29 December 2013

கருவில் வளர்வது மகனா ,மகளா ,காண்பதும் தவறா ?

''கர்ப்பமா இருக்கிற உங்க மனைவியை  ஸ்கேன் பண்ணும்போது  டாக்டர் எதுக்கு உங்களை வெளியே போங்கன்னு சத்தம் போட்டார் ?''
'' வயிற்றிலே வளர்றது ஆணா ,பெண்ணான்னு  சட்டப் படி அவர் சொல்லக்கூடாதாம் ...சரி ,கருவை போகஸ் பண்ணுங்க ,நானே  பார்த்துக்கிறேன்னு  சொன்னது  அவருக்கு பிடிக்கலே போலிருக்கு  !''


33 comments:

 1. Replies
  1. இவரே இப்படின்னா பிறக்கிற பையனும் சேட்டைக்காரனாத்தானே இருப்பான் !
   நன்றி

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. மகனா ,மகளா ,காண்பதும் தவறா ?
  தவறே இல்லை; அடி முட்டாள் தனம்.
  பெண் இல்லையெனில் இவ்வுலகில் வாழ்க்கை இல்லை;

  ஆண்கள் மட்டும் இருந்தால், (polyandry) மறுபடியும் வரும். ஒன்றுக்கு மேற்ப்பட கணவன்கள். எல்லாக் கதைகளும் அந்த அந்த காலத்திற்கு ஏற்ப எழுதப்பட்டது என்பது உண்மை என்பதால்...நம் கலாசாரத்தில் இருந்தது கற்றுக்கொள்ளுங்கள்; மகாபாரதம் பாண்டவர்கள் கதை அதை ஓட்டியே!

  மேலும், ஓரினச்சேர்க்கை...more rape, etc, பெருகும்.

  ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பவர்கள் ஒரு நிமிடம் சிந்திக்க;
  ஏனென்றால், இது நம் முன்னோர்களின் பழமொழி!
  இது உண்மை! நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா?

  ஒரு மகனைப் பெற்றால் உறியில் சோறு!
  நாலு மகன்களைப் பெற்றால் நடுத்தெருவில் சோறு!

  தமிழ்மணம் +1
  Reply

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வதுபோல், இருபாலினமும் சரிசமமாய் இருந்தால்தான் சமூகத்திற்கு நல்லது .
   தசரதன் மேல் எனக்கு ரொம்ப பொறாமை உண்டு அவருக்கு 6௦௦௦௦ மனைவிகளாமே ..
   நம்ப முடிய வில்லை ,அவருக்கு மனைவிகளையே அடையாளம் தெரிந்து இருக்காதே ...அவர்களை எப்படி மனைவி என்பது ?பிள்ளைகளை எப்படி அடையாளம் தெரிந்து கொண்டிருப்பார் ?
   எனக்கும் ரெண்டு பசங்க ,பெண் பிள்ளை இல்லையே என்ற வருத்தம் உண்டு .ரெண்டு பசங்க என்பதால் போர்டிகோவில் சோறு போடுவார்கள் என்று நம்புகிறேன் !
   நன்றி

   Delete
 4. Replies
  1. கண்ணால் காண்பதும் பொய் ஆகாதுன்னு ஆசைப்படுவது தவறா ?
   நன்றி

   Delete
 5. Replies
  1. டாக்டருக்கு கோபம் வர்ற மாதிரி 'குளோஸ் அப்'பிலே எதைக் காட்டச் சொன்னாரோ ?
   நன்றி

   Delete
 6. ஆமா சொல்றதுதானே
  சட்டப்படி குற்றம்
  பார்த்துக் கொள்ளலாமே
  நல்லா யோசிக்கிறீங்க
  தொடர வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. இனி சட்டத்தை திருத்த வேண்டியதுதான் ...ஆணா,பெண்ணா என்று அரிய நினைப்பதும் குற்றமென்று !
   வாழ்த்திற்கும்,கருத்திற்கும் நன்றி

   Delete
 7. தெரிந்து கொள்வதில் தவறில்லை பகவான் ஜி! ஆனால், பெண் என்று தெரிந்து கருவைக் கலைக்க நினைப்பவர்கள். இல்லை பெண் பிள்ளை பிறந்ததும் கொல்ல முஅல்பவர்கள், கீழாக நினைப்பவர்கள் அயோக்கியர்கள். இன்னும் இது போன்று சில கிராமத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்! சக்தி இல்லையேல் சிவம் இல்லை!

  த.ம +

  ReplyDelete
  Replies
  1. பெண்ணுக்கு பெண்ணே பேராசைக் கொள்ளும் அழகை ரசிக்காமல் ,கருவிலேயே கொல்லுவதும் தவறுதான் !
   சிவத்திற்கு உடம்புலே சக்தி இல்லையேல் சவமே !( புரியுதா ,துளசிதரன் ஜி ?)
   நன்றி

   Delete
  2. பகவான் ஜி! பதிவர் வெங்கட்நாகராஜ் அவர்கள் தான் ரசித்த விளம்பரம் என்று அவரது வலைத்தளத்தில் ஃப்ரூட் சாலடில், பெண்சிசுக் கொலை பற்றிய விளம்பரம் ஒன்று கொடுத்துள்ளார். அருமையாக உள்ளது!

   Delete
  3. அந்த விளம்பரத்தைப் பார்த்து ரசித்தேன் ... கருவினில் வளரும் பெண் சிசுவின் கோரிக்கை நெஞ்சைத் தொட்டது !
   நன்றி

   Delete
 8. சட்டத்தை மீறுவது கண்டிப்பாக தவறு...

  ReplyDelete
  Replies
  1. தவறுதான் ,பல இடங்களில் பலரும் சட்டத்தை மீறி காசு பார்ப்பது பெருகிக் கொண்டே வருகிறதே !சட்டம் தன் கடமையை செய்வதாக தெரியவில்லை !
   நன்றி

   Delete
 9. ம்ம்ம்ம்....

  பல இடங்களில் இதைத் தவறாக பயன்படுத்துவதால் தான் பிரச்சனையே...

  ReplyDelete
  Replies
  1. ஸ்கேனை பார்க்காமல் கருக்கலைப்பும் செய்யும் கொடுமையும் நடக்குதே !என்ன செய்றது ,கழுத்தில் தாலி ஏறுவதற்கு முன்னாலே ,வயிற்றில் இது வந்துட்டா பிரச்சினைதானே !
   நன்றி

   Delete
 10. தப்பாவா கேட்டுட்டோம்? இந்த டாக்டர் இப்படி கோவிச்சுகுறாரே
  த.ம.6

  ReplyDelete
  Replies
  1. தனக்குப் பிறக்க போற பிள்ளையைப் பார்க்ககூடாதுன்னு சொல்றதுக்கு இவர் யாரு ?
   நன்றி

   Delete
 11. I had been there during scanning my kids, the Dr. would show this is heart, this, that etc., [that too quickly], but it is very difficult to understand anything there. It needs expertise which trained medical experts alone can have!!

  ReplyDelete
  Replies
  1. டாக்டர் துணையின்றி நம்மால் கண்டு பிடிக்க முடியாதுதான் ...அதனாலேதான் நம்மாளு போகஸ் பண்ணச் சொல்றார் ..எந்த இடத்தை என்று சொல்ல வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன் !
   நன்றி

   Delete
  2. ஜெயதேவ் தாஸ்!
   தமிழர்கள் என்ன முட்டாள்களா? படியுங்கள்...
   Number one:
   Absence of scrotal shadows; ஆண் இல்லை என்று ஓரளவு உறுதி படுத்திக்கொள்ளலாம்.
   Number 2:
   குழந்தை நேராக இருக்கும் போது, படம் எடுத்து...மூன்று கோடுகள் இருந்தால் பெருமாள் பக்தர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் பெண் குழந்தை என்று! குழந்தை பக்கவாட்டில் படுத்து இருந்தால் மூன்று கோடுகளை சைவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் பெண் குழந்தை என்று!

   அப்படியும் கண்டு பிடிக்கத் தெரியாத பெற்றோர்களுக்கு....
   நல்ல நேரம் பார்த்து வந்து ரிப்போர்ட் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்குள்ளவர்கள் சொல்வார்கள்.அதன் அர்த்தம் அது ஆண் குழந்தை!

   ரிப்போர்ட் நாளைக்கு வந்து வாங்க்கிக் கொள்ளுங்கள் என்று மொட்டையாக (நல்ல நேரம் என்ற சொல்லை சொல்லமால்) சொன்னால் பெண்குழந்தை.

   நல்ல நேரம் பார்த்து ரிப்போர்ட் வாங்கியாதல் ஆண் குழந்தை நமக்கு பிறக்கும் என்று நினைக்கும் முட்டாள்களே நம் மூடநம்பிக்கியின் ஆணி வேர்!

   "நல்ல நேரம்" என்பது உலகறிந்த secret word---open secret! -- ஆண் குழந்தை!

   Delete
  3. உங்கள் விளக்கம் ஜெயதேவ் தாஸ் அவர்களுக்கு மட்டுமல்ல ,அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியது என நினைக்கிறேன் .எனவே இதை வைத்து ஒரு பதிவை தேத்திவிடலாம்னு நினைத்துள்ளேன் !
   ஆண் என்றால் நல்ல நேரம் ,பெண் என்றால் கெட்ட நேரம் என்பதுவும் ஒரு மூட நம்பிக்கைதான் !
   நன்றி

   Delete
 12. எந்தப் பிள்ளையும் எங்க சொந்தப் பிள்ளையாயின், ஸ்கேன் பண்ணத் தேவையில்லையே!

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே மூணு பொண்ணுங்க இருக்கிறதினால் வந்த ஆர்வக்கோளாறுதான் இது !
   நன்றி

   Delete
 13. {{"நல்ல நேரம்" என்பது உலகறிந்த secret word---open secret! -- ஆண் குழந்தை!}}
  நான் எழுதியது தான்: இதில் ஒரு திருத்தும். நான் உலகம் என்று சொன்னது தமிழ்நாட்டை மனதில் வைத்தது தான். எப்படி நான் இந்தியா என்று சொன்னால் அது தமிழ்நாட்டை மட்டும் குறிக்குமோ அது மாதிரி! மீதி மாநிங்களில் வாழ்ந்தது இல்லை. நான் பிறந்தது, வளர்ந்தது எல்லேமே சென்னை நரகத்தில் மட்டுமே!

  இங்கு குழந்தை என்ன செக்ஸ் என்று சொல்லி விடுவார்கள். யாரும் மறைப்பது இல்லை. சில இந்திய பெற்றோர்கள் [அமெரிக்க குடியுரிமை பெற்றவரகள் ] பெண் குழந்தை என்றால் அழித்து விடுவதாக கேள்வி! வரதட்சனை பணம் கொடுக்க சோம்பி அல்ல; வேற மதத்தவனை, அமெரிக்கனை கல்யானம் செய்து கொள்ளுமே என்ற பயம் தான்.

  இந்தியாவில் விழுந்து விழுந்து ஜாதி பார்க்கும் இந்தியர்கள், இங்கு எந்த மொழி பேசும் எந்த ஜாதியாக இருந்தாலும், ஆனால், இந்தியனாக இருந்தால் போதும் என்று கல்யாணம் நடத்தி வைப்பது தமாஷ்!
  ____________
  ஆண் குழந்தை ஊர் மேய்ந்தால் இந்திய புண்ணாக்குகளுக்கு no problems- in fact, டபிள் ஒகே

  ReplyDelete
  Replies
  1. நம்ம உசிலம்பட்டியில் தான் பெண் சிசுவைக் கொல்கிறார்கள் என்றால் ,அமெரிக்க இந்தியர்களுமா?அதுவும் இந்த அற்ப காரணத்திற்காகவா?நம்பவே முடியவில்லை !
   என் அண்ணன் பையனும் குஜராத்தி பெண்ணை மணந்து கொண்டு(நாங்களே ராஜ்காட் சென்று தாண்டியா ஆட்டம் ஆடி சேர்த்து வைத்தோம் ) தற்போது அமெரிக்காவில் ,நீங்கள் சொல்வது போல் இந்தியர்களாக வாழ்ந்து வருகிறார்கள் !
   அங்கே பெண் பிள்ளை பெரிய மனுஷி ஆனவுடன் இங்கே வந்து விட வேண்டுமென்று சொல்லும் அமெரிக்க இந்தியத் தம்பதிகளை நானும் அறிவேன் !
   நன்றி

   Delete
  2. இதில் இருந்து தெரிவது என்னவென்றால்....ஜாதி பார்க்கும் எல்லோரும் புண்ணாக்குகள் தான்- என் பெற்றோர்கள் உள்பட!.

   வேறு ஜாதியாக இருந்தாலும்..எனக்கு என் மனைவிக்கு பல மொழிகள் பேசத்தெரிந்தாலும், தமிழ் என்ற மொழி பேசணும் என்பது என் குறிக்கோள்! என் மனைவி தமிழும் நன்கு அறிந்தவர்; இதற்கு மேல் ஏன் இருவருக்கும் ஒரே மொழி தெரியவேண்டும் என்ற கொள்கையில் போகவேண்டாம் என்று நினைக்கிறேன்.

   என் பெற்றோர்கள்..எங்கள் கல்யாணத்திற்கு எதிரியாக இருந்தவர்கள் சொல்கிறார்கள்---என் பேரன் எவளை வேண்டுமானுலும் கல்யாணம் பண்ணிக்கொள்ளட்டும்--ஆனால், அவள் இந்தியனாக இருக்கவேண்டும்..

   I said, "B.S" and cut the line..

   "B.S" means Bull shit..தமிழில் மாட்டுப் பீ!--மன்னிக்கவும் -சாணி!

   Delete
  3. புண்ணாக்கு சாப்பிட்டால் சாணி வருவது இயற்கைதானே ?
   பேரன் மணப்பது இந்தியப் பெண்ணாக இருந்தால் பரவாயில்லை என்பவர்கள் ,கொள்ளுப்பேரன் பெண்ணை மணந்தாலே போதும் என்று சொல்கிற கால கட்டத்தில் தானே நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் !
   நன்றி

   Delete