4 December 2013

ஓஹோதானாம் இந்தியச் சரக்கு,சொல்வது பிரிட்டிஷ் பயணி !

நம்ம ஊர் குடிமகன்கள் சாலையில் மட்டையாகி விழுந்துக் கிடப்பது ஒன்றும் காணக் கிடைக்காத அரிய காட்சியல்ல ...

நேற்றைய தினம் ...அதிகாலை 2 மணி ...
வெள்ளைக்காரன் ஒருவன் மதுரை 
கட்ட பொம்மன் சிலை அருகே இப்படி விழுந்து கிடந்ததால் மனசு தாங்கவில்லை  நமது மக்களுக்கு ...
காவல் துறையிடம் தெரிவித்து உள்ளார்கள் ...
வந்த போலீசார் தட்டி எழுப்பி விசாரித்தால் ...
அந்த வெள்ளைக்கார போதையனிடம் இருந்து ஒரு தகவலும் பெற முடியவில்லை ...
விடிய விடிய லாட்ஜ்களில் விசாரித்து கண்டுபிடித்து ..
அவனை அறையில் கொண்டுபோய் சேர்த்துள்ளார்கள்...
போதை தெளிந்ததும் bad boys என்றே புலம்பினானாம் ...
காரணம் ,ரூபாய் ஆயிரத்து ஐநூறுடன் அவன் பர்சைக் காணவில்லையாம்...
நல்ல வேளை , ஆண் என்பதால் பர்ஸ்சோடு முடிந்தது ...
இதுவே பெண் சுற்றுலாப் பயணி என்றால் எப்படிப்பட்ட விபரீத விளைவுகள் ஏற்பட்டிருக்கும் ?
ஏற்கனவே நமது பெருமைமிகு பாரதத்தை பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு என்று வெளிநாடுகளில் முத்திரை குத்தியுள்ளார்கள் ...
உங்களுக்கு என்னாச்சு என்று மட்டையனிடம் கேட்டதற்கு சொன்னானாம் ...
என் நாட்டு பீர் என்றால் 1 1 டின் சாப்பிடுவேன் ,ஆனால்இங்கே  5டின்னிலேயே போதை ஏறி விட்டது ,இந்திய பீர் சூப்பரோ சூப்பர் என்று நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் ...
நமது குடிமகன்கள் மட்டுமே தெரிந்து இருந்த மதுவின் புகழ் இங்கிலாந்திலும் பரவி விட்டது ...
எல்லா நாட்டினரும் நம்ம சரக்கின் அருமையை உணர்ந்து சுற்றுலா வரப் போவது உறுதி ...
அந்நிய பண வரவால் நமது பொருளாதாரம் உச்சிக்கே போகப் போவதும் உறுதி ...
மதுக் கடைக்களை மூடச் சொல்லும் நமது கலாச்சாரக் காவலர்களை சில வருடங்கள் நாடு கடத்தி விடலாம் !20 comments:

 1. நற்சான்றிதழ் இதுவல்லவோ...!

  வெளங்கிடும் - நம் நாடு...!!!

  ReplyDelete
  Replies
  1. நம்ம சரக்கு இவ்வளவு தரமா இருக்கேன்னு சந்தோசப் படுவீங்களா ,அதை விட்டுட்டு,வெளங்கிடும்ன்னு சொல்றீங்களே !
   நன்றி

   Delete
 2. [[நல்ல வேளை , ஆண் என்பதால் பர்ஸ்சோடு முடிந்தது இதுவே பெண் சுற்றுலாப் பயணி என்றால் எப்படிப்பட்ட விபரீத விளைவுகள் ஏற்பட்டிருக்கும்!]]

  கொஞ்சம் விளக்கமாக எழுதவும்! பெண் சுற்றுலாப் பயணி என்றால் என்ன? பெண் பயணி என்றாலும் அங்கேயும் 'பர்ஸைத்...தான்!
  தமிழ்மணம் +1

  ReplyDelete
  Replies
  1. இந்த பர்சில் இருந்தது பணம் என்றால் ,அந்த பர்சில் இருப்பது நம் நாட்டு மானமாச்சே !
   நன்றி

   Delete
 3. தமிழ்நாடு என்ற பேரை மாத்திட்டு ”குடி நாடு” ன்னு மாத்தி தொலைங்க. பொருத்தமா இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. இந்த நிலை இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறதே ,'குடி 'அரசுன்னா சும்மாவா ?
   நன்றி

   Delete
 4. Replies
  1. அந்த இங்கிலாந்து குடிகாரனின் வயது 2 3 தானாம் ,இப்ப என்ன சொல்வீங்க ?
   நன்றி

   Delete
 5. கொடுமை நண்பரே கொடுமை
  த.ம.6

  ReplyDelete
  Replies
  1. அப்படின்னு எங்கே போய் முட்டிக்கிறது ?
   நன்றி

   Delete
 6. அந்தப் போதைக் கணக்கும்
  ரூபாய் கணக்கும் சரியாகத்தானே இருக்கிறது
  பரவட்டும் நம் மதுவின் புகழ்

  ReplyDelete
  Replies
  1. நீங்க ஆடிட்டர்போல இருக்கே ,உங்க கணக்கைப் பார்த்து ஆடிப் போயிட்டேன் !
   நன்றி

   Delete
 7. Replies
  1. இந்தக் கணக்கை நேர் செய்து விடுகிறேன் !
   நன்றி

   Delete
 8. வணக்கம்

  அப்படியா சங்கதி...இனி நாடு நல்லா வளர்ச்சியடைந்த மாதிரித்தான்.. தரம் குறைந்த சாராயம் இனி சந்தைக்கு வருவது உறுதி....வாழ்த்துக்கள்


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நமக்கு எதுக்கு ரூபன் அந்த வருத்தம் எல்லாம் ?
   நன்றி

   Delete
 9. ஹிஹி.. அந்த வெள்ளைக்காரனுக்குத் தெரியலை, நம் நாட்டு சரக்கின் போதை பற்றி....

  ReplyDelete
  Replies
  1. நீங்கதான் கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்களேன் ,நானும் தெரிஞ்சுக்கிறேன் !
   நன்றி

   Delete
 10. Replies
  1. நம்ம புகழ் இப்படியாவது பரவுகிறதே என்று பெருமைப்பட வேண்டியது தான் !
   நன்றி

   Delete