30 December 2013

ஆணா ,பெண்ணா என்று ஸ்கேனில் நாமே தெரிஞ்சுக்கலாமே !

கருவில் வளர்வது ஆணா ,பெண்ணா என்று அறிந்து கொள்வதில் பெற்றோர்கள் மட்டுமல்ல ,மற்றோர்களும் அறிந்து கொள்ள விரும்புவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை ...
ஆனால் ,இப்படி பாலினத்தை வெளியே சொல்வது குற்றமென்று ஸ்கேன் சென்டர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது ...
கர்ப்பிணிப் பெண் முகம் பளபளப்பாக ஆனாலும் ...
இனிப்பை சாப்பிட ஆர்வம் அதிகமானாலும் ...
வாந்தி,மயக்கம் இல்லாமல் போனாலும் ...
சிசுவின் இதயத் துடிப்பு 140ஆக இருந்தால் ...
பெண் குழந்தை பிறக்குமென்றும் ...
வலது கையை ஊன்றி எழுந்தாலும் ...
வலது புற நாசி வழியாக சுவாசம் இருந்தாலும் ...
ஆண் குழந்தை பிறக்குமென்றும் நம்பப் படுகிறது ...
நமக்கு மிகவும் அறிமுகமான ...
அமெரிக்காவில் சேவை செய்துவரும் டாக்டர் நம்பள்கி தனது அனுபவத்தின் மூலம் ...
கருவில் வளர்வது ஆணா ,பெண்ணா என்பதை அறிய தரும் விளக்கத்தையும் படிங்க...
Number one: 
Absence of scrotal shadows; ஆண் இல்லை என்று ஓரளவு உறுதி படுத்திக்கொள்ளலாம்.
Number 2:
குழந்தை நேராக இருக்கும் போது, படம் எடுத்து...மூன்று கோடுகள் இருந்தால் பெருமாள் பக்தர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் பெண் குழந்தை என்று! குழந்தை பக்கவாட்டில் படுத்து இருந்தால் மூன்று கோடுகளை சைவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் பெண் குழந்தை என்று!

அப்படியும் கண்டு பிடிக்கத் தெரியாத பெற்றோர்களுக்கு....
நல்ல நேரம் பார்த்து வந்து ரிப்போர்ட் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்குள்ளவர்கள் சொல்வார்கள்.அதன் அர்த்தம் அது ஆண் குழந்தை!

ரிப்போர்ட் நாளைக்கு வந்து வாங்க்கிக் கொள்ளுங்கள் என்று மொட்டையாக (நல்ல நேரம் என்ற சொல்லை சொல்லமால்) சொன்னால் பெண்குழந்தை.

நல்ல நேரம் பார்த்து ரிப்போர்ட் வாங்கியாதல் ஆண் குழந்தை நமக்கு பிறக்கும் என்று நினைக்கும் முட்டாள்களே நம் மூடநம்பிக்கியின் ஆணி வேர்!

"நல்ல நேரம்" என்பது உலகறிந்த secret word---open secret! -- ஆண் குழந்தை!

18 comments:

 1. Replies
  1. பாப்பா படம் அருமைன்னு சொல்லலாமே !
   நன்றி

   Delete
 2. பாப்பாவே அதிர்ச்சியோடு கோபப்படுவது போல் இருக்கிறது...!

  ReplyDelete
  Replies
  1. பெண் பிள்ளை என்று ஸ்கேனில் தெரிந்தால் ,இந்த சமூகம் கருவறையிலேயே சமாதி கட்டி விடுகிறதே அதிர்ச்சியும் ,கோபமும் அடைந்து இருக்கும் !
   நன்றி

   Delete
 3. ஆணோ இல்லை பெண்ணோ , குழந்தை ஆரோக்கியத்தோடு பிறக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளவன் நான். எனக்கு பிறந்த முதல் குழந்தை பெண்ணாக இருந்த போதிலும், அவளுக்கு ஆண்பிள்ளைக்கு நிகரான சுதந்திரமும் கல்வி கேள்வி மற்றும் உடல் சார்ந்த பயிற்சிகளையும் கொடுத்து வளர்ப்பவன். ஆணோ பெண்ணோ அனைவரும் சரி நிகர் சமானம் என்ற கருத்து சமுதாயத்தில் அனைவரின் எண்ணங்களிலும் ஆழமாக ஊறவேண்டும் என்பதே என் கருத்து

  ReplyDelete
  Replies
  1. கரிகாலன் ஆகிய உங்களின் கருத்து ,அந்தக் கால கரிகாலன் கட்டிய கல்லணைப் போல் அனைவரின் மனதிலும் உறுதியாக பதிய வேண்டுமென்பதே என் கருத்தும் !
   நன்றி

   Delete
 4. வணக்கம்
  ஜீ.....

  சிறப்பான விளக்கம்.... அறிந்து வைத்தால் நல்லது... பின்னுக்கு உதவியாக இருக்கும....

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. முன்னேற்பாடு செய்தாகிவிட்டது ,அடுத்த கட்டம் எப்போ ?
   நன்றி

   Delete
 5. வணக்கம்

  த.ம 3வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. Replies
  1. மீண்டும் என் தளத்திற்கு வந்து வாக்கு அளித்தமைக்கு நன்றி

   Delete
 7. ம்ம்ம்ம்ம்.... குழந்தை ஆணோ பெண்ணோ, ஆரோக்கியமாக இருப்பது மட்டுமே முக்கியம். இது புரியாதவரை பிரச்சனை தான்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்கேன் கண்டுபிடிக்கப் பட்டதே சிசு ஆரோக்கியமா வளர்கிறதா என்பதைக் கண்காணிக்கத்தான்,ஆனால் சிலரின் நோக்கம் வேறு விதமாக மாறிவிட்டது !
   நன்றி

   Delete
 8. இந்தப் பிரச்சனை இங்கில்லை(சிங்கையில்) பாஸ்... ஆறாவது மாதத்திலேயே ஆண்குழந்தை என உறுதி செய்து ரிபோர்ட் கொடுத்துவிட்டார்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆனால் இங்கே பெண் சிசுக்கள் கொல்லப்படுவதால்,எதிர்காலத்தில் இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணை மணக்கவேண்டி வரும் போலிருக்கே !
   நன்றி

   Delete
 9. [[நல்ல நேரம்" என்பது உலகறிந்த secret word---open secret! -- ஆண் குழந்தை!}
  மன்னிக்க வேண்டும் "உலகறிந்த" என்று அவசரத்தில் தவாறாக உபயோகப்படுத்தினேன்; நான் சொல்லவந்தது "தமிழ்நாடு"
  தவறுக்கு என்னை மறுபடியும் மன்னிக்கவேண்டும்!

  "இது, நல்ல நேரம்" என்பது தமிழ்நாடு முழுவதும் அறிந்த secret word---open secret! -- ஆண் குழந்தை!" என்று தான் இருக்க வேண்டும். அப்படித்தான் படிக்கவேண்டும்.

  அமெரிக்காவில் ஆணும் பெண்ணும் ஒன்று தான்! இங்கு பெற்றோர்கள் விரும்பும் குழந்தை பெண்; அதற்காக ஆண் குழந்தை என்றால் கருவில் அழிக்க மாட்டர்கள். அது அவ்வளவு எளிதல்ல!

  மறுபடியும் இந்திய பெற்றோர்களுக்கு....

  ஒரு பையன் பிறந்தால், உறியில் சோறு!
  நாலு பையன்கள் பிறந்தால் நடுத்தெருவில் சோறு!

  இதன் அர்த்தம் மற்றும் பொழிப்புரை:
  ஒரு மகனைப் பெற்றால் அவன் மனைவி, "அத்தை, உங்களுக்கு உறியில் சோறு இருக்கு! எடுத்து போட்டு சாப்பிடுங்கள்" என்று சொல்வார்கள்

  நாலு மகன்களை பெற்றால் நாலு மருமகள்களும் சண்டை போட்டுக்கொண்டு போட்டி போட்டுக்கொண்டு சுத்தமா சோறு போடமாட்டர்கள்; அப்படி சோறு போட்டாலும் நாலு பேரும் மாமியாரை வீட்டில் சேர்க்காமல் நடுத்தெருவில் வைத்தது தான் போடுவார்கள்!

  அனுபவித்து பழமொழி எழுதின நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா?
  சொல்லுங்கள்...!
  இங்கு இந்த பாகுபாடு இல்லை!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் உலகம் என்று சொன்னாலும் தவறில்லை ,எங்கேயும் இல்லாத பெண் சிசுக் கொலையைப் பற்றி நாம் பேசுவதால் நம் தமிழ் நாட்டைத்தான் அது குறிக்கும் !
   உண்மையான பழமொழியை சொன்ன முன்னோர்கள் அறிவாளிகள்தான் ...
   அதை உணராதவர்கள் முட்டாள்கள்தான் !
   நன்றி

   Delete