31 October 2013

பேஸ் புக் வடிவில் வந்த எமன் !

எமன் எருமை வாகனத்தில் வருவான்னு சொல்வார்கள் ...
இந்த நவீன காலத்தில் ...
சென்னையில் பணிபுரிந்த சாப்ட்வேர்  என்ஜினியருக்கு பேஸ் புக் வடிவில் எமன் வந்துள்ளான் ...

ஜார்கண்ட் பையன் ,கேரளக் குட்டியை மூன்றாண்டு டாவடித்து  ...
இரு வீட்டார்  சம்மதமின்றி பதிவுத் திருமணம் முடித்து ...
ஹனி மூனை வெளிநாட்டில் கொண்டாடி மூன்று மாதமாகி விட்டது ...
இளம் மனைவி ஹனிமூன் படங்களை பேஸ் புக்கில் போட ...
படங்களைப் பார்த்த பையனின் பெற்றோர்க்கு கோபம் தலைக்கேற ...
படங்களை டெலிட் செய்ய பெற்றோரின் கட்டளை ஒருபுறம் ...
முடியவே முடியாதென்று மனைவியின் பிடிவாதம் மறுபுறம் ...
செய்வதறியாதவன் தொங்கிவிட்டான்  தூக்கில் !
பேஸ்புக்கில்  படங்கள் சிரிக்கின்றன ...
போட்டோவில் சிரிப்பவன்தான் உயிருடன் இல்லை !

  

16 comments:

 1. இதைத்தான் காலக் கொடுமை என்பதோ....?

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள் !
   நன்றி தனபாலன் ஜி !

   Delete
 2. சாவு பிரச்சனைகளை தீர்க்குமாஜீ?

  ReplyDelete
  Replies
  1. தீர்க்கவே தீர்க்காது ...இந்த சாவிலும் புதிய பிரச்சினைகளை பிறந்துள்ளன ...பெற்றோர்கள் தரப்பு இது தற்கொலை அல்ல ,கொலை என்கிறது ...
   பாடியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று பெற்றோரும் கேட்கிறார்கள் ,மனைவியும் கேட்கிறார் ...இதையெல்லாம் பார்க்காமல் மகராசன்போய் சேர்ந்துட்டான் !
   நன்றி அஜிஸ் ஜி !

   Delete
 3. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
  மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் ஏற்கனவே வைத்த மொய்க்கும் நான் நிறைய கடன் பட்டுள்ளேன் .பத்திரிக்கையை மட்டும் எனக்கு வைங்க ,நான் மொய் வைக்கலேன்னா என்னான்னு கேளுங்க !
   நன்றி நம்பள்கி !

   Delete
 4. Replies
  1. நூறு நாளில் இப்படி ஒரு மரணம் ,உண்மையில் பாவம்தான் !
   நன்றி ராஜி மேடம் !

   Delete
 5. கொடுமை! பேஸ் புக் இப்படியெல்லாம் காவு வாங்குகிறதா? வேதனை!

  ReplyDelete
  Replies
  1. பேஸ் புக், மரணத்திற்கும் காரணமாகி விட்டது வருத்தப்பட வேண்டிய விசயம் தான் !
   நன்றி சுரேஷ் ஜி !

   Delete
 6. முக நூல் அந்தரங்க விஷயத்தில் மூக்கை நுழைத்து வாழ்க்கையை கெடுக்கிறது.
  கொடுமையான சம்பவம்தான்

  ReplyDelete
  Replies
  1. இது பற்றிய 'தாமரைக்கு என்னாச்சு 'பதிவில் நீங்களும் அருமையா சொல்லி இருந்தீர்கள் !
   நன்றி முரளிதரன் ஜி !

   Delete
 7. நீங்க வெறும் ஜோக்காளி தான் என்று நினைத்திருந்தேன். சீரியசான விஷயத்தையும் அழகாகச் சொல்வீர்கள் என்று தெரிந்துகொண்டேன் நண்பரே! இது கொடுமைதான். எதைச் செய்வது, எதைச் செய்யக்கூடாது என்பதைத் தெரிந்துகொள்ளாதது போலவே எதைப்பகிர்வது, எதைப் பகிரக்கூடாது என்றும் தெரிந்துகொள்ளத் தான் வேண்டும். கருகிய மொட்டு, இன்னொரு மலரையும் அலலவா வதைத்துவிட்டுப் போய்விட்டது? கொடுமை!

  ReplyDelete
  Replies
  1. சிரிப்பும் சீரியசும் இல்லாவிட்டால் வாழ்க்கை மட்டுமல்ல ,வலைப்பூவும் போரடித்து விடுமே !
   நன்றி முத்துநிலவன் ஜி !

   Delete
 8. முகநூல் இப்போழுதேலம்கொஜமாய் பயம் காட்டுகிறது. உண்மைதான்.

  ReplyDelete
  Replies
  1. முக நூல் சிலரின் முகவரிகளையும் தொலைத்து விடுவது வேதனைக்குரியது!
   நன்றி மேடம் !

   Delete