31 August 2013

ஒரு லிட்டர் பால் ஒரு ரூபாய் கூடினால் ஒரு டீ ?

''ஒரு டீ விலை பதினஞ்சு ரூபாயா ,அநியாயமா இருக்கே ?''
''டீத் தூள் கிலோ ரூபாய் முன்னூறு ஆச்சே!''
''அதுசரி ,ஒரு டீயிலே ஒரு கிலோவா போடப் போறே ?''

ஸெல்ப் ஸ்டார்ட்டர் பேட்டரி மக்கர் பண்ணும் என்பதால் கிக்கருமா?

கிக்கர் உள்ள ஸெல்ப் ஸ்டார்ட்டர் டூ வீலர்களை நம்ப முடிய வில்லை ...
அலோபதி மருந்துடன் சித்தா மருந்தையும் 
சேர்த்து சாப்பிடுங்கள் என சொல்லும் சித்தமருத்துவரையும் நம்ப முடியவில்லை ...
நம்பகமான ஒரு வழி உள்ளதை நம்புவதே நல்லது !

30 August 2013

இப்படி கேட்கும் புருஷனின் மனைவி பூஜிக்கப்பட வேண்டியவள் !

அடுத்தவர் பேச்சைக் கேட்டு கோபப்படுவதிலும் 
அர்த்தம் இருக்கணும் ...
'பத்து ரூபாய் தர்மம் பண்ணுங்க சாமி ,நல்லா இருப்பீங்க 'என்று பிச்சை கேட்பவனிடம் ...
'தர்மம் பண்ணலேன்னா நாசமாப் போயிடுவே'ன்னு தானே அர்த்தம் 
எனக்  கேட்பதில் அர்த்தமே இல்லை !

29 August 2013

'இது'க்கும் டாட் 'காமா 'வந்திருக்கு ?

''என்னது பிச்சைக்காரன் டாட் காமா ?''
''ஆமா ...ஒரு E மெயில் அனுப்பினாப் போதும் ,மீந்து போனதை வந்து எடுத்துட்டு போயிடுவான் !''

அதுக்குத்தானா இந்த கொண்டாட்டம் ?

அமாவாசை வந்தாலே காக்கைகளுக்கு கொண்டாட்டமாய்  இருக்கும் ...
தானும் கருப்பு அமாவாசையும் கருப்பு என்பதால் அல்ல !
எச்சில் கையால் காக்கையை விரட்டாதவன் கூட ...
அன்று மட்டும் முன்னோர்களை நினைத்து காக்கைக்கு முதல் படையல் வைப்பதால் !

28 August 2013

மேஜர் ஆகாதவன் மேனேஜரா வந்தா இப்படித்தான் !

''உங்க மேனேஜருக்கு நக்கல் ஜாஸ்தியா ,ஏன் ?''
''தலைக்கு மேலே வேலை இருக்குன்னு  ஒருநாள் லீவு கேட்டா ...ஹேர் கட் பண்ணிக்க பெர்மிசன் போதுமேங்கிறாரு!''

திருமணம் வேண்டாம் என்ற தீர்க்கதரிசிகள் !

துணி துவைக்க குடிநீரை பயன்படுத்தாதே என கணவன்மார்கள்சொன்னால் ...
மனைவிமார்கள் கேட்கமாட்டார்கள் என்பதால்தான் ,
பொதுநலம் விரும்பிய சில தலைவர்கள் திருமணமே வேண்டாம் என்றார்கள் போலும் !

27 August 2013

புதிய காதலரா பழைய கணக்கை முடிப்பாரு ?

''பீச்சிலே காதலரோட இருக்கும்போது சுண்டல்காரன் வந்து மானத்த வாங்கிட்டாண்டி !''
''என்னவாம் ?''
''போன மாசம் வரைக்கும் உன்கூட சுத்திக்கிட்டு இருந்த ஆளை எங்கே காணாமேன்னு கேட்டுட்டான் !''
''எதுக்காம் ?''
''சுண்டல் கணக்கை செட்டில் பண்ணாம போயிட்டானாம் !''

புத்திசாலிகள் பத்து சதம் என்றால் அதில் NRIக்கள் எத்தனை சதம் ?

தொண்ணூறுசதம் இந்தியர்கள்  முட்டாள்கள் என 
சொன்னதை வாபஸ் வாங்கிக் கொண்டாராம் முன்னாள் நீதிபதி ...
பொய்என்பதைக் கூட உண்மைக்கு புறம்பானது என வார்த்தை ஜாலம் காட்டுவதுபோல் ...
பத்து சதம் இந்தியர்கள்  புத்திசாலிகள் என்பாரோ?


26 August 2013

சேரனின் அடுத்த காதல் படத் தலைப்பு ....?

''சேரன் இயக்கத்திலே ஒரு காதல் படம் எடுக்கலாம்னு இருக்கேன் ,பொருத்தமா என்ன டைட்டில் வைக்கலாம் ?''
''தாமினி ,இனி என் பக்கம்னு வைங்க !''

தாஜ்மகால் காதலின் சின்னமா ,எச்சரிக்கையா ?

தாஜ்மகாலை ...
அன்பின் சின்னம்  என்கிறார்கள் ...
அதீத அன்பும் ஆளைக் கொல்லும் என்பதற்கு எச்சரிக்கை சின்னமாய்தான் என் கண்ணுக்கு படுகிறது ...
பதினான்கு  முறை பிரசவித்து 
முப்பத்தொன்பது வயதிலேயே மரணமுற்ற 
மும்தாஜை நினைத்தால் பாவமாய்த்தான் படுகிறது !

25 August 2013

ராதா எப்பவுமே ராதாதான் !பழைய நினைப்புடா பேராண்டி !

''ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லத் தெரியலே ,உங்க தெருவிலே இருக்கிற பொண்ணுங்க பேரை கேட்டா மட்டும் தலை கீழா சொல்லுவே !''
''அதெல்லாம் இல்லை சார் !''
''என்னாஅதெல்லாம் இல்லே ?''
''ராதாவை  ராதான்னுதான் சொல்லுவேன் ...தாரான்னு தலைகீழா சொல்லமாட்டேன் சார் !''

சினிமா மோகம்தான் இந்த பாடு படுத்துது !

சாத்தானின் சமையல் அறையை  ...
கேள்விப்பட்டு இருப்போம் ,பார்த்தும் இருப்போம் 
ஆனாலும் எதுவென்று நினைவுக்கு வராது ...
ஏன்னா,அதையும் நாம் குணா குகை ஆக்கிவிட்டோமே ! 

24 August 2013

இந்த குணம் புருஷ லட்சணம் ஆகுமா ?

''உன்  புருஷனை மாதிரி அல்பத்தை பார்த்ததே இல்லைன்னு ஏன் சொல்றே ?''
''செருப்பு அறுந்துப் போச்சுன்னு சொன்னா ,நாலு நாள் பொருத்துக்கோன்னு சொல்றார் !''
''ஏனாம் ?''
''கல்யாணத்துக்கு போற இடத்திலே பார்த்துக்கலாமாம் !''

சாப்ட்வேர் வேலைக்கு சம்பளம் அதிகம் ,இதனால் தானே?

வியர்க்க வியர்க்க ஹார்ட்வேர் வேலை செய்பவனை விட ...
ஏசியில் உட்கார்ந்து சாப்ட்வேர் வேலை செய்பவனுக்கு சம்பளம் அதிகம் !
காரணம் என்னவென்றால் ...
தேக வேலைக்கு லட்சம் பேர்என்றால்
மூளை வேலைக்கு சிலபேர்கள்தான்  FIT !  
                                                                                                                  

23 August 2013

என்னவோ ஏதோன்னு பயந்தே போனேன் !

''நாலாவது மாடி ஜன்னலிலே பெயிண்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன் ,மேலேயிருந்து கீழே விழுந்து ...''
''அய்யய்யோ என்னாச்சு ?''
''பெயிண்ட் எல்லாம் கொட்டிப் போச்சு !''

மனைவியினால் அதுவும் கிடைக்கும் ,இதுவும் கிடைக்கும் !

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான் ...
சில வீடுகளில் கணவன்மார்களுக்கு ருசியான சாப்பாடு ...
சில வீடுகளில் கணவன்மார்களின் கூப்பாடு ...
எல்லாமே மனைவி கையில் இருக்கும் கரண்டியின்'கை'ங்கர்யத்தால் !

22 August 2013

பாவம் மனுஷன் ,மனைவிகிட்டே நிறைய வாங்குபட்டிருக்கார்!

''மாப்பிள்ளே ,நீதிபதியா இருந்த  நான்  ,இதுவரை யாருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததில்லைன்னு சொல்றதை நீங்க ஏன்  ஏத்துக்க  மாட்டேன்னு சொல்றீங்க ? '' 
''அந்தக் கொடுமையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே !''

தண்டவாளத்தில் தலை வைத்தும் மரணிக்காத தலைவர்கள் !

கையைக் காட்டினால் நிற்கும்  மினி பஸ் மாதிரி 
1௦௦ கிமீ வேகத்தில் செல்கின்ற  ரயிலும் நிற்கும் என 
நினைக்கும் பாமர ஜனங்கள் ...
ரயில் மறியல் செய்யும் நம்ம ஊர் அரசியல்வாதிகளிடம் இருந்து 
நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது !

21 August 2013

தாலி கட்டிகிட்டவளுக்கு இல்லாத உரிமையா ?

''ஒரு நடிகையை உங்க பைலட் சீட்டிலே உட்கார வச்சதுக்காக சஸ்பென்ட் ஆகி          இருக்கீங்க  ,இதுக்காக வருத்தப் படுறீங்களா ?''
''இன்னொரு தரம் சஸ்பென்ட் ஆனாலும் பரவாயில்லே ,நானும் அந்த சீட்டிலே உட்கார்ந்தே ஆகணும்ன்னு என் பெண்டாட்டி சொல்றதுதான் வருத்தமா இருக்கு !

நினைச்சாலே கண்ணீர் தருதே வெங்காயம் !

கவுன்ட் டௌன் ஆரம்பித்த பிறகும் 
மேலே போக மறுக்கிறது GSLV ராக்கெட் ...
அது அடைய வேண்டிய உயரத்தை 
வெங்காயம் தொட்டுவிட்டதாலா ?


20 August 2013

ஆசை மட்டுமா நூறு வகை ,நோயும்தான் !

''முழு உடல் பரிசோதனை செய்துக்கிட்டு ஒரு மாசமாச்சே ,இன்னுமா என்ன நோய்ன்னு கண்டுபிடிக்க முடியலே ?''
''என்ன நோய் இல்லைன்னு கண்டுபிடிக்கத்தான் முடியலையாம் !''

டாட்டா .பிர்லா பொறந்ததும் 'லேபர் 'ரூமில்தான் !

லேபர் ரூமிலே பிறந்தாலும் கூட ...
சாகும்போது லேபராய் இருப்பதும் ,இல்லாததும் 
அவரவர் கையிலேதான் இருக்கிறது !

19 August 2013

NECK less குண்டு மனைவிக்கு நெக்லஸ் எதுக்கு ?

''நீ கேட்ட நெக்லசை உன் வீட்டுக்காரர் வாங்கிக் கொடுத்தாரா ?''
''உனக்குத்தான் கழுத்தே இல்லையே ,நெக்லஸ் எதுக்குன்னு கிண்டல்தான் பண்றார் !''

தன் குறையை மறைக்கும் மனிதன் !

பால் குடிப்பது பூனையின் இயல்பு ...
சந்தேகப் படுவது மனிதனின் இயல்பு ... 
'இந்த பூனையும் பால் குடிக்குமா 'என்று கேட்பது
எந்த வகையில் நியாயம் ?

18 August 2013

குடிகாரனின் சப்பைக்கட்டுக்கும் ஒரு அளவில்லை!

''நீங்க மொடாக்குடியன் ஆவதற்கு  தூண்டுகோலாஇருந்தது லேன்ட் லைன் போன்தான்னு எப்படி சொல்றீங்க ?''
''ஓயாமே டிரிங்க் ,டிரிங்க்ன்னு மணி அடிச்சு ஞாபகப்படுத்திக்கிட்டு இருந்ததே !''

காசு பணம் துட்டு மணி இருந்தாதான் மதிப்பு !

சாமிகளிலும் டாட்டா ,பிர்லாக்கள் உண்டு ...
தரித்திர நாராயணன்களும் உண்டு !

17 August 2013

வயசுப் பொண்ணுங்களுக்கு வரக் கூடாத கோளாறு !

''டாக்டர்  ,என் மகளுக்கு வந்திருக்கிறது வயிற்றுக் கோளாறு இல்லே ,வயசுக் கோளாறுன்னு ஏன் சொல்றீங்க?''
''கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா வேற எப்படிச் சொல்றது?''

'குடி'மகன்களுக்குப் பிடித்த ஆத்திச்சூடி !

அரசுப் பேருந்துகளில் திருக்குறளை 
எழுதியிருப்பதைப் போல ...
டாஸ்மாக் கடைகளில் ஊக்க'மது 'கைவிடேல் என எழுதப்பட்டாலும் வியப்பதற்கில்லை !

16 August 2013

நடிகைக்கு கோவில் என்றால் சிலை எப்படி ?

''அட பரவாயில்லையே,அந்த நடிகை தனக்கு 

கோவில் கட்டவேகூடாதுன்னு ரசிகர்களை 

தடுத்து விட்டாராமே !''

''அடநீங்க வேற ,நீச்சல் உடையிலே இருக்கிற மாதிரி சிலைன்னு சொன்னதும் அவங்களுக்கு பிடிக்கலையாம் !''


கணவர்கள் அடுத்த பிறவியில் ஆக நினைப்பது !

பலகோடி ஆண்டுகளாக உருவம் மாறாமல் இருக்கிறது என்பதற்காக கரப்பான்பூச்சி மேல் எனக்குப் பொறாமை இல்லை ...
என் மனைவியை பயமுறுத்தும் வித்தையைக் கற்று வைத்திருக்கிறதே !

15 August 2013

தின 'சிரி ' ஜோக்!தலை கீழாய் நின்று கொடி வணக்கம் செய்ய முடியாதே !

''தலைநிமிர்ந்து கொடிவணக்கம் செய்யவேண்டியவங்க ஏன் தலைக் குனிஞ்சு நிற்கிறாங்க ?''
தலைவர் ஏற்றின கொடி தலைக்கீழா பறக்குதே !

'சிரி'கவிதை!வீட்டில் சுதந்திரம் உள்ளதா உங்களுக்கு ?

எறும்புகளே ...
எந்தக் கோட்டையில் கொடியேற்ற 
 நீண்ட அணிவகுப்பு நடத்துகிறீர்கள் ?
பாதுகாப்பாய் எப்படி வாழ்வதென்று 
உங்களிடம் இருந்துதான் நாங்கள் கற்றுக் கொள்ள நினைக்கிறோம் ...
பிரதமரே பாதுகாப்பாய் குண்டு துளைக்காத கண்ணாடி பின்னால் இருந்து எங்களை வாழ்த்துவதால் !


என் நம்பிக்கை ...
இது ஜோக்காளியின் 6௦௦வது பதிவு !இதனால் 
இன்றைய சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க மாட்டீர்கள்  என்று நம்புகிறேன் ! 


14 August 2013

தின 'சிரி ' ஜோக்!இது மனைவியின் சந்தேகமா ,முன் எச்சரிக்கையா ?

''வேலைக் காரி என் ஜீன்ஸ் பேன்ட் .சட்டைப் போட்டுக்கிட்டு  வர்றாளே ,ஏன் கொடுத்தே ?''
''என் சேலையைக் கட்டிக்கிட்டு வந்தா ...நான்னு நினைச்சு அவளை  நீங்க  கட்டிப் பிடிச்சிறக்கூடாதுன்னுதான் !''


'சிரி'கவிதை!முரண்பாடுகள் நிறைந்தது சினிமா இலக்கணம் !

எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் மாட்டியவர்கள் சிலநாள் அழகு ஹீரோயின்களாக   ...
இயற்கையாகவே அழகாய் இருப்பவர்கள் 
காலமெல்லாம் எக்ஸ்ட்ரா நடிகைகளாக ...

13 August 2013

தின 'சிரி ' ஜோக்! அஞ்சு .பத்மாவுக்குப் பின்னாலே பையன் அலைஞ்சா ...

''அப்பனுக்குப் பையன் தப்பாமப் பொறந்து இருக்கானா ,எப்படி ?''
''பக்கத்து வீட்டுப் பொண்ணுங்க அஞ்சு ,பத்துக்குப் பின்னாடி பையன் அலையிறான் ,அப்பன்காரன் கையிலே காசில்லாமே அஞ்சு பத்துக்கு அலையிறாரே !''

'சிரி'கவிதை! I LOVE YOU...சுருக்கமாய் சொல்லலாமா ?

பல பேரின் காதல் ...கல்யாணத்தில் முடியாமல் இழு இழு என்று 
இழுத்துக் கொண்டே இருக்கக் காரணம் ...
முதலில் காதலை I L U [இழு ]என்று SMSசெய்ததாலா ?

12 August 2013

தின 'சிரி ' ஜோக்! கணவனின் சந்தோசம் இதற்குத்தானா ?


  • ''என்னங்க ,அரசாங்க வேலை  கிடைச்சாச்சு ... நான் சனி ...ஞாயிறு வீட்டுலேத்தான் இருப்பேன் !''
  • ''ரொம்ப சந்தோசம் , நீ  'சனி''ங்கிறதை இப்போவாவது ஒத்துக்கிட்டியே !''

'சிரி'கவிதை!இந்த இசையை ரசிக்க முடியலே !

 விடாமல் அடிக்கும் 'டய்ங் டய்ங்' மணி சத்தமும் ...
இடை இடையே சங்கொலி சத்தமும் ...
'பாடியை சீக்கிரம் தூக்குங்கடா 'என்றுச் சொல்ல வைத்து விடுகிறது !

11 August 2013

தின 'சிரி ' ஜோக்! ராணியின் மோகம் யார் மீதோ ?

''ராஜாவின் பார்வை ராணியின் மீதே இருக்கிறதே ,ஏன் ?''
''இருக்காதா பின்னே ,அந்தப்புரச் சயன அறையில் ஒரு ஆணின் நிழலைப் பார்த்து விட்டாரே !''


'சிரி'கவிதை!வசதிகள் போக்குமா உடலின் அசதியை ?

மாவு ஆட்ட  சோம்பல் ...கிரைண்டர் வந்தது 
கல்லைக்  கழுவ சோம்பல் ...டில்டிங் வந்தது 
வழித்து எடுக்க சோம்பல் ...பாக்கெட் மாவு வந்தது 
தோசை வார்க்க சோம்பல் ...பிரிட்ஜில் மாவு 
டாக்டரிடம் போக சோம்பல் ...எழுந்து நிற்க முடியாமல் !

10 August 2013

தின 'சிரி ' ஜோக், !நடிகையின் பிறப்புரிமையா அது ?

''அட பரவாயில்லையே,புருஷன் டைவர்ஸ் கேட்டாலும் அந்த நடிகை கொடுக்க முடியாது  சொல்றாங்களாமே ?''
''டைவர்ஸ் நீங்க என்ன கேக்கிறது ,நான்தான் பண்ணுவேன்னு சொல்றாங்களாம் !''
'சிரி'கவிதை!கரெண்ட் பில் எப்படி குறையும் !


உடனே குப்பையில் எறியவேண்டியதை
நான்கு நாட்கள் கழித்து  தூக்கி  எறியவும் 
நமக்கு தேவையாய் இருக்கிறது 'பிரிட்ஜ் '!

9 August 2013

தின 'சிரி ' ஜோக்! உப்பு போடத் துப்பில்லே,ஆனா வாய் ?

" சாப்பிட்டவங்க 'உப்பில்லை ,நமக் நஹி ,நோ சால்ட்,உப்பு லேதுன்னு சொல்றாங்க,சமையலிலே கவனம் வேணாமா,மாஸ்டர் ? " 
"நாலு பேர் நாலு விதமா சொல்லுவாங்க அதையெல்லாம் கண்டுக்காதீங்க முதலாளி ! "

'சிரி'கவிதை!கும்கி யானையின் கேள்வி !

ஏ மானிடனே ...
வெந்ததைத்தின்று விதிவந்தால் சாவோம்என்பதை
உன்னுடனே வைத்துக் கொள்ளக் கூடாதா ?
வெந்ததை உண்டக்  கட்டியாய்  உண்ணக் கொடுத்து 
எம்மினத்தை துரத்தும் இனத்துரோகியாக்குவது நியாயமா ?

8 August 2013

தின 'சிரி ' ஜோக்! தலைவர் 'வண்டு முருகனின் 'வாரிசா ?

''வரலாறு தெரியாமே தலைவர் உளறிக் கொட்டி மதப் பிரச்சினையை உண்டாக்குறாரா ,எப்படி ?''
'' பாண்டவர்களின் பாரம்பரியத்தில் வந்தவரை மதம் மாற்றி போப்''பாண்டவர் ' ஆக நியமனம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்னு அறிக்கை வெளியிட்டு இருக்காரே !''

'சிரி'கவிதை! வேகம் விவேகமல்ல ,அதுக்காக இப்படியா ?

முயலை வென்ற ஆமை ...
அரசின் கோப்பிடம் தோற்றது !
 

7 August 2013

தின 'சிரி ' ஜோக்! வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி தரும் போராட்டம் !

''வழக்கமா ரயில் போறவரைக்கும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் ,இப்போ ரயிலுங்க வரிசையா நிற்குதே ,ஏன் ?''
''கேட் கீப்பர்ஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி  ரயில் நிறுத்தும் போராட்டம் பண்றாங்களாம் !''

சிரி'கவிதை ? தாய் மனம் பூவினும் மெல்லியதா ?

குரங்கு கூட ஈன்ற பின்னும்  தன் குட்டியை 
தன்னுடனே சுமந்துக் கொண்டே திரிகிறது ...
இதைப் பார்த்தபின்பும் பிறந்த சிசுவை குப்பையில் வீச 
சில  'நாய் 'மார்களுக்கு எப்படி  மனசு வருகிறதோ ?

6 August 2013

தின 'சிரி ' ஜோக்! கேரளக் குட்டியை மணந்ததால் வந்த குழப்பம் !

''நான்  காதலிச்சு  கல்யாணம் செய்துக்கிட்டது  ,என் பையன் மூலமா உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
''மலையாளம் என் 'தாய் 'மொழி ,தமிழ் என் 'தந்தை 'மொழின்னு 
பயோ டேட்டாவிலே எழுதி இருக்கானே !'

'சிரி'கவிதை!தனிக் குடித்தனம் போகத் தடுக்கும் தாய்ப் பாசம் !

திருமணமானவுடன் ஆணின் வாழ்க்கை ...
வால் கிளாக் பெண்டுலம் போல் 
அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அலைகிறது ...
இரு பெண்களின் தயவால் !

5 August 2013

தின 'சிரி ' ஜோக்! பொண்ணு பிடிக்கலைன்னு இப்பவா சொல்றது ?

''விடிஞ்சா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் ,ஏன் சோகமாவே இருக்கீங்க ?''
''பொண்ணு பிடிச்சிருக்கான்னு இப்பக்கூட  என்கிட்டே யாரும் கேட்க மாட்டேங்கிறாங்களே !''