31 March 2013

'சிரி'கவிதை!சாப்ட்வேர் படித்தும் சந்தேகம் தீரலையே !

அதெப்படி அம்மா ,டிவைடரில் வரைந்ததுபோல்
அழகான  வட்டமாய் சப்பாத்தி போடுகிறாய் ?
கேட்டது MCA முடித்த கல்யாணவயது அருமை மகள் !  


தின 'சிரி ' ஜோக்!கலர் பார்க்க முடியாதவர் ,மாத்திரையில் மட்டும் !

''காலையில் சிகப்பு  ,மதியம் மஞ்சள்  ,ராத்திரி வெள்ளை மாத்திரையும்  சாப்பிட சொன்னா ,சைஸ் மாத்தி தரச் சொல்றீங்களே ,ஏன் ?''
''டாக்டர் ,எனக்கு இருக்கிறது நிறக் குருடு  பிரச்சினை ஆச்சே !''30 March 2013

தின 'சிரி ' ஜோக்!தலைவலி தனக்கு வந்தா தான் தெரியும் !

''என் பொண்ணு வீணை  கத்துக்கிறதுலே,என்னைவிட நீங்கதான் சந்தோசமா இருக்கீங்க ,ஏன் சார் ?''
''காலி பண்ணாமே இருந்த  பக்கத்து போர்சன்காரங்க  சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்களே !'' 
''இவ்வளவு நல்லது பண்ண எங்களுக்கு நீங்க என்ன செய்யப் போறிங்க ?''
''வீணையை விடலேன்னா நீங்களும் வீட்டைக் காலி பண்ண வேண்டி இருக்கும் !''


'சிரி'கவிதை!பெண் மனது மட்டும் ஆழமில்லே !

கடலில் மூழ்கியவர்களைக் கூட காப்பாற்றி விடலாம் ...
டாஸ்மாக் கிளாஸில்  மூழ்கியவர்களை
ஒன்றும் செய்ய முடியாது !

29 March 2013

தின 'சிரி ' ஜோக்!இப்படித் தானே படங்கள் வந்துக்கிட்டிருக்கு !

''அந்த இயக்குனடரோட ஹீரோ ,ஹீரோயினைப் பற்றி ஒரே வரியிலே   எப்படி சொல்லலாம் ?''
''ஹீரோவுக்கு 'துணி 'ச்சல் அதிகமாவும்  ,ஹீரோயினுக்கு  'துணி 'கம்மியாவும்  இருக்கும் !'''சிரி'கவிதை!பழி ஓரிடம் ,பாவம் ஓரிடம் !

அடாவடியாய் பேசுவதென்னவோ நீ ...
பாதிக்கப் படுவது மட்டும் நாங்களா ?
முப்பத்து இரண்டு பற்கள் கேட்டன ஒற்றை நாக்கிடம் !

28 March 2013

தின 'சிரி ' ஜோக்!இதுஎன்ன 36 24 38 ஆ ,இன்ச் டேப்பில் அளப்பதற்கு ?

'டியூப் எரியுதான்னு பார்த்து வாங்கிற என் பையனைக் காட்டிலும் உங்க பையன் தெளிவா ,எப்படி ?''
''இன்ச் டேப்பிலே அளந்துதான் வாங்குவான்னா நீங்களேப் பார்த்துக்குங்க !'''சிரி'கவிதை!உங்களின் ஊகம் சரிதான் !


சொற்கள் -பெண்பால் 
செயல்கள் -ஆண்பால் ...
இது இன்றைய இந்திய அரசியலுக்கும் பொருத்தமே ...
காரணம் ,இது ஒரு இத்தாலியப் பழமொழி !

27 March 2013

தின 'சிரி ' ஜோக்!தமிழகம் ஜொலிக்குது [மின்னல் வெட்டினால் ]!

''சீக்கிரமே கரெண்ட் தண்ணி பட்ட பாடு படப் போவுதுன்னு சொல்றாங்களே ,உண்மையா ?''
''தண்ணி ஒருநாள் விட்டு ஒரு நாள் வர்ற மாதிரின்னு  மறைமுகமா சொல்றாங்க போலிருக்கு !'''சிரி'கவிதை!பெற்ற மனம் மட்டுமா பித்து ?

குளுருதா  அம்மா ?
ஆமாண்டா கண்ணு ,எப்படி சொல்றே ?
இருந்த ஒரே கம்பளியை எனக்குப் போர்த்திட்டியே!

26 March 2013

தின 'சிரி ' ஜோக்!கொத்தடிமை முன்னேற்றக் கழகத் தலைவரும் ,தொண்டரும் !

''கட்சி உறுப்பினர் அட்டையை வாங்கிக்கிட்டேன் ,இது எத்தனை நாள் செல்லுபடியாகும் தலைவரே ?''

''சுயமரியாதை இல்லாமே நீங்க இருக்கும் நாள் வரைக்கும் !'''சிரி'கவிதை!கற்புக் கரசிகளும் ,ஏகபத்தினி விரதன்களும் !

ஆண்களே இல்லைஎன்றால் எல்லா பெண்களுமே 
கற்புக்கரசிகளாய் திகழ்வார்கள் ...
                           இது ஒரு  சமஸ்கிருதப் பழமொழி .
உலகில் ஒரே ஒரு பெண்தான் என்றால் எல்லா ஆண்களுமே 
ஏக பத்தினி விரதன்களாய் திகழ்வார்கள் ...
                        இது ஒரு 'ஜொள்ளனின் 'புதுமொழி!!25 March 2013

தின 'சிரி ' ஜோக்!அனுஷ்கா ,ப்ரியாமணியின் ஓரவஞ்சனை நியாயமா ?

'அனுஷ்காவும் ,ப்ரியாமணியும் தெலுங்கு படங்களில் ஆபாசமா நடிப்பதாக ஆந்திராவில் வழக்கு போட்டது சரிதான்னு சொல்றீங்களே ,நீங்க முற்போக்குவாதியா ?''
''அடநீங்க வேற ,தமிழ் படங்கள்லே காட்டாத கவர்ச்சியை அங்கே மட்டும்  காட்டுவது நியாயமான்னுதான் கேக்குறேன் !'' 


'சிரி'கவிதை!தனக்கு தானே தண்டனை அளித்துக் கொள்பவர்கள் !


கடவுளைக் கும்பிடும்போது 
கன்னத்தில் போட்டுக் கொள்பவரைப் பார்க்கையில் ...
'என் தப்புக்கு நானே கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன் 
நீயும் அறைந்து விடாதே 'ங்கிற வேண்டுதல் தெரிகிறது !24 March 2013

தின 'சிரி ' ஜோக்இதுவும் ஒரு நல்ல பொறுத்த 'மே !'!

''அதெப்படி, நான்  பொறந்த மாசம் 'மே 'ன்னு சரியா கண்டுபிடிச்சே ?''
''ரொம்ப லேட்டா வேலை செய்யுற உன்  'ஆட்டு  மூளை 'யை வச்சுத்தான் !''


'சிரி'கவிதை!' தூக்கம் கெட்டது உன்னால்தானடி !

உன்னைக் கண்டதுமே 
எனக்குப் புரிந்த உண்மையை ...
ஆராய்ச்சியாளர்கள் இப்போதுதான் கண்டுபிடித்து இருக்கிறார்கள் ...
சாக்லேட் ஐஸ்கிரீம் இனிப்புகள் 
தூக்கத்தைக் கெடுக்குமாம் !


23 March 2013

'சிரி'கவிதை!பெண்மைக்கு இயற்கை தந்த சீதனம்!

வர வேண்டிய பருவத்தில் 
வரவில்லைஎன்றால் ,,,கஷ்டம் !
வருவதும் மணநேரம் வரும் முன்பே 
வராவிட்டாலும் ...கஷ்டம் !
வந்துக் கொண்டே இருந்தாலும் 
தாய்மை அடைவதில் ...கஷ்டம் !
வருவது நிற்கவில்லையே என்று 
பிள்ளைப் பேறு முடிந்தும்...கஷ்டம் !
இஷ்டப் பட்டு கஷ்டப் படுவது ...
பெண்மைக்கு இயற்கை தந்த சீதனம்! 

தின 'சிரி ' ஜோக்!ஆபிசில் 'நீளும் 'கை ,வீட்டில் ...?

'நீ  லஞ்சம்  வாங்கிறதை உன் மனைவிகூட கமெண்ட் அடிக்கிறாளா ,எப்படி ?''
''கை நீட்டுற வேலையை ஆபிசோட வச்சுக்குங்க ,என் கிட்டே வேணாங்கிறா !''
22 March 2013

தின 'சிரி ஜோக்! டாஸ்மாக் 'தண்ணி'யை மறந்த கவிஞர் !

''தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ,தண்ணீர் கரையில் முடிக்கிறோம்ன்னு எழுதின கவிஞர் ,நடுவிலே ஒரு வரியை விட்டுட்டார் !''
''எந்த வரியை ?'''
''தண்ணியில் தினமும் மிதக்கிறோம் ங்கிறதை !''


'சிரி'கவிதை!இவனன்றோ பாரதியின் பேரன் ?


மரணபயம் வென்றவன் 
எருமைக்குப் பதிலாய் 'YAMAHA 'வை 
எமனுக்கு பரிசளிப்பான் !21 March 2013

'சிரி'கவிதை!கவலை மறக்க கோவிலுக்குப் போனா ....?


கோவிலில் உள்ளே  நுழையும்வரை 
ஆயிரம் ஆயிரம் கவலை ...
நுழைந்தபின் ஒரே ஒரு கவலை ..
'வெளியே விட்ட செருப்பு இருக்குமா ?'

தின 'சிரி ' ஜோக்!பருப்பு வேகுறதுக்கே ஒரு சிலிண்டர் வேணும் !

''ரேசன்லே கிடைக்கிற  துவரம் பருப்பை .துயரம் பருப்புன்னுசொல்றீங்களே ,ஏன் ?''
''லேசுலே வேக மாட்டேங்குதே !''

20 March 2013

தின 'சிரி ' ஜோக்!ஆமை புகுந்த வீடும் ....உருப்படாதா ?

''மீனாங்கிற என்  மகளோடப் பெயரை மாத்தினாதான் புகுந்தவீட்டுக்குப் போற யோகம் வருமா ,ஏன் ?''
''உங்கப் பெயர் ஆனாவிலே ஆரம்பிக்கிறனாலே அபசகுனமா நினைக்கிறாங்களே !''
'சிரி'கவிதை!இதுக்கு கொசுக்கடியே தேவலையா ?

கடிக்கின்ற நிஜக் கொசுவை அடித்துவிட முடிகிறது ...
கடிப்பதுபோல் உணர்ச்சி தரும் மனக் கொசுவை எப்படி துரத்துவது ?


19 March 2013

தின 'சிரி ' ஜோக், !மாமனாருக்கு மருமகன் தந்த மரண அடி !

''மாப்பிள்ளே ,நான் வாங்கித் தந்த 'செய்ன் வேவ்  டைப் 'இன்வர்ட்டர் எப்படி இருக்கு ?''
''சத்தமே போடாமே ,அருமையா வேலை செய்யுது !உங்கப் பொண்ணைத்தான் அந்த டைப்பிலே நீங்க வளர்க்கலே !'''சிரி'கவிதை!வாழ்வாங்கு வாழும் பெற்றோர்கள் !


இறந்த பின்னும் பெற்றோர்கள் 
வாழ்கிறார்கள் வாக்காளர் பட்டியலில் ...
வாழும்போதே பிள்ளைகளால் 
கைவிடப்பட்ட பின்பும்கூட !

18 March 2013

தின 'சிரி ' ஜோக்!அஞ்சு லட்டுக்கு ஆசைப்படும் மாமனார் !

''வரப் போற மருமகளுக்கு கூந்தல் நீளமா இருக்கணுங்கிறது சரிதான் ,திருப்பதிக்குப் போனா அஞ்சு லட்டு தேறணும்னு சொல்றிங்களே ,ஏன் ?''
''நீளமான முடிக் காணிக்கை செலுத்தினா அஞ்சு லட்டு இலவசமா தர்றாங்கலாமே !
'சிரி'கவிதை!கூல் ஆகணும்னா கூழ் குடிங்க !

கூழ் என்ன கோந்தா ?
மீசையில் ஒட்டிக்கொண்டால் வராது என்பதற்கு ...
ஒட்டிக்கும்  என்று பயந்து கூழை குடிக்காமல் இருக்கமுடியுமா ?
கூழுக்கும் ஆசைப்படலாம் ...பசிப்பதால் !
மீசைக்கும் ஆசைப்படலாம் ...ஆண் என்பதால் !

17 March 2013

'சிரி'கவிதை! டாக்டர் தெய்வமா ,எமனா ?

டாக்டரை ....
தெய்வம் என்றார்கள் ...
ICU வில் கோமாவில் இருந்தவன் எழுந்து நடந்ததும் !
எமன் என்றார்கள் ...
குடல்கெட்டு நடைப்பிணமாய் இருந்தவன் இறந்ததும் !


தின 'சிரி ' ஜோக்!நடிகையை ரசிப்பதோடு நிறுத்திக்கணும் ,இல்லேன்னா !

''அரசு ,கோவில் கும்பாபிசேகம் செய்யணும்னு  போராட்டம் பண்றது தப்பா ?கைது பண்ணிட்டாங்களாமே ?''
''அவங்க கும்பாபிசேகம் செய்யச் சொல்றது ,நடிகைக்கு கட்டின கோவிலுக்கு ஆச்சே !
16 March 2013

'சிரி'கவிதை!'வாடா 'என்பவள் உண்மையில் வாடா மலரா ?உன்னை மலர் என்று சொல்ல மனம் வரவில்லை ...
வாடா மலர்கூட வாடி உதிர்வதால் !


தின 'சிரி ' ஜோக்!புருசனை நல்லாப் புரிஞ்சுக்கிட்டுமா இப்படி ?

''உன் வீட்டுக்காரரை  ரொம்ப 'டார்ச்சர் 'பண்ணாதேடி! ஆண்டியாப் போயிடப் போறார் !''
''அவரைப் பற்றி எனக்குத் தெரியாதா ?ஆண்டியாப் போறதுக்குப் பதிலா ,வேற 'ஆன்டி 'யை வேணா தேடித் போவார் !''சிரி'கவிதை!தாலி ,கணவனுக்கு தரும் 'லைசென்ஸ் ?

சல்லாப லீலைகளை தாலி கட்டியவளுடன்  செய்தால்  ...
மாலை  மரியாதையே , தனிதான்  !
தாலி கட்டாமல் செய்யத் துணிந்தால் ..
மான பங்க  வழக்குதான் ,களி தான் !


15 March 2013

தின 'சிரி ' ஜோக்!நடுவர் இப்படின்னா ,பேச யார் வருவாங்க ?

''பட்டிமன்ற நடுவர் ரொம்ப முன் கோபக்காரர்  போலிருக்கு !''
''ஏன்?''
''மணி  அடிச்சும் பேசிக்கிட்டு இருந்த பேச்சாளர் மேலே ,மணியையே தூக்கி எறிஞ்சுட்டாரே !''
'சிரி'கவிதை!கரெண்ட் கட் நேரத்து ஞானோதயம் !


UPS சொல்லாமல் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம் ...
இருக்கும்போதே சேர்த்து வைத்ததுதான் 
இல்லாத நேரத்தில் கை கொடுக்கும் !

14 March 2013

தின 'சிரி ' ஜோக்!நகரத்துப் பிள்ளைகள் வளரும் விதம் !

''பால் எப்படி கிடைக்குதுன்னு ,என் பையனீடம் கேட்டா 'டிப்போவில் இருந்துன்னு 'சொல்றான் !''
''உங்க பையன் பரவாயில்லை ,என் பையன் 'வாசலில் தொங்க விட்டிருக்கிற பையில் இருந்து ன்னு சொல்றானே !''
'சிரி'கவிதை!கொசு அடிக்கவும் கத்துக்கணும் !


பறந்து வந்து ...உடம்பின் மேல்  உட்கார்ந்து ...
கடி இடத்தில் 'லுப்ரிகேசன் 'செய்யும்  வரையும் தெரியாது ...
மெய் மறந்து ரத்தம் உறிஞ்சுகையில் ...
மெதுவாக தொட்டாலே செத்துவிடும் கொசு ...
அது சொல்லும் பாடம் ...
பறப்பதை பிடிக்க நினைக்காதே !
சாதிக்க பொறுமை வேண்டும் !
மெய்   மறந்து இருக்கையில் ஆபத்து அதிகம் !


13 March 2013

'சிரி'கவிதை! யாருக்கு பதவி கிடைக்கும் ?

'லக்கும் 'இருக்கணும் ...
பல்லக்கும்  தூக்கத் தெரியணும் ..
பதவி கிடைத்து விடும் அரசியலில் !

தின 'சிரி ' ஜோக்!நடிகர்கள் சொல்வதும் 'டூப்பு 'தானா ?


''அந்த நடிகர், அடுத்த படத்தில் நடிப்பதற்கு  இருப்பாரான்னு தெரியலேன்னு சொல்றியே ,ஏன் ?''
''இப்ப நடிக்கிற படத்திலேயே 'உயிரைக் கொடுத்து 'நடிச்சுகிட்டு இருக்காராம் !''


12 March 2013

தின 'சிரி ' ஜோக்!'புரிந்துணர்வு'ஒப்பந்தம்'ன்னா புரிங்சுக்கிடணும் !

''அந்த காலத்திலேயும் திட்டம் போட்டு ,ஒப்பந்தம் போட்டு நல்ல நல்ல காரியம் நடந்தது ...இப்போ  எதை எடுத்தாலும் ஊழல் .லஞ்சமுமா இருக்கே ,ஏன் ?''
''இதுதான் 'புரிந்துணர்வு'ஒப்பந்தம்  போடுற  காலமாச்சே !''
'சிரி'கவிதை!இதுவும் 'குடிக்காதே 'என்பதைப் போலத் தானா ?

மக்கள்  தொகையை கட்டுபடுத்த 'கு, க ' திட்டம் கொண்டு வந்த அரசு...
பாலிதீன்  உற்பத்தி தடை சட்டம் கொண்டு வரலாமே ?
உற்பத்தி செய்வானேன் ?உபயோகப் படுத்தாதே என்பானேன்?


11 March 2013

'சிரி'கவிதை!செல் இல்லையெனில் பைத்தியமாகக் கூடும் !

செல்போனும் காதுமாகவே இருப்பவரைப் பார்த்தால் ...
கர்ணனின் நினைவுதான் வருகிறது ...
பிறக்கும் போதே காதில் கவசக் குண்டலம் இருந்ததாம் !


தின 'சிரி ' ஜோக்! கஞ்சப் பிசினாறிக்கு கண்ணாடி எதுக்கு ?

''தூரத்தில் வர்ற பஸ் நம்பர் தெரியலைன்னா .கண்ணாடி வாங்கி மாட்டிக்க வேண்டியதுதானே ?''
''பஸ் பக்கத்திலே வராமலா போயிடும் ?நம்பர் தெரியாமலா
போயிடும் ?''


10 March 2013

தின 'சிரி ' ஜோக்!நம்பிக்கை மோசடி செய்த ராசி பலன் !

''உங்களுக்கு  போன வார ராசி பலன்லே 'கையிலே காசு கொட்டும்'னு இருந்ததே ,பலிச்சதா ?''
''உள்ளதும் போனதுதான் மிச்சம் ,அது காலை 'வார்ற 'ராசி பலனாப் போச்சு !'''சிரி'கவிதை! கிரிக்கெட்டிலும் ஆணாத்திக்க மனப்பான்மையா ?

கிரிக்கெட்டின்  நடுவில் ஆடும் 
'சியர்ஸ் கேர்ள்ஸ்'களை ரசிக்கும் அளவிற்கு கூட ...
கேர்ள்ஸ்  ஆடும் கிரிக்கெட்டை யாரும் ரசிப்பதாக தெரியவில்லை !

9 March 2013

'சிரி'கவிதை!காட்சிக்கு வைத்தவள் ,காட்சி தருவாளா ?

ஓவியங்கள் அருமைதான் ...
ஆனாலும் ரசிக்க முடியவில்லை ..
தூரிகை பிடித்த காரிகை 
வரைந்த ஓவியங்கள் நடுவே 
வரையாத ஓவியமாய் காட்சி தராததால் !


தின 'சிரி ' ஜோக்!நடிகையை தெரியும் ,ராகத்தை தெரியுமா ?

''பாட்டுப் போட்டியில் இருந்து என்னை ஏன் வெளியேத்துறிங்க ?''
''மாயா ,மௌனிகா ,கௌதமியை தெரியும் ...'மாய மௌலவ கௌள 'ராகத்தைப் பற்றி தெரியாதுன்னு சொல்றீங்களே !''
8 March 2013

தின 'சிரி ' ஜோக்!தள்ள வேண்டியதை தள்ளினா....?

''புறம்போக்குப் பெட்டிக் கடைக்கு எப்படி கரெண்ட் கனெக்சன்  தந்தாங்க ?''
''அட நீங்க வேற ,தள்ள வேண்டியதை தள்ளினா தள்ளு வண்டிக்குக் கூட தருவாங்களே !''
 


'சிரி'கவிதை!இந்தியா வல்லரசு ஆவது ஆகாயத்தில் தெரிகிறது !

விமானத்தில் ஏறி இறங்குபவர்களை விட 
விமானம் 'ஏறி இறங்கு'வதைப் பார்ப்பவர்களே அதிகம் ...
வல்லரசு ஆகணும்னா விகிதாச்சாரம் தலை கீழாய் மாறணும் !


7 March 2013

'சிரி'கவிதை!எமனிடமே சரண்டர் எனில் தப்பிக்க முடியுமா ?

ஒரிஜினல் மருத்துவரே சிலநேரம் எமன் ஆகிவிடுகிறார் ...
போலி மருத்துவரை என்னவென்பது ?
எமனின் பினாமி என்பதை தவிர !


தின 'சிரி ' ஜோக்!கணவன் போட்ட கலக்கல் டீ !

''என்னங்க ,டீ இவ்வளவு  மோசமா இருக்கே ,எப்படி போட்டீங்க ?''
''பால் கொதிக்கும் போது சீனியும் ,வடிச்சப்பிறகு டீ தூளையும் ஏதோ ஞாபகத்தில் கலக்கிட்டேன் போலிருக்கு !''
6 March 2013

தின 'சிரி ' ஜோக்!'கட்டை 'போடுவது நம்மாளுங்களுக்கு அல்வா !

''பாரதியார் இருந்தா ,அவருக்கு எதிரா போராட்டம்  வெடிச்சிருக்குமா ,ஏன் ?''
''ஏற்கெனவே ராமர் பாலம் இருக்கும்போது 'சிங்களத் தீவினுற்கோர்  பாலம் அமைப்போம் 'னு எப்படி எழுதலாம்ன்னுதான் !'''சிரி'கவிதை!மொய் என்பது திருமணத்திற்கு பின்னா ,முன்னா ?

அரசின் திருமண உதவி திட்ட பணம் வந்து சேர்ந்தது ...
அரசியல்வாதிக்கும் அதிகாரிக்கும் 
'மொய் 'வைத்த பிறகு !


5 March 2013

தின 'சிரி ' ஜோக்!மலையிலேயே உருண்டு 'போயிருக்க 'வேண்டியவர் !

''அந்த  மலைக் கோவிலுக்கு போனா  திருப்பம் வரும்னு சொல்லுவாங்க ,உங்களுக்கு  எப்படி ?''
''மலையிலே ஏறும் போதும் இறங்கும் போதும் ஏகப்பட்ட திருப்பம்தான் வந்தது !'''சிரி'கவிதை!கொடிது கொடிது அற்பாயுளில் சாவு !

தவணை முறையில் சிகரெட் சாம்பலை தட்டியவன் ...
மொத்தமாய் சாம்பலானான் சில நாளில் !


4 March 2013

தின 'சிரி ' ஜோக்!மனைவி சமையலை வெறுக்கும் புருசன் !

''என்னங்க ,ஊற வச்சாலே சோறு ஆகும் அரிசியை அசாம் விஞ்ஞானிகள் கண்டு பிடிச்சு இருக்காங்களாமே ?''
''அப்படியே காய்கறியையும் கண்டு பிடிக்கச் சொல்லு !கண்ணு காணாத இடத்துக்குப் போய் சமைச்சு சாப்பிட்டுக்கிறேன் !'''சிரி'கவிதை!டயாபெடிக் ?டயத்துக்கு சாப்பிடணும் பாதியளவு !

இரத்த சர்க்கரை அளவு கண்ட்ரோலில் 
இருப்பது தெரிந்ததும் ...
இனிப்பாக ஒரு கப் காபி சாப்பிடத் தோன்றும் !


3 March 2013

சிரி'கவிதை! புனிதமான காதலின் இலக்கணம் !

காதலன் காதலியை கைவிடக் கூடாது ...
இதைவிட முக்கியம் ...
காதலன் காதலிமேலும் கைவிடக் கூடாது !

தின 'சிரி ' ஜோக்! முதல் ராத்திரியிலாவது விழித்து இருந்திருப்பாரா ?

''என் ஆபிஸ் நேரத்திலே ,நான் முடி வெட்டிக்க வந்தா ,உனக்கென்னப்பா  கஷ்டம் ?''
''பழக்க தோஷத்திலே சலூனுக்கு வந்தும் தூங்கி வழியுறிங்களே !''2 March 2013

தின 'சிரி ' ஜோக்!வீட்டுக்கு வந்த' நவகிரக நாயகி '!

''உங்க மருமகளை 'நவகிரக நாயகி 'ன்னு சொல்றிங்களே ,ஏன் ?''
'' தினமும் கோவிலுக்குப் போன  என் பையன் நவகிரகத்தை சுற்றுவதற்குப்  பதிலா ,இவளை சுற்றிக் கிட்டு  இருந்திருக்கானே  !''


'சிரி'கவிதை!விவேகானந்தர் சொன்னதில் அர்த்தம் உள்ளது !

நூறு இளைஞர்கள் என் பின் வரட்டும் 
நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் ...
இது ,விவேகானந்தர்  அன்று சொன்னது !
இன்று லட்சம்  இளைஞர்கள் தயார் 
ஒரு 'விவேகானந்தரை''காணாம் !


1 March 2013

தின 'சிரி ' ஜோக்! கணவன் வாங்கிவந்த 'காலி 'ப்ளவர் !

''நான் வாங்கிவந்த காலிப்ளவரில்  பூச்சி இருக்குன்னா ,எடுத்துப் போட்டு நறுக்க வேண்டியதுதானே ?''
''அதைத்தாங்க நானும் செஞ்சேன் ,மீதி ஒண்ணுமே தேறலே ..உண்மையில் இதுதாங்க 'காலி 'ப்ளவர் !''


'சிரி'கவிதை!மீண்டும் வருமா பொற்காலம் !

முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி ...
அது அந்த காலம் !
விலைவாசி விண்ணில் பறக்க 
இது வியா 'பாரி 'களின்  காலம் !