5 December 2013

பொண்ணு பார்க்கையில் இதையெல்லாம் விசாரிக்க முடியுமா ?

கல்யாணமான  சில நாட்களிலேயே ...
இளம் மனைவியை இங்கே விட்டு விட்டு பொருளாதார நிர்பந்தம் காரணமாக வெளிநாட்டு வேலைக்கு செல்வோரின் மனக் கஷ்டத்தை வெறும் வார்த்தையில் வடித்து விட முடியாது ...
அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும் ...

அப்படிப்பட்ட நிலையில் மலேசியாவில் வேலைப் பார்க்கும் பையனுக்கு வீட்டிலிருந்து ...
உடனே கிளம்பி வரவும் என்று தகவல் வந்துள்ளது ...
கல்யாணமாகி முன்றே மாதங்கள்தான் ஆகியுள்ள நிலையில் பதறி அடித்துக் கொண்டு வந்து...
காவல் நிலையத்தில் இளம் மனைவியின் மீது புகார் கொடுத்துள்ளார் ...
ஒரு சின்ன பிளாஷ்பேக் ...
அந்தப் பெண்ணிற்கு வாந்தி ,மயக்கம் வந்ததென்று மருத்துவமனைக்கு சென்று காட்டியுள்ளார்கள் ...
செக் அப் செய்து டாக்டர் சொன்ன தகவலால் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள் ...
அந்த புதுப்பொண்ணு (?) ஒன்பது மாதக் கர்ப்பமாம் !
திருமணமாகி பல வருடங்கள் ஆனபின்பும் பிள்ளைப் பெற முடிய வில்லையே என்று பல தம்பதிகள் வருந்திக் கொண்டிருக்கும் ...
நம் தங்கத்  தமிழ் நாட்டில்தான் ...
கல்யாணமான மூன்று மாதத்திலேயே பிள்ளைப் பிறக்கும் அதிசயமும் அரங்கேறியுள்ளது !
தாலி கட்டும் போதே ஆறுமாத சிசுவிற்கும் சேர்த்தே தாலி கட்டிய கொடுமை நடந்துள்ளது !30 comments:

 1. //அந்தப் பெண் ஒன்பது மாதக் கர்ப்பமாம் !// அடக்கொடுமையே ..

  ReplyDelete
  Replies
  1. இனிமேல் பொண்ணு பார்க்கும் போதே 'பொண்ணுக்கு எத்தனை மாசம் ?அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே'ன்னுக் கூட விசாரிக்க வேண்டும் போலிருக்கே !
   நன்றி

   Delete
 2. Replies
  1. கொடுமை தாங்க முடியாமல்தான் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்கள் !
   நன்றி

   Delete
 3. வணக்கம்
  கொடுமையிலும் கொடுமை... மிகக்கொடுமை...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்றதைப் பார்த்தா ரெட்டைப் பிள்ளை பிறக்கும் போலிருக்கே !
   நன்றி

   Delete
 4. ஏன் ஜீ உங்களுக்கு இப்படி ஒரு கொலவெறி!
  நாங்கெல்லாம் வெளிநாட்லே இருக்கறது உங்களுக்கு பொருக்கவில்லையா?

  ReplyDelete
  Replies
  1. நான் மூளிகளை சொன்னால் நீங்க எதுக்கு மூக்கைத் தொட்டு பார்த்துகிறீங்க ?
   நன்றி

   Delete
 5. [[அந்தப் பெண்ணிற்கு வாந்தி ,மயக்கம் வந்ததென்று மருத்துவமனைக்கு சென்று காட்டியுள்ளார்கள்]]

  வாந்தி மயக்கம் ஒன்பதாவது மாதத்தில் வருவது அரிது! Hypertensives Gravidarum-என்று ஒரு வியாதி இருந்தால் தான் வரும். அதுவும், மிக குறைவான் பெண்களுக்கு வரும். அப்படி இன்த வியாதி இருந்தால் கல்யாண சமயத்திலும் வாந்தி இருந்திருக்கும்.

  அவசரப்பட்டு வயிறு அளவை வைத்து முடிவு செய்யக் கூடாது. பல காரணங்களினால் வயிறு பெரிதாகும். Ultra sound--செய்யனும்; மற்றும் கட்டயாம் மற்றொரு டாக்டரிடம் second opinion வாங்கணும்.

  அமெரிக்காவில் கர்ப்பம் ஆனவுடன் பலர் திருமணம் செய்வது சகஜம்., தமிழ் நாட்டில் இது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

  கட்டயாம் மற்றொரு டாக்டரிடம் second opinion வாங்கணும்.

  ReplyDelete
  Replies
  1. காவல் நிலையத்திற்கு செல்லுமுன் நீங்கள் சொல்லிய படி அவர்கள் செய்து இருக்கலாம் அல்லது இனிமேல் செய்யக்கூடும் !
   நன்றி

   Delete
 6. ஆறு மாத சிசு வயற்றில் இருக்கும் பொது கூடினால் அனால் கண்டு பிடிக்கமுடியும். இருட்டில் நடந்தால் [கூடினால்] கூட.

  வெளிச்சத்தில் என்றால் விசேஷம். Bresat Changes--வைத்து எளிதாக கண்டு பிடித்துவிடலாம்; படிப்பு அறிவு தேவை இல்லை!

  ReplyDelete
  Replies
  1. அடுத்தவர் கண்டுபிடிப்பது இருக்கட்டும்,தான் தாயான விஷயம் அந்தப் பெண்ணிற்கு தெரியாமலா இருக்கும் ?இந்த நிலையில் சம்பந்தம் இல்லாதவனுக்கு தலையை நீட்டுவது என்ன நியாயம் ?
   நன்றி

   Delete
 7. இது கூடவா அந்தப் பெண்ணிற்குத் தெரியாமல் போனது? எப்படி அந்தப் பெண்ணிற்கு தெரியாமல் போனது தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்று? ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு லேட் மாதங்களில் (கர்பமாக இருந்திருந்தால்) வாந்தி இருக்க வாய்ப்பில்லை. கல்யாணம் ஆகும்போது 6 மாத கர்பமாக இருந்திருந்தால் வயிறு காட்டிக் கொடுத்திருக்குமே at least சந்தேகமாவது வந்திருக்குமே!! வேறு ஏதாவது பிரச்சினை இருக்கலாம் என்று தோன்றுகிறது! என்னவோ போங்க!! த. ம. 1 போட்டக்சு!!

  ReplyDelete
  Replies
  1. இன்னும் சிறிது நாட்களில் காவல் துறை விசாரணையில் எல்லாம் தெரிய வரும் ,அதற்குள் பிள்ளையும் பிறந்திடும் ,போய்ப் பார்த்து ஆசீர்வாதமும் செய்யலாம் !
   நன்றி

   Delete
 8. பிள்ளையின் வயிய்ற்றில் பிள்ளை இருக்காது என்று எனக்கு தோன்றுகிறது! பல காரணங்ளினால் அதை எழுதினால் அதுவே ஒரு பதிவு ஆக்கும்!
  பெண் பாவம்; அவசரப்பட்டு தீர்மாணிக்கவேண்டாம்! வெளியில் போன பெண்ணென்றால் எப்பவோ வெளியில் எடுத்து இருப்பார்கள். 9 மாதம் டூ மச்!

  ReplyDelete
  Replies
  1. இன்னும் சில நாட்களில் குட்டு வெளிப்பட்டுவிடும் ,காத்திருப்போமே !
   நன்றி

   Delete
 9. கொடுமையிலும் கொடுமை...

  ReplyDelete
  Replies
  1. அந்தப் பையனை நினைத்தால் எனக்கும் இப்படித்தான் படுகிறது !
   நன்றி

   Delete
 10. அடக்கடவுளே.... என்ன கொடுமையடா சாமீ...

  ReplyDelete
  Replies
  1. நவீன சரஸ்வதி சபதம் என்றொரு படம் வந்துள்ளதே ,இந்தக் கொடுமையும் அதில் சேர்த்தியோ ?
   நன்றி

   Delete
 11. எப்போது கல்யாணம் நிச்சயம் செய்தார்கள் என்பதைச் சொல்லவில்லையே?

  ReplyDelete
  Replies
  1. அதற்கு எனக்கு அழைப்பு வரவில்லையே !
   நன்றி

   Delete
 12. கவியாழி கேட்பதும் சரியானதே!

  ReplyDelete
  Replies
  1. உண்டாகி இருப்பதை மறைத்து செய்ததுதானே இப்போ விபரீதம் ஆகியுள்ளது ?
   நன்றி

   Delete
 13. பல விஷயங்கள் புதிரானது பகவான் ஜி!....

  முழு உண்மை தெரியாதவரை யாரையும் குறை சொல்வதிற்கில்லை!

  த.ம. 7

  ReplyDelete
 14. பகவான்ஜி!
  நான் அந்த பெண்ண அப்பாவி என்று முழுவதும் நம்புகிறேன்! இது யூகம். என்று இருந்தாலும்...நீங்கள் எழுதிய ஒன்பது மாச கர்ப்பிணி பெண் பற்றி வந்த செய்தியைப் பற்றி....

  ஆறு மாதம் வயிற்றில் குழந்தையுடன் கல்யானம்? அந்த அளவிற்கு அவன் கணவன் மூடனா? பல கேள்விகள். என்னிடம் உள்ளது! நிற்க.

  அந்த செய்தி வந்த பத்திரிக்கையின் சுட்டி கொடுத்தால் நன்று! ஒரு மருத்துவராக இதை நான் கேட்கிறேன்; இதனால் பல உண்மைகள் வெளி வரும். நமது குலத்திற்கு நல்லது!

  இந்த செய்தியை நான் follow செய்ய ஒரு [ மருத்துவராக] விரும்புகிறேன்.

  அந்த செய்தி வந்த சுட்டியை தர முடியுமா?
  I would sincerely appreciate, if you can provide the link to this news.
  Thanks!

  ReplyDelete
  Replies
  1. ஒன்பது மாத கர்ப்ப செய்தி வந்தது கடந்த 4ம்தேதி தினத்தந்தி நாளிதழில் ...
   நானும் அந்த மேட்டரை தொடர்ந்து பாலோ செய்து தகவல் தருகிறேன் !
   நன்றி

   Delete
  2. சொல்ல மறந்த தகவல் ...மேற்படி செய்தி ,தினத்தந்தி ,மதுரைப் பதிப்பில் பக்கம் எண்13ல் பிரசுரமாகி உள்ளது !

   Delete