31 July 2013

சின்ன வீடு 'செட் அப் 'புக்கு சம்மதித்த மனைவி !என் முதல் கணினி அனுபவம் ![தொடர் பதிவு ]

சின்ன வீடு 'செட் அப் 'புக்கு சம்மதித்த மனைவி !என் முதல் கணினி அனுபவம் ![தொடர் பதிவு ]
இன்று தேதி 7.31.13[இங்கே அமெரிக்காவில் தேதியை நடுவில்தான் எழுதுவது வழக்கம் ]நேரம் இரவு 10.34[நல்லவேளைநிமிடத்தை முன்னாடி போடாம விட்டாங்க ! ]
ஜன்னலுக்கு வெளியே ...சாலையில் பறந்துக் கொண்டிருக்கும் கார்களின் அணிவகுப்பைப் போன்றே கணினி கற்பதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நினைவிற்கு அணியணியாய் வருகிறது ...e மெயிலைக் கண்டுபிடித்த திரு .அய்யாதுரை அவர்களின் ஐந்து கம்பெனிகளில் ஒன்றான ...[வெள்ளை மாளிகைக்கு ஆலோசனை சொல்லும் ]முக்கிய நிறுவனத்தில் ,உயர்ந்த பதவியில் இருந்தாலும் ... ஆரம்பகால என்  அனுபவங்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது !
     சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி இறுதி வகுப்பை முடித்த நேரம் ...வரக்கூடாத ஆசைன்னு சொல்ல முடியாது ...முன்னேறத் துடிக்கும் இளைஞனுக்கு வர வேண்டிய ஆசை எனக்கும் வந்தது ...கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ள வேண்டுங்கிற ஆசைதான் !
     அப்போது இருந்த அண்ணாநகரில் bsc ஷோ ரூம் அருகில் ...csc சென்டரின் 'இலவச கம்ப்யூட்டர் ட்ரைனிங் 'போர்டு என்னை அழைத்துக் கொண்டே இருந்ததால் ,,,உள்ளே சென்றேன் .
    எதிர் காலத்தில் பில்கேட்ஸ் அளவிற்கு வருவேங்கிற பொலிவை என் முகத்தில் பார்த்த மாதிரி வரவேற்பு பலமாக இருந்தது .
''ட்ரைனிங் டீடைல் வேணும் !''
''மூணுமாசம் ப்ரீ கோர்ஸ் .ஸ்டடி  மெட்டீரியல்ஸ் நீங்க வாங்கிக்கணும் ''
''ரொம்ப சந்தோசம் ,அதுக்கு எவ்வளவு செலவாகும் ?''
''ஆக்சுவலா அதோட விலை ஐந்தாயிரம் ரூபாய் ,ஆனா எங்களுக்கு சென்ட்ரல் கவர்ன்மெண்டில் இருந்து எய்ட் வர்றனாலே நீங்க 3000 ரூபாய் கொடுத்தா போதும் ''
     300 ரூபாய்க்கே எங்கள் வீட்டில் வசதி இல்லை 3000 ரூபாய்க்கு எங்கே போறது ?இருந்தாலும் கம்ப்யூட்டர் கல்விமேல் இருத்த மோகம் குறையவில்லை ...அந்த மோகம்தான் மாதமானால் 30000டாலர் சம்பாதிக்கும் சீட்டில் இன்று உட்கார வைத்திருக்கிறது !
    அடுத்து கண்ணில் பட்டது ஒரு பிட் நோட்டிஸ் ,,,அதில் 'கம்ப்யூட்டர் பேசிக் கற்க 100ரூபாய் மட்டுமே 'என்றிருந்தது ,,அட்ரசைப் பார்த்தேன் .சுமார் 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் காளவாசல் பகுதி..ஆர்வக் கோளாறில் சைக்கிளை மிதி மிதியென்று மிதித்து சென்று விசாரித்தேன் ...
''100 ரூபாய் கட்டிட்டு காலை 6 to 7 பாட்ஜில் சேர்ந்துக்குங்க ''
''நான் அண்ணா நகரில் இருந்து வருகிறேன் 9 to 10 பாட்ஜில் சேர்ந்துக்கிறேனே !''
''அது லேடீஸ் பாட்ஜ் ஆச்சே ''என்றார்களோ இல்லையோ ,எனக்கு கற்கும் ஆசையே போய்விட்டது .இத்தனை வருஷம் பசங்களோட மட்டுமே படித்து காய்ஞ்சுக் கிடக்கேன் ..இவங்க என்னடான்னா ,லேடீஸ் தனி கிளாசாமே ?அன்று ...கன்னியர்கள் இன்றி கணினி கற்க மனம் வரவில்லை .இன்று ,,,நியூ யார்க் அருகில் நோவார்க் நகரில் பல நாட்டு பெண்களுடன் பணிபுரியும் வண்ணமயமான வாய்ப்பு !
 அப்புறம் ,கீழவாசல் அருகில் 'எல்லாமே ப்ரீ 'என்று ஆசை காட்டி அழைத்ததால் சென்றேன் .
அங்கே ,அவர்கள் கேட்ட முதல் கேள்வி ...''என்ன டைப் படிப்பு விரும்புகிறீங்க ?''
  கனவுக் கன்னிகளுக்கு அடுத்த படியாக ஓவியர் ஜெயராஜின் கைவண்ணத்தில் உருவான கவர்ச்சிக் கன்னிகள் என் மனதில் ஒத்தியோ ,வாடகையோ தராமல் குடியிருந்த நேரம் !
''அனிமல்நேசன் படிக்கலாம்ன்னு இருக்கேன் ;ன்னு சொன்னதும் கொல்லென்று சிரித்துவிட்டார்கள் ...எனக்கு அவமானமாக இருந்தது ...[அன்று பட்ட அவமானம்தான் இன்று என்னை  usa கொண்டுவந்து சேர்த்து இருப்பது தனிக் கதை ]
''அனிமல்நேசன் இல்லை ,அனிமேசன் ...அதை கத்துக்க வருசக் கணக்காகுமே !''
நான் அவமானப்பட்ட இடத்தில் படிக்க மனம் வரவில்லை ...இன்றுவரை அந்த சென்டர் பக்கம் தலை வச்சும் படுக்கலே !
  அப்புறம் ...SSLC ல் நான் எடுத்த மார்க்கைப் பார்த்து KLN  ஐ டி கல்லூரியில் 'எங்க காலேஜுக்கின்னு ஒரு மரியாதை இருக்கு'என்று கைவிரித்து விட்டார்கள் .
  பிறகு ,சென்னை தாம்பாளம் அருகில் மூன்றாந்தர கல்லூரியில் Bsc CS ஒருவழியாக படித்துவிட்டு 'மதுரை பாத்திமா கல்லூரியில் MCA பர்ஸ்ட் கிளாசில் பாஸ் செய்ததும் .காம்பஸ் செலக்ட் ஆனதும் ,பெங்களூரு இன்பொடெக்கில் பணி புரிந்ததும் ,என் திறமை கண்டு திரு அய்யாத்துரை அழைத்ததும் ,திரு .நாராயண மூர்த்தி 'நீ அங்கே  இருக்க வேண்டிய ஆள் 'என்று வாழ்த்தி வழி அனுப்பியதையும் ...இப்போ நினைச்சாலும் கனவு மாதிரியே இருக்கிறது !
கனவு மாதிரியென்னா கனவேதான் என்பதை தெரிவித்துக் கொண்டு என் புருடாவை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் ...
பல பதிவர்கள் கணினி அனுபவத்தை எழுதி இருப்பதை படித்து நானும் பில்ட் அப் செய்து எழுதியதுதான் இதுவரை நீங்கள் படித்தது ,அதையெல்லாம் டெலிட் செய்து விடுங்கள் ...இனிமேலே படிக்கப் போறதுதான் 'கணினி என் முதல் அனுபவம் '!
 கம்ப்யூட்டர் படிப்பு எல்லாம் நம்ம ஊருக்கு வர்றதுக்கு முன்னாடியே என் படிப்புக் காலம் முடிந்து விட்டது ...டைப்பிங்கூட கற்றதில்லை !
ஆனந்த விகடன் ,குமுதம் .தினமலர் வாரமலர் போன்ற வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கு கதை ,ஜோக் எழுதிக் கொண்டிருந்த எனக்கு என் மகன் அஜய் சந்தன் வலைப்பூவை உருவாக்கிக் கொடுத்தான் ...டைப் அடிப்பதில் நானும் 'ஒருவிரல் கிருஷ்ணா ராவ் 'ஆகத்தான் இருந்தேன் ,இப்போது பிக்கப் ஆகி நாலு விரல்கள் கில்லாடிகளாக வேலை செய்கின்றன !
தந்தைக்கு மந்திரம் சொன்னவன் கந்தன் என்று புராணக் கதை உண்டு ...எனக்கு கம்ப்யூட்டர் கற்று தந்தவன் மகன் அஜய் சந்தன் தான் !அவனுக்கு ஆங்கிலம் ;ஹிந்தியும் தான் அத்துப்படி ...அவனுடைய ப்ளாக்  http://ajeyscomputerblog.blogspot.in/  விரும்பினால் படித்துப் பாருங்கள் !என் பதிவுகளை நானேதான் டைப்படித்து ஒட்டிக் கொண்டு இருக்கிறேன் ,,,நுணுக்கமான விஷயங்களை அவன் செய்து தருவான் ,அதுக்கு மேலும் ,நண்பர்கள் திரு ,திண்டுக்கல் தனபாலன் ,தமிழ்வாசி பிரகாஷ் போன்றவர்கள்  உதவுகிறார்கள் !
 எல்லாம் சரி ,தலைப்புக்கு விளக்கம் சொல்லுங்க என்று கேட்பது புரிகிறது ...ஒண்ணுமில்லைங்க ,என் வீட்டில் இருப்பது ஒரேஒரு கம்ப்யூட்டர் தான் !என் மனைவி ,இரண்டு பையன்கள் 'மற்றும் என்னிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறது !
'வீட்டிற்கு வந்தால் என்னைக் கூட கண்டுக்க மாட்டேங்கிறீங்க ,நான் பெண்டாட்டியா ,கம்ப்யூட்டர் பெண்டாட்டியா''ன்னு என்னவள் கோபித்துக் கொள்கிறாள் ...
''உனக்கான இடம் என்னைக்கும் பறி போகாது ,வேணும்னா லேப்டாப் ஒண்ணை  வாங்கி சின்னவீடா வச்சிக்கிறேன்.பெரிய வீடா எப்பவும் நீயே இருக்கலாம்''ன்னு சொன்னதற்கு 
கொள்கை அளவில் ஒப்புதல் தந்து இருக்கிறாள் என்னவள் !
நாட்டுலே வழங்கப் பட்டுவரும் விலையில்லா மடிக்கணணி ஒன்று ,என் மடியிலும் தவழ கூகுள் ஆண்டவர்தான் அருள் புரியணும் !
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தொடர் பதிவுக்கு ...இந்த மதுரைக்காரன் .மற்ற மதுரைக்காரங்க ஐவரை அழைக்கின்றேன் ....
1.  http://revakavithaikal.blogspot.com/ -M .ரேவா    [தாய்க் குலத்திற்கு முதல் மரியாதை]
2. http://veeluthukal.blogspot.in  - மதுரை சரவணன்
3.  http://www.naamanivannan.in/  -நா.மணிவண்ணன்
4.http://avanishiva.blogspot.in/   - உண்மையுடன் - கொஞ்சம் பொய்
5. http://jeyarajanm.blogspot.in/  தென்றல் 

தின 'சிரி ' ஜோக்! இந்த வாழ்த்து பலித்தால் குரங்கைதான் வளர்க்கணும் !

''தம்பதிகளை வாழ்த்தும்போது  தலைவர் மப்புலே இருந்தார்னு  ஏன் சொல்றீங்க ?''
''சீரும் சிறப்புமா வாழ்கன்னு சொல்றதுக்குப் பதிலா ஈரும் பேணுமாய் வாழ்கன்னு சொல்றாரே !''

'சிரி'கவிதை! யார் பாக்கியசாலி மனைவிமார்கள் ?

தலையாட்டி பொம்மைகளைப் பார்க்கும் போது ...
கணவன்மார்களை  நினைத்துக் கொள்ளும் மனைவிமார்கள் பேறு பெற்றவர்கள் !

30 July 2013

தின 'சிரி ' ஜோக்! உபயம் எனும் பேரில் வரும் அபாயம் !

''கோவிலில் உள்ள எல்லா உண்டியல்களுக்கும்  பூட்டு வாங்கித் தர்றேன்னு தலைவர் சொன்னாலும் ஏன் வேண்டாங்கிறாங்க ?''
''டூப்ளிகேட் சாவிகளை ரெடி பண்ணிக்கிட்டு கொடுத்து விடுவாறோங்கிறது பயம்தான் !''


'சிரி'கவிதை! போர்த்துக் கொண்டு படுத்தாலும் ....!

சொந்தக் காசிலே சூனியம் வச்சிக்கிறது ...
இது காதல் திருமணத்திற்கும் பொருந்தும் !

29 July 2013

தின 'சிரி ' ஜோக்! பிள்ளைங்களுக்கு இந்த ஜெனடிக் நோய் வராம இருக்கணும் !

''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ,ஏன் ?''
''தூக்கத்திலே  எழுந்து  நடந்தாக்கூட ஜோடியா நடக்கிறாங்களே !''

சிரி'கவிதை! டிக்கெட் எடுக்காமலும் இந்த ஊருக்கு போகலாமே !

பஸ் படிக்கட்டிலே தொங்குபவர்கள் டிக்கெட் எடுக்கிறார்கள் ....
ஆனால் போய்சேரும் இடம்தான்  சிலநேரம் மாறிவிடுகிறது !

28 July 2013

தின 'சிரி ' ஜோக்!சிறப்பாய் 'குடி'த்தனம் நடத்தும் தம்பதியர் !

''யோவ் தரகரே ,உங்களுக்கே இது நியாயமா ?''
''எது ?''
''நான் குடிகாரங்கிறதை மறைத்து  கல்யாணத்தை முடிச்சு வைச்சீங்க சரி ...பொண்ணு குடிப்பான்னு ஒருவார்த்தைகூட சொல்லவே இல்லையே !''

'சிரி'கவிதை! கொசு இனத்தை கூண்டோடு ஒழிக்க ...!

கடிக்கிற கொசு சாகிறமாதிரி..
 நம் உடம்பிலும் கரெண்ட்டை
சார்ஜ் பண்ணிக்க முடிந்தால் ...
சந்தோசமா கரெண்ட்டிலே கையை வைக்கலாம் !

27 July 2013

'சிரி'கவிதை! 24 X 7 புரோட்டா மணக்கும் மதுரை !

கற்புக்கரசி மதுரைக்கு முன்னையிட்ட தீ ...
இன்றுவரையிலும் அணையாமல் இருபத்து நான்கு மணி நேரமும் ...
புரோட்டா வேகும் கல்லின் கீழே !

தின 'சிரி ' ஜோக்! டாக்டரிடம் மனைவிகூட முடியலேன்னு சொல்லமாட்டா !

''என்னங்க ,நீங்கதான் டாக்டர் ஆச்சே ,மரணத்தை உணர முடியுமா ?''
''முடியும்னு என்னிடம் ஆபரேசன் செய்துகிட்டவங்க யாரும் இதுவரை சொல்லலே !''
 

26 July 2013

தின 'சிரி ' ஜோக்!அன்று 'தேவதை 'மனைவி , இன்று தேவைதானா ?

''என்னங்க ,நம்ம வீட்டு நாய் என்னைக் கண்டாலே குரைக்குது,ஏன்னு தெரியலே !''
''நாய்ங்க கண்ணுக்கு மட்டும் பேய் வர்றது தெரியும்னு சொல்வாங்க ,அதனால் ஆயிருக்கும் !''


தின 'சிரி ' ஜோக்!வட போச்சேன்னு வருந்தும் டாக்டர் !

''டாக்டர் ,உங்களுக்கு ஏன் வயிறு எரியுது ,பேஷண்ட் எவனும் பீஸ் கட்டாம ஓடிப் போயிட்டானா ?''
''சும்மா ஓடியிருந்தாலும் பரவாயில்லே,நர்சையும் தள்ளிக்கிட்டு போய்ட்டானே !''

'சிரி'கவிதை!பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு !

சாமி பூதம் என்று நம்பிக்கை இல்லாதவர்களும் 
கல்யாணமான பின் ...
பட்டினத்தார் பாட்டிலும் உண்மை இருப்பதை 
உணர்வுபூர்வமாக உணரத் தொடங்குகிறார்கள் !

25 July 2013

தின 'சிரி ' ஜோக்!பாரி வள்ளல் பரம்பரைன்னு நெனைப்பு !

''ஏன்யா பிளேடு பக்கிரி ,உன் பையனுக்கு  போலீஸ் வேலை கிடைச்சும்  ஏன்  அனுப்பலே ?''
''கொடுக்கிற இடத்திலே இருக்கிற நாம ...வாங்கிற இடத்துக்கு போறது .பரம்பரைக்கே அவமானமாச்சே !''

'சிரி'கவிதை!கனவுக்கன்னிகள் கற்பித்த வள்ளுவம் !


இருந்தாலும் மறைந்தாலும் கனவுக் கன்னிகள்
நினைவிலும் கனவிலும் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள் !

24 July 2013

தின 'சிரி ' ஜோக்!செல்ப் ஸ்டார்ட் பைக் வேணும்னா பெண்டாட்டிய உதைக்கலாமா ?

''மாப்பிள்ளே ,என் பொண்ணை தினசரி உதைக்கிறீங்களாமே...உங்களுக்கு என்னதான் வேணும் ?''
''உதைக்காமே ஸ்டார்ட் ஆகிற பைக் வாங்கி கொடுங்க ,உதைக்கிறதை விட்டுர்றேன் !''

சிரி'கவிதை!காதலிக்கு மட்டும் பொருந்தாத தத்துவம் !

CALLசெய்துவிட்டு CUTசெய்பவர்கள் ...
பொருளாதாரப் புலிகளாய் இருப்பார்கள் !

23 July 2013

தின 'சிரி ' ஜோக்!ஓடிப் போய் கல்யாணம்?நல்லா யோசிக்கணும் !

''ஓடிப் போய்  கல்யாணம் கட்டிக்கிறவங்க ரெஜிஸ்டர் ஆபிசுக்குத்தான் போவாங்க ,நீங்க எதுக்கு பாங்குக்கு ஜோடியா வந்து இருக்கீங்க ?''
''உங்கள் கனவை  நனவாக்க நாங்கள் தயார்னு நீங்கதானே விளம்பரம் போட்டு இருந்தீங்க !''


'சிரி'கவிதை?செம்மொழி தமிழுக்கே இந்த சோதனையா ?

பசுவின் மணி ஒசைக்கும் மதிப்பளித்து நீதி சொன்னதெல்லாம் அந்தக் காலம் ...
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட நாதியற்று தவிப்பது இந்தக் காலம் !

22 July 2013

தின 'சிரி ' ஜோக்!மாமனார் கொடாக்கண்டன் ,மாப்பிள்ளை விடாக்கண்டன் ?


''மாசக்கணக்கா டேரா போட்டிருக்கிற மாப்பிள்ளைக்கு நாசூக்கா புரியவைக்க SMSஅனுப்பினது வம்பாப் போச்சா ,ஏன் ?''
''விருந்தும் மருந்தும் மூன்று நாள்ன்னு SMS அனுப்பினது யார்ன்னு தெரிஞ்சுக்காமே வீட்டை விட்டு போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறாரே !''

'சிரி'கவிதை!பேதை தரும் போதையினால் மிதப்பா ?

விமானம் தரை இறங்கிய பின்பும் மிதந்துக் கொண்டுதான் இருக்கிறேன் ...
விமானப் பணிப்பெண்ணாய் என்னவள் !

21 July 2013

தின 'சிரி ' ஜோக்!காதல் கடிதங்களை அக்னியிலே போட்டு எரிச்சுடணும் !

''காதலிக்கிறப்போ நான் எழுதிய கடிதங்களை ,இப்போ நம்ம பையன் படிச்சிட்டான்னு எப்படி சொல்றே ?''
''மொக்கைன்னு தெரிஞ்சும் மோசம் போயிருக்கியே அம்மான்னு கிண்டல் பண்றானே !''

'சிரி'கவிதை!மனைவி 'மை லார்ட் 'டிற்கும் மேல்!

வாய்தா ...
கோர்ட்டில் கேட்க முடிந்த வக்கீலாலும்
வீட்டில் மனைவியிடம் கேட்க முடிவதில்லை !

20 July 2013

தின 'சிரி ' ஜோக்!நடிகையின் புது கணவனுக்கு மூட் அவுட் !


''கல்யாணத்தில் எடுத்த  போட்டோவில்  சிரிச்சுக்கிட்டு இருக்கிற புது மாப்பிள்ளை ,ஒரு போட்டோவில் மட்டும் முறைச்சுக்கிட்டுகிட்டு இருக்காரே ,ஏன் ?''
''சுற்றி நிக்கிறது நடிகையோட டைவர்ஸ் கேஸ்களை டீல் பண்ற வக்கீலுங்க ஆச்சே !''

'சிரி'கவிதை!புருஷன் தொட்டதும் புல்லரிக்க காரணம் ....!

வழுக்கைத் தலையிலும் முடி வளரும் தைலத்தை 
வாங்கித் தேய்த்ததில் நல்ல பலன் ...
உள்ளங்கை முழுவதும் முடி !

19 July 2013

'சிரி'கவிதை!சிற்பியின் குற்றமா ,கடவுளின் குற்றமா ?

எல்லோரும் வணங்கும் கடவுளை வடிக்க 
எந்த சிற்பியாலும் முடியவில்லை !

தின 'சிரி ' ஜோக்!புருஷன் பெண்டாட்டியை விட்டுக்கொடுக்கலாமா ?

''ரயில் கிளம்பியதில் இருந்து உங்க மனைவி தொதொன்னு பேசிக்கிட்டேதான் இருக்காங்க  ,கன்னடத்திலே பேசுறனாலே புரிய மாட்டேங்குது ,,தலை வலிக்குதே  சார் !''
''வலிக்காதா பின்னே ?கன்னடம் புரியுற எனக்கே தலை தலைவலிக்குதே !''


18 July 2013

தின 'சிரி ' ஜோக்!தலைக்கு வந்தது தலை சாயத்தோட போச்சு !

''அவனை தலைமுடி விசயத்திலே ராசியில்லாதவன்னு ஏன் சொல்றே ?''
''வழுக்கை விழுந்ததுன்னு விக்கு வாங்கினான் ,இப்போ விக்கும் நரைச்சுப் போச்சாம் !''

'சிரி'கவிதை!மலிவு விலை மருந்தகம் வந்தா தேவலை !

சர்க்கரை வியாதிக்காரனுக்கு எரிச்சல் தரும் விஷயம்  ...
ரேசன் கடையில் மாதம் முழுவதும்  சீனி மட்டும் ஸ்டாக் இருப்பது !

17 July 2013

'சிரி'கவிதை!சுயநலவாதிகளின் இன்னொரு பெயர் !

நழுவுற தண்ணியிலே நழுவுற மீனாய் நடந்துக் கொள்பவர்களை 
'செல்பிஷ் 'என்பதில் தவறே இல்லை !


தின 'சிரி ' ஜோக்!காதாலே கேட்டுமா உயிரோட இருக்காரு?

''உங்க  பையன் , அவன்  நண்பர்கள்கிட்டே உங்களைக் கேவலமா அறிமுகப்படுத்துறானா ,எப்படி ?''
''அவங்க அம்மாவை 'மம்மி'ங்கிறான்,என்னை 'டம்மி 'ங்கிறானே !''

16 July 2013

'சிரி'கவிதை!உன்னில் விழுந்தேன் எழத்தான் முடியவில்லை !

இதயத்தில் CAT WALK நடந்துக் கொண்டிருந்த 
உலக அழகிகளும்  உள்ளூர் அழகிகளும் எங்கே போனார்களோ தெரியவில்லை ...
 என் கண்ணில்  நீ விழுந்த பின்பு !

தின 'சிரி ' ஜோக்!புருசன் வேணாம் ,வேலைக்காரி வேணும் !

''உங்க வீட்டுக்காரர்  எப்போ காணாமப் போனார் ?''
''வேலைக்காரி வேலைக்கு வராத நாள்லே ருந்துதான் !''
''அடப்பாவமே ,இனி என்ன செய்யப்போறே ?''
''வேற வேலைக்காரியை வச்சுக்க வேண்டியதுதான் !''


15 July 2013

தின 'சிரி ' ஜோக்!அத்தை வீட்டு மொய்னாலும் அத்தாச்சி வேணும் !

''அட நீங்க என்னங்க ,மொய்யை எழுதிட்டு அக்னாலேஜ்மென்ட் கேக்குறீங்க ?''
''நாளைக்கு  நான் மொய் வைக்கலைன்னு எவனும் சொல்லக்கூடாதில்லே ?''


'சிரி'கவிதை!பின்னல் சடைப் போட்டு ,பிச்சிப்பூ ?

எந்த விசேசம் என்றாலும் ...
பியூட்டி பார்லருக்கு சென்று 
ஆயிரம் ஆயிரமாய் செலவழித்து 
அழகழகாய் வலம்வரும் பெண்களைப் பார்க்கையில்
அபத்தமாய் பாட்டி சொல் நினைவுக்கு வருகிறது ...
பெண் தலைவிரிக் கோலம் தரித்திரம் !


14 July 2013

தின 'சிரி ' ஜோக்!கிட்னியை எடுத்துக்கிட்டு வேணா பணம் தருவாங்க !

''யாருய்யா நீ ,108க்கு போன் பண்ணி 1000ரூபாய் கடன் கேக்கிறே ?''
''நீங்கதானே அவசர உதவிக்கு போன் பண்ணச் சொல்லி இருந்தீங்க !''

சிரி'கவிதை!ஜோடிப்பொருத்தம் தேவைதான் ,ஆனால் ...

செருப்பிலே எல்லாம் ஜோடிப்பொருத்தம் பார்க்கக்கூடாது ...
ரெண்டும் ஒரேமாதிரின்னா செருப்பு போட்டுக்கவே வெறுப்பாயிடும் !

13 July 2013

தின 'சிரி ' ஜோக்!நண்டுக்கறி ,நண்டுவருவல் ,நண்டுக் கொழம்பு பிடிக்கும் ஆனா ...

''முதலாளிக்கு நண்டுலே ஆக்கின எல்லாமும் பிடிக்கும் !''
''தொழிலாளிங்க பெர்ம 'நண்டு 'ஆக்கச் சொன்னா மட்டும் ஏன் பிடிக்க மாட்டேங்குது ?''

'சிரி'கவிதை!ஜாக்கெட்டா .சேப்டி மினி லாக்கரா ?

மனைவிமார்கள் கணவனை நெஞ்சிலும் ...
அவன் தந்த  பணத்தை   நெஞ்சுக்கு அருகிலும் வைத்து 
போற்றிப் பாதுகாக்கிறார்கள் !

12 July 2013

தின 'சிரி ' ஜோக்!ஜொள்ளு விட்டா வேலைக் கிடைக்குமா ?

''என் பையனுக்கு எச்சில் நிறையா ஊறுது டாக்டர் !''
''கண்டக்டர் வேலைக்கு அனுப்புங்க ,சரியாப்போகும் !''


'சிரி'கவிதை!இடிமின்னல் நேரத்தில் யோசித்தது !

ஆப்பம் மேல் இடியே விழுந்தாலும் 
இடியாப்பம் ஆகாது !


11 July 2013

தின 'சிரி ' ஜோக்!இளநீராய் இனித்த காதல் ,இப்போ ?

''நீ காதலிக்கு இளநீர் வாங்கிக் கொடுத்ததாலே ,காதலே முறிஞ்சுப்போச்சா ,ஏன் ?''
''தேங்காய் விள்ளல்களை நான் வாங்கிகிட்டது அவளுக்குப் பிடிக்கலே !''

'சிரி'கவிதை!நல்ல சமையலை நள[ன்]பாகம் என்பதால் ...

இடதுகைப் பழக்கமோ ,வலது கைப் பழக்கமோ ...
சமையல் தெரிந்தால் போதும் என்பதே 
இன்றைய மணமகளின் எதிர்ப்பார்ப்பு !


10 July 2013

'சிரி'கவிதை!கன்னியை கடவுளாய் காண்கிறாரோ கவிஞர் ?

'சேலைக் கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா ,
கண்டவர்கள் சொன்னதுண்டா 'ங்கிற பாடலைக் கேட்கையில் நினைவுக்கு வருவது ...
கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் !

தின 'சிரி ' ஜோக்!ஊரே டாஸ்மாக் 'தண்ணி 'காடாயிடுச்சி !

''ஊர்லே மழை எல்லாம் எப்படி பெய்யுது ?''
''தண்ணியா தான் !''

9 July 2013

தின 'சிரி ' ஜோக்!நிம்மதி ...இரு மனைவிகள் தந்தது !

''என்னடா சொல்றே ,ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் தான்  நிம்மதியா இருக்கியா ,எப்படி ?''
''அவங்க ரெண்டு பேர் சண்டையிலே என்னை மறந்துட்டாங்களே !''

'சிரி'கவிதை!இரத்தம் தேவைப் படுவோர்க்கு தருவதில்லை ...ஆனால் ?

இரத்ததானம் செய்வதில் ...
நாம்தான் முதல் இடம் என்று பெருமைப் படமுடியாது ...
நம் விருப்பமின்றி உறிஞ்சப்படும் இரத்தத்தால் 
கொசுக்கள் மட்டுமே வாழ்கின்றன !

8 July 2013

தின 'சிரி ' ஜோக்!மருமகளின் நல்ல 'காரியம் 'மாமியாருக்கு !

'' குளிக்கப் போன எங்கம்மா வழுக்கி விழுந்துட்டாங்கன்னு , டாக்டருக்கு  போன் பண்ணிச்  சொல்லிட்டியா  ?''
''பக்கத்து ஊர் டாக்டருக்கு சொல்லி இருக்கேங்க !''


'சிரி'கவிதை!அன்னைக்கு நிகர் அன்னையே ,என்னைக்கும் !

கோழி மிதித்து குஞ்சு சாகுமானால் ...
நிச்சயமாய்  நாம் நம்பலாம் ...
மிதித்தது தாய்க் கோழியாக இருக்காது !