Wednesday, 25 December 2013

பாங்க் பாலன்சை மறைத்த கணவருக்கு மறை கழன்று விட்டதா ?

'உங்க வீட்டுக்காரர்  மெண்டாலிட்டி  சரியா  
இருக்கான்னு ஏன் செக் பண்ணச் சொல்றீங்க ?''
'' ATM ல் பணம் எடுத்தவர் பணத்தை 
குப்பைக்கூடையில் கிழிச்சுப்போட்டுட்டு 
,பாலன்ஸ் சிலிப்பை கொண்டு வந்திருக்கிறாரே !''

18 comments:

  1. தன் வினையால தானே மாட்டிக்கப் போறாரு! மறைக்கறதுக்காக இப்படி செஞ்சுட்டு அப்புறம் டாக்டர்கிட்ட மாட்டிக்கிட்டா உண்மை வெளில வந்துதானே ஆகணும்.......இல்ல வினை வேற மாதிரி போகுமே......

    தமிழ் மணத்தில் இணைக்கவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. எல்லா ஊரிலும் ATM ரூம் முழுவதும் கிழித்துப் போட்ட பாலன்ஸ் ஸ்லிப்களால் நிரம்பி வழிகிறது ,காரணம் எதுவாக இருக்கும் துளசிதரன் ஜி ?
      நன்றி

      Delete
  2. ஒரு லூஸை பார்த்து "நீ லூஸா?"-ன்னு கேட்ட லூஸு!

    ReplyDelete
    Replies
    1. லூசுக்கு லூசு கேட்டது டைட்டா ..தப்பு ,தப்பு ..சரியாப் போச்சு ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    தலைவா......

    நகைச்சுவை மிக அருமை வாழ்த்துக்கள்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வழக்கமா ஸ்லிப்பை கிழிக்கிறவர்,இன்னைக்கு ரூபாயை கிழித்தது தப்பா ?
      நன்றி

      Delete
  4. சகோதரருக்கு வணக்கம்
    வழக்கமான பாணியிலிருந்து இன்று மாற்றி கிழிப்போம் என்று முடிவு எடுத்து விட்டார் போலும். அப்புறம் இதை கேட்டு பொண்டாட்டி கிட்ட அடி வாங்குன கதையைச் சொல்லலையே!
    பகிர்வுக்கு மிக்க நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. நீங்க கிழிச்சது போதுமென்று மனைவி கட்டளை இட்டு இருப்பதாக கேள்விபட்டேன் !
      நன்றி

      Delete

  5. மறதியா? உளநோயா?
    சிந்திக்க வைக்கிறியளே!

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் எக்ஸ் ரே ,ஸ்கேன் ,எடுக்கச் சொல்லி இருக்கிறார் ,ரிசல்ட் வந்தால் தெரிந்து விடும் !
      நன்றி

      Delete
  6. இவ்ளோ நாள் சொம்மா கீச்சுகுக்கினுருந்தாரு... இப்ப ரெம்ப "காஸ்ட்லி"யா கீச்சுக்கினார்... அதாம்பா மேட்டரு...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப காஸ்ட்லிதான்,ccu வில் கிடக்கிறாரே !
      நன்றி

      Delete
  7. வாழைப் பழத் தோலை தின்றுவிட்டு
    சதையைத் தூக்கி எறிகிற மாதிரித்தானே இதுவும்
    அப்ப நிச்சயம் மெண்டல்தான்
    ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும்

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றது சரிதான் ,atm கார்டைக் கூட வாங்கி வச்சுக்கிறது நல்லது ,இல்லையென்றால் அதையும் மறந்துட்டு வந்து விடுவார் !
      நன்றி

      Delete
  8. அவருக்கு என்ன வேதனையோ! :) இருந்தாலும் இவ்வளவு மறதி கூடாது!

    ReplyDelete
    Replies
    1. அதுதான் இந்த சோதனைக்கு வந்துவிட்டார் !
      நன்றி

      Delete