30 June 2013

தின 'சிரி ' ஜோக்!பெண்டாட்டியை தேடிக்கலாம் ,நகையை ?

''இன்ஸ்பெக்டர் சார் ,100 பவுன் நகையோட என் பெண்டாட்டி காணாமப் போயிட்டா !''
''சரி நான் என்ன செய்யணும் ?''
''எப்படியாவது நகையை மட்டும் கண்டுபிடிச்சுக் கொடுங்க போதும் !''

'சிரி'கவிதை!பெண்கள் நிறைய அழுதால் தாய்ப்பால் குறையுமோ ?

பெண்களின் கண்ணீருக்கும் ,தாய்ப்பால் சுரப்புக்கும் காரணம் ...
ஒரே ஹார்மோன்தான்  என்பதை நம்ப முடியவில்லை !
கணவன் விசயத்தில் தாராளமாகவும் 
குழந்தை விசயத்தில் குறைவாகவும் உற்பத்தி ஆகிறதே !


29 June 2013

தின 'சிரி ' ஜோக்!மஞ்சள் உதவுது திருமணத்திற்கும் திவாலுக்கும் !

''அவர் வியாபாரத்திலே திவால் ஆயிட்டார்னு சொன்னாங்க ,இப்ப பொண்ணோட கல்யாணத்தை ஆடம்பரமா செய்றாரே ,எப்படி ?''
''அந்த மஞ்சள் நோட்டீசில் சம்பாதித்ததை ,இந்த மஞ்சள் நோட்டீசில் செலவு பண்றார் !''


'சிரி'[?]கவிதை!மக்களைக் காப்பதிலும் பூஜ்ஜியம்தானா ?

 ஒவ்வொரு இயற்கை கோரத்தாண்டவமும் சொல்கிறது ...
முன் எச்சரிக்கை நடவடிக்கையில்... 
இன்னும் இந்தியா 
'பூஜ்ஜியம் 'கண்டுபிடித்த மிதப்பிலேயே உள்ளது என்பதை !

28 June 2013

தின 'சிரி ' ஜோக்!ஜாக்கிரதை ,நாக்கு நம்மை கவிழ்த்து விடும் !

'' அந்த உவமைச் சக்கரவர்த்தி என்ன சொல்றார் ?''
''வெளியே வந்த பேஸ்ட்டும் ,பேச்சும் மீண்டும் உள்ளே  
போகாதுங்கிறாரே !''

'சிரி'கவிதை!'இது 'ஒரு' தந்தையின் சுயநலம் மட்டுமில்லை !

என் ஆதர்ச குருவும் எனக்கு பிடிக்காமல் போனார் ...
நானும் விவேகாநந்தராய் ஆகப் போகிறேன் என்று 
என் ஆசைமகன்  கூறியதால் !


27 June 2013

தின 'சிரி ' ஜோக்!நன்றி மறக்காத டாக்டர் !

''டாக்டர் அறையிலே நன்கொடை கொடுத்தவங்கன்னு  நிறைய போட்டோ இருக்கே ,அவங்க எல்லோரும் உயிரோட இருக்காங்களா ?''
''டாக்டர் பண்ண ஆப்ரசனுக்கு காசையும் கொடுத்து ,உயிரையும் தியாகம் பண்ணீட்டாங்களே !''

'சிரி'கவிதை!தொப்பைக்கு 'goodbye 'எப்போது ?

தொப்பை விநாயகர் சிலைகூட ...
கடலில் உடனே கரைந்து விடுகிறது !
கடற்கரை ஓரத்தில் வேர்க்க வேர்க்க ஓடுபவர்களின் 
தொப்பைதான் கரைவதாக தெரியவில்லை !

26 June 2013

தின 'சிரி ' ஜோக்!பெயரை வைத்தவன் வாயில் உப்பு அள்ளிப் போடணும் !

''பவித்ராங்கிற என் பெயரை ஏன் மாத்திக்கச்  சொல்றீங்க ?''
''பணத்தை வித் ரா பண்ணி முடிய மாட்டேங்குதே !''

'சிரி'கவிதை!காலம் செய்த கோலமடி !

செல் வாட்ச் வந்தபின் ...
ஆட்காட்டி விரலும் ,கட்டை விரலும் செய்த வேலை நின்றுபோனது !
செல்போன்  வந்தபின் ...
வாட்ச் வாங்குவதே  நின்று போனது !

25 June 2013

தின 'சிரி ' ஜோக்!இடைவேளையில் வண்டி நிற்கும் ,சிரமப் பரிகாரத்திற்காக !

''அந்த வீடியோ கோச் பஸ், மினி தியேட்டர் மாதிரியே இருக்கு !''
''ஆடியோ வீடியோ அவ்வளவு நல்லா  இருக்கா ?''
''அது மட்டுமில்லே ,கண்டக்டர் இடைவேளை நேரத்திலே முறுக்கு ,கோன்  ஐஸ் எல்லாம் வித்துக்கிட்டு வர்றாரே !'

'சிரி'கவிதை!ஹீரோக்கள் எல்லாம் முன்பே போய் சேர்ந்து விட்டார்கள் !

படத்திலே வில்லனாய் இருந்தாலும் ...
நிஜத்திலே அவர்தான்  ஹீரோ  !
எமனைக்கூட நெருங்க விடாமல் நீண்ட நாள் வாழ்ந்தார் ...
MN நம்பியார் !

24 June 2013

தின 'சிரி ' ஜோக்! ரீபண்ட் ஆகிறதா வரதட்சணை ?

''ஐம்பதாயிரம் செலவு பண்ணி  வைர மோதிரம்  வாங்கியாச்சு...இன்னும் நாலரை லட்சம்னு முணுமுணுக்கிறியே ,ஏன் ?''
''உங்களை வாங்கிறதுக்கு எங்க அப்பா செய்த செலவுலே வரவேண்டியதை சொன்னேங்க !''

'சிரி'கவிதை!இதுவும் ஒரு பிரசவ வைராக்கியம் தான் !

தையல் கூலியை கொடுக்கும் போதெல்லாம் ...
மனதிலே ஒரு வைராக்கியம் ...
இனிமேல் ரெடிமேட் மட்டுமே வாங்க வேண்டும் !

23 June 2013

தின 'சிரி ' ஜோக்!படிச்சா மண்டைக் காயும் ,பரவாயில்லையா ?

''எள்ளுதான் காயுது ,எலிப் புழுக்கை ஏன் காயுது ?''
''காய்ஞ்ச எள்ளுலேர்ந்து எண்ணெய் எடுக்கலாம் ,புழுக்கை ஏன் காயுதுன்னு காயப்போட்ட எலியைத்தான் கேக்கணும் !''

'சிரி'கவிதை!உலக அதிசயம்ன்னா சும்மாவா ?

பெயர் என்னவோ 'பைசா 'கோபுரம்தான் ...
மேலும் சாய்வதை தடுக்க செலவோ கோடிக்கணக்கில் !

22 June 2013

தின 'சிரி ' ஜோக்!பார்க்கக் கூடாததைப் பார்த்தா இப்படித்தான் !

''உன் மனைவி உன் மூஞ்சியிலே குத்துவிடும் போது, டிவியிலே என்ன பாட்டு பார்த்துகிட்டு இருந்தே ? ''
'குத்துப் பாட்டுக்களைதான் !'''சிரி'கவிதை!ருசி புரிந்ததும் புரியாததும் !

வாய்க்கு ருசியா ஆயிரம் அரிசி ரகங்களை உண்டாலும் ...
வாய்க்கரிசி பாசுமதியா ,ரேசன் அரிசியா என்று  புரியப் போவதில்லை !

21 June 2013

தின 'சிரி ' ஜோக்!இதுக்குத்தான் நாய் வாலை நறுக்கிறாங்களா ?

'' கப்புலே வைச்ச சூப்பை ஒருசொட்டு விடாமே நக்கி நக்கி குடிக்கிற அந்த நாய்க்கு, உண்மை தெரிஞ்சா உன்னைக் கடிச்சே கொன்னுடுமா ,ஏன் ?''
''அதோட வாலை நறுக்கி வச்ச சூப் ஆச்சே !''

'சிரி'கவிதை!மனைவியும் மனோரஞ்சிதப் பூதான் !

காதலி மனைவியானதும் புரிந்தது ...
அவள் மனோரஞ்சிதப்பூவின் ஜாதியென்று !
தள்ளி நின்று ரசித்தபோது ...மணந்தாள் !
மணமான நெருக்கத்தில் தந்தாள் ...
தலைச்சுற்றலையும் மயக்கத்தையும்!

20 June 2013

தின 'சிரி ' ஜோக்!வீட்டுச் சண்டையை நாட்டுச் சண்டை ஆக்கலாமா ?

''அரசே,பக்கத்தில்  இருப்பது எல்லாம் நட்பு  நாடுகளாச்சே ,வம்புச் சண்டைக்கு ஏன்  படையெடுத்து  போகணும் ?''
''அந்தப்புரத்தில் நடக்கிற சக்களத்தி சண்டையை காணச்  சகிக்கலையே !''


'சிரி'கவிதை! காதல் வந்தால் கவிதை எப்படி?

மண்ணில் விழும் விதைகள் யாவும் முளைப்பதில்லை ...
காதலில் விழும் மனதில் எல்லாம் கவிதை முளைக்கிறதே ,எப்படி ?


19 June 2013

தின 'சிரி ' ஜோக்!எளனியிலே நிறைய தண்ணி இருக்கணும்னு ஆர்டர் ,ஏன் ?

''நம்ம கணேஷ் வழுக்கை தலையாய் இருக்கிறது நமக்கு லாபமா ,எப்படி ?''
''இளநீர் கடைக்குப் போனா 'நல்ல வழுக்கையா வெட்டுங்க 'ன்னு நாம சொல்லிவிடக்கூடாதுன்னு முதல்லே ஆர்டர் பண்ணிடுறானே !''


'சிரி'கவிதை!சைட் அடிக்காதே ...எச்சரிக்கும் நிறம் !

வேறெந்த நிறத்தைவிட ...
வெகுதூரத்திலும்  தெரியும் 'மஞ்சள் 'மகிமை யை ...
நமது முன்னோர்கள் உணர்ந்துதான் 
தாலிக் கயிர் முழுதும்  மஞ்சள் பூசினார்கள் !


18 June 2013

தின 'சிரி ' ஜோக்!ஆமை புகுந்தா வீட்டிற்கும்,ஒவ்வாமை புகுந்தா உடம்புக்கும் ஆகாது !

''அலர்ஜிங்கிற வார்த்தையை கேக்கும் போதெல்லாம் இரத்தம் கொதிக்குது,டாக்டர் !''
''அலர்ஜியே  அலர்ஜி ஆகுதா ,ஏன் !''
''ஒவ்வாமையை ஏன் அலர்ஜின்னு மரியாதையா சொல்லணும் ?''

'சிரி'கவிதை!பூக்களுக்கும் பிடிக்கும் என்னவளை !


நிஷகந்திப் பூவே ...
என்னவள் உன்னை சூடிக் கொள்ளவில்லை என்ற கோபமா ...
நடுஇரவில் மலர்ந்து விடிவதற்குள் வாடி விடுகிறாயே !

17 June 2013

'சிரி'கவிதை!மருந்து கால் ,நம்பிக்கை முக்கால் !

போலி மருந்தினாலும்  நோய் குணமாகிறது ...
நம்பிக்கை நம் நெஞ்சில் இருப்பதால் !

தின 'சிரி ' ஜோக்!கொள்ளைக்காரர்கள் ஜாக்கிரதை ,'பூல் 'ஆகாதீங்க !

''அந்த பங்களா வாசல்லே ,வித்தியாசமா போர்டு மாட்டி இருக்காங்களா ,எப்படி ?''
''பணம் ,நகைகள் எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாய் வைக்கப் பட்டு உள்ளது ,வீணாய் முயற்சித்து ஏமாற வேண்டாம் ன்னுதான் !''

16 June 2013

தின 'சிரி ' ஜோக்!தோழியின் உளறலில் புரிந்தது புருசனின் துரோகம் !

''ரொம்ப நாளைக்கி பிறகு ,என் வீட்டுக்காரர் சினிமாவுக்கு கூட்டிட்டுப் போனார்டி ...ஐஸ் ,பாப்கார்ன்னு எதையும் வாங்கித் தரலே ...கஞ்சப் பிசினாரி !''
''அவரை  அப்படியெல்லாம் வையாதே ...என்னை கூட்டிட்டுபோனா தாராளமா செலவு செய்றாரே ! 'சிரி'கவிதை!கருப்புக்கே உரிய தனிச்சிறப்பு !

சிகப்பு நிறம் என்ன ஓவியமா ,,,
ஓவிய மையின் பெயரே 'இந்தியன் இங்க்'தான் !


15 June 2013

சிரி'கவிதை!topup செய்ததும் காதலன்தான் !

திருமணம் ஆனதும் ...
மிஸ் கால்   மிசஸ் காலானது !


'சிரி'கவிதை!நெற் 'பிள்ளை 'யுடன் புல் 'அப்பனுக்கும் பாயும் ?

புருசன்மார்களுக்கு வகைவகையாய் 
புசிக்க கிடைக்கிறது என்றால் ...
பிள்ளைகள் மேல் தாய் காட்டும் 
பாசம்தான் காரணம் !

தின 'சிரி ' ஜோக்!இதுக்கு அவரே காசியிலே தங்கிவிடலாம் !

''காசிக்குப் போனா எதையாவது விட்டுட்டு வரணும்னு சொல்றாங்க ,எனக்கும் போகணும் போலத்தான் இருக்கு !''
''போயிட்டு வர வேண்டியதுதானே ?''
''என் சம்சாரம் வர மாட்டேங்கிறாளே !''


14 June 2013

'சிரி'கவிதை!மனைவி மட்டுமில்லே ,லைப் பார்ட்னர் என்றால் !

மனித உடம்பில் இதயம் மட்டுமே 
லைப் லாங் கியாரண்டி...
முதலில் உருவாகி கடைசியில் நிற்பது !
அதன் கியாரண்டிகாலம் கூடும் குறையும் ...
லைப் பார்ட்னரைப் பொறுத்து !

தின 'சிரி ' ஜோக்!அய்யாவுக்கு இருக்கு ஆப்பு !


''அம்மா .நம்ம வேலைக்காரி பெயர் சித்ராதானே ?''
''ஆமாண்டா கண்ணு ,எதுக்கு கேக்குறே ?''
''சித்தி ன்னு சுருக்கமா கூப்பிடுன்னு அப்பா ஏன் சொல்றாரு ?''

13 June 2013

தின 'சிரி ' ஜோக்!போலீஸை வேற எப்படி செலக்ட் செய்யலாம் ?

''போலீஸ் தேர்வுக்கு ஓட்டப்பந்தயம் கயிர் ஏறுவது போன்ற கடுமையான டெஸ்ட் எல்லாம் எதுக்கு வைக்கிறாங்கன்னு தெரியலே !''
''என்னடா சொல்றே ?''
''மாமூல் வாங்கிறதுக்கு அதெல்லாம் தேவையான்னுபடுதே !''

'சிரி'கவிதை!சட்டை ,பனியன் தத்துவம் புரிகிறதா ?

இரட்டைக் குழந்தைகளில் ...
முதலில்  பிறந்தவன் மூத்தவன் அல்லன்  ! 
எப்படிஎன்றால் ...
கடைசியாய் போட்டுக் கொண்ட  சட்டையை முதலில் கழற்றிவிட்டு ,
முதலில் போட்டுக் கொண்ட பனியனை கடைசியில் கழற்றுவதைப்போல !

12 June 2013

தின 'சிரி ' ஜோக்! பிள்ளைமேல் நம்பிக்கை இப்படித்தான் இருக்கணும் !

''உங்க மகன் தீக்குளிக்கப் போறானாமே ?''
''ஆமா ,அவன் கிழிச்சான் ,,,அவன் குளிச்சே ஆறு மாசமாச்சு !'

...................................................................................................................................
பிரசுரித்து  ஊக்குவித்த 'குமுதம் 'இதழுக்கு நன்றி !

'சிரி'கவிதை!மனைவியை 'புருசானாதிபதி 'என்றே சொல்லலாமா ?


ஹேண்ட் பார் இருப்பதோ கணவரிடம் ...
ஓட்டுவதோ பின்னால் இருக்கும் மனைவி ...
டூ வீலரை மட்டுமல்ல !


11 June 2013

தின 'சிரி ' ஜோக்!வாயிலே என்ன கொழுக்கட்டையா ,புல்லிங் ஆயிலா ?

''பீரோ புல்லிங் கொள்ளையர்கள்,ஜன்னல் ஓரமா பீரோவை இழுக்கிறதை பார்த்த பிறகும் உன்னாலே ஏன் சத்தம் போடமுடியலே ?''
''ஆயில் புல்லிங் பண்ணிக்கிட்டு இருந்தேங்க !''


'சிரி'கவிதை!பலருக்கும் உண்டு பாட்டன் தந்த 'சொத்து '!

கருவிலே திரு உடையார் ...
இப்போது மிக அரிதாகி விட்டார்கள் !
ஜீனிலேயே சர்க்கரை நோய் உடையார்  
நம் ஊரில் பெருகி விட்டார்கள் !


10 June 2013

தின 'சிரி ' ஜோக்!இந்த தம்பதிக்குள் வாக்குவாதமே வராது !

''மாப்பிள்ளே ,என் பொண்ணுக்கு வாய் கொஞ்சம் நீளம் ,பக்குவமா நடந்துக்குங்க !''
''கவலையே படாதீங்க மாமா ,எனக்கும் கை கொஞ்சம் நீளம் !''

சிரி'கவிதை!கிரிக்கெட்டை விட சியர்ஸ் கேர்ள்களின் டான்ஸ் பெட்டர் !

கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம் தான் ...
நாட்டுக்காக விளையாட வேண்டியவர்கள்தான் ...
நோட்டுக்காக விளையாட ஆரம்பித்து விட்டார்கள் !

9 June 2013

'சிரி'கவிதை!சினிமாக் கவர்ச்சி யாரை விட்டது ?

சினிமாவின் வலிமை அபரிமிதமானது ...
'திரைப் படச் சுருளை தீக்குச்சிகளுக்கு தின்னக் கொடுப்போம் 'என்ற 
கோபக்கார கவிஞனைக் கூட பாடல்  எழுதவைத்து 
தேசிய விருது வாங்கிக் கொடுக்கும் !

தின 'சிரி ' ஜோக்!நடிகைக்கு இப்படியும் ஒரு ஆசை !

'' 'பார்க்க ..பார்க்கத்தான் பிடிக்கும் 'டயலாக் நடிகை சோனம் கபூரை ரொம்ப பாதிச்சுருச்சு போலிருக்கா ,ஏன் ?''
''தனக்கு வர்ற கணவன் தனுஷ் மாதிரி இருக்கணும்னு சொல்லி இருக்காங்களே !''


8 June 2013

தின 'சிரி ' ஜோக்!கொள்ளைக்காரங்களும் நியூஸ் படிக்கிறது இதுக்குத்தான் !

''என்னடி சொல்றே ,நம்ம வீட்டிலே கொள்ளைப் போனதுக்கு என் நண்பர்தான் காரணமா ,எப்படி ?''
'ஆமா ,அவர்தானே  ,,,ஒருமாசம் நாம அமெரிக்கா போனதை  வாழ்த்தி தினசரியிலே விளம்பரம் கொடுத்தது !''

'சிரி'கவிதை!இன்றையப் பெண்களுக்கும் பொருந்தும் ?

பெண்ணுக்கு  கை விரல் நக வெட்டியாய் ...
வெட்கம் !

7 June 2013

தின 'சிரி ' ஜோக்!தற்கொலை நடிகைக்கு உருக்கமாய் ஒரு அஞ்சலி !

''அவர் கவர்ச்சி நடிகையின் தீவிர ரசிகர் போலிருக்கா ,எப்படி ?''
''இருக்கும் போது தூக்கத்தைக் கெடுத்தாய் ..அளவுக்கு அதிகமாய் தூக்கமாத்திரையை உண்டு ..துக்கத்தை ஏன் கொடுத்தாய்ன்னுஎழுதி இருக்காரே !''

'சிரி'கவிதை!முதல் அழுகை தாய்க்கு ஆறுதல் !

பிறந்ததும் சிசு அழுதது ...
தாயின் வலியை உணர்ந்து !

6 June 2013

தின 'சிரி ' ஜோக்!வரவுக்கும் செலவுக்கும் சரியாகுமோ ?

''உள்ளங்கை அரிக்குதுன்னு காட்டினா , யார் சொல்றதை நம்புறதுன்னு தெரியலே !''
''யார் என்ன சொல்றாங்க ?''
''ஜோதிடர் வரவு வரும்ன்னும் ,டாக்டர் வைத்தியச் செலவு வரும்ன்னும் சொல்றாங்களே !.

'சிரி'கவிதை,!ஆரோக்கியம் வேப்பங் குச்சி பிரஷ் தான் !

வேப்பங் குச்சியில் 'டூத் பிரஷ் 'யை கண்டுபிடித்தவன் ...
நோ 'பல் ' பரிசுக்கு தகுதியானவனே !

5 June 2013

தின 'சிரி ' ஜோக்!மாமூல் நூறு வகை !

''நம்ம ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ,மற்றவங்களுக்கு வழிகாட்டியா இருக்காரா ,எப்படி ?''
''மாமூல் வரும் நூறு வழிகள் ன்னு புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்காரே !''