Sunday, 22 December 2013

வேளா வேளைக்கு மருந்து கொடுக்க மனைவி தேவை ?

''டாக்டர் ,ஞாபக மறதிக்கு மருந்து கேட்டேன் ,பில்லிலே SMS சார்ஜ் முன்னூறு ரூபாய்னு போட்டிருக்கே,ஏன் ?''
''மருந்து சாப்பிடுங்கன்னு ஞாபகப்படுத்தி நாலு வேளையும்  SMS அனுப்புவோம் ,அதுக்குதான் !''
''அதுக்கு முன்னூறு  ரூபாயா ?''
''கால் பண்ணியும் சொல்வோம் ,அதுக்கு ஐநூறு ரூபாயாகும் ,பரவாயில்லையா ?''

22 comments:

  1. வணக்கம்
    தலைவா...

    நல்லா வர வாய்ப்பு அதிகம்... சூப்பர்...வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நல்லா நான் வர்றது இருக்கட்டும் ,இப்படி நடந்தா நல்ல வரப்போறதுநோயாளியா ,டாக்டரா ?
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அருமையான வியாபார யுக்தியை சிரிப்போடு கலந்து சொன்ன உங்களுக்கு ஒரு பாராட்டு!

    ReplyDelete
    Replies
    1. கால் பண்ணியும் மருந்து சாப்பிட மறப்பவர்களுக்கு வீட்டுக்கு நர்சை அனுப்புவதும் உண்டு ...ஆண் நர்ஸ் என்றால் ஒரு சார்ஜ் ,பெண் நர்ஸ் என்றால் இருமடங்கு சார்ஜ் ..அதெல்லாம் தொழில் ரகசியம் !
      நன்றி

      Delete
  4. Replies
    1. டாக்டர் நல்லா வருவாரா ?
      நன்றி

      Delete
  5. அதை விட நேர்ல ந்ர்ஸ் வேணும்னாலும் அனுப்பறோம்....அதுக்கு.....சார்ஜ்......இதெப்படி!!!?

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கித்தான் படிச்சேன் ...காமக்கொடூரன் இருபது பெண்களை காதலிப்பது போல் நடித்து ,காரியம் முடிந்ததும் கருக் கலைப்பு மாத்திரைக்கு பதில் சயனேட் மாத்திரை கொடுத்து கொன்றதால் ,அவனுக்கு தூக்கு தண்டனை என்று !
      அப்படி எதுவும் நடக்காமல் இருந்தால் சரி !
      நன்றி

      Delete
  6. அடடா already பகவான்ஜி நான் போட்டா மாதிரியே பதில் போட்டுட்டீங்க....நான் பார்க்காம பின்னூட்டம் இட்டுவிட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. நம்ம ரெண்டு பேர் வேவ் லெங்க்ட் ஒரே மாதிரி இருப்பது மகிழ்ச்சியான விஷயம் தானே ?
      நன்றி

      Delete
  7. Replies
    1. சம்பாதிக்க எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா !
      நன்றி

      Delete
  8. பணம்
    இப்படிப் பேசவைக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. சும்மாவா சொன்னாங்க பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்னு ?
      நன்றி

      Delete
  9. ஒரு ஒரு தபாவும் எச்சம்மச்சு அனுப்ப சொல்லி டாக்குடருக்கு ரிமைண்டு பண்ணிக்கனுமே... அத்துல கயிச்சுக்கபா...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. #அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...#
      சரி நைனா ,அடுத்த ஊட்டைபார்த்துகினு போறேன்
      தாங்க்ஸ்ப்பா

      Delete
  10. நல்ல ஐடியாவாக இருக்கேன்னு
    டாக்டர்கள் உங்கள் பதிவைப் படித்து
    ஆரம்பித்துவிடப்போகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. நல்லதுதானே ?ஐடியாவுக்கு காப்பிரைட் என்னிடம் இருக்கே ,ராயல்டி கேட்டு விடலாம் !
      நன்றி

      Delete