23 November 2013

ஜோக்காளியுடன் ஜாலி பயணம் செய்தோருக்கு நன்றி !

உங்களின் அன்பு ஜோக்காளி ...
கடந்த 5.1௦ .13 அன்று முதல் பிறந்த நாளை கொண்டாடி இருக்க வேண்டும் ...ஆனால் கொண்டாடவில்லை ...
7 .1 1 .1 3 அன்று தமிழ் மணத்தாயின்  மடியில் தவழத் தொடங்கிய முதலாம் ஆண்டுவிழா ...அதையும் கொண்டாடவில்லை...

காரணம் ,அவன் மனதில் ஒரு வைராக்கியம் ...
தினசரி பதிவுகள் போட்டு ...பார்வைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிய பின்தான் கொண்டாட வேண்டும் என்று ...
இதோ அந்த நல்ல நாளும் நேற்றே வந்து விட்டது ...
7 9 8  பதிவுக்குப்பின் அந்த உயரத்தை தொட்டுவிட்டான் ...
மகிழ்ச்சியான இந்த நேரத்தில் இந்த ஜாலி பயணத்தில் இணைந்தவர்களுக்கு தன் நன்றியினை தெரிவித்துக் கொள்ளுகிறான் ...
வலைப் பூவை வடிவமைத்து தந்த அருமை மகன் அஜய் சந்தனுக்கு நன்றி ...
வலைப்பூவில் நான் விரும்பிய  மேம்பாடுகளை செய்த நண்பர் தமிழ் வாசி பிரகாஷ் அவர்களுக்கு நன்றி ...
தினசரி கருத்துக்கள் மட்டுமல்ல... பிளாக் இன்னை பிளாக் காம்மாகி ...
வோட் பட்டனும் அமைத்து தந்து உச்சம் தொட உதவிய ...
வலை உலக விரல் வித்தகர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி ...
வலைச்சர அறிமுகமாய் என்னை ஆதரித்த  வே.நடன சபாபதி ,
குடந்தையூர் ஆர் .வி.சரவணன் ,திருமதி .அருணா செல்வம் ஆகியோருக்கும் நன்றி ...
அதிகபட்ச  கருத்துரைக்களைக் கூறி ஊக்குவிக்கும் ...
திருவாளர்கள் ரமணி அய்யா ,புலவர் இராமனுசம் அய்யா ,வெங்கட் நாகராஜ் ஜி ,சைதை அஜீஸ் ஜி ,திருமதி ராஜி ,அ .பாண்டியன் ஜி ,சே. குமார் ஜி,நம்பள்கி ஜி ,ஜீவலிங்கம் காசி ராஜலிங்கம் ஜி ,வா.மணிகண்டன் ஜி ,கவியாழிகண்ணதாசன் ஜி ,கரந்தை ஜெயகுமார் ஜி ,வி .துளசிதரன் ஜி ,T.Nமுரளிதரன் ஜி ,2 ௦ ௦ 8ரூபன் ஜி ,கவிதை வீதி சௌந்தர் ஜி ஆகியோருக்கும் ...
மேலும் பல நூற்றுக்கணக்கான கருத்துரை இட்ட நண்பர்களுக்கும் நன்றி ...
உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் நெஞ்சங்களுக்கு பதிவுகளை கொண்டு சென்ற தமிழ் மணம் ,இன்ட்லி ,தமிழ் வெளி ,ஹாரம் திரட்டிக்கும் நன்றி ...
Face book ,Google+,Twitter வழியாக follow செய்பவர்களுக்கும் நன்றி ...
'நயா பைசாவுக்கு பிரயோசனம் இல்லா வேலை 'என்று பதிவு எழுதுவதைத் திட்டினாலும் ,லட்சம் தாண்டும் உங்களின் ஆதரவைக் கண்டு அசந்து நிற்கும் என் மணவாட்டிக்கும்  நன்றி !(இதை சொல்லவில்லை என்றால் நான்''புவ்வா'வுக்கு எங்கே போவது ?)


35 comments:

 1. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. முதல் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி !

   Delete
 2. நானும் வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்திற்கும் நன்றி !

   Delete
 3. தங்கள் பதிவை எதிர்பார்த்து ஏங்குகிற அளவுக்கு
  எங்களை வசப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி
  சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சில தாய்மார்கள் ஜோக்காளியின் இன்றைய ஜோக்கை சொல்லிடுவேன் என்று குழந்தைகளை மிரட்டி தூங்க வைப்பதாக கேள்வி பட்டேன் ,நீங்கள் ஏங்கவைப்பதாக சொல்கிறீர்கள் .!
   நன்றி

   Delete
 4. நயா பைசாவுக்கு பிரயோஜனம் இல்லையென்றாலும் ஒரு பதிவ தேத்தியாச்சு இல்லையா?
  அதுவே ஒரு பெரிய சாதகமே!

  ReplyDelete
  Replies
  1. ஒரு பதிவா ?இன்றோடு 800 பதிவை தேத்தியாச்சு !
   நன்றி

   Delete
 5. லட்சத்தை எட்டும் லட்சியம் நிறைவேரியதற்கு வாழ்த்துக்கள். ஜோக் தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆதரவுடன் லட்சியப் பயணம் தொடர்கிறது ...
   நன்றி

   Delete
 6. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு பதிவிலும் புது புது வித்தைகளை கட்டும் பதிவுலக மந்திரவாதியின் வாழ்த்திற்கு நன்றி !

   Delete
 7. உங்கள் தளத்தின் ரெகுலர் வாசகன் நான், ஆனால் அதிகம் கருத்துரையிட்டதில்லை, காரணம் - உங்களுடைய பதிவுகள் மிகவும் சிறியவை. என்னுடைய டேஷ்போர்டிலேயே முழுவதுமாக படிக்கக்கூடிய வகையில் இருப்பதால் படித்துவிட்டு அப்படியே கடந்து சென்றுவிடுகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. சும்மாவா சொன்னாங்க உங்களை ஸ்பை என்று ?வலையில் நுழையாமலே தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி !

   Delete
 8. எண்ணிக்கை நாளும்வளர நல் வாழத்து!

  ReplyDelete
  Replies
  1. அய்யா உங்கள் ஆசியுடன் பயணம் தொடரும் !
   நன்றி

   Delete
 9. "ஊக்கு"விக்கிறோம், "பின் "வைக்கிறோம், "மாலை"வைக்கிறோம், ஜோக்காளி தொடர்ந்து ஜோக்கடிப்பதற்கும், நையாண்டி மேளம் அடிப்பதற்கும்...... எங்கள் வோட்டு எறென்றும் தொடரும். ஜோக்காளியின் தர்பார் மேலும் மேலும் வளரவும், அன்பர்கள் பெருகவும் , எங்களை எல்லாம் இன்னும் சிரிக்க வைத்து மனமும், உடலும் வளமாக வைக்க உங்கள் சேவை தேவையானதால், தொடர்வதற்கு எங்கள் (தில்லை) அகத்திலிருந்து இனிய வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஜோக்'கடிப்பதற்கும்,' நையாண்டி மேளம் 'அடிப்பதற்கும்' லைசென்ஸ் தந்ததற்கு நன்றி !
   கடியும் அடியும் தொடரும் ,ஜாக்கிரதை !
   நன்றி

   Delete
 10. வணக்கம்
  சிறந்த படைப்பாளியாக விளங்க எனது வாழ்த்துக்கள்.....தொடருங்கள் பயணத்தை...எப்போதும் என் கரம் உதவும்..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உதவும் கரங்களுக்கு நன்றி ...சிறந்த படைப்பாளியாக முயற்சி பண்றேன் !

   Delete
 11. வணக்கம் பகவான் ஜி.

  ஸ்கூல் பையன் அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.

  சற்று பெரிய பதிவுகளை வந்து படித்து செல்கிறேன்.
  தொடர்ந்து சிரிக்க வையுங்கள்.
  எங்களின் ஆயுளை அதிகமாக்கிய புண்ணியம் உங்களுக்கு வந்து சேறும்.

  வாழ்த்துக்கள் பகவான் ஜி.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் ஆசீர்வாதத்திற்கு நன்றி மேடம் !

   Delete
 12. வாழ்த்துக்கள் ஜி...
  தொடர்ந்து கலக்குங்க...

  ReplyDelete
  Replies
  1. தொடரும் உங்களின் ஆதரவுக்கு நன்றி

   Delete
 13. மற்றவர்களை மகிழ வைத்துப் பார்ப்பதைவிட பேரானந்தம் இவ்வுலகில் இல்லை.
  தினமும் பிரச்சினைகளையே சந்தித்து வருபவர்கள் கூட தங்கள் தளத்திற்கு வந்தால் மனமார மகிழ்வார்கள்.
  வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள்.
  எனவே நீங்களும் ஒரு சமூக மருத்துவர்தான்.
  தொடரட்டும் தங்களின் சேவை. வாழ்த்துக்கள் நண்பரே வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சமூக மருத்துவரா ?நம் கலாச்சாரக் காவலர்களுக்கு கோபம் வந்து ,என்னை துவைத்துக் காயப் போட்டு விடுவார்கள் போலிருக்கே !
   வாழ்த்திற்கு நன்றி

   Delete
 14. ஓராண்டில் ஒரு லட்சம் பார்வையாளர்களை உங்கள் பதிவுக்கு ஈர்த்த தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! அடுத்த ஆண்டு தங்கள் பதிவின் பார்வையாளர்கள் பன்மடங்காக உயரவும் வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. இது லட்சம் லட்சமாக பெருகி என்ன செய்ய ?...இது என் இல்லாளுக்கு இருக்கின்ற வருத்தம் அய்யா !
   நன்றி

   Delete
 15. மனமார்ந்த வாழ்த்துகள்......

  மேலும் பல பதிவுகள் இட்டு பல ஹிட்ஸ்-ஐ பெறவும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அனைத்து பதிவுகளுக்கும் மறக்காமல் கமெண்ட் போடும் உங்களின் ஆசியுடன் ஜோக்காளியின் பயணம் தொடர்கிறது !
   வாழ்த்திற்கு நன்றி

   Delete
 16. நல்ல நாளில் என்னை நினைவுக்கூர்ந்தமைக்கு நன்றி! பொறந்த வூட்டுல எதாவது விசேஷமின்னா புடவை எடுத்து தருவாங்க. அதனால, என்னிக்கு புடவைக்கடைக்கு போலாம்!?

  ReplyDelete
  Replies
  1. மதுரைக்கு வாங்க ,ஒரிஜினல் சுங்கடி புடவை எடுத்திடலாம் !
   #'நயா பைசாவுக்கு பிரயோசனம் இல்லா வேலை 'என்று பதிவு எழுதுவதைத் திட்டினாலும் ,லட்சம் தாண்டும் உங்களின் ஆதரவைக் கண்டு அசந்து நிற்கும் என் மணவாட்டிக்கும் நன்றி !#
   இந்த இரண்டு வரிகளை மட்டும் மறந்துடுங்க !
   நன்றி

   Delete
 17. மென் மேலும் உயர வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. குடந்தையூராரின் வாழ்த்து பெற நான் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும் !(யாரிடம் ,எவ்வளவு என்று மட்டும் கேட்டு விடாதீங்க )
   நன்றி

   Delete
 18. வாழ்த்த வயதில்லை; இருப்பினும்
  வாழ்த்துகிறேன்..

  ReplyDelete