16 November 2013

உப்பு விலை ஏறினால் உடம்புக்கு நல்லதா ?

மீண்டும் ஒரு உப்பு சத்தியாக்கிரகம் செய்ய வேண்டும் போலிருக்கிறது ...
மிசோரம் உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்களில் உப்பு கிலோ ரூபாய் முன்னூறாம்...
உப்பே கிடைக்காது என்று வதந்தி பரவியதால் இந்த விலையேற்றமாம்...
வதந்தியின் வேகம் மங்கள்யான் ராக்கெட்டுக்குகூட  இருக்குமா என்று தெரியவில்லை ...
ஏற்கனவே கோழிக்கறி விலையே கிலோ ரூபாய் எண்பது விற்கும் போது  வெங்காயம் விலை நூறானது ...
இப்போ உப்பு விலை முன்னூறு என்றால் ...
ஒருகாலத்தில் உப்புதான் சம்பளமாய் தரப் பட்டதாம் ,இப்போ சம்பளமே உப்பு வாங்க
காணாது  போலிருக்கே ...
உப்பு பதுக்கியவர்களைக் கண்டு பிடித்து 'உப்புக் கண்டம் 'போடுமா அரசு ?
இல்லை ,'உ'ப்புக்கு சப்பாணியாய் ...வதந்தி பரப்பியோர் என்று நாலு பேரை கைது செய்துவிட்டோம் என்று கடமையை முடித்துக் கொள்வார்களா ?
சாதா உப்பு விலையே கேட்கும் போதே அயோடெக்சை தேடச் சொல்கிறது ...
அயோடின் உப்பு என்றால் ஐந்நூறு ரூபாய் ஆக்கி விடுவார்களோ ?
உப்பின்றி சாப்பிட நேர்ந்தால் மக்கள் வரும் தேர்தலில் சொரணை உள்ளவர்கள் என்பதைக் காட்டுவார்கள் !

24 comments:

 1. ஆத்து மணலையே இறக்குமதி செய்யும்போது இனி அடுத்து உப்பையும் இறக்குமதி செய்யவேண்டியதுதான். என்ன அன்னிய செலாவணி இருப்பு குறையும் மேலும் டாலர் விலை மங்கள்யான்-ல் பயணம் செய்யும்ஜீ

  ReplyDelete
  Replies
  1. மக்களை வெறும் வாய் ஆக்கிவிட்டு ,செவ்வாயில் என்ன ஆராய்ச்சி வேண்டிக் கிடக்கிறதோ தெரியவில்லை !
   நன்றி அஜீஸ் ஜி !

   Delete
 2. அடடா... பரவாயில்லையே... ஏதோ தினமும் இரண்டு பதிவு (Auto publish) போட்டு விட்டு தொடரும் நீங்கள் இப்போது தான் பதிவு உலகத்திற்கு வந்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள் ஜி கோ ஜி...

  ReplyDelete
  Replies
  1. அப்ப இத்தனை நாள் நான் டம்மி பீசாத்தான் இருந்தேனா ?
   கரெண்ட் கட் கூட எனக்கு மோதிரக் கையால் குட்டுபட வச்சிருக்கேன்னு சந்தோசப் படறேன் ,வாழ்த்துக்கு நன்றி தனபாலன் ஜி !

   Delete
 3. உப்பு இனி மேல் வேலை செய்யும் என்று நினைக்கிறேன்... இது போல் தொடருங்கள் ஜிபவஜி... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. உப்பில்லா பண்டம் குப்பையிலே ...உப்பு விலையை ஏற்றியவர்களையும் குட் பை சொல்லி எறிவார்கள் !
   நன்றி தனபாலன் ஜி !

   Delete
 4. இப்படி உப்பு விலையை ஏத்து ஏத்துன்னு எப்படி? அதற்காக ஒரு வோட்டு போட்டு நான் மகுடம் 'ஏத்துறேன்!'

  ReplyDelete
  Replies
  1. ஏற்றி விட்ட ஏணிக்கு நன்றி நம்பள்கி ஜி !!

   Delete
 5. இந்த ஆட்சியிலே யாரும் உப்புபோட்டு சாப்பிடக்கூடாதுன்னு முடிவுபண்ணிட்டாங்களா?

  ReplyDelete
  Replies
  1. உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கலாம் ,இப்படி உப்பு விலை ஏற்றத்துக்கு காரணமானவர்களை உள்ளே தள்ளி லத்திக்குச்சியை உள்ளே ஏற்றினா நல்லது !
   நன்றி சௌந்தர் ஜி !

   Delete
 6. உப்பு அதிகம் சேர்த்தால்
  உடம்புக்கு நல்லதில்லை என்பதால்
  அரசு இப்படி இருக்க்கும்படியாகச் செய்கிறதோ ?

  ReplyDelete
  Replies
  1. மதுவும் கெடுதல் தான் .இதைவிட மலிவாய் கிடைக்குதே !
   நன்றி !

   Delete
 7. Replies
  1. நன்றி ரமணி ஜி !

   Delete
 8. என்ன நடக்குது ...
  புரிவதற்குள் பல கோடி ரூபாய்களை அபேஸ் செய்து விடுவார்கள் ...

  ReplyDelete
  Replies
  1. பதுக்கல் பேர்வழிகளை தண்டிக்காமல் கையூட்டு பெற்றுக் கொண்டு விட்டு விடுவார்கள் ,ஏமாறுவதே மக்களின் தலைஎழுத்து !
   நன்றி மது ஜி !

   Delete
 9. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது இனி உப்பில்லா பண்டம் தொப்பையிலே!! போல ஆகிவிடும் போல. ஒரு வேளை உப்பு விலை கூடுதலால், ரத்த அழுத்தம் எகிறிப் போக, (ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும்) உப்பில்லா பண்டம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவலாம்!!!!! போற போக்க (விலைவாசி ஏற்றம்தான்) பாத்தா வயிற்றில் எதைப் போடுவது என்று தெரியவில்லை. எல்லாம் ஊழல் மயம்தான்!!! அப்பாவி மக்கள் நாம் இளிச்ச வாயன்ஸ்!!!1

  ReplyDelete
  Replies
  1. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் உப்பு போட்டு சாப்பிட்டால் நமது ஆதங்கம் புரியும் !
   நன்றி துளசிதரன் ஜி !

   Delete
 10. Replies
  1. உங்களின் பொன்னான நேரத்தை எனக்காக செலவு செய்ததற்கு நன்றி !
   உங்களை உள்ளளவும் நினைக்கும் படியாய் ஏழாவது ஓட்டு அளித்தமைக்கு மீண்டும் ஒரு நன்றி ஜோதிஜி சார் !

   Delete
 11. உப்புக்கு வந்த சோதனை

  ReplyDelete
  Replies
  1. உண்மையை சொன்னால் அது உப்புக்கு வந்த சோதனை அல்ல ,மக்களுக்கு வந்த சோதனை !
   நன்றி கண்ணதாசன் ஜி !

   Delete
 12. இந்த வதந்தி பீஹாரிலிருந்து தான் ஆரம்பித்தது என ஒரு செய்தி! என்னவோ எல்லாம் அரசியல்!

  ReplyDelete
  Replies
  1. இவர்களின் அரசியலுக்கு பலிகடா பாமர மக்களா ?
   நன்றி

   Delete