30 April 2013

தின 'சிரி ' ஜோக்!பொண்ணு பிடிக்கலைன்னு இப்படிச் சொல்லலாமா ?

''இனிமேல் பொண்ணுப் பார்க்க வர்றவங்களுக்கு மட்டமான ஸ்வீட் .காரம் கொடுத்தா போதுமா  ,ஏன் ?''
''ஏற்கனவே பார்த்துட்டு போனவங்க 'ஸ்வீட் .காரம் மட்டும்தான் பிடிச்சது 'ன்னு சொல்றாங்களே !


'சிரி'கவிதை!மழை அளவு குறைவு தரும் பாடம் ?

ஊரிலே ஒரு நல்லவர் இருந்தாலும் மழை பெய்யுமாம் ...
'நான் இருப்பதால்தான் மழை பெய்கிறது 'என 
எல்லோரும் நினைத்துக் 'கொல்' கிறார்கள் !


29 April 2013

தின 'சிரி ' ஜோக்!இட்லி மாவுன்னா கல்லையும் சேர்த்து ஆட்டுவாங்க போலே !

'பொங்கல்லே கல்லு இருக்குன்னு சொன்னா ,சர்வர் திமிராப் பதில் சொல்றானா ,எப்படி ?''
''பொங்''கல்'னா  வரத்தான் செய்யுமாம் !''

'சிரி'கவிதை!எண்ணிக்கையில் அடங்கியோரும் ,அடங்காதோரும் !

கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த மண்ணில்தான் ...
கடைந்தெடுத்த அயோக்கியர்களும் வாழ்கிறார்கள் !


28 April 2013

தின 'சிரி ' ஜோக்!கல்யாணமானா ஒரே சோகம்தானா ?

''நீங்க கல்யாணத்திற்கு பிறகுதான் ஜோக் எழுத ஆரம்பித்தேன்னு சொல்றீங்களே ,என்ன காரணம் ?''
''நாமதான் சிரிக்க முடியலே ,மத்தவங்களாவது சிரிக்கட்டுமேன்னுதான் !'''சிரி'கவிதை!குறள் வழி நடக்கும் நாய் !

சிலர் நாய் வாலை வெட்டிவிடுகிறார்கள் ...
நாய் வாலறுந்த பின்னாலும் 
வெட்டியவர்களை 'வெட்டி விடாமல் '
சுற்றி சுற்றி வருகிறதே !

27 April 2013

தின 'சிரி ' ஜோக்!வாலாட்ட யோசிக்கும் நாய்கள் ?

''டைபிஸ்ட் சாந்திகிட்டே யாரும் வாலாட்ட மாட்டேங்கிறார்களே ,ஏன் ?''
''அவங்க டைப் 'அடிக்கிற ' வேகத்தைப் பார்த்து அரண்டு போயிருக்காங்களே !''


'சிரி'கவிதை!எது நிம்மதி காதலா ,கல்யாணமா ?

காதலே நிம்மதி என்று ...
திருமணம் முடிந்த சில நாளிலேயே புரிந்துவிடுகிறது !

26 April 2013

தின 'சிரி ' ஜோக்!தமிழனை உலகமே வியந்துப் பார்க்கும் !

'பூனைக்கு இருட்டிலேயும் பார்வை தெரியுமாமே ?''
''ஒண்ணும்  கவலைப் படாதீங்க ,'கரெண்ட் கட் 'புண்ணியத்தாலே கொஞ்ச நாள்லே நமக்கும் அந்த சக்தி வந்திடும் !''


'சிரி'கவிதை!சந்தர்ப்பம் புத்தன் ஆகவா ,பித்தன் ஆகவா ?


சந்தர்ப்பம் ஒருமுறைதான் வரும் என்பதற்காக ... 
தப்பைச் செய்தவர்களும் 
'சந்தர்ப்பச் சூழ்நிலையால்  செய்தோம் ' 
என்பதில் என்ன நியாயம் ?

25 April 2013

தின 'சிரி ' ஜோக்!நாணயம் வேணும்தான் ,ஆனா இப்படியா ?


''உங்க வீட்டுலே குடியிருக்கிறவர் ரொம்ப ,ரொம்ப நாணயமானவரா ,எப்படி ?''
''ஒண்ணாம் தேதி இராத்திரி 12மணிக்கே வாடகையோட வந்துக் கதவை தட்டுகிறாரே !''


'சிரி'கவிதை!விண் மீன் உயரத்தில் மீன் விலை !

உயிரையும் பணயம் வைத்து ...
நடுக்கடலில் மீனவன் மீன்பிடிக்க...
தரையில் நிற்பவன் விலையை வைக்கிறான் ..
பிராய்லர் கோழிக்குகூட பண்ணை வேண்டும் 
தீனியும் போடவேண்டும் ...
கடல் அன்னை இலவசமாய் தரும் 
மீனின் விலையோ கோழி விலைக்கும் அதிகம் ...
மீன் தரகருக்கு என்று வருமோ தடைக்காலம் ?


24 April 2013

தின 'சிரி ' ஜோக்!கிரீன் கார்டு இதுதான் குடிகாரனுக்கு !

''உன் மனைவி உனக்கு இரட்டைக் குடிஉரிமை கொடுத்திருக்காளா,எப்படி ?''
''பார்லேயே மொத்தமாக் குடிச்சு ரோட்லே கிடக்காமே ,வீட்டுலேயும்  வந்து குடிச்சுக் கிடங்கன்னு சொல்றாளே !''


'சிரி'கவிதை!வீட்டுக்கு வீடு சுகர் பேஷன்ட் !

ஒருசேரப் பத்து பொறாமை விழிகள் என்மேல் ...
ஒரே ஒரு வார்த்தை செய்த மாயம் ...
''நிறைய சீனி போட்டு ஒரு டீ !''


23 April 2013

தின 'சிரி ' ஜோக்!சுகர் வந்ததே ரேஷன் அரிசியால்தான் !

''ரேஷன் கடைலே பிளட் டெஸ்ட் பண்றாங்களா ,ஏன் ?''
''குடும்பத்தில் யாருக்காவது சுகர் இருந்தா, சீனி அளவை  குறைக்கப் போறாங்களாம் !''


'சிரி'கவிதை!மனைவி இப்படியும் சோதிக்கலாமா ?என்மேல் மனைவிக்கு நல்ல அபிப்பிராயம் 
இருப்பது தெரிந்தது ...
அழகான வேலைக் காரியை வேலைக்கு 
வைத்துக் கொண்டதில் இருந்து !


22 April 2013

தின 'சிரி ' ஜோக்!108டிகிரி வெயில் இப்படி கேக்க வைக்குதோ ?

''அந்த காபி மாஸ்டருக்கு கொழுப்பு ஜாஸ்தியா .ஏன் ?''
''டிகிரி காபி கேட்டா ,எத்தனை டிகிரி இருக்கணும்ன்னு கேக்கிறான் !'''சிரி'கவிதை!நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குது !


ஒரே உறையில் இரண்டு கத்தி ...
என யாராவது சொன்னால் ...
மாமியார் மருமகள் உறவு
நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவில்லை !21 April 2013

'சிரி'கவிதை!பயபுள்ளே சொன்னதும் காரணமாத்தான் !கிழவன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் ...
இதை முதலில் சொன்னது ஒரு வாலிபனாகத்தான் இருக்கணும் ...
அதுக்கு ஒரே ஒரு காரணம்தான்  இருக்க முடியும் ! 
தின 'சிரி ' ஜோக்!தலைவி கேட்பதில் தவறே இல்லை !

''டாக்டர் பட்டம் வாங்கின தலைவர்கிட்டே மகளிர் அணித் தலைவி என்ன கேக்கிறார் ?''
''எனக்கும் 'ஸ்டாப் நர்ஸ்'பட்டமாவது வாங்கிக் கொடுங்கங்கிறார் !''20 April 2013

'சிரி'கவிதை!பெண்ணைக் கொடுப்பவரின் எதிர்ப்பார்ப்பு !


என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன் 
அதில் ஆனந்தக் கண்ணீர்தான் பார்க்கணும் ...
இதைக் கேக்கும் போதெல்லாம் 
சிரிப்புதான் வந்துக் கொண்டிருந்தது ...
வாடகை சைக்கிளை அரைமணிக்கு கேட்டபோது 
''உங்களை எப்படி நம்புவது ?''என்று 
கடைக்காரர் கேட்டபோது சிரிப்பு நின்றது !


தின 'சிரி ' ஜோக்!நல்ல வேளை ஜட்டி சைஸை கேக்கலே !

''பத்து வருசமா என் உப்பைச் சாப்பிட்டுகிட்டு இருக்கே,இப்ப திடீர்ன்னு என் பனியன் சைஸை கேட்கிறீயே ,ஏன் ? ''
''உப்பிட்டவரை உள் 'அளவும் 'நினைன்னு சொல்லி இருக்காங்களே !''


19 April 2013

தின 'சிரி ' ஜோக்!நன்றி மறவாத வெஜிடேரியன் !

''நம்ம வீட்டு விசேசத்திற்கு வந்துபோன நண்பர்  SMS ல் என்ன எழுதி இருக்கார் ?''
''சிக்கனற்ற, சிக்கனமற்ற ,மட்டனற்ற விருந்து படைத்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சியாம் !''
'சிரி'கவிதை!தடை எதுக்கு வரணுமோ அதுக்கில்லேயே !

மீனைப் பிடிக்ககூட தடைக் காலம் போடுறவங்களாலே ...
சிங்கள ராணுவம் நமது மீனவனைப் பிடிப்பதை தடை செய்ய ஏன் முடியலே ?
மீனைக் கூட கொல்லாமல் பிடிக்கும் நமது நிராயுதபாணி  மீனவனைக்
கொன்றுக் குவிப்பதை  ஏன் தடை செய்ய  முடியலே ?

18 April 2013

தின 'சிரி ' ஜோக்!ஆளுயர மாலையைப் போட்டா ஆள் காலி !

'' தலைவர் மாலை எல்லாம் வேண்டாம்னு சொல்றாரே , அவ்வளவு தன்னடக்கமா ?''
''அடநீங்க வேற ,அவருக்கு கடுமையா  கழுத்து வலிங்க !'''சிரி'கவிதை!படிப்பை 'கவர்ச்சி 'கவுத்துவிடக் கூடாது ,ஜாக்கிரதை !

கவர்ச்சி நடிகை BA பாஸான செய்தி ஊடகம் எங்கும் ...
கனவுக் கன்னியாய் கோட்டைக் கட்டி ...
படிப்பை 'கோட்டைவிட்ட' ரசிகர்கள் எத்தனைப் பேரோ ? 
17 April 2013

தின 'சிரி ' ஜோக்!வழக்குச் செலவுக்கே ஒத்தி காசு சரியாப் போயிருக்குமே !

''ஒத்தி முடிந்தும் உங்க வீட்டைக் காலி செய்ய மாட்டேங்கிறவர் மேலே  போட்ட கேஸ் என்னாச்சு ?''
''அதஏன் கேக்கிறீங்க ,நீதிபதியும் தீர்ப்பை ஒத்தி வச்சுக் கிட்டே இருக்கார் !''

'சிரி'கவிதை!லஞ்சத்திற்கு தூக்குத் தண்டனை எப்போது ?


ஊரெங்கும் பணம் தரும் தானியங்கி எந்திரங்கள் ...
நம்மைச் சுற்றிலும் பணம் பிடுங்கும் மனித எந்திரங்கள் !

16 April 2013

தின 'சிரி ' ஜோக்!போலிகள் நிறைந்த உலகமடா !


''நீங்க போலி டாக்டர்ன்னு பேசிக்கிறாங்க ,நீங்க தர்ற மாத்திரையும் போலின்னா எப்படி குணமாகும் ?''
''ஸ்கேனைப் பார்த்து நான்  சொன்ன நோயும் போலிதான் ,டோன்ட் ஒர்ரி !'''சிரி'கவிதை!ஒரு தலைக் காதலே இல்லை ,ஆசைதான் !

நீ விரும்புவதோ அவளை ...
அவள் விரும்புவதோ அவனை ...
மூணு சீட்டிலேயே  உன்னால் ஜெயிக்க முடியாது !
முக்கோண காதலில் ...?நோ சான்ஸ் !15 April 2013

தின 'சிரி ' ஜோக்!மின் மயான வெட்டியானின் அபூர்வ ஞானம் !

''செத்துப் போன உங்க நண்பர் ஆப் பாயில்ன்னா விரும்பிச் சாப்பிடுவாரா ?'' 
''ஆமா, உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
''பாடி முழுசா எரியறதுக்குள்ளே கரெண்ட் போயிடுச்சே !'''சிரி'கவிதை!வீடுகள் தோறும் 'மீனாக்ஷி 'ஆட்சிதானா ?

நீ பாதி நான் பாதி யென 
ஆரம்பித்த  தாம்பத்யம் ...
பிள்ளைகள் இரண்டு ஆனபின் 
முக்காலும் காலும் ஆனது ...
கணவன் மனைவி உருவிலும் கூட !    
  

14 April 2013

தின 'சிரி ' ஜோக்!குட்டி பத்மினி தெரியும் ,குட்டி யானை த்ரிசாவா ?


''ஜூவுக்குப் போன அந்த நடிகை ,குட்டி யானைக்கு தன்னோடப் பெயரை வைச்சது தப்பா ,ஏன் ?''
'' கிசுகிசுவிலே குட்டியானை நடிகைன்னு எழுத ஆரம்பிச்சுட்டாங்களே !''...

'சிரி'கவிதை!ருசியான ரசத்திற்கு ஏங்கும் USA மாப்பிள்ளை !

மணப்பெண் தேவை !
முறத்தால் புலியை விரட்டத் தெரியாவிட்டாலும் 
ரசத்திற்கு புளியைக் கரைக்கத் தெரிந்தாலே போதும் !
13 April 2013

தின 'சிரி ' ஜோக்!சொல்லிக்கவே நல்லா இருக்காதே !


''பத்து வீடு பார்த்ததில் நடுத தெருவீடுதான் பிடிச்சிருக்கு ,நீங்க ஏன் வேண்டாங்கிறீங்க ?''
''நடுத தெருவிலே இருக்கேன்னு சொன்னாச் சிரிப்பாங்களேன்னு யோசிக்கிறேன் !''


'சிரி'கவிதை!பெண்களில் மசாலாவும் உண்டு ,'மலாலா'வும் உண்டு !காண்போர் நாணும் அளவிற்கு 
மறைந்துள்ள மச்சத்தைக் கூட காட்டும் 
'மசாலா'ப் பெண்கள் ஒருபுறம் ...
உரிமைக்கு முன் உயிர்க்கூட துச்சமென 
தோட்டாவைக் கூடத் தாங்கும் 
'மலாலா'ப் பெண்களும் இருப்பதால்தான்
 பெண்மை தலை நிமிர்ந்து நடக்கிறது !


12 April 2013

தின 'சிரி ' ஜோக்!உள்ளங்கவர் 'கள்வன் 'இப்படியும் தெரிவானா ?


''உங்கப் பொண்ணை காணாம்னா ,மந்திரவாதியை போய் பார்க்கணுமா ,ஏன் ?''
''எவன்கூட ஓடியிருக்கான்னு மைப் போட்டு பார்க்கலாம்ன்னுதான் !'''சிரி'கவிதை!கல்யாணம் முடிந்த 7வதுமாசமே வளைகாப்பு OK !


பள்ளிக்குப் புறப்படும் முன் ...
பையனே சூ சாக்ஸ் டை போட்டுக்கக் கூடாதாவென 
எரிச்சல் படும்போதுதான் உண்மை புரிகிறது ...
தாமதமாய் பெற்றப் பிள்ளைப்பேறு !
11 April 2013

தின 'சிரி ' ஜோக்!'நொறுக்குத் தீனி 'யர்கள் ஞாபகம் வைச்சிக்குங்க !

''என்னங்க ,பிரிட்ஜில் உள்ளதை எல்லாம் உடனே காலி பண்ற பழக்கத்தை விட்டுட்டீங்களே !அந்த மனோ தத்துவ டாக்டர் என்ன அட்வைஸ் சொன்னார் ?''
''பசிங்கிறதும் பிரிட்ஜ் பல்பு மாதிரிதான் !கதவை திறந்தா மட்டும் பல்பு எரியுறமாதிரி ,பசிச்சாமட்டும்தான் சாப்பிடணும்னு சொன்னாரே !''
'

'சிரி'கவிதை!தானாடா விட்டாலும் தன் சதை ஆடுமோ ?


மேடையில் முழங்கும் தலைவர் ...
தன்னையறியாமல்  ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் ...  
''பாரதி அன்றே சொன்னார்  ,
பெண்மை வாழ்கவென்று கூத்தடிப்போமடா ''என்று !10 April 2013

தின 'சிரி ' ஜோக்!ஆண்களுக்கு 'டைம் பாஸ் ' சரி ,பெண்களுக்கு ?

''டைம் பாஸ் வார இதழில் ஆண்களுக்கான  'கில்மா ' மேட்டர்தான் வருது !நாம படிக்கிற மாதிரி இல்லேடி !''
''ஒண்ணும் கவலைப் படாதே !பெண்களுக்காகவே 'மெனோ பாஸ் 'னு வார இதழ் வரப் போவுதே  !''


'சிரி'கவிதை!உயிரே ,உன் விலை என்ன ?


கோழிகளின் கழுத்து அறுபடும் போதும் ஏற்படாத பரிதாபம் ...
'கோழிக் கறி கிலோ ரூ 100,உயிருடன் கிலோ ரூ 80'
என்பதைப் படிக்கையில் ஏற்படுகிறது !
உயிருக்கு என்னதான் மதிப்பு ?


9 April 2013

தின 'சிரி ' ஜோக்!நாடி ஜோதிடமே ?அதிலும் இரட்டை நாடி ஜோதிடமா ?

''உ ன் வீட்டுக்காரரோட நாடி ஜாதகத்தை பார்க்கவே முடியாது போலிருக்குன்னு சொல்றே ,ஏன் ?''
''அவருக்கு இரட்டை நாடி சரீரம் ,எங்கேயும் இரட்டை நாடி ஜோதிடம் பார்க்கிறமாதிரி தெரியலேயே !''

'சிரி'கவிதை!நாம் செய்த மாதவம் தமிழராய் பிறந்தது !

யாரும் இங்கே ராமன் இல்லை ...
கருவாடு மீனாகாது கறந்தபால் மடிபுகாது ...
அவள்  பத்தினியுமில்லை நான் முற்றும் துறந்த முனிவனுமில்லை ...
காலத்தால் அழியாத பொன்மொழிகள் இவை !
தமிழனாய் பிறந்ததற்கு மாதவம்தான் செய்திருப்போம் போலிருக்கிறது !

8 April 2013

தின 'சிரி ' ஜோக்!குடிகாரங்க தப்பாப் புரிஞ்சுக்கக் கூடாது !

''உங்க வீட்டுக்காரர் உடம்பு தேறனும்னா நிறைய பழங்கள் சாப்பிடணும் !''
''பழங்''கள் ' சாப்பிட்டு பாழாப்போன மனுசனுக்குப் புரியுற மாதிரி நல்லா  சொல்லுங்க ,டாக்டர் !'''சிரி'கவிதை!'கடனே'ன்னு எதையும் செய்யக் கூடாது !


கொள்ளை,கொலையும் செய்யும் ...
ரௌடிகளுக்கும் கூட  தனித்துவமான அடைமொழி பெயர்கள் !
அவர்களின் பெயரில் மட்டுமே உள்ள  தனித்துவத்தை 
நாம் செயலில் காட்டினால் 
நாமும் இங்கே ஹீரோதான் !


7 April 2013

தின 'சிரி ' ஜோக்!நடிகைக்கு பிடிக்காத இயக்குனரோட 'பெர்சனல் டச் ' !''அந்த இயக்குனர் படங்களில் 'பெர்சனல் டச் ' சீன்கள் சூப்பராய் இருக்கும் ,அவர் படத்தில் சான்ஸ் கிடைத்தும்  ஏன்  விலகிட்டீங்க ?''
''பெர்சனல் டச்  அவர் படத்தோட நிறுத்திக்கிற மாதிரி தெரியலே ..அதான் !''
 


'சிரி'கவிதை!நதிமூலம் ,ரிஷிமூலம் பார்க்கக் கூடாது !தோழிகளிடம் ...
தோழிகள் கொடுத்த 'டெட்டிபியர் 'கள் !
தோழிகளுக்கு ...
கைகழுவிய 'பாய் ப்ரண்ட்ஸ் 'கள் கொடுத்தது !


6 April 2013

தின 'சிரி ' ஜோக்!கந்து வட்டியால், நொந்து போய் ,லந்து பண்றாரோ ?

''அடகுக் கடைக்கே  வந்து ,'நீங்க எங்கே அடகு வைக்கிறீங்க 'ன்னு கேக்கிறது நியாயமா ?''
''நீங்க மனசாட்சியை அடகு வைத்து விட்டு, அநியாய வட்டி போடுறது  மட்டும் நியாயமா ?'''சிரி'கவிதை!நாகரீகம் தெரிந்த காதலன் !...


காதலிக்கு ...
நாலுப் பேருக்கு நடுவில் பரிசளித்து விட்டு 
நன்றியினை மட்டும் 
நாலு சுவருக்கு நடுவில் பெற நினைப்பவன் !


5 April 2013

தின 'சிரி ' ஜோக்!காதிலே பூ வைக்கிறதுக்கும் அளவில்லையா ?

''எக்ஸ்ட்ரா சைஸ் பட்ஸ் கிடைக்கும்ன்னு போட்டு இருக்கிங்களே ,எப்படி இருக்கும் ?''
''வலது காதில் நுழைத்து இடது காதையும் ,இடது காதில் நுழைத்து வலது காதையும் கிளீன் பண்ற மாதிரி  நீளமாயிருக்கும் !''
''???????''


'சிரி'கவிதை!அழுவோரைத் தேற்றுவாரில்லை !

குழந்தையின் முதல் அழுகையை கேட்க மட்டுமே 
அனைவரும் ஆவலோடு இருக்கிறார்கள் !

4 April 2013

'சிரி'கவிதை! சேவலின் அவசரச் செய்தி நமக்கல்ல !


கோழி கூவியா பொழுது விடியப் போகிறது ?
இல்லை ,சேவல் கூவியா பொழுது விடிகிறது ?
சேவல் இனமே இல்லாதபோது விடியாமலா இருந்தது ?
'நான் ஒருத்தன் இங்கே இருக்கேன்'னு சேவல் சிம்பாலிக்காய் சொல்வதை ...
நாம் சீரியசாய் எடுத்துக் கொள்ளக் கூடாது !