25 October 2013

பொம்பள டாக்டரையும் நம்ப முடியலே !

கோவிலபாக்கம்  சகோதரிகள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் ...
சூலமங்கலம் சகோதரிகளைத் தெரியும் ...
யாரிந்த புது சகோதரிகள் ?

ஐந்து வருசமா நடிச்சுக்கிட்டு  இருந்திருக்காங்க ...
ஒரு படத்தில் கூடப் பார்த்ததில்லையேன்னு நீங்க கேட்கிறது எனக்கும் புரியுது !
அவங்க படத்தில் நடிக்கலே...
நிஜத்திலே 'வசூல் ராணி MBBS 'களாய் கிளினிக் வைத்து நடத்தி வந்திருக்கிறார்கள் ...
ஒரிஜினல் டாக்டர்களே செய்யத் தயங்கும்
கருக்கலைப்புக் கூட செய்து இருப்பதாக புகார் வந்து உள்ளதாம் ...
இந்த புண்ணிய காரியங்களை ஒரு வருஷம் ,இரண்டு வருசமல்ல ...
ஐந்து ஆண்டுகளாய் செய்துள்ளார்கள் ...
பத்தாவதுகூடப் படிக்காத சமீனா அன்ட் 'சபீனா' சகோதரிகள் சென்னை மாநகரத்திலேயே ...
போலி டாக்டர்களாய்  கொடிகட்டிப் பறக்க முடியும் என்றால் ...
கிராமங்களில் நிலை என்ன என்பதை யாராவது 'சபீனா'வாய்  விளக்கி சொன்னால் நல்லது !
தமிழகத்தில் இன்னும் ஐந்தாயிரம் போலி டாக்டர்கள் இருப்பதாக அபாயச் 'சங்கு ' ஊதுகிறார் ஒரிஜினல்  டாக்டர்கள் சங்கத் தலைவர் !

41 comments:

 1. அடப் பாவிகளா...!

  மக்களே முதலில் களை எடுக்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. பயிர் எது ,களை எதுன்னு தெரியலேயே!
   நன்றி தனபாலன் ஜி !

   Delete
 2. இவர்களிடம் மாட்டும் மக்களின் கதி.

  ReplyDelete
  Replies
  1. அதோ கதிதான் ...இனிமேல் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை தெரிய வரும் !செத்துப் போனவன் வந்து புகார் கொடுப்பானான்னு தெரியலே !
   நன்றி ஜெயகுமார் ஜி !

   Delete
 3. பல போலி டாக்டர்கள் இப்படி இருந்து கொண்டிருக்கிறார்கள் - பிடிபடும் வரை கொண்டாட்டம் தான் இவர்களுக்கு....

  ReplyDelete
  Replies
  1. 'உண்மை எது பொய் எதுன்னு யாருக்கும் தெரியலே 'ங்கிற பாட்டுதான் நினைவுக்கு வருது !
   நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

   Delete
 4. பிடிபட்டாத்தான் தெரியுது
  போலியா அசலான்னு
  அதுக்குள்ளே அசந்தவங்க
  எத்தனை பேரு காலியோ

  ReplyDelete
  Replies
  1. இத்தனை பேர் காலியாகும் போதே ,மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சி விடுவோம்ன்னு வேற சொல்லிக்கிறாங்களே !
   நன்றி !

   Delete
 5. Replies
  1. நன்றி ரமணி ஜி !

   Delete
 6. அசலை விட போலிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதே! அதும் ஆண்களே செய்யத் துணியாத கருக்கலைப்பு வேற! மக்கள் தான் போலிகளை புறமுதுகிட்டு ஓட விரட்ட வேண்டும். சிந்தனைக்கு நன்றி ..நன்றீங்க ஜீ...

  ReplyDelete
  Replies
  1. அடுத்து டாக்டரை பார்க்கிறீங்கன்னா ஜாக்கிரதையா இருங்க ,போலி டாக்டர்ன்னா உங்க முதுகிலே டின்னு கட்டிவிடுவார் !
   நன்றி பாண்டியன் ஜி !

   Delete
 7. என்ன பண்ணுவது... சினிமாவில் வருவதுபோல நிஜத்திலும் எல்லா விஷயத்திலும் சட்டம் கடைசியாய்த்தான் வருகிறது....!!!

  ReplyDelete
  Replies
  1. சட்டம் இருக்கு ,அதை அமுல் பண்ணத்தான் முடியலே !
   நன்றி சாய்ரோஸ் !

   Delete
 8. இவர்கள் போலி டாக்டர்கள் என்றால்???
  வாலிப வயோதிக அன்பர்-டாக்டர்கள்!
  ஜோசியத்தினால் குணமாக்கும் டாக்டர்கள்!
  பெயரை மாற்றி குணமாக்கும் டாக்டர்கள்!
  பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்தால் வியாதி குணமாகும் என்று சொல்லும் டாக்டர்கள்!

  இப்படி தமிழ் நாடு முழுவதும் டாக்டர்கள் இருக்கும் போது, இப்படி பத்தாவதுகூடப் படிக்காத சமீனா அன்ட் 'சபீனா' சகோதரிகள் டாக்டர்களாக இருந்தால் என்ன தப்பு?

  ...இந்த

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பட்டியலில் ...தொடாமலே குணமாக்கும் ரைய்க்கி டாக்டர்கள் ,ஊசி குத்தி குணமாக்கும் அக்கு டாக்டர்கள் ,நீவி விட்டு குணப் படுத்தும் அக்கு பிரசர் டாக்டர்கள் வரவில்லையே .அவர்கள் செய்வதெல்லாம் உண்மையா ?
   டாக்டர் நம்பள்கி இவர்களைப் பற்றி சொன்னால் சரியாக இருக்கும் !
   நன்றி !

   Delete
 9. இந்த மாதிரி போலி டாக்டர்களை எப்படி கண்டுபிடிக்கறதுனு டிப்ஸ் கொடுங்க ஜோக்காளி உங்க ஜோக்கான ஸ்டைல்லில் ....
  5000 மா, இவய்ங்க புள்ளிவிவரம் கலெக்ட் பண்ற நேரத்துல இந்த போலிகளை புடிச்சா என்னவாம் :( நல்லா சொல்றாய்ங்கயா டீடெய்லு !!)

  ReplyDelete
  Replies
  1. போலி டாக்டரை கண்டு பிடிக்கிறது ரொம்ப சிம்பிள் ...அவர்கள் கையெழுத்து புரியும்படி இருக்கும் ![நம்ம தலைஎழுத்து நமக்கே புரியாதுங்கிறது வேற விஷயம் ]
   டீடைல்லு சொல்றவங்க எங்களுக்கு அதிகாரம் இல்லைன்னு சொல்றாங்களே !
   நன்றி விஜயன் ஜி !

   Delete
  2. கிளினிக் முன்னாடி போலி போலின்னு சிம்பாலிக்கா போலி வியாபாரம் செய்ய சொல்லலாம் மக்கள் உஷாராயிடுவாங்க. எப்படி ஐடியா!.

   Delete
  3. நல்ல ஐடியா தான் ...சில வாழைமட்டைங்க புரிஞ்சுக்காம...எங்கேய்யா போளின்னு பின்னி பெடல் எடுத்துடுவாங்களே!
   இல்லேன்னா ...உஷாரா பண்றேனு உள்ளே இழுத்துட்டு போய் கிட்னியை வெட்டி எடுத்துகிட்டா என்ன பண்றது ?
   நன்றி விஜயன் ஜி !

   Delete
 10. இது ஒரு தொடர்கதை! இப்படி கிராமத்திலும் பலர் இருக்கிறார்கள்!

  ReplyDelete
  Replies
  1. நம்ம கதையா முடிக்க இன்னும் எத்தனைபேர் இப்படி தொடர்கதையா கிளம்பி
   இருக்காங்கன்னு தெரியலே அய்யா !
   நன்றி !

   Delete
 11. "கிராமங்களில் நிலை என்ன என்பதை யாராவது 'சபீனா'வாய் விளக்கி சொன்னால் நல்லது !" ஹாஹாஹா....சரிதாங்க...வசூல் ராணி MBBS ஓகேங்க.....ஆனா, டாக்டருக்கு படிச்சுட்டே லட்சம் லட்சமா வசூல் பண்றாய்ங்க, படிச்ச காச வட்டியும் முதலுமா நம்மகிட்டருந்து சம்பாதிகிறாய்ங்க...சரி அப்படியே சம்பாதிச்சுகிடட்டும்னா....தப்பா டயக்னொஸ் இதுல தப்பா வேற ச்ர்ஜரியே வேற நடக்குதேங்க....இந்த டாக்டருங்கள.இவிங்கள எதுல சேத்துகறதாம்....அதுவும் படிச்ச்ச்ச்ச்சவங்க.....இவிங்களயே நம்ப முடியலியே.....இவிங்களும் "வசூல் ராஜா, ராணி MBBS, MD, FRCS......." தானுங்க என்ன சொல்றீங்க பகவான்ஜி? அந்த பகவான் ஜி தான் சொல்லணும்....சரி சபீனா நல்லா விளக்கிச்சா?!!

  ReplyDelete
  Replies
  1. 'சபீனா 'இல்லாமயே அருமையா விளக்குறீங்க துளசிதரன் ஜி !வீட்டுக் கார அம்மா கொடுத்து வச்சவங்களா இருக்கணும் !
   நம்மகிட்டே அதிகமாத்தான் வசூல் பண்றாங்க ...அப்படின்னா ...ஒரிஜினல் டாக்டருக்கு போலியே தேவலையா ?
   நன்றி !
   நன்றி !

   Delete
  2. வீட்டு நடப்பெல்லாம் இப்படி நாட்டு நடப்பாக்கறிங்களே ஸார்! ஹா ஹா ஹா......ஒரினஜனலாவது, ட்யூப்ளிக்கேட்டாவது...நமக்கு அதெல்லாம் ப்ரச்சினையே இல்ல ஸார். குறைஞ்ச பணத்துல கூடுதலா நோயை யார் குணப்படுத்தறாங்களோ அவங்க கிட்டதான் நாங்க க்யூவுலகூட நின்னு போயி வைத்தியம் பார்த்துகிடுவோம் அவங்ககிட்ட இருக்கறது MBBS ஆ, RIMPஆ, RHMPYஆ, ட்ரைவிங்க் லைசென்ஸா, இதெல்லாம் நமக்கு ப்ரச்சினையே இல்லைங்க ஸார்!

   Delete
  3. ரொம்ப சாரி சார் ,just fun ,சீரியஸா எடுத்துக்காதீங்க !
   உங்களைப் போன்றே பலரும் இருப்பதால்தான் போலி டாக்டர்களின் காலமாய் இருக்கிறது ...அவர்கள் நம்மை சோதனை எலிகளாக்கினால் நாம காலம் ஆயிடுவோமே !அதற்குத் தான் இந்த எச்சரிக்கை !
   நன்றி துளசிதரன் ஜி !

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. ஐயோ ஸார் சீரியஸா? நோ சான்ஸ் ஸார்...நாங்க எப்பவுமே 'சிரி' யெஸ் தான்ங்க....அது சும்மானாலும்.......ஆமா ஸார் "சோதனை எலிகள்" அதுவும் சரிதான்..ஆனா நாம ஏற்கனவே டிகிரி வாங்கினவங்ககிட்டயே சோதனை எலிகள் தான். எப்படினா....இன்னிக்கு ஒரு மருந்த எழுதுவாங்க....இத எடுத்துக்கங்க 5 நாள். சரியாகலனா வாங்க வேற மருந்து எழுதித் தாரேன்....அலர்ஜியா இருந்தா வாங்க வேற எழுதித் தாரேன்...இப்படித்தாங்க...

   Delete
  6. எல்லோரும் 'சிரி'யெஸ்ஆக்க நினைப்பதன்றி வேறொன்று அறியேன் ...நன்றி !
   நான் சோதனை எலி யாக விரும்புவதில்லை ...மருந்து சாப்பிட்டா நாலு நாளிலும் ,சாப்பிடாட்டி ரெண்டே நாளிலும் குணமாயிடும் ,இது என் பாலிசி !
   நன்றி துளசி தரன் ஜி !

   Delete
 12. வணக்கம் சகோதரர்!
  என் வலைத்தளத்தில் உங்கள் வருகைகண்டு மகிழ்ந்தேன்.
  மிக்க நன்றி!

  இங்கும் நகைச்சுவையொடு நறுக்கெனவும்
  விடயங்கள் பகிர்வு செய்தலைக் கண்டேன்..

  போலிக்கு எல்லையே இல்லையா...
  என்ன ஆகுமோ எதிர்காலம்...:(

  பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

  ReplyDelete
  Replies
  1. போலிக்கு எல்லைதான் இல்லையே முருகான்னு TMS அய்யாவை போல் பாடத் தோன்றுகிறதே !
   நன்றி இளமதி ஜி !

   Delete
 13. இந்திய அரசின் ...மக்களின் வரிப்பணத்தில் டாக்குடருக்கு படித்த மேதாவிகாள் வெளிநாடுகளுக்கு ஓடிவிடுவதால் இப்படியான போலி டாக்டர்கள் உருவாகின்றார்கள்.

  …அரசின் பணத்தில் படித்த டாக்குடருகளை ஒரு 30 ஆண்டுகள் வெளிநாடு செல்லவிடாமல் தடுத்தால் போலி டாக்டர்கள் வளராமல் தடுக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. மேலே கருத்து சொல்லி இருக்கும் நம்பள்கி USA டாக்டருக்கு கோபம் வரப் போவுதுன்னு நினைக்கிறேன் !
   நன்றி ராவணன் ஜி !

   Delete
 14. Replies
  1. எது ரைட்டு அசலுக்கு நகல் பரவாயில்லை என்பதா ?
   நன்றி சௌந்தர் ஜி !

   Delete
 15. “போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள், கல்யாணி கவரிங்குகளையே வாங்குங்கள்“-னு முந்தி விளம்பரம் வரும் அந்த மாதிரில்ல இருக்கு? எச்சரிக்கைப் பதிவுக்கு நன்றி பகவானே!

  ReplyDelete
  Replies
  1. ஏதோ என்னால் காமெடியாக சொல்ல முடிந்ததை சொல்லுகிறேன் ...இதுவரை வராத ...நீங்கள் உள்பட பலரும் வந்து கருத்தும் இட்டு உற்சாகத்தை கொடுத்து உள்ளார்கள் !
   தோழர் முத்துநிலவன் அவர்களே ,என் நெஞ்சார்ந்த நன்றி !

   Delete
 16. போலிகள் இருக்கத்தான் செய்வார்கள்.... நாம்தான் சூதனமா இருக்கணும்..

  ReplyDelete
  Replies
  1. மக்கள் தொகையும் ,நோய்களும் பெருகிப் போச்சு .அதே விகிதத்தில் டாக்டர்கள் எண்ணிக்கை கூடாததால் போலிகள் பெருகத்தான் செய்வார்கள் ! சூதானமா நடந்துக்கிறதும் ,சூவை தானமா கொடுக்கிறதும் அவரவர் பாடு !
   நன்றி குமார் ஜி !

   Delete
 17. "போலிகள் ஜாக்கிரதை" ன்னு போர்டு வச்சுகிட்டு வேலை பார்க்க சொல்லுங்க!!

  ReplyDelete
  Replies
  1. அப்பவும் கூட்டம் குறையாது ...ஓடிப் போவான்னு தெரிஞ்சும் பணத்தைப் போட்டு ஏமாற மாதிரிதான் இதுவும் !
   நன்றி ஆவி ஜி !

   Delete