11 November 2013

பொன் மொழியைவிட பெண் உடல் மொழி பிடிக்கலாம் ?

       ''தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் கடுமையாய் உழைக்கணும் ,நீண்ட போராட்டத்திற்கு பிறகு கிடைக்கும் வெற்றியே நிலைக்கும் ,தன்னைத் தானே செதுக்கிக் கொள்வதில் உள்ள இன்பம் வேறெதிலும் இல்லை ,ஊட்டி விடப்படும் எந்த உணவிலும் சக்தி இல்லை ,ஒரு அரிசி என்றாலும் விதைத்து வளர்த்து ,அறுவடைசெய்து சாப்பிடு ,பிரபஞ்சத்தின் சுவையை அனுபவிப்பாய் !''
இப்படி நெஞ்சைத் தொடும் விதத்தில் தந்தை சொல்லும் அறிவுரையை எத்தனைப் பிள்ளைகள் கேட்பார்கள் ?
ஆனால் ,தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என வேத வாக்காய் ஏற்று சாதித்துக் காட்டிவுள்ளார் ஒரு பிரபல நட்சத்திரம் ...
அட்வைஸ் சொன்னவர் ...
இந்தியாவின் சார்பில் உலக அளவில் டென்னிஸ் பந்தாடியவர் !
அட்வைஸ்  கேட்டவர் ...
வாலிப நெஞ்சங்களை பந்தாடிக் கொண்டிருப்பவர் !

தந்தையின் பெயரை சொன்னால் ...
அப்படி ஒருவரை தெரியாதே என்பீர்கள் ...
மகளின் பெயரை சொன்னால் ...
இவரை தெரியாதவர்களும் இருக்கிறார்களா என்பீர்கள் ...
தந்தை பிரகாஷ் படுகோன் ????
மகள் தீபிகா படுகோன் !!!!
தீபிகா படுகோன் தன் ரசிக கண்மணிகளுக்கு ஒரு நல்லகாரியம் செய்வதாய்  இருந்தால் ...
 தந்தையின் பொன்மொழிவுடன் ஆட்டோகிராப்ட் போட்டோவைக்  கொடுக்கலாம் ...
ஆனால் ஒரேஒரு கண்டிஷன்...
அந்த போட்டோவிலாவது உடம்பை முழுவதும் மறைத்துக் கொண்டு போஸ்  கொடுத்து இருத்தல் நல்லது !

20 comments:

 1. பெண்கள் செய்கைக்கும் அப்பாவையும் சம்பந்தத படுதமால் இருப்பது நல்லது.

  உங்களுக்குன் போட்டாச்சு! +1

  ReplyDelete
  Replies
  1. நான் ஒன்றும் தப்பாய் சொல்லவில்லையே ?தீபிகா ,தந்தை சொல்லை மதித்து சாதித்து காட்டி இருப்பது இளைய தலை முறையினர் அறிய வேண்டிய விஷயமாச்சே!
   நன்று நம்பள்கி ஜி !

   Delete
 2. படுகோனே!! படு
  உனக்கு கோனைக் கொடுக்கிறேன் என்றான்.ஒரு ஆண்மகன்!
  அருகில இருந்து அவன் சொல்வதை கேட்டேன்..
  என்ன அர்த்தம் இதுக்கு? என்ன தமிழோ! எனக்கு புரியவில்லை; உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்கள். நான்
  தமிழுல் நான் படு வீக்! என் தமிழ் பத்தாங் கிளாஸ் தமில்...

  ReplyDelete
  Replies
  1. தூங்குகிறவனை எழுப்பி விடலாம் ,தூங்கிற மாதிரி நடிக்கிற உங்களை எப்படி எழுப்புவது ?
   போகக்கூடாத இடத்தில் போய் நீங்க ஏன் ஆஜராகுறீங்க ?
   பத்தாங் கிளாஸ் தமிழே உங்களுக்கு அதிகம் ...தாங்க முடியலே...சீய்ய்ய் !
   நன்றி நம்பள்கி ஜி !

   Delete
 3. பதிவு ஜோக்காளியிடமிருந்து
  கமெண்ட்ஸ் ஸோக்காளியிடமிருந்து (போட்டாச்சு... கோனைக் கொடுக்கிறேன்...)

  ReplyDelete
  Replies
  1. அவர் ஸோக்காளியா ,டாக்டரா (செக்சாலஜிஸ்ட் )ன்னு தெரியலே !
   நீங்க இருக்கிறது துபாய் ,நம்பள்கி இருக்கிறது அமெரிக்காவில் ..கொடுத்துக்குங்க ,வாங்கிக்குங்க ,இடையிலே ஜோக்காளி எதுக்கு ?
   நன்றி அஜீஸ் ஜி !

   Delete
 4. சரியான கோரிக்கைதான்
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. என் பதிவை சரியா புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி ரமணி ஜி !

   Delete
 5. எனக்குப் புரியவில்லை! யாரந்த தீபிகா படுகோனே

  ReplyDelete
  Replies
  1. உங்க காலத்திலே சங்கம் படத்திலே வந்த வைஜெயந்திமாலா மாதிரி ,இந்த காலத்து வைஜயந்தி மாலாதான் அவங்க !
   நன்றி அய்யா விளக்கம்(?) கொடுக்க வாய்ப்பு கொடுத்ததற்கு !

   Delete
 6. Replies
  1. என்ன புரிந்தது ,நான் சொன்னதா ,நம்பள்கி சொன்னதா ?
   நன்றி கண்ணதாசன் ஜி !

   Delete
 7. //அந்த போட்டோவிலாவது உடம்பை மறைத்து கொண்டு போஸ் கொடுத்தால் நல்லது..//

  ஒய் திஸ் கொலைவெறி பாஸ்.. நாங்கெல்லாம் சந்தோசப்பட்டா உங்களுக்கு பொறுக்காதே.. ;-)

  ReplyDelete
  Replies
  1. எனக்கு தெரியும் பாஸ் இப்படி கமெண்ட் வரும்னு ..தலைப்பு உங்களுக்காகத்தான் வச்சிருக்கேன் ...பொன்மொழியின் தாக்கம் படிக்கிறவனுக்கு போய் சேராமல் ,போஸ் தரும் பெண் உடல் மொழி மட்டும்தான் புரியும் ..அதனால்தான் போர்த்திகிட்டு ஒரே ஒரு போஸ் கொடுக்க சொன்னேன் ,அது தப்பா ?
   நன்றி கோவை ஆவி ஜி !

   Delete
 8. "மகள் தந்தைக்காற்றும் உதவி இவள் தந்தை என்னேற்றான் கொல் எனும் சொல்"??? எப்படியோ பிரகாஷ் படுகோனை நினைவில் கொள்ள இந்தப் படுகோன் உதவியாக இருப்பதை நினைத்துக் கொஞ்சம் பெருமைப்படலாம். அதெல்லாம் சரி. தீபிகா படுகோன் இழுத்து போத்திக்கிட்டா யாரு அவங்களப் பார்ப்பாங்க, யாராவது பேசுவாங்களா? அப்புறம் படுகோன் "கோன் ஹை?" அப்படினுடுவாங்க பகவான் ஜி!!

  ReplyDelete
  Replies
  1. தந்தையின் பொன்மொழி முக்கியத்துவம் பெறுவதற்காக அதில் மட்டும் கவர்ச்சி வேண்டாமென்றுதான் சொன்னேன் !எனக்கு தெரியாதா தொப்புளைக் காட்ட மறுக்கும் நடிகைகள் ரசிகர்களின் சாபத்திற்கு ஆளாவார்கள் என்று ?
   நன்றி துளசி தரன் ஜி !

   Delete
 9. மிகச்சரியான கோரிக்கை. கோரிக்கையால் இளைஞர்கள் கோபத்துடன் அழைகிறார்கள். கவனமாக வெளியில் சென்று வாருங்கள் சகோதரரே.. பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
  Replies
  1. இந்த ஜோக்காளியின் கோரிக்கையை ஆதரிக்கும் இளைஞர்கள் யாருமே இல்லையா ?என்ன கொடுமை இது ?
   நன்றி பாண்டியன் ஜி !

   Delete
 10. ஓகே... கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது! அப்படின்னு சொல்லிட்டாங்க போலருக்கே!

  ReplyDelete
  Replies
  1. தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கிறது யானைகள் மட்டும் தான் செய்யும் காரியமென நினைக்கிறேன் !
   நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

   Delete