4 November 2013

நடிகை ஸ்வேதா மேனனுக்கு வந்த சோதனை !

களிமண்ணு என்ற மலையாளப் படத்தில் ...
தன் உண்மையான பிரசவக்காட்சியை காட்டிய ஸ்வேதா மேனனை யாரும் மறந்து இருக்கமாட்டார்கள் ...
எந்த நடிகையுமே செய்யத் தயங்கும் கேரக்டரை தயங்காமல் செய்த அவரிடமே ...

பொது இடத்தில் செய்யக்கூடாத காரியத்தை 
தயங்காமல் செய்திருக்கிறார் ஒரு   M P...
கொல்லத்தில் நடந்த படகுப் போட்டி விழாவில் VIPயாக கலந்து கொண்டார் காங்கிரஸ் MP...
அவர் அருகில் அமர்ந்து இருந்தார்  ஸ்வேதா மேனன்...
படகுப் போட்டியாளர்களின் துடுப்பு போடும் கைகளின் அசைவை எல்லாரும் ரசித்துக் கொண்டிருக்க ...
இவரோ ,நடிகையின் இடுப்பில்  கைகளால் விளையாடி இருக்கிறார் ...
எடுக்கப்பட்ட வீடியோவில் ஸ்வேதா மேனன் தேவை இல்லாமல் நெளிவதும் ,MPயின் 'அன்பான 'தொடுதலும் பதிவாகி உள்ளதாம் ...
எங்கப்பன் குதிருக்குள் இல்லைங்கிற கதையாக ...
அத்து மீறல் எதையும் செய்யவில்லை ,எனக்கெதிரான சதித் திட்டம் இது என்று MP உளறியுள்ளார் ...
நடிகர் சங்கத் தலைவரான இன்னோசென்டிடம் நடந்ததை விவரித்து உள்ளார் அந்த நடிகை ...
நான் ஒரு 'இன்னொசென்ட் 'என்று  MP வியாக்கியானம்  செய்வார் என எதிர்ப்பார்க்கலாம் !
நமது மக்கள் பிரதிநிதிகள் சட்ட சபையிலேயே BF பார்ப்பதும் ...
படுக்கையின்  பணத்தை அடுக்கி புரள்வதும் ...
பொது இடத்திலேயே இப்படி 'கடமை'யாற்றுவதைப் பார்க்கும் போது  நிச்சயமாய் தெரிகிறது ...
நம்ம நாடு நல்லா வரும்னு  !
20 comments:

 1. "நமது மக்கள் பிரதிநிதிகள் சட்ட சபையிலேயே BF பார்ப்பதும் ...
  பொது இடத்திலேயே இப்படி 'கடமை'யாற்றுவதைப் பார்க்கும் போதும் நிச்சயமாய் தெரிகிறது ...
  நம்ம நாடு நல்லா வரும்னு !" என்ற அடிகளால் நன்றாக எச்சரிக்கை விட்டிருக்கிறீர்ககள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இப்படிப்பட்ட காமக் கிழடுகளின் கட்சி தலைமைதான் 'காமன் 'வெல்த் மாநாட்டில் கலந்துக்கொண்டே ஆகவேண்டும் என்பதும் வேதனை அளிக்கிறதே !
   நன்றி ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் ஜி !

   Delete
 2. இது போல் நாய்கள் இருக்கும் வரை... ம்ஹீம்...

  ReplyDelete
  Replies
  1. இன்னொரு கொடுமை ...அந்த MPயின் வயது 73 !
   நன்றி தனபாலன் ஜி !

   Delete
 3. அந்த அக்கா காலில் செருப்பில்லையா?
  அங்கேயே நாலு சாத்து சாத்தியிருந்தா இன்னும் பப்ளிசிடி கிடைத்திருக்கும்!
  90 வயதைத் தாண்டிய "ஆளுனர்" செய்ததையும் நாம் பார்த்தவர்களாயிற்றே!
  நாம் நிச்சயமாக வல்லரசின் மக்களேதான், சந்தேகமேயில்லை!

  ReplyDelete
  Replies
  1. அப்போதே அந்த 'பெரிய 'மனிதரின் சின்னத்தனத்தை அம்பலப் படுத்தி இருந்தால் ..நிகழ்ச்சியில் பிரச்சினை வேறு விதமாக போய்விடும் என்பதால் அமைதியாக இருந்தேன் என்று கூறியுள்ளார் ஸ்வேதா மேனன் .
   கிழடு கட்டைங்க தொல்லை தாங்க முடியலைடா சாமின்னு வடிவேலு பாணியில் வருத்தப்பட வேண்டி வருதே !
   நன்றி அஜீஸ் ஜி !

   Delete
 4. ஏற்கனவே பின்வாங்கி விட்டாரே மேனன்... :(

  என்ன மனிதர்களோ.

  ReplyDelete
  Replies
  1. முன் மாதிரியாய் இருக்க வேண்டிய மக்கள் பிரதிநிதி இப்படி பின் வாங்குவது அசிங்கம் தானே ?
   நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

   Delete
 5. ஆமாம். இம்மாதிரி எம்.பி. உள்ளவரை நன்றாகவே வரும், வளரும்.
  நடராஜன் பரமசிவம்.

  ReplyDelete
  Replies
  1. அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கம் இருப்பதை தடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு இட்டதைப் போல ,ஜொள்ளர் தடுப்பு சட்டம் போட்டால் தேவலை !
   நன்றி நடராஜன் பரமசிவம் ஜி !

   Delete
 6. ஈனப் பிறவிகள்!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் பன்மையில் சொல்வதைப் பார்க்கையில் வேறொருவரும் நினைவுக்கு வருகிறார் !
   நன்றி சுரேஷ் ஜி !

   Delete
 7. ஆனா யோசிச்சிப் பாத்தீங்கனா இந்த அரசியல் சில்மிச பார்டிங்க எல்லாரும் கேரளாவை சேர்ந்தவங்களாத்தான் இருப்பாங்க . ஷகிலா மீண்டும் கலைச்சேவைய தொடங்கணும் போல . :-)

  ReplyDelete
  Replies
  1. சில்மிஷ பார்ட்டிகளுக்கு ஏது மாநில எல்லை ?ஒரு ஷகிலா போனாலும் இன்றும் ஆயிரம்
   ஷகிலாக்கள் கலைச் சேவையை செய்துகிட்டு இருக்காங்களே !
   நன்றி

   Delete
 8. வணக்கம் சகோதரரே.
  73 க்கு இப்படியொரு ஆசையா! காலம் கலிகாலம். தாங்கள் கூறியது போல் நாடு நல்லா வரும். பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
  Replies
  1. 73க்கு மட்டுமில்லே , 37க்கு இந்த ஆசை வந்தாலும் தவறுதானே ,பாண்டியன் ஜி ?
   நன்றி !

   Delete
 9. அரசியல்வாதிகள் மற்றும் நடிகைகள்
  என்பதால் எப்படியும் இந்த விஷயத்தை
  செட்டில் செய்துவிடுவார்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ...பாவியை மன்னித்து அருள் புரிந்து விட்டதாக தகவல் !
   நன்றி !

   Delete
 10. Replies
  1. மிக்க நன்றி ரமணி ஜி !

   Delete