Tuesday, 8 October 2013

டெங்குக்கு மருந்தில்லை !கொசுவுக்கும் ஒரு முடிவில்லையா ?

கின்னஸ் சாதனை செய்ததற்காக 
பாராட்ட முடியவில்லை ...
காரணம் ,இந்த சாதனையால் வருடம் தோறும் 
இறந்தோர் எண்ணிக்கை இருபது கோடியாம் !
உலகிலேயே மோசமான உயிரினம் என்று 
சாதனைக் கிரீடம் சூட்டிக் கொண்டிருப்பவர் ...
திருவாளர் 'கொசு 'வார்  தான் !

8 comments:

  1. வளர்வது நம்மால் தான்....

    ReplyDelete
    Replies
    1. ஆத்தா ஆடு வளர்த்தா ,கோழி வளர்த்தா பரவாயில்லை ,கொசுவையும் சேர்த்து வளர்க்கக் கூடாது இல்லையா தனபாலன் ஜி ?
      நன்றி !

      Delete
  2. அடுத்த முறை திருவாளர் கொசுவார் வந்தாரென்றால் ஒரு ஃபோடோ சேர்ந்து எடுத்துக்கணும்!
    ஏன்னா கின்னஸ் சாதனையாளராச்சே!

    ReplyDelete
    Replies
    1. கொசுவாருக்கு வெத்திலை பாக்கு வச்சு அழைக்க வேண்டியதில்லை ...அவர் எப்பவும் போஸ் தர ரெடி ..நாமதான் தரமான காமெராவோட ரெடி ஆகணும் !
      நன்றி அஜிஸ் ஜி !

      Delete
  3. பாராட்டு விழா நடத்தலாமா!?

    ReplyDelete
    Replies
    1. தாராளமா நடத்தலாம் ,யார் தலைமை தாங்குவது என்பதையும் நீங்களே சொல்லுங்க ...
      நல்லாக் கடிக்கும் பதிவரைப் பற்றி உங்களுக்குத் தான் நல்லாத் தெரியுமே !
      நன்றி ராஜி மேடம் !

      Delete
  4. செவ்வாய் கிரகத்துக்கு குடி போக போகிறவர்களை பொழச்சு போகட்டுமுன்னு விட்டுவிடு வாரா கொசுவார்

    ReplyDelete
    Replies
    1. செவ்வாய் கிரகத்தில் மனுஷன் வாழ முடியும்னா கொசுவாருக்கு சொல்லவே வேணாம்,வந்துடுவாரு !
      நன்றி தோழரே !

      Delete