஆசையா வாங்கின வைர நெக்லசை போட்டுக்க முடியலே ,கழுத்ததை சுற்றி  இருக்கிற  மப்பிலரை கழட்ட உதவும்னா ப்ளாக்கைப்  பார்க்கணும் ,அப்படி என்ன அதிசயம் ப்ளாக்கிலே ?''
''சொல்றேன் ,அதுக்கு முன்னாலே இன்னொரு கேள்வி ,அடிக்கடி வரும்  தசை பிடிப்பு  ,சரியாப் போய் இடுச்சா?''
''அப்படியேதான் இருக்கு ,அதுக்கும் உங்க ப்ளாக்கைப் பார்த்தா சரியாயுடுமா ?''
''கரெக்ட் !இன்னொரு முக்கிய விஷயம் ,ஜோக்காளி ப்ளாக்கை  ஆண்களை விட பெண்கள் பார்த்தா பலன் அதிகம் !''
''உங்க ஜொள்ளுப் புத்தியை  காட்டிட்டீங்களே!''
''சௌதாமினி ,தப்பா எடைப்  போடாதே !பெண்களுக்கு பீரியட்ஸ் தொந்தரவு கூட வராதுன்னு சொல்ல வந்தேன் !''
''ஜோக்காளி ப்ளாக்கிலே  இப்படி  அதிசய சக்தி இருக்கா ?''
''ப்ளாக்குக்கு இல்லே ,ப்ளாக்கில் அதிகமா இருக்கிற ஆரஞ்சு நிறத்திற்கு சக்தி இருக்குதாம் !இதை நான் சொல்லலே ,சென்னை அண்ணா இயன் முறை மருத்துவமனை விரியுரையாளர் திருமதி தீபா மேடம் தான் சொல்லி இருக்காங்க !''
''உங்களைத் தவிர யார் சொன்னாலும் சரியாத் தான் இருக்கும் !

   நன்றி ..தினமலர்  16.01.13தின 'சிரி ' ஜோக்!MP க்கள் இதை கேட்டாலும் வியப்பில்லை !


''குளிர்க்கால  கூட்டத் தொடருக்கு  முன்னால் MP க்கள்  என்ன கோரிக்கை  வைக்கிறாங்க ?''
''பாராளுமன்ற வளாகத்திலேயே  டாஸ்மாக்  கடையை  திறக்கணுமாம் !''


'சிரி'கவிதை!குருவைப் புரிந்துக் கொள்ளாத சீடர்கள் !


பொத்தல் சட்டையுடன் 
எளிமையின்  உருவாய் 
குருவின் கோலம் ...
தங்க  விக்கிரகமாய் !         

20 January 2013

தின 'சிரி ' ஜோக்!விஸ்வரூபம் ...டௌட் தாமசின் ஆசை !


''விஸ்வரூபம்  தியேட்டரில் ரீலிசான அடுத்த வாரம் DTH ல்  ரீலிஸ் ,இதில் நம்ம டௌட் தாமசுக்கு  என்ன சந்தேகம் ?''
''எல்லோரும் பார்க்க TV ல்  அதற்கு அடுத்த வாரம் வருமான்னு  கேக்கிறார் !'''சிரி'கவிதை! அழகு பிறக்கிறது , அழகு அற்றதில் இருந்து !பட்டாம் பூச்சியைப் பார்க்கையில் அதிசயமாய் இருக்கிறது ...
கூட்டுப் புழுவாய் அடைப்பட்டுக் கிடந்தது  இதுதானா ?
pupa125.jpgஇதிலிருந்து  வந்ததா 

 Monarch (Danaus plexippus)இது?

[காதலியின் தாயாரை பார்த்ததும் இப்படி ஆச்சரியப்  பட்டால் தவறில்லை !
காரணம் ,வாலிப வயதில்  தாவணிக் கட்டிய கழுதைக்கூட  அழகாய்தான்  தெரிகிறது !]

19 January 2013

சிரி'கவிதை!ஊடகங்கள் செய்யும் உன்னதப் பணி !


செவ்வாயில் மண்ணைத் தொண்டி ஆராய்ச்சி என்பதை விட 
நம்ம ஊர் சேனல்களின்   'முக்கியச் '  செய்தி ...
குடும்பஅட்டையில்  உள் தாள் ஒட்டும் பணி !தின 'சிரி ' ஜோக்!படத் தலைப்பே ரிசல்ட்டை சொல்லிவிடுமா ?


''எப்பப் பார்த்தாலும் தலையிலே துண்டை போட்டுக் கிட்டு  இருக்காரே ,அவர் யாரு ?''
''உச்சி வெயில்  படத் தயாரிப்பாளர்தான் !''


18 January 2013

தின 'சிரி ' ஜோக்!சொல்லித் தெரிவதில்லை ...?

''குடும்பப் பாங்கான வேடங்களில் மட்டுமே நடிப்பேன்னு சொன்ன அந்த நடிகை .இப்போ 'கிளாமர் 'லே கலக்குறாங்களே .எப்படி ?''
''சான்ஸ்  கிடைக்காமே காஞ்சுக்  கிடந்தப்போ  சினிமா 'கிராமர் 'படிச்சாங்களாம் !'''சிரி'கவிதை!கலப்படப் பாலுக்கே மக்கள் பழகி விட்டார்கள் !


கறந்த பாலை 
மாவுப் பால் என்று வாங்க மறுத்தார்கள் ...
கலப்படப் பாலை குடித்து 
yummy என்றே கொண்டாடினார்கள் !

17 January 2013

'சிரி'கவிதை!மம்மிக்கு அர்த்தம் புரிந்தது !


தமிழ்த்  தாய் தன் மகனிடம் சொன்னாள் ...
மம்மி என அழைக்காதே !
டிஸ்கவரி சேனலில் 'ஒரிஜினல் 'மம்மி  தந்த ஞானம் !

தின 'சிரி ' ஜோக்!நீதிபதி தொப்பையும் ,வயிறுமா இருந்தா ........!

''ஆர்டர் !.ஆர்டர் !என்னை கனம் நீதிபதி அவர்களேன்னு இனி மேல் யாரும்   சொல்லக்கூடாதுன்னு  உத்தரவிடுகிறேன் !''

16 January 2013

'சிரி'கவிதை!மரித்துப் போனதா மனித நேயம் ?


பாகிஸ்தான்  விக்கெட்  வீழாதா என்று 
ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கையில் ...
இதென்ன  தொந்தரவாய் 'பிளாஷ் நியூஸ் '?
'இந்திய வீரரின்  தலை துண்டிப்பு 'என்று !

தின 'சிரி ' ஜோக்!புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி !

''அவர்'ஆன்மிக குரு'இல்லை ,ஆண்மை மிகு குருன்னு தெரிஞ்சுப் போச்சு !''
''எப்படி?''
''அவரோட பெண் தொடர்புகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்திருச்சே!''


15 January 2013

சிரி'கவிதை!பொங்கலும் கசக்குமா வாழ்த்தால் ?


தமிழர் நம் நெஞ்சம் பூரித்தது ...
பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் வந்த 
வட இந்திய  நடிகையின் 
'போங்கள் வால்தால்'! 

தின 'சிரி ' ஜோக்!கிராமத்து வழக்கம் நகரத்திலும் தொடர்கிறது !''சேவல் கூவுற நேரத்திலே எழுந்திரிச்சுடுவேன்னு சொல்றே ,உங்க வீட்டுலே  ஏது சேவல் ?''
''செல்போன்லே சேவல் கூவுறதை காலை அலர்ட்டா செட் பண்ணிஇருக்கேன் !


14 January 2013

தின 'சிரி ' ஜோக்!வீட்டிலும்அல்லி தர்பார் என்றால் அடிமையாய் யார் இருப்பார் ?


''மந்திரியாரே ,இந்தக் காளையை அடக்குபவருக்கு என் மகளை மணம் முடித்து தருகிறேன்னு சொன்ன பிறகும்
 யாரும்  வரலையே , ஏன் ?''
''காளையை அடக்கிடலாம் ,இளவரசியை அடக்க முடியாதுன்னு தெரிஞ்சுருக்கும் !வேற பரிசை அறிவியுங்கள் மன்னா !''


'சிரி'கவிதை!சொல்வது ஒன்று ,செய்வது ஒன்றுமாய் நம் அரசியல்வாதிகள் !


உயர்நீதி மன்றத்தில்  தமிழில் 
வாதாடக் கூடாது என்பதைக் கேட்டதும் 
இரத்தம்  கொதித்தது ...
காரணங்களை  கேட்டபோது  புரிந்தது .
தமிழ் தமிழ் என முழங்கும் 
தலைவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள்  என்று !

13 January 2013

'சிரி'கவிதை!பெட் காபி ரொம்ப பேட் , பெட் வாட்டர் தான் பெஸ்ட் !


அதிகாலை எச்சில் இரைப்பைக்கு நல்லது !
வெறும் வயிற்றில் தண்ணீர்  பருகுதல்  நல்லது !
மாறா இளமைக்கு இயற்கை மருத்துவமே  நல்லது !
நமக்கெது  நல்லது என்று நாமே உணர்வது நல்லது !

தின 'சிரி ' ஜோக்!'13ம் நம்பர் பேய் வீடு 'படம்பார்த்ததால் வந்த வினை !''பரிகார பூஜை செய்யணுமா .எதுக்கு ?''
''13ன்னாலே  எனக்கு  பயம் ,இன்னைக்கி தேதியும் 13,வருசமும் 13ஆச்சே !''


12 January 2013

தின 'சிரி ' ஜோக்!எழுத்துப் பிழையா ?வேணும்னே செய்ததா ?


''வாத்தியார் வீட்டுக் கல்யாணத்திற்கு போவதா ,வேண்டாமான்னு இருக்கா  ,ஏன் ?''
''பத்திரிக்கை முதல் வரியில் 'மொய்ப் பொருள் காண்பது அறிவு 'ன்னு எழுதி இருக்காரே !''

சிரி'கவிதை!கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா ?

கொள்ளைப் போன பொருள் கிடைக்க வேண்டுமென 
வேண்டுதல்  காணிக்கை செலுத்த தேடிய போது காணவில்லை ....
உண்டியலை !

11 January 2013

'சிரி'கவிதை!100க்கு பக்கம்தான் 108ம் !


100 கிலோமீட்டர் வேகத்தில்
 வாகனத்தில் சென்றவனின் கதி ...
108 வாகனத்தில் சோகத்தில் !தின 'சிரி ' ஜோக்! எள்ளுன்னா எண்ணையாய் நிற்கும் அடியாட்கள் !

''நம் தலைவரோட அடியாட்கள் ரொம்ப வேகமா இருக்காங்க !''
''எப்படி ?''
''தலைவர் 'கொல் 'னு  சிரிச்சாக் கூட அரிவாளை தூக்கிடுறாங்களே !''10 January 2013

'சிரி'கவிதை!தத்துவத்தைப் புரிந்துக் கொள்வது சுலபமா ?


விளங்கிக் கொள்ள முடியலையா ?
விளக்கிச்  சொல்ல முடியலையா ?
அட ,அதுதாங்க  தத்துவம் !

தின 'சிரி ' ஜோக்!இல்லறத் துணைக்கு மாஞ்சா கயிறு வேணுமாம் !''என்  மனைவி சண்டையிலே ,நான் கட்டிய மஞ்சக் கயிறை கழற்றிக் கொடுத்துட்டா !''
''அப்புறம் ?''
''மாஞ்சாக்   கயிறைக் கட்டுங்க ,செத்துத் தொலையுறேன்னு சொல்றா !''


9 January 2013

தின 'சிரி ' ஜோக்!கமலின் ரசிகர்களுக்கு 'விஸ்வரூப 'சிவராத்திரி !


''நாளை இரவு  சிவராத்திரிக்குப் பொருத்தமா  DTH ல் விஸ்வரூபம் ரீலிஸ் ஆவதால் கமல் ரசிகர்களுக்குகொண்டாட்டம தான் !''
''மறுநாள்  தியேட்டரில் படம் வருமான்னு  தெரியலே,அமாவாசைவேறு பொருத்தமா  வருதே! 

'சிரி'கவிதை!பராக் ...பராக் ..மறதி மன்னர் வருகிறார் !சேவிங் கிரீமுக்குப் பதிலாய் 
டூத் பேஸ்ட்டை தடவி 
சேவிங்கை முடித்து 
மறதி மன்னர் புறப்பட்டார்... 
டென்னிஸ் கோர்ட்டுக்கு 
கொசு பேட்டுடன் !

8 January 2013

'சிரி'கவிதை!நியாயம் கேட்கும் நீதிபதியின் பேனா !

முனை நசுக்கி குப்பையில் வீசப்பட்ட பேனா  கேட்டது ...
குற்றவாளிக்கு மரணத் தண்டனை எழுதியது  சரி ...
எனக்கேன்  மரணத் தண்டனை?

தின 'சிரி ' ஜோக்! தூரப் பார்வை மாதிரி ,இது தூரக் காது போலிருக்கே !


''என்  முப்பது வருச  அனுபவத்தில் இப்படி ஒரு நோயாளியை பார்த்ததில்லை!''
''ஏன் டாக்டர் ?''
''நான் பேசுறது காதுலே விழலியாம் ,பக்கத்து தெருவிலே பேசுறது எல்லாம் கேக்குதாம் !''

7 January 2013

தின 'சிரி ' ஜோக்!ஜொள்ளு பார்ட்டிகிட்டேகேட்டது தப்பா போச்சு!


''ரியல் எஸ்டேட் காரங்க 'கட்டாமலே வைச்சுக்கலாம் 'னு ஆப்பர்' போட்டு இருக்காங்களே ,பார்த்தியா ?''
''கல்யாண புரோக்கர்  யாராவது இப்படி ஆப்பர்' போட்டா சொல்லு!''


'சிரி'கவிதை!நாட்டுலே இப்படி சில ஆராய்ச்சியாளர்களும்இருக்காங்க !

பாம்பு சட்டையை  என்ன பிராண்ட் ,என்ன சைஸ் என்று 
ஆராய்பவன்தான் ...
மயிர் பிளக்கும்  ஆராய்ச்சியாளன் !

6 January 2013

'சிரி'கவிதை!மனைவிமுன் கணவனா ,கணவன் முன் மனைவியா ?


தம்பதிகள் போட்டோவிற்கு 
'டைட்டில் 'வைக்கும் போட்டி ...
பரிசை வென்றது ..
'புயலுக்கு  பின் அமைதி ' 

தின 'சிரி ' ஜோக்!செத்த பிறகாவது நிம்மதியா இருக்க விடுங்க!

''தற்கொலைப் பண்ணிகிட்ட சாந்தியோட புருசன் லெட்டர்லே என்ன எழுதி இருக்கிறார் ?''
''என் ஆத்மா சாந்தி அடையணும்னு  யாரும்   வேண்டிக்க வேண்டாம்ன்னு தான் !''


5 January 2013

தின 'சிரி ' ஜோக்!நீரோ மன்னனின் வாரிசுப் போலிருக்கு 'நம்ம தலைவர் '!


''பாலின பலாத்கார விவகாரத்தில் நாடே கொதிச்சுக் கிட்டு இருக்கு ,நம்ம தலைவர் என்னபண்ணிக்கிட்டு இருக்கார் ?''
''பாலின பலகாரம் சாப்பிட்டுக்கிட்டு இருக்காராம் !''


'சிரி'கவிதை!எந்த காரியத்தையும் மனம் லயித்து செய்யணும் !


விருந்து சாப்பிடும் போது மருந்தை நினைக்காதே !
மருந்து சாப்பிடும் போது குரங்கை  நினைக்காதே !
குரங்கு வெளியில் இருந்தால் விரட்டி விடலாம் 
மனதில் இருந்தால் விரட்டுவதும் ,தடுப்பதும் நம் கையில்தான் !

4 January 2013

தின 'சிரி ' ஜோக்!ஓடிப் போன மனைவிக்கு மரியாதை !


''மனைவிப் பேரைக் கேட்டா 'காலாவதி'ன்னு  சொல்றே ,ஏன்?''
''ஓடிப் போன கலாவதியை வேற எப்படி சொல்றது?''


'சிரி'கவிதை!வலி நிவாரணி இதைவிட வேறுண்டா?
பிரசவத்தில்  பிறந்தது  சிசுவுடன்  தாயும்தான்  ..
அழுகுரல் ஓசையும் வலிப் போக்கும்  என்றால் ....
சிசுவின் முதல் அழுகைதான் ..தாயின் பிரசவ வலிக்கு  நல்ல நிவாரணி !

3 January 2013

தின 'சிரி ' ஜோக்!மாமியார் வீட்டில் இருந்த அனுபவம் !
''வீ ட்டோடு இருக்க விரும்பும்  வரன் தேவைன்னு சொன்னது தப்பாப் போச்சு!''
''ஏன்?''
''வருசத்திலே பாதி நாள் 'மாமியார் 'வீட்டுலே தான்  இருக்கேன்னு கொள்ளைக்காரன் வந்து நிக்கிறான்!''


'சிரி'கவிதை!இதென்ன அபத்தம் ?தனக்கு இரையாகும் மீனை 
வலைப் போட்டு பிடிக்கும் மனித இனம் ..
மனிதனை மண்ணுக்கே அனுப்பும் கொசுவுக்குப் பயந்து 
வலையிலே சிறையிட்டுக் கொள்கிறதே ,என்ன நியாயம்?

2 January 2013

சிரி'கவிதை!இந்தியர்களுக்கு 'செவ்வாய் 'தோஷமா ?செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உண்டாவென 
கோடிக்கணக்கில் செலவு செய்பவர்களுக்கு 
தேங்கு தண்ணீரில் ஓங்கி வளரும் டெங்கு கொசுவை 
ஒழிக்க பணமில்லை ...மனமில்லை !

தின 'சிரி ' ஜோக்!அளவிற்கு மீறினால் காபியும் போதைதான் !''என்னை ஏன் ,காபிக்கு அடிமைன்னு சொல்றே?''
''காபி நியூ இயர் ன்னு  வாழ்த்து  அனுப்பி இருக்கிறேயே !''1 January 2013

சிரி'கவிதை!ஆபாசம் பெண்ணின் உடையிலா ,ஆணின் மனதிலா?பெண்மை வீழ்க வென்று கூத்திடும் 
கயவர்கள் கூறும் காரணம் ...
பெண்ணின் உடைக் கவர்ச்சியாம் !
ஆணின் உடை கவர்ச்சி என்று எந்தப் பெண்ணாவது 
ஆணை வன்புணர்ச்சி செய்த சான்று உண்டா?

தின 'சிரி ' ஜோக்!இதுவரை எடுத்த சபதங்களில் இதுதான் சூப்பர் !

'' இந்த புது வருசத்திலே 'ஸ்பெசல் 'சபதமா ,என்னது?''
''ஏற்கனவே எடுத்த சபதங்களை இந்த வருசமாவது நிறைவேற்ற முடியுமான்னுதான் !''