3 December 2013

அந்தரங்கத்தைப் படம் பிடிக்க அனுமதிக்ககூடாது !

அந்தரங்கம் புனிதமானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது ...
ஆனால் ,கேரள பல் டாக்டர் ஒருவருக்கு இதில் உடன் பாடில்லைப் போலிருக்கிறது ...

ஜெயகிருஷ்ணன் என பெயர்கொண்ட அவர் இப்போது 'ஜெயில் 'கிருஷ்ணன் எனப் பெயர் எடுப்பார் போலிருக்கிறது  ...
வலி எடுத்த பல்லைப் பிடுங்க வேண்டியவர் ...
பல் பிடுங்கிய பாம்பாய் அடங்கிய காரணம் அறிந்தால் ...
நீங்களும் பாம்பாய் மாறி  அவரை     கொத்திவிடுவீர்கள் ...
கடந்த செப்டம்பர் மாதம்தான்  அவருக்கு திருமணம் நடந்துள்ளது ...
தான் பெற்ற இன்பம் தன் இல்லாளும் பெற வேண்டுமென்று தண்ணி அடிக்கவும் ,ஆபாசப் படம் பார்க்கவும் வற்புறுத்தியுள்ளார் ...
நற்குடியில் பிறந்த அந்த நங்கையோ மறுத்துள்ளார் ...
மனைவியைக் கொடுமை பண்ண துவங்கிவிட்டார் ...
இதில் உச்சகட்டக் கொடுமையாக நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்று விட்டாராம் ...
மாமனார் வீட்டுடன் தொடர்பு கொண்டு சொன்னாராம் ...
'எனக்கு பத்து லட்ச ரூபாய் தேவைப் படுகிறது ,தராவிட்டால் உங்கள் மகள் என்னுடன் இருக்கும் படுக்கையறைக் காட்சிகளை 'யூ ட்யுப் 'பில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார் ...
காவல் துறையில் புகார் தரப் பட்டு தற்போது கைது செய்யப் பட்டுள்ளார் ...
படிச்ச டாக்டரே இப்படி 'யூ ட்யுப் 'பை  துப்பாக்கி போல் பாவித்து பிளாக் மெயில் செய்கிறார் ...
சோசியல் நெட் தளங்கள் இன்னும் வேறு எதற்கெல்லாம்  உதவப் போகிறதோ ?24 comments:

 1. சோசியல் நெட் தளங்கள் உதவுது மிகவும் கொடுமை...

  செருப்பாலும் அடித்தாலும் தீராது... பொறுக்கி நாய்...

  ReplyDelete
  Replies
  1. குடிப் பழக்கத்திற்கு படித்தவர்களே இப்படி அடிமையானால் ...சொல்வதற்கு ஒன்றுமில்லை !
   நன்றி

   Delete
 2. ஐயா, கத்தி என்பது ஒருத்தனை வெட்டவும் உதவும், கறிகாய் நருக்கவும் உதவும்.
  அதே போலத்தான் ஷோஷியல் நெட் தளங்களும். பயன்படுத்துவோர் எண்ணம் போல உதவும். எனவே தவறு அவற்றின் மேலல்ல. பயன்படுத்தும் நாம் தான் குற்றவாளிகளாக இருக்கின்றோம்.
  டீடீ சொல்வது போல செருப்பால் அடித்தாலும் பத்தாது. நான்கு கூட்டுச்சாலையில் கட்டி வைத்து வருவோர் போவோர் அனைவரும் கல்லால் அடிக்கவேண்டும் இவனை.

  ReplyDelete
  Replies
  1. சமையல் அறைக் கத்தியை காவலர் பறிக்க வேண்டிய அவசியமில்லை ,சமூக விரோதியின் கையில் உள்ள கத்தியைப் பறித்துத் தானே ஆகவேண்டும் ?
   சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் உள்ள சம்பவங்களை சமூக வலைதளங்கள் தடை செய்ய வேண்டும் என்பதே சமூக நல விரும்பிகளின் எண்ணம் !
   நன்றி

   Delete
 3. \\படுக்கையறைக் காட்சிகளை 'யூ ட்யுப் 'பில் வெளியிட்டு விடுவேன் \\'யூ ட்யுப் 'பில் படுக்கையறைக் காட்சிகளை அனுமதிக்க மாட்டார்கள். வீடியோக்கள் தணிக்கை செய்தே வெளியிடுவார்கள். இதுகூடத் தெரியாத மக்கு சும்மா உதார் விட்டிருக்குது................

  ReplyDelete
  Replies
  1. 'யூ ட்யுப் 'பில் அப்படி ஒரு தணிக்கை இருந்தால் நல்லது தான் !
   மற்றைய வலைதளங்களில் நிலை என்னவோ ?இளைய சமுதாயத்தைக் கெடுக்கும் நிறைய வெப் சைட்கள் இருப்பதால் இன்ட சந்தேகம் வருகிறது !
   நன்றி

   Delete
 4. Replies
  1. கேரளம் என்றால் கடவுளின் தேசம் என்பார்கள் ,அங்கேதான் இந்த கேவலம் !
   நன்றி

   Delete
 5. Replies
  1. cyper crime அதிகரிப்பது இப்படிப்பட்ட பாவிகளால் தான் !
   நன்றி

   Delete
 6. ஜெயக்ரிஷ்ணனை நான் குறி பார்த்து சுட இருந்தேன். எப்படியோ, பகவான்ஜி உங்கள் குண்டுக்கு பலியாகிவிட்டார். இந்த மாதிரியான ஆட்களை பல் டாக்டரா, கண் டாக்டரா என்று பார்க்காமல் கண்ட இடத்தில் சுட்டுவிட வேண்டும் (youtube மட்டுமல்ல தமிழ்மணமும் துப்பாக்கிதான்). அந்தரங்கத்தை காமரா உள்ள தன் மொபைலில் பிடிப்பது சர்வசாதாரணமாகி விட்டது. அதை மற்றவர்களுக்கும் காண்பித்து இன்புறும் கீழ்தரமான மன நோயும் நம் நாட்டில் பரவத்தொடங்கி இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. சுடப் பட வேண்டியவர்களை யார் சுட்டால் என்ன ?உங்க பங்குக்கு நீங்களும் ஒரு ரௌண்ட் சுடுவதில் தப்பில்லை !
   தமிழ் மண நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன் !
   நன்றி

   Delete
 7. ithai patri naan ezhuthiyathu..
  ஆண் பெண்-
  நட்பென்பது-
  வளர வேண்டிய -
  மரமாகும்!

  அதனை -
  மறுப்பது-
  மடத்தனமாகும்!

  பிரிந்திருந்தால்-
  பிற்போக்கு தனம்!

  கட்டுப்பட்டிருந்தால்-
  காட்டுமிராண்டி தனம்!

  இப்படியாக-
  எத்தனையோ-
  வியாக்கியானம்!

  தற்போதைய-
  ஒரு-
  சம்பவம்!

  பத்து லட்சம்-
  கேட்டான்-
  ஒருவன்!

  மறுத்தால்-
  "உறவை"இணையத்தில்-
  வெளியிடுவேன்-
  என்றான்!

  யார்-
  இவன்!?

  ஒரு பெண்ணை-
  மணந்தவன்!

  மனைவியின்-
  "அந்தரங்கதிற்குதான்-"
  விலை பேசினான்!

  கைது-
  செய்யப்பட்டுள்ளான்!

  கட்டியவனே-
  வில்லனாக-
  மாறுகிறான்!

  "கண்டவனுடன்"-
  சுற்றுவது-
  பெண்ணுரிமை என்கிறோம்!

  எங்கோ-
  நடந்த ஒன்னு-என
  அலட்சியம் செய்வோம்!

  எங்கோ நடக்கும்-
  திருட்டிற்கு-
  நாம் ஏன் -
  பணத்தை-
  வங்கியில் போடுகிறோம்..!?

  ReplyDelete
  Replies
  1. நான் வார்த்தைகளில் எழுதியதை அருமையாக கவிதை ஆக்கிவிட்டீர்கள் ,
   பாராட்டுக்கள்...தாயெனும் தலைப்பிலான உங்கள் கவிதை நூல் வெற்றி பெற வாழ்த்துக்கள் சீனி !
   நன்றி

   Delete
 8. சே... இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா...?

  ReplyDelete
  Replies
  1. நண்பர் சீனி சொன்னதைப் போல் ,கட்டியவனே வில்லன் ஆனால் என்ன செய்ய ?
   நன்றி

   Delete
 9. த. ம. 1 போட்டாச்சு!

  ReplyDelete
  Replies
  1. மறக்காமல் செய்த நல்ல காரியத்திற்கு நன்றி !

   Delete
 10. படிப்புக்கும் நற்குணத்திற்குமான
  சம்பந்தம் அத்துப்போய்தான்
  வெகு காலமாகிவிட்டதே

  ReplyDelete
  Replies
  1. பாரதியின் சாபம் பலிக்கட்டும் ...படித்தவன் சூது செய்தால் ,போவான் ஐயோ ஐயோவென்று !
   நன்றி

   Delete
 11. Replies
  1. மகுடம் சூட்டியதற்கு நன்றி !

   Delete
 12. "படிச்ச டாக்டரே இப்படி 'யூ ட்யுப் 'பை துப்பாக்கி போல் பாவித்து பிளாக் மெயில் செய்கிறார் ...
  சோசியல் நெட் தளங்கள் இன்னும் வேறு எதற்கெல்லாம் உதவப் போகிறதோ?" என எச்சரிக்கையோடு நல்ல கேள்வி கேட்டீர்!
  பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. நேற்று நான் படித்த செய்தி ...வடஅமெரிக்கா டோரண்டோவில்கல்லூரி மாணவன் ஒருவன் தற்கொலையை இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்புவதாக கூறி ,நிறைய மாத்திரைகள் ,ஓட்கா மது குடித்துவிட்டு அறையிலும் தீ வைத்துக் கொண்டானாம் .மனிதாபிமானம் உள்ள சிலர் காப்பாற்றி இருக்கிறார்கள் !
   நன்றி

   Delete