2 December 2013

புது மணத்தம்பதிகளிடம் புதுவிதக் கொள்ளை !

முன்பெல்லாம் கொள்ளையர்கள் ஆளில்லா வீடுகளைப் பார்த்து கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள் ...
சமீப காலமாக அதிலும் நல்ல முன்னேற்றம் ...

தைரியமாக கதவை உடைத்து உள்ளே நுழைந்து ...
உள்ளே இருப்பவர்களின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி ...
பீரோவைக் கூட அவர்களை வைத்தே திறந்து கொள்ளை அடிக்கவேண்டியது ...
சில நாட்களுக்கு முன் ...
திருமணமாகி பதினைந்தே நாளான  பெண்ணின் தாலிக் கயிறைக்கூட விட்டு வைக்காமல்  பறித்துக் கொண்ட முகமூடி கொள்ளையர்கள்   ...
உறவினர்கள் எல்லோரும் கூட பார்த்திராத திருமண ஆல்பத்தைக் கேட்டிருக்கிறார்கள் ...
திருமணக் கோலத்தில் மணப்பெண்
அணிந்துள்ள நகைகளை ஒவ்வொன்றாய் காட்டி ...
ஹோட்டலில் ரிலாக்சாக நாம் சாப்பிடும் நேரத்தை விட அதிகமாக ...
முக்கால் மணி நேரம் ஒருவீட்டில் கொள்ளை அடித்துச் சென்றுள்ளார்கள் ...
இந்தக் கொள்ளைக் கூத்து நடந்திருப்பது மதுரை அருகே உள்ள 'கூத்த'ரசன் பட்டியில் !


28 comments:

 1. நாங்கலாம் நகைப் போட்டு போட்டோ எடுக்கும்போது எங்கப்பா கிண்டலா சொல்லுவார். அப்படியே படத்தை சுவத்துல மாட்டு. திருடன் வந்து அந்த நகை எங்க?! இந்த நகை எங்கன்னு கேட்கப்போறான்ன்ன்!! இப்ப, அது சரியாப் போச்சே!

  ReplyDelete
  Replies
  1. அடடே ,தீர்க்கதரிசியாக சொல்லி இருக்காரே !
   நன்றி

   Delete
 2. ஓ... கல்யாண ஆல்பத்தில் இப்படியும் ஓர் ஆபத்து இருக்கா?

  ReplyDelete
  Replies
  1. கழுத்துக்கு அழகு நகைங்கிறது போய்,அதுவே கத்தியாகிக் கொண்டிருக்கிறது !
   நன்றி

   Delete
 3. Replies
  1. நாம வேதனைபடலாம் ,வெட்கப் பட வேண்டியவர்கள் படுவார்களா ?
   நன்றி

   Delete
 4. ஹா ஹா... திருடர்களுக்கு தற்போது தைரியம் ஜாஸ்தியாயிருச்சுன்னு பெங்களூர் சம்பவத்துலயே தெரிஞ்சது....

  ReplyDelete
  Replies
  1. கரெக்ட் ,இப்படி சமூக விரோதிகளுக்கு தைரியம் வர என்ன காரணம் என்று நமது பொருளாதாரப் புலிகளின் சிந்தனைக்கே விட்டு விடுவோம் !
   நன்றி

   Delete
 5. Replies
  1. கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்கே நடப்பது இதைவிடக் கொடுமையா இருக்கே !
   நன்றி

   Delete
 6. எவ்வளாவு தூரம் முன்னேறிட்டாங்க... எங்க உறவினர் வீட்டில் அவர்கள் வெளியூர் சென்றிருந்த சமயம் வீட்டிற்குள் புகுந்து சமைத்து சாப்பிட்டு இரண்டு நாள் இருந்து பொறுமையாக திருடிச் சென்ற சம்பவம் நடந்தது...

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை போனாங்களே ,இது எங்க வீடுன்னு டென்ட் அடிக்காம !
   நன்றி

   Delete
 7. பெருங்கூத்தா இல்லை இருக்கு
  அதுதான் அரசாங்கம் வேடிக்கைப் பார்க்குதோ ?

  ReplyDelete
  Replies
  1. இனிமேலும் கட்டுப் படுத்தாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் தேர்தல் முடிவுகள் வேதனையை தரலாம் !
   நன்றி

   Delete
 8. கடும் புலி வாழும் காடே நன்று! இன்று!

  ReplyDelete
  Replies
  1. இங்கே என்கௌன்டரில் சுடும் புலிகளுக்கு இது புரிந்தால் நல்லது !
   நன்றி

   Delete
 9. எத்தனை நாள்தான் ஒரே மாதிரி திருடுவது என்று அந்த திருடர்கள் நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது. நாட்டில் எல்லோர் கையிலும் துப்பாக்கி இருந்தால், எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன். ஏனெனில் நம்நாட்டில் அயோக்கியர்கள் கையில்தான் ( சட்டப்படியும், சட்டத்திற்குப் புறம்பாகவும் ) ஆயுதம் இருக்கிறது.

  பேப்பரில் செய்தியைப் படித்ததுமே ஜோக்காளி நிச்சயம் இதைப் பற்றி எழுதுதுவார் என்று நினைத்தேன். அதேபோல் எழுதி விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல நோக்கத்திற்காக சிந்தித்து இருந்தால் நோபல் பரிசே வாங்கி இருப்பார்கள் .
   துப்பாக்கி இருந்தாலும் இடுப்புலேயே கட்டிக்கொண்டு தூங்க முடியுமா ?துப்பாக்கி இருப்பது தெரிந்தால் நம்மை பரலோகத்திற்கு அனுப்பி விட்டல்லவா கொள்ளையர்கள் கடமையை தொடங்குவார்கள் ?
   நடுரோட்டில் நிற்க வைத்து சுட்டால்தான் பயம் வருமென நினைக்கிறேன் !
   உங்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியதில் ஜோக்காளிக்கு மகிழ்ச்சியே !
   நன்றி

   Delete
 10. போனில் கமென்ட் போட்டதால் த.ம. வாக்களிக்க முடியவில்லை... இப்போ போட்டாச்சு... த.ம.6

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கடமை உணர்ச்சிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் !
   நன்றி

   Delete
 11. நல்ல தமாஷ்பா!
  இப்படி வரும் என்று தெரிந்து தான் என் மாமனார் என மனைவிக்கு ஒரு நகை கூட போடவில்லை! கல்யாணம், தாலி, நகை எல்லாம் என் செலவு!!

  ஏன் invitation கூட அடிக்கவில்லை! ஏன் போட்டோ கூட எடுக்கவில்லை! அவரும் அவர் மனைவியும் தங்க ரூம் போட்டதும் [என் உழைப்பில்] வந்த பணம்!

  உங்க ஜோக்கை படித்தபின் தான்...இப்பத்தான் புரியுது ஏன் என் மாமனார் ஏன் ஒரு photo கூட எடுக்கவில்லை என்று!

  நான் என் மனைவிக்கு போட்ட நகைகளை எவனாவது திருடிவிட்டால் என்ற நல்ல எண்ணமே காரணம்!

  என்ன இருந்தாளும் என் மாமனார் அறிவாளி!

  ReplyDelete
  Replies
  1. மேடம் ராஜி அவர்களின் தந்தையாரும் தீர்க்கதரிசியாக உங்கள் மாமனாரைப் போலவே கூறியுள்ளார் ...பூர்வ ஜென்ம தொடர்பு ஏதும் இருக்கும் போலிருக்கிறதே ,இருவருமே பதிவு எழுதுவதைப் பார்த்தால் !
   நன்றி

   Delete
 12. இந்த பிளஸ் + 1 வோட்டு என் மாமனாருக்கு-பா!

  ReplyDelete
  Replies
  1. ஒன்றுமே செய்யாத மாமனாருக்கு உங்களின் உதவி கண்டு மெய் சிலிர்த்துப் போனேன் !
   நன்றி

   Delete
 13. பலே திருடர்கள் போல! த.ம. 10

  ReplyDelete
  Replies
  1. குறி வைத்து அடிப்பதை இவர்களிடம் தான் கத்துக்கணும் !
   நன்றி

   Delete