8 November 2013

தம்பதிகள் சண்டை தெருவையும் தாண்டியது !

தம்பதிகள் சண்டைதெருவுக்கு  வரக் கூடாது என்பார்கள் ...
நாகர்கோவில் அருகே ஒரு தம்பதியினரின் சண்டை ரயில் தண்டவாளத்திற்கே வந்த அதிசயம் நடந்துள்ளது ...
பிறந்த ஊர் பிராந்தநேரி என்பதாலோ என்னவோ
பிராந்தியே கதியாய் இருந்த  சர்வருக்கு மூன்று குழந்தைகளாம் ...
சம்பாதித்தது  மூக்கு முட்ட குடிப்பதற்கே அவருக்கு போதாதாம் ...
திருந்தாத ஜென்மத்தோடு வாழப் பிடிக்காமல் வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டாராம் மனைவி ...
வெளிநாட்டில் சம்பாதித்ததை  பிள்ளைகளுக்கே கொடுத்தாளாம் ...
தண்ணி அடிக்க காசு கேட்டால் தராமல் திட்ட வேறு செய்தாளாம் ...
மதிக்காத மனைவிக்கு பாடம் புகட்ட நினைத்து ...
ரயில் தண்டவாளத்தில் இரண்டு பாறாங்கல்லை வைத்துள்ளார் ...
நல்லவேளையாக இஞ்சின் டிரைவர் பாறாங்கல்லை பார்த்து ரயிலை நிறுத்தியுள்ளார் ...
பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது  ...
போலீசிடம் மாட்டிக் கொண்ட சர்வர் கூறியது பொன் எழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டியது ...
ரயிலை கவிழ்த்தது நான்தான் என்று தெரிந்தாலாவது பயந்து மனைவி பணம் தருவாள் என்பதற்காகத்தானாம் !
வண்டவாளம் தண்டவாளம் ஏறியது என்பது இவனுக்குத் தான்  மிகவும் பொருந்தும் !


16 comments:

 1. Replies
  1. இப்படிப் பட்ட குடிமகனால் வீட்டுக்கு மட்டுமா கேடு ,நமக்கும் அல்லவா கேடாய் இருக்கு ?
   நன்றி ஜெயகுமார் ஜி !

   Delete
 2. டாஸ்மாக் ஜிந்தாபாத்......

  எத்தனை குடும்பங்கள் இப்படி அழிந்து கொண்டிருக்கின்றனவோ.....

  ReplyDelete
  Replies
  1. டாஸ்மாக் இல்லாவிட்டாலும் இவர்களை திருத்த முடியாது ...
   வருமானத்தை அளக்க முடியுது ,அழிவை ...?
   நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

   Delete
 3. இவனல்லவோ உண்மையான இந்தியக் "குடி" உரிமை பெற்றக் "குடி" மகன்.!! இதிலிருந்தே தெரியலையா, நம்ம நாட்டுல "குடிஉரிமையை" விட "குடி" உரிமை மேலோங்கி இருக்குனு. நல்லவேளை இந்தக் "குடி" மகனின் "கிவிக் சென்சினால்" உயிரழக்க இருந்த மற்ற குடிமக்கள் ட்ரைவரின் கண்களில் பாறாங்கல் பட தப்பித்தார்கள். ரயில் ட்ரைவர்களே விழிப்போடு இருங்கப்பா...எங்க உயிர் எல்லாம் உங்க கையிலதான்னு தெரியுது...

  ReplyDelete
  Replies

  1. இதுக்குதான் கண்ணதாசன் 'வீட்டை விட்டு வெளியில் வந்தால் நாலும் நடக்கலாம் ,நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம் 'னு பாடிஇருக்காரோ? நன்றி துளசிதரன் ஜி

   Delete
 4. "வண்டவாளம் தண்டவாளம் ஏறியது என்பது இவனுக்குத் தான் மிகவும் பொருந்தும் !" ரசித்தேன்! பகவான்ஜி !

  ReplyDelete
  Replies
  1. வண்டவாளம் தண்டவாளம் ஏறியது என்று ஏன் சொல்கிறார்கள் ?விபரம் அறிந்தவர்கள் சொன்னால் நல்லது !
   நன்றி துளசிதரன் ஜி !

   Delete
 5. இதைத்தான் வீட்லே எலி வெளிலே புலி என்பது போல.
  வீட்டம்மாகிட்டே காசு கரக்க வழியில்லாதவன் வந்துட்டான் ரயில கவிழ்க்க!
  அப்ரண்டீஸ் குடிகாரன்போலஜீ!

  ReplyDelete
  Replies
  1. ஆம்பளையா லட்சணமா சம்பாதித்து பெண்டாட்டி ,பிள்ளைங்களைக் காப்பாற்ற
   துப்பில்லாதவன் தொல்லைக்குப் பயந்துதான் அந்தம்மா வெளி நாட்டுக்கே போயிருப்பார்கள் !
   இவனுங்க முட்டாள் தனத்தினால் ரயில் பயணமும் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் போலிருக்கே !
   நன்றி அஜீஸ் ஜி !

   Delete
 6. கணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இந்தக் கருத்துரை நண்பரின் மடிக்கணினியிலிருந்து)

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய உங்களுக்கும் .மடிக்கணிணி தந்து உதவிய நல்ல உள்ளத்திற்கும் நன்றி !

   Delete
 7. அருமை அவர் இன்னும் நல்லா வருவார். பதிவில் நகைச்சுவை ஓட்டம் ததும்புகிறது. உங்களுக்கு மட்டும் இது போன்ற செய்திகள் எங்கிருந்து கிடைக்கிறது நண்பரே. அசத்தல் தொடரட்டும் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அவரு நல்லா வருவாரா ,அவர் தலையிலே அந்த பாறாங்கல்லைப் போட!
   நன்றி பாண்டியன் ஜி !

   Delete
 8. "ரயிலை கவிழ்த்தது நான்தான் என்று தெரிந்தாலாவது பயந்து மனைவி பணம் தருவாள் என்பதற்காகத்தானாம்!" என்பது நல்ல நகைச்சுவை தான்!

  ReplyDelete
  Replies
  1. குடிகாரனின் பேச்சையும் ,குரங்கு சேட்டையையும் நானும் ரொம்பவும் ரசிப்பதுண்டு !
   நன்றி ஜீவலிங்கம் காசிராஜிலிங்கம் ஜி !

   Delete