19 December 2013

மனைவி கதவை திறக்கணும்னு கண்டக்டரின் ஐடியாவோ ?

''காலிங் பெல் பக்கத்திலே ஒரு விசிலை தொங்க விட்டு ,ஏதோ எழுதிப் போட்டிருக்கீங்களே ,என்னது ?''
''கரண்ட் கட் நேரத்தில் இந்த விசிலை ஊதி அழைக்கவும்ன்னு எழுதி இருக்கேன் !''

34 comments:

 1. சம்யோஜிதமான super ஐடியாவாக இருக்குதே!! அதுவும் தமிழ் நாட்டில் உள்ள கரண்ட் கட்டுக்கு மிகவும் உபயோகமான ஐடியா!!!! நன்றி!! (வீட்டு வாசலிலேயே பஸ் வருதோனு சந்தோஷம் இல்லனா, இப்பலாம் குப்பை எடுக்கக் கூட விசில் ஊதறதுனால அதற்கான விசிலோனு நினைச்சிடக் கூடாது)

  ReplyDelete
  Replies
  1. விடாமல் விசிலை ஊதவும்னு எழுதிப் போட்டு விடலாம் ,இதிலும் ஒரு சௌகரியம் ...வேண்டாட விருந்தாளி என்றால் ஊதிஊதி ஓயட்டுமென்று வேடிக்கைப் பார்க்கலாம் !
   நன்றி

   Delete
 2. அருமையான ஐடியா
  இன்றைய சூழலில் அனைவர்க்குமானதும் கூட

  ReplyDelete
  Replies
  1. வேண்டாத விருந்தாளியை தவிர்க்க டிப்ஸ் வேறு ,அனைவரும் கடைப் பிடிக்கலாம் !
   நன்றி

   Delete
 3. அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
  நல்ல வேளை... கடப்பாரைய வைக்காம விட்டாய்ங்களே...

  ReplyDelete
  Replies
  1. ஆள் இல்லா வீடுகளில் கடப் பாறையை கொண்டுவந்து திறப்பவர்களுக்கும் நம்ம ஊர்லே பஞ்சமே இல்லையே !நாம வேற தொங்க விடணுமா ?
   நன்றி

   Delete
 4. ஜோக்காளியின் சூப்பர் ஐடியா!

  ReplyDelete
  Replies
  1. இதை நீங்க விசிலடிச்சு சொன்னது எனக்கும் கேட்டது !
   நன்றி

   Delete
 5. Replies
  1. வீட்டுக்கொரு விசில் வைப்போம்னு பிரச்சாரம் பண்ணலாம் ,இல்லையா ?
   நன்றி

   Delete
 6. அடுத்த தேர்தலுக்கு இலவச விசில் வழங்கும் திட்டம் கொண்டு வரலாம். கருத்து உபயம் பகவான் ஜி

  ReplyDelete
  Replies
  1. எதிர்க்கட்சி வேண்டுமானால் மின்வெட்டை நினைவூட்ட செய்யக்கூடும் !
   முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாலாஜி !

   Delete
  2. நன்றி பகவான்ஜி, இது என் முதல் வருகை அல்ல. இதற்கு முன்பும் பின்னூட்டம் அளித்துள்ளேன். நீங்களும் அதற்கு பதிலளித்துள்ளீர்கள்.

   Delete
  3. சாரி பாலாஜி ...தொடர்வதற்கும் ,பின்னூட்டத்திற்கு ஒரு பின்னூட்டம் இட்டதற்கும் நன்றி !

   Delete
 7. படு சூப்பர் கற்பனை!!!

  ReplyDelete
  Replies
  1. போறப் போக்கைப் பார்த்தால் கற்பனை நிஜமாகி விடும் போலிருக்கே !
   நன்றி

   Delete
 8. தமிழ்மணம் +1
  புலவரே! உங்கள் ஜோக்கில் பாதி-பொருள் குற்றம் உள்ளது;
  கரன்ட் இல்லாவிட்டால் இரவு எப்படி படிக்கமுடியும்? இது பாதி பொருள் குற்றம்!
  பகலில் படிக்கமுடியும் என்று சமாளிக்க முடியும் என்பதால் பரிசுத் தொகையை பாதியாகத தான் கொடுக்க வேண்டும்!
  --நக்கீரன்!
  (புராண நக்கீரன்பா!)

  ReplyDelete
  Replies
  1. நக்கீராஆஆஆ,என் ஜோக்கில் பொருட்குற்றமா ?கரெண்ட் இல்லா நேரத்திலும் ஒளிரும் வண்ணம் எழுதியுள்ளேனே,கண்ணுக்கு தெரியவில்லையா ?முழு பரிசுத் தொகையையும் வைக்கா விட்டால் நெற்றிக் கண்ணால் உம்மை எரித்து விடுவேன் !
   நன்றி

   Delete
  2. எரியுங்க!
   நான் குளத்திலே ஹாயா குளித்துவிட்டு வரப்போறேன். தண்ணீர் பஞ்சம் இருக்கும்போது!

   Delete
  3. நக்கீரா ,என் சொல்லின் பொருளை உணராமல் பேசாதீர் ...உம்மை எம் நெற்றிக் கண்ணால் எரித்து பஸ்பமாக்கி விடுவோம் என்றுதான் கூறினோம் ...குளத்து நீரில் எறிந்து விடுவதாய் தவறான வியாக்கியானம் செய்கிறீர் !
   தமிழக குளங்களில் தான் நீரில்லை ,நீர் வசிக்கும் ஊரில் ஹட்சன் நதியில் தண்ணீர்கரைப் புரண்டு ஓடுகிறதே ,தமிழ் தாயை வணங்கிக் கொண்டு மூழ்கி எழுவீராக !
   நன்றி

   Delete
 9. வணக்கம்
  தலைவா...

  நகைச்சுவை மிக அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்..ஜீ

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நானா ,தலைவாவா ?
   நன்றி

   Delete
 10. வணக்கம்

  த.ம.9வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 11. இது ஜோக்கில்லை சகோ!
  உண்மையிலும் செயற்படுத்தக் கூடியதே...:)

  நல்ல ஐடியா! ஊரில இருக்குறவங்களுக்குச் சொல்லணும்!
  நன்றி!
  த ம..10

  ReplyDelete
  Replies
  1. கோவில் மணியைக் கூட கட்டலாமே !
   நன்றி

   Delete
 12. தமிழ் நாட்டுக்கு நிச்சயம் தேவை தான்....

  ReplyDelete
  Replies
  1. அநேகமாய் தமிழ் நாட்டில் விசில் பஞ்சம் ஏற்படும் போலிருக்கே !
   நன்றி

   Delete
 13. நல்ல யோசனை! இனி விசிலின் விலை ஏறிவிடும்!

  ReplyDelete
  Replies
  1. அதுதான் ,ரீடிங் கார்டுடன் விசிலையும் விற்கப் போவதாக சொல்கிறார்கள் !
   நன்றி

   Delete