28 February 2013

தின 'சிரி ' ஜோக்!சொல்லாமல் செய்வது லஞ்ச வேட்டை !


''சுயநலம் எனக்கும் கிடையாது ,என் தொண்டர்களுக்கும் கிடையாதுன்னு சொல்றீங்களே ,எப்படி ?''
''கொசு   கடிக்கக் கூடாதுங்கிற பொது நலன் கருதி,நாங்க தினமும் கொசு பேட் வேட்டையை தொடங்கி இருக்கிறோம் !''


'சிரி'கவிதை! பெற்றோர் செய்ததும் ,குழந்தைகள் செய்ததும் !


பெற்றோர்கள் குழந்தைகளை 
'கிரச்'சில் சேர்த்தார்கள் ...
குழந்தைகள்  பெற்றோர்களை 
முதியோர் இல்லங்களில்  சேர்க்கிறார்கள் !

27 February 2013

தின 'சிரி ' ஜோக்!உப்பு தின்னா சூடு சொரணை வரணுமா ?


''நான் கட்சி  தாவுனதுக்காக .நிருபர்கள் என் தூத்துக்குடி மாவட்டத்தையே அசிங்கமாப் பேசுறாங்க !''
''ஏன் தலைவரே ?''
''உப்பு விளையுற ஊர்லே பிறந்துட்டு ,உப்பு போட்டு  சாப்பிடுற மாதிரி தெரியலேன்னு கேவலப் படுத்துறாங்க !''

'சிரி'கவிதை!ஜாதகம் சாதகமா ,பாதகமா ?

ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்க்களோ இல்லையோ ...
பெண் வீட்டாரிடம் இருந்து என்ன தேறும் என்பதைப் பார்த்து 
நாகரீகமாய் சொல்லி விடுகிறார்கள் ...
ஜாதகம் சேரவில்லை என்று !26 February 2013

'சிரி'கவிதை!தமிழில் தொடர்கிறது மனைவியின் அர்ச்சனை !

'டியூப் லைட் 'என்றவளின் வாயை அடைக்க 
செலவு பாராமல் 'எலெக்ரானிக்  சோக் 'வாங்கி மாட்டினான் ...
சட்டென்று எரிந்தது டியூப் லைட்..
பட்டென்று கேட்டாள் ..
வாழை மட்டைக்கு எப்படி வந்தது இந்த ஐடியா ?

தின 'சிரி ' ஜோக்! சொல்வது எளிது ,செய்வது அரிது !

''சிங்கத்தை வலையில் அடைப்போம் ,கொசுவுக்கு பயந்து வலையில் படுப்போம்ன்னு எழுதியவனை தேடிக்கிட்டு  இருக்கியா ,ஏன் ?
''நான் வேணா கொசுவலை இல்லாம படுக்கிறேன் ,நீ சிங்கத்தைப் பிடித்துக் காமின்னு சொல்லத்தான் !''


25 February 2013

தின 'சிரி ' ஜோக்! வாலிப வயதை அறிந்த தந்தை !

''என்னங்க .நம்ம பையன் படிக்காம , பத்மாவையே சுத்தி சுத்தி வந்துக் கிட்டு இருக்கான் ,எப்படியாவது அவனை வெளிநாட்டுக்கு அனுப்பப் பாருங்க !''
''செக்கு மாடு எப்படி செக்கொஸ்லேவியா போகும் ?''
''.........?'''சிரி'கவிதை!வெள்ளையர்[ஹேர் ]க்கும் உண்டா ஹேர் டை ?

நடுத்தர வயதினரின் தலைகள் எல்லாம் 'கரு கரு 'வென்று ...
நன்றாய் தெரிகிறது ...
நாட்டிலே ஒரு வியாபாரம் நன்றாய் ஓடுகிறது !


24 February 2013

'சிரி'கவிதை!நாம் அனைவருமே கொடுத்து வைத்தவர்கள் !

பாண்டுரங்க சுவாமிக்கு கோயில் கட்டும்
பேறு பெற்றவர் நடிகை பண்டரி பாய் ...
நாம் பெற்ற பேறு ...
நடிகைகளுக்கு கோயில் கட்டும் காலத்தில் வாழ்வது !


தின 'சிரி ' ஜோக்! அரைகுறை அகராதியால் என்ன பயன் ?

''என் அகராதியிலே 'மன்னிப்பு 'ங்கிற  வார்த்தையே கிடையாது !''
''பிறகெதுக்கு அந்த அகராதியை வச்சுக்கிட்டு இருக்கீங்க ?''23 February 2013

my page in facebook and Google+

என்னுடைய ப்ளோக்கின் facebook மற்றும் Google+ பேஜ் விரும்புவோர் சேர்ந்துகொள்ளலாம்.இதில் தினமும் உங்களுக்கு அப்டேட் வரும்.

தங்கள்வரவுக்கு  காத்துக்கொண்டுஇருக்கிறேன்  !!! 

தின 'சிரி ' ஜோக்!'நளன் 'னா எல்லா மனைவிகளுக்கும் பிடிக்கும் !

''ரொம்ப கொடுத்து வைத்த பெண்' தமயந்தி 'தான்னு சொல்றியே ,
ஏன் ?''
''ஒரிஜினல் நளபாக சாப்பாடு தமயந்திக்கு மட்டும்தானே கிடைத்தது ?'''சிரி'கவிதை!காதலியின் ஐ பாடும் ,காதலனின் ஐயப்பாடும் !


காதலியின் கையில் புத்தம் புது ஐ பாட் ...
செல்போன் மட்டுமே வாங்கித் தந்திருந்த 
காதலனுக்கு வலுத்தது ..சந்தேகம் !

22 February 2013

'சிரி'கவிதை!மொக்கைய தாங்க முடியலேயே !

எவ்வளவு  ஏறினாலும் 
தாங்க முடியா விலை இல்லை ...
தங்க விலை ![இப்போதுதான் 5.20PM கவனித்தேன் ,இன்றைய சிரி 'கவிதை 'விடுதல் ஆகி இருப்பதை !மண்டை வெடித்து விடும் போல் இருப்பதால் ,நீங்களும் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மொக்கையை போட்டுவிட்டேன் ,இனிமே உங்க பாடு !]

தின 'சிரி ' ஜோக்!அழையா விருந்தாளின்னா அவமதிப்புதான் !

''பந்தியிலே சாப்பிட உட்கார்ந்தவரை எழுப்பி ,அடிச்சு விரட்டுறாங்களே ,ஏன் ?''
''வெறும் கையோட வந்து சாப்பிடுறதும் இல்லாம ,புது செருப்பு காலோட போறதே அவர் வழக்கமாம் !''
தின 'சிரி ' ஜோக்!மணப்பெண் இவள்னா .திருமணமே வேண்டாம் !

''என்னது ,கன்னிப்பேய் வந்திருக்கியா ,?''
''நீங்கதானே உங்க பையனுக்கு 'அடக்கமான பெண் 'வேணும்னு சொல்லி இருந்தீங்க !''இன்னைக்கி ரெண்டும் கல்யாண மொக்கையா இருக்கிறதுக்கு  காரணம் ,காலெண்டரில்  இன்று 'முகூர்த்த நாள் 'போட்டு இருந்ததுதான் !

21 February 2013

தின 'சிரி ' ஜோக்!ஊருக்கே தெரிந்த 'இரகசியம் '!

''எந்த டெஸ்ட்டும் பண்ணாமலே எனக்கு முதுகு வலி வர வாய்ப்பே இல்லைன்னு உறுதியாச் சொல்றிங்களே ,எப்படி டாக்டர் ?''
''ஆட்சிக்கு வர்ற எந்த  ஆளும்  கட்சிக்கும்  நீங்க தாவுதாலே 'முதுகெலும்பு இல்லாதவர்'ன்னு தெரிந்தது தானே?
'சிரி'கவிதை!அழகு முகம் ,அடையாளம் தெரியுமா ?


முக நூலில் பார்த்த முகத்தைகூட 
நேரில் பார்த்தால்  அடையாளம் தெரியவில்லை ...
கடவுளே வந்தாலும் நம்மால் கண்டுக் கொள்ள முடியுமா ?

20 February 2013

'சிரி'கவிதை!படிப்பு தானாய் வந்தால்தான் உண்டு !

படிப்பில் கோட்டை விடும் மகனிடம் ...
அந்தக் காலத்தில் தெருவிளக்கில் படித்தேன் ...
என சொல்ல  வந்த   தந்தை    வாயை மூடிக்கொண்டார்  ...
கரெண்ட் கட் !


தின 'சிரி ' ஜோக்!'கை கழுவுபவர்கள் 'நடிகைகள் மட்டும்தானா ?''ஹேண்ட் வாஷ் லிக்விட்  விளம்பரத்திற்கு அந்த நடிகைதான் பொருத்தம்னு ஏன் சொல்றே ?''
''கல்யாணம் கட்டிகிட்ட ஏழு பேரையும் 'கைகழுவின 'அனுபவம் அவங்களுக்கு இருக்கே !''19 February 2013

'சிரி'கவிதை, !மனோதிடம் இருக்க ஜோதிடம் எதுக்கு ?

கையிலே உள்ள ரேகை உலகத்திலேயே ஒரே  ஒரு விதம்தான் !
ஒரே ஒரு யானையை தடவிய குருடர்கள் போல் ...
 ஜோதிடர்கள் கூறுவதோ நாலு  விதம்! 
ஒரு நேரத்தில் எல்லோருக்கும்  ஒரே  நேரம் காட்டும்
கடிகாரம்  காட்டுவதே நல்ல நேரம் !

தின 'சிரி ' ஜோக்!வரப் போவது ,ராம ராஜ்யமா ,ரோம ராஜ்யமா?''

''வருகிற பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு வரப் போறது ,ராம  ராஜ்யமா ,ரோம ராஜ்யமா?''
''BJP ம் இல்லாம காங்கிரசும் இல்லாம 'காமா சோமா 'ராஜ்யம் கூட வரலாம் !''
''என்ன சொல்றே ?'' 
''மூன்றாவது அணிக்கும் வாய்ப்பு இருக்கே !


18 February 2013

'சிரி'கவிதை!உண்ண கொடுக்கும் தாய்க்கேதுரோகமா ?

பூமித் தாய் படைத்த உணவினை  உண்டபின் ...
மனிதன் வீசியெறிந்த பிளாஸ்டிக் பைகளை 
'ஜீரணிக்க 'முடியவில்லை  ...பூமித்தாயால் !

தின 'சிரி ' ஜோக்!நம்ம பணம் அவங்க பையில் என்பது உண்மை!

'''உங்க பணம் உங்க கையில்' திட்டம் வரப் போகுதாம் ,அதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க ?''
'' இப்போ நமக்கு சேர வேண்டிய  பணம் அவங்க பையில் சேர்ந்துக் கிட்டு இருக்கிறதை ஒத்துக்கிறாங்கன்னுதானே  அர்த்தம் ?''


17 February 2013

'சிரி'கவிதை!தேவை ..சாப்ட்வேர் இஞ்சினீயர் மூளைகள்


மட்டன்  ஸ்டாலில் ...
ஆட்டு மூளைக்கு கிராக்கி ,ருசியாக இருப்பதால் !
அமெரிக்காவில் ...
இந்திய 'மூளைக்கு 'நல்ல கிராக்கி ,மலிவாக இருப்பதால் !

தின 'சிரி ' ஜோக்! ரொம்ப முக்கியம் நடிகையோட வயசு ?

''தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாப் பயன் படுத்தக் கூடாதுன்னு சொல்றிங்களே ,ஏன் லாயர் ?''
''உங்க கனவுக் கன்னி நடிகையோட வயசைத் தெரிஞ்சுக்க முடியுமான்னு கேக்கிறிங்களே !''
16 February 2013

'சிரி'கவிதை!அழகைப் பார்த்தால்நிறைய 'அழ'வேண்டிஇருக்கும் !

5ஸ்டார்  ஹோட்டலாய்  அழகாய்  உயர்ந்து நிற்கும் 
தனியார் மருத்துவமனைகளைப்  பார்க்கையில் ...
அட்மிட் ஆகி செத்தால்கூட பரவாயில்லை போலிருக்கிறது !
பில்லை நினைத்தால் சேராமல் போய் சேர்ந்துவிடுவதே 'நலமாய் 'படுகிறது !

 

தின 'சிரி ' ஜோக்!மனைவி தூக்கம் கெடுக்கும் கணவர் !

''அந்த முதியோர் இல்லத்துக்கு தேவையான தூக்க மருந்தை மட்டும் ,உங்க வீட்டுக்காரர் நன்கொடையா கொடுக்க காரணம் அவரோட குற்ற உணர்வா ,ஏன் ?''
''குறட்டை விட்டு தினசரி என் தூக்கத்தைக் கெடுத்துகிட்டு இருக்காரே !''
15 February 2013

தின 'சிரி ' ஜோக்!மனைவியின் சமையலை மட்டம் தட்டலாமா ?

'' TV ல்   'செய்துப் பார்ப்போம் 'நிகழ்ச்சியில் காட்டின மாதிரி 'இந்த 'கேப்பை பாத் 'தை செஞ்சுருக்கேன் ,எப்படிங்க இருக்கு ?''
''இனிமேலே 'செய்து சாப்பிடுவோம் 'ன்னு நிகழ்ச்சி வந்தா  பார்த்துட்டு செய் !'',


'சிரி'கவிதை!அக்மார்க் அரசியல்வாதி !


நியாயவிலைக் கடைகளை மூட வேண்டும்   என்றதும் ...
ஏழைகளின் வில்லனென செருப்பை வீசிய கூட்டம் ..
நியாய எடைக் கடைகளை திறக்க வேண்டும் என்றதும் 
ஏழைகளின் தெய்வமென பூமாலைகளை சாற்றியது !


14 February 2013

தின 'சிரி ' ஜோக்!TIMEPASS காதலுக்கு தாலி எதுக்கு ?

''காதலர் தினம் அதுவுமா இன்னைக்கு பீச்சிலே காதலர்கள் யாரையும் காணாமே ,ஏன் ?''
''வர்றவங்களுக்கு கட்டாயக் கல்யாணம் செய்து  வைப்போம்ன்னு ஒரு அமைப்பு அறிக்கை வெளியிட்டு இருக்காங்களே !''


சிரி'கவிதை!காதலர்கள் ஜாக்கிரதை ..சரியா பத்து மாசம் !


பிப்ரவரி 14...
காதலர் தினத்தை அளவுக்கு மீறிக் கொண்டாடினால் 
நவம்பர் 14...
குழந்தைகள்  தினத்தையும் கொண்டாட வேண்டி வரும் !

13 February 2013

தின 'சிரி ' ஜோக்!கடலை போட 100சதம் உரிமையுள்ளவர் !

''நிதி முறைகேடு செய்த கடலைவியாபாரிக்கு  நடிகைகளுடன் தொடர்பாமே ?''
''எவன் எவனோ கடலை போடும்போது ,கடலை வியாபாரி 'கடலை 'போட்டது  அதிசயமா ?'''சிரி'கவிதை!இப்படியும் ஒரு பேரழகா ?


பல்லாயிரம் முகங்களைப் பார்த்த 
புராதனக் கண்ணாடி ...
உன் முகம் பார்த்ததும் 
சுக்கு நூறாய்  சிதறியது ...
பிறவிப் ப[ய ]லன்  கிடைத்ததென்று !

12 February 2013

தின 'சிரி ' ஜோக் மனைவி என்றதும் ஞாபகம் வருவது

''என்னங்க ,நீங்கதான் மந்திரியாச்சே ,ஏதாவது ஒரு திட்டத்திற்கு என் பேரை வைங்களேன் !''
''அடுத்து புயல் வரும்போது ஞாபகப் படுத்து !''
''...........?''

                                                                         

'சிரி'கவிதை!பாடல் அருமை !படத்தின் பேர் கொடுமை !


எந்தப் புற்றில் எந்தப் பாம்போ என்பது 
ஆயிரத்தில் ஒரு வார்த்தை !
'ரோஜா ஒன்று முத்தம் கேக்கும் நேரம் 'பாடல் இடம் பெற்றது ...
கொம்பேறி மூக்கன் !

11 February 2013

'சிரி'கவிதை!ஸ்டெதஸ்கோப்புடன் இன்றும் சில 'DOG'டர்கள் !பெண் நோயாளிகளை 'தொடக் ''கூச்சப்பட்டு 
ஸ்டெதஸ்கோப்பை கண்டுப் பிடிச்சாரே ...
அந்த உன்னத டாக்டரை தொட்டுக் 'கும்பிடத் தோன்றுகிறது ...
வரம்பு மீறும் சில டாக்டர்களைப்  பார்க்கையில் !


தின 'சிரி ' ஜோக்!பைத்தியம் ஆனாலும் புலவர் புலவர்தான் !

''டாக்டர்,என் தாத்தாவுக்கு மாத்திரையினால் 'சைடு எப்பெக்ட்'ஆயிடுச்சு !''
''என்ன  செய்றார் ?''
''மாத்திரையைப் பார்த்து 'மாத்திரே ,நீயுமா என்னை ஏமாத்திறே 'ன்னு பைத்தியமா புலம்புறார் !''
10 February 2013

தின 'சிரி ' ஜோக்!விசுவாசமான 'வீட்டோட' மாப்பிள்ளை!

''ஊரே 'மாமதுரை போற்றுவோம் 'ன்னு விழா கொண்டாடிக்கிட்டு இருக்கு !நீ மட்டும் 'மாமா   துரை  போற்றுவோம் 'ன்னு  தனி ஆவர்த்தனம் வாசிக்கிறியே ,ஏன் ?''
''பொண்ணை கொடுத்து ,வீட்டோட மாப்பிள்ளையா ஆக்கிகிட்ட என்னோட மாமா  துரையை  போற்ற வேண்டியது என் கடமையாச்சே !''


'சிரி'கவிதை!மெய் போனாலும் மொய் போகாது !


திருமண ஆல்பத்தைப் புரட்டுகையில் ...
சிரிப்புடனே காட்சி தரும் பெருசுகளைப் பார்க்கையில் 
பாவமாய்த்தான் இருக்கிறது 'போய் விட்டார்களே 'என்று !
மொய் வைத்தவர்களை மறக்க முடியுமா ?


9 February 2013

தின 'சிரி ' ஜோக்!ஒண்ணு ஜெயிச்சா அதேமாதிரி அடுத்ததும் வருமில்லே ? ''

''கண்ணா லட்டு தின்ன ஆசையா  பார்ட் 2வருதா , என்ன டைட்டில் ?''
''2வது லட்டு தின்ன ஆசையா?'' 'சிரி'கவிதை!நோய்கள் தானாய் வருவதில்லை !

TV ல் ADS இடைவேளை வரட்டுமென்று 
அடக்கிக் கொண்டே இருந்தால் ...
கல்லடைப்பு  கேக்காமலே வரும் !8 February 2013

தின 'சிரி ' ஜோக்!எங்குமிருக்கும் காக்கா [ஆட்களும்தான் ]!

''மரத்து அடியிலே பைக்கை நிறுத்தினாப் போதும் ,காக்கா அசிங்கம் பண்ணிடுது !''
''ஆமா ,காக்கா இல்லாத இடமும் இல்லை ,அது 'கக்கா 'பண்ணாத பைக்கும் இல்லைன்னு சும்மாவாச் சொன்னாங்க ?''
'சிரி'கவிதை!! தலைவலி வரலாம் ,ஆனா வரக் கூடாது !தலைவலி வந்தால் நாம் 'பாமை 'தடவுவோம் !
'பாம் வெடிக்கும் 'ன்னா போலிசுக்கு தலைவலி ,
நாம எல்லாரையும் தடவ ஆரம்பிச்சுடுவாங்க ! 

7 February 2013

தின 'சிரி ' ஜோக்!ரஜினி பாடியதில் எது சரி?

''புதுப் பொண்டாட்டி பின்னாலேயே திரியாதே ,ரஜினிப் பாட்டைக் கேட்டு திருந்தப் பாருன்னு சொல்றியே ,ஏன் ?''
''சேலையில் சிக்கிக் கொண்டா சொர்க்கத்தின் வழி தெரியாதுங்கிறாரே !''
''அப்புறமா 'சேலை சோலையே 'ன்னு பாடினது உனக்குத் தெரியாதா ?''

!

'சிரி'கவிதை!கருக் கலைப்பு பாவமா ,சோகமா ?


யான் பெற்ற இன்பம் பெறுக  இவ்வையகம் ..
என்றிருப்பது பரந்த மனப் பான்மை !
நான் பெற்ற துன்பம் நீயும் பெற வேண்டாம் ..
கருக் கலைத்தவளின் கசந்த மனப்  பெண்மை !


6 February 2013

தின 'சிரி ' ஜோக்!போலியை பேச்சிலேயே கண்டுப் பிடுச்சிடலாம் !

''அவர் போலி  டாக்டர்  போலிருக்குன்னு சொல்றியே ,ஏன் ?''
''கண்லே பூ விழுந்து இருக்குன்னு சொன்னா ,மல்லிகைப் பூவா ,பிச்சிப் பூவான்னு கேக்கிறாரே !'''சிரி'கவிதை!கவச உடையில் ஹனி மூனா ?ஹா ..ஹா ...!


5 February 2013

சிரி'கவிதை!ரீமிக்ஸ் முதலில் செய்தது நாம்தான் !


பாட்டுதான் வந்தது இப்போ படமுமா ரீமிக்ஸ் என்று கேட்க நாதியில்லை  நமக்கு !
டீ போட தண்ணிப்பாலிலும்  நாம் தண்ணி சேர்ப்பதால் !தின 'சிரி ' ஜோக்! வாய்தா கோர்ட்டில் கேக்கலாம் ,வீட்டில் ...?


''வக்கீலான வீட்டுக் காரரையே   டைவர்ஸ் பண்றியே ,ஏன் ?''
''எதைக் கேட்டாலும்  அடுத்த மாசம் பார்ப்போம்ன்னு 'வாய்தா 'கேக்கிறாரே !''
  


4 February 2013

சிரி'கவிதை!மாற்றம் மனைவியின் உருவிலா ?கணவனின் சலிப்பிலா ?


ரூபவதியாய்  காட்சி  தந்தவள் ...
மோகம் முப்பது ,ஆசை அறுபது  நாளுக்குப் பின் ... 
ரூப அவதியாய் !


தின 'சிரி ' ஜோக்!தலை எழுத்தும் புரிந்துவிடும் ....?


''டாக்டரை ஏண்டா காதலித்தோம்ன்னு இருக்குடி ?''
''ஏண்டி ''
''லவ் லெட்டர்லே என்ன எழுதி இருக்கார்ன்னு புரிய மாட்டேங்குதே !''
..................................................................................................................................
பிரசுரித்த குமுதம் இதழுக்கு  நன்றி !3 February 2013

தின 'சிரி ' ஜோக்!முதல் மனைவியா ,இரண்டாவது மனைவியா ?''மனைவிக்கு எத்தனை  சுழி 'ன 'போடணும்னு கேட்டது தப்பாப் போச்சு !''
''ஏன் ?''
''முதல் மனைவியா ,இரண்டாவது  மனைவியான்னு கேக்கிறாரே !''


சிரி'கவிதை!நிற வேற்றுமை இதிலுமா ?நம்ம ஊர் சாமிகள் எல்லாம் கருங்கல்லில்  கருப்பாக ...
வடநாட்டில் சலவைக் கல்லில் வெளுப்பாக ...
காலண்டர் ,சினிமாவில் 'ஈஸ்ட்மன் 'கலர் கலராக ...
உண்மையில்  சாமி எந்த நிறம் ?

2 February 2013

தின 'சிரி ' ஜோக்!ஜாக்கி சானைதான் எல்லோருக்கும் தெரியும் !


''உங்க நண்பர் ஜானை ஏன் 'பாக்கி ஜான் 'னு சொல்றிங்க ?''
''கடனோ ,கைமாத்தோ  வாங்கினா முழுசா திருப்பித் தர மாட்டாரே !''


சிரி'கவிதை!தாய்மைக்கு தனி மரியாதை !


முன் பின் தெரியாத  ஆணைக்  கண்டிக்கும் போதும் 
தாய்மையைப் போற்றுவது  நமது பண்பாடு ...
'என்னையா ,அவசரம் ?சீக்கிரம் வீட்டுக்குப் போய் 
பிள்ளைக்குப் பால் கொடுக்கவாப் போறே ?' 

1 February 2013

தின 'சிரி ' ஜோக்!கிணற்றில் குதித்த ஜோடி !''டார்லிங் ,நீயும் நானும் கிணற்றில் குதிக்கிற மாதிரி கனவுகண்டேன் !''
''ஐயையோ ,அப்புறம் ?''
''நீயும்தானே குதிச்சே ,அப்புறம் நடந்தது உனக்குத்தான் தெரியுமே !'''சிரி'கவிதை!படிச்ச மேதைகள் இவர்கள்தானா ...?


லைப்ரரிவருகையாளர் பதிவேட்டில் ...
வரிசை எண் 13காலியாகவே இருக்கிறது !