1 September 2013

நிஜப் பிரசவக் காட்சி காண துணிச்சல் உண்டா உங்களுக்கு ?

     

6 comments:

 1. Replies
  1. எல்லா நடிகைகளும் துணிக் குறைவாய் போஸ் கொடுக்க ...ஸ்வேதா மேனனின் துணிச்சல் யாருக்குதான் வரும் ?
   நேற்றைய பதிவர் சந்திப்பில் உங்களை நான் தேடியதைப் போலவே .நண்பர் முத்து நிலவனும் தேடினார் ..விரைவில் சிந்திப்போம் .

   Delete
 2. சமையலறையிலிருந்து வந்த சுண்ட வத்தல் குழம்பு மணம்… ஹால் சோபாவில் ‘என் கடன்வுஏயும், பேப்பரும் பார்த்துக் கிடப்பதே’ என்றிருந்த ஜோக்காளியை சுண்டி இழுத்தது.
  தன் தர்மபத்தினி சௌதாமினியின் வாய், காதைவிட அதிக நீளம் என்றாலும், வாயக்கு ருசியாய் ஆக்குவதால், பின்னதுக்கு முன்னது பரவாயில்லேன்னு நினைத்துக் கொண்ட ஜோக்காளி சு.வ.கு. மணத்தை பிராணாயாமம் செய்வதுபோல் ஒற்றை மூக்கினால் உறிஞ்சினார்.
  “என்னங்க மெதுவா மூக்கை உறிஞ்சக்கூடாதா? குழம்புக் கொதி ஆவி உங்க மூக்கை ஜோக்கி நேரா வருது, பாருங்க!.”
  அடுத்து நொடி ‘ஹச்..ஹச’; என்று ஜோக்காளி தும்மியதில் அவர் கையில் இருந்த நிய+ஸ் பேப்பர்‘ஸ்பிரே’ மழையில் குளித்து முடிந்தது.
  “மறுபடியும் மூக்கை உறியாதீங்க! கொதிக்கிற குழம்பு உங்க மூக்குலே நுழைஞ்சிடும்!”
  “என்னை கிண்டல் பண்றதுண்ணா மட்டும் எப்படித்தான் யோசிப்பியோ தெரியலே, சௌதாமினி!”
  “புளியைக் கரைக்கும்போதெல்லாம் உங்க யோசனைதான் வருதுங்க!”
  “சரி, சரி, சீக்கிரம் சாப்பாட்டைக் கொண்டுவா! நாட்டுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்ல வேண்டிய கடமை அழைக்குது!”
  “கொஞ்சம் பொறுங்க, கொதிச்சுக்கிட்டிருக்கு குழம்பு! என்னவோ நல்ல செய்தின்னு சொன்னீங்களே என்னது?”
  “தைரியமா முடிவு எடுக்கிற ஒரு பெண்மணியிடம் பேட்டி எடுத்து எழுதலாம்னு இருக்கேன்!”
  “விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சை சந்திக்கப் போறீங்களா?”
  “அதுக்கு அமெரிக்கா போகணும், பாஸ்போர்ட், விசா எல்லாம் வேணும்...”
  “இங்கிலீஷ்லே ஸ்பீக்கத் தெரியணும், உங்களுக்கேது அந்த சாமர்த்தியம்?”
  “கரெக்ட்! அதனாலதான் மலையாளத்தில் பறைஞ்சி ஒரு நடிகையை பேட்டி எடுக்கலாம்னு இருக்கேன்!”
  “pஜோக்காளி நடிகைங்க விஷயத்திலே வீக்காளி! தெரிஞ்சதுதானே?”
  “நீ நினைக்கிற மாதிரி இல்லே, இந்த ஸ்வேதா மேனன்ங்கிற நடிகை. அவங்க தன் நிஜ பிரசவத்தை ஒரு படத்திலே காட்டுறதுக்கு தைரியமா சம்மதிச்சு இருக்காங்க!”
  “பொறககாத குழந்தைக்கு பிரசவ வேதனையிலே துடிக்கிறமாதிரி நடிக்கிறவங்களோட நிஜ பிரசவத்தை, எந்தப் படத்திலே காட்டப்போறாங்க?”
  “களி மண்ணுன்னு கேள்விபட்டேன்!”
  “கேள்வி என்னாபடுறது, தலையிலே இருக்கிறது தானே? டெலிவரி நார்மல்தானா, சிசேரியனா?”
  “கத்தரியிலிருந்து அவங்க தப்பிச்சுட்டாங்க! ஆனா இந்த டெலிவரி சீன் சென்சார் கத்தரியிலிருந்து தப்பிக்குமான்னு தெரியலேயே!”
  “ஆளாளுக்கு ஒரு கவலை உங்களுக்கு இப்படி ஒரு பெருங்கவலை!”
  “பொறந்த அந்த பெண் குழந்தைக்கு சபீனான்னு பெயர் வெச்சு இருக்காங்களாம் பதினாறு வருசம்போனா சினிமாவிலே சபினா லேடி சூப்பர் ஸ்டாரா வரும்னு நினைக்கிறேன்.”
  “தீர்க்க தரிசனமா சொல்றீங்களே, எப்படி?”
  “பிறக்கும்போதே சினிமாவிலே தலைகாட்டி பொறந்ததாச்சே! சபினான்னா அழகின்னு அர்த்தமாம் - சேர நாட்டுப் பெண் அழகாத்தானே இருக்கும்!”
  “ரொம்ப வழியாதீங்க ஜொள்ளு ஒழுகுது!”
  “என்னைச் சொல்றியா? அந்தக் காலத்திலேயே சேர நன்நாட்டிளம் பெண்களுடனேன்னு பாரதியாரே பாடி இருக்காரே! அந்த முண்டாசு கவிஞன் மனசிலேயும் ஒரு ‘வாலி’ப கவிஞன் இருந்திருக்கான் பாரு!”
  “ஐயையோ, அடி பிடிச்ச நாத்தம் வருதே, அத பார்க்கணும் முதல்லே”ன்னு சமையலறைக்குள் சென்ற சௌதாமினி முகமும் சுண்ட வத்தக் குழம்பானது!
  அடுப்பில் இருந்த சுண்ட வத்தக் குழம்பு, சுண்டிப்போய் பாத்திரத்திலே ஒட்டி செத்த குழம்பு ஆகியிருந்தது.
  “உங்க களிமண்னை என் தலையிலேயும் கட்டிட்டீங்களே!” என்ற சௌதாமினியின் முகத்தில் சாண்டி புயல் மையம் கொள்வதைப் பார்த்த ஜோக்காளி கிரேட் எஸ்கேப் ஆனார்!

  ReplyDelete
  Replies
  1. பாமினி எழுத்துக்களை தமிழ் உரு மாற்றம் செய்ததற்கு மிக்க நன்றி techசங்கர் !

   Delete
 3. Please use this : http://www.suratha.com/reader.htm

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி techசங்கர் !

   Delete