31 October 2013

பேஸ் புக் வடிவில் வந்த எமன் !

எமன் எருமை வாகனத்தில் வருவான்னு சொல்வார்கள் ...
இந்த நவீன காலத்தில் ...
சென்னையில் பணிபுரிந்த சாப்ட்வேர்  என்ஜினியருக்கு பேஸ் புக் வடிவில் எமன் வந்துள்ளான் ...

சர்வருக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம் ?

''சர்வர் யாருமே ஒத்துழைக்காம நஷ்டமாகி ஓட்டலை மூடிட்டீங்க ...கம்ப்யூட்டர் சென்டர் வைங்கன்னு  சொன்னா ,ஏன் வேண்டாங்கிறீங்க?''
''அதுக்கும் 'சர்வர் 'ஒத்துழைப்பு  தேவைப்படுமே!''

30 October 2013

மனைவி குண்டாயிருந்தா இப்படியா கிண்டல் பண்றது ?

''என்னங்க ,குக்கரைப் பார்த்தா என் ஞாபகம் வருதா ,ஏன்  ?''
''அதுவும் வெயிட்டை  தூக்க  முடியாம எந்திரிச்சு ,உன்னை மாதிரியே  'ஸ் ..ஸ் 'ன்னு சத்தம் செய்யுதே   !''

இது காதல் தோல்வி தற்கொலை அல்ல !

 செய்தி தாளில் சமீபத்தில் ஒரு தற்கொலை செய்தி... 
விஷம் குடித்து தற்கொலை ...
           அய்யோ பாவம் எனத்தோன்றியது!
புலி வேஷம் கட்டி ஆடுபவர் ...
            இவருக்கென்ன கஷ்டமோ ?

29 October 2013

ரஜினி காந்த் ,பிரியங்கா சோப்ரா ...யார் நெனைப்பு சரி ?

நீங்கள் ஏன் அரசியலுக்கு வர விரும்பவில்லை என ...
நம்ம ஊர் சூப்பர் ஸ்டாரைக் கேட்டபோது ...
அடிப்படையில் சில மாற்றங்கள் வந்தால் மட்டுமே ,நான் அரசியலுக்கு வருவதில் அர்த்தம் இருக்கும் என்று கூறினார் !

I T வேலை என்பதும் இப்படித்தானா ?

''முதலாளிகிட்டே கால்லே ஆணின்னு ஒருநாள் லீவு கேட்டது தப்பாப் போச்சா .ஏண்டா ?''
''நாளையிலிருந்து பம்பரமா சுத்தி சுத்தி  வேலைப் பார்க்கணும்னு சொல்றாரே !''


28 October 2013

மனிதம் மறந்தவர்களுக்கு மகாத்மாவும் ,மலாலாவும் ஒன்றுதான் !

அன்று ...
'இந்து 'மகாத்மாவைக் கொன்றது இந்து மதத் தீவிரவாதம் ...
இன்று ...
'முஸ்லீம் 'மலாலாவைக் கொல்லத் துடிக்கிறது  முஸ்லீம் தீவிரவாதம் ..

தீர்த்தம் குடிப்பதில் தீர்க்கமான முடிவு ?

''என்னைப்பார்த்து,குடிகாரன்பேச்சு விடிஞ்சாலே போச்சுன்னு கேவலமா பேசுறாங்க ,அதனாலே ....''
''குடிக்கிறதை நிறுத்தப் போறீங்களா ?''
''ஊஹும் ...விடிஞ்ச பிறகு குடிக்கப் போறேன் !''


27 October 2013

ஒட்டு கேட்பது பெண்கள் குணம் மட்டுமல்ல !

அடுத்தவர் பேசுவதை ஒட்டுகேட்பது பெண்கள் குணம் என்றுதான் நம் தமிழ் திரைப்படங்களில் காட்டி வந்து இருக்கிறார்கள்...

கிளி மூக்கு பொண்ணுக்கு மூக்குடைந்த மாப்பிள்ளையா ?

''தரகரே ,நீங்க சொன்ன பையன் ...எல்லா விசயத்திலேயும் மூக்கை நுழைச்சி 'மூக்குடை'படுவாராமே ,உண்மையா ?''
''அப்படின்னா தழும்பு இருக்குமே ,நீங்களே நேரிலே பார்த்து முடிவு பண்ணுங்க !''

26 October 2013

மனைவிக்கு சுகர்ன்னு கணவனுக்கு வந்த கஷ்டம் ?

''என்ன முத்தம்மா .சீனிவாசன்ங்கிற என் பெயரை  மாற்றிகிட்டுதான்  பக்கத்திலே  வரணும்னு அடம் பிடிக்கிறியே ,ஏன் ?''
''சக்கரை கூடுதலா இருக்கு ...சீனி 'வாசனை 'கூட பக்கத்திலே வராம பார்த்துக்குங்கன்னு , டாக்டரு கறாரா சொல்லி இருக்காருங்க !''

'சின்ன வீடு'க்கு அங்கீகாரமா இந்த தீர்ப்பு ?

முதல் திருமணத்தை மறைத்து  2வது திருமணம் செய்திருந்தால் ,ஹிந்து திருமண சட்டப்படி கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு 2வது மனைவிக்கும் உரிமை உண்டு ...

25 October 2013

பொம்பள டாக்டரையும் நம்ப முடியலே !

கோவிலபாக்கம்  சகோதரிகள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் ...
சூலமங்கலம் சகோதரிகளைத் தெரியும் ...
யாரிந்த புது சகோதரிகள் ?

சமர்த்துப் பேச்சால் கணவனை ஜெயிக்கலாம்...ஆனால் ?

''இந்த ஒரு கீரைக்கட்டை ஐந்து ரூபாய்னு சொல்றீயே ,நேற்றுக்கூட இரண்டு ரூபாய்னு தானே சொன்னே ?''
''இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலே.. .அந்த கீரைக்கட்டு இப்பவும் இருக்கு ,ஒரு ரூபாய்க்கே தர்றேன் ,வாங்கிகிறீங்களா ?''

24 October 2013

கற்பழிப்பை காவல் நிலையத்தில் சொல்லலாமா ?

தங்கள் வாகனம் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் செய்யபடாமல்  ,தெருக்களில் நின்று கொண்டிருக்கிறது ...
இதனால் திருடு போக வாய்ப்புள்ளது ...

அவர் கோபப் படுவதிலும் நியாயம் இருக்கே !

''கடன்காரங்ககிட்டே இருந்து அசலும் ,வட்டியும் 'கறந்து 'வாங்க முடியலேன்னு பாங்கை இழுத்து பூட்டிட்டு போயிடுவீங்களா ?''
''ஏன் இப்படி கேக்குறீங்க ?''
''நான் மாட்டு லோன் கேட்டா ,பால் கறக்கத் தெரியுமான்னு கேக்குறீங்களே !''


23 October 2013

சினிமா சீர்படுத்தலே ,சீரழிக்குது !

சென்ற வாரம் நடந்த கொடூரம் ...
வங்கி மேலாளரைக் கொன்ற ஆறுபசங்க...  
மோப்ப நாய்க்கு டிமிக்கி தர ...

நல்லது மட்டுமே நினைக்கும் நண்பேண்டா?

'நம்ம ஆறுமுகம் ஆம்புலன்ஸ் சக்கரத்தில் விழுந்து செத்துட்டான்னு ,அதே வண்டியிலேயே பாடியை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துட்டாங்கலாமே ?''
''அட பரவாயில்லையே ,கெட்டதிலேயும் நல்லது நடந்துருக்கே !''

22 October 2013

IQ இல்லைனா கல்தாதான் !

''உணவு மந்திரிக்கு கல்தாவாமே ...ரேசன் கடையிலே இலவச வேட்டி சேலை வாங்க வந்த நெரிசல்லே சிக்கி நாலு பேர் இறந்தாங்களே ,அதுக்காக இந்த கல்தாவா ?''
''அதுக்காக இல்லை ...'கியூ ' பிரிவு  போலீசார் வரிசையை ஒழுங்குபடுத்தலைன்னு  கண்டனம் தெரிவிச்சாராம் !''

நாம் எதில் மயங்குகிறோம் ?

நமக்கு தேவை இல்லாததைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்கிறோம் ...
நடிகை நடிகர்கள் ,அவர்கள் வம்சாவளி ...

21 October 2013

'கணக்கு 'பண்ணும் வாத்தியார் !

''படியிலே தாவி தாவி,மாடிக்கு வந்த பையனை மொத்துமொத்துன்னு  மொத்துறார் ...கணக்கு வாத்தியாரை ஏண்டா கட்டிக்கிட்டோம்னு இருக்குடி !''
''ஏனாம் ?''
''எதையுமே 'ஸ்டப் பை ஸ்டப் 'பா  செய்யணுமாம் !

படுக்கைமேல் இவருக்கு பிடித்த காரியம் !

அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடைப் பிடிப்பான் என்பதை நிரூபித்துள்ளார் ...
திரிபுரா மாநில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சமர் ஆசார்ஜி என்பவர் !

20 October 2013

கடவுளும் எவ்வளவுதான் தாங்குவார் ?

''சாமி சிலை நொறுங்கி கிடக்குன்னு என்னை ஏன் கைது பண்றீங்க ?''
''என் பாரத்தை உன் மேலே போட்டுட்டேன்னு  நீங்க சொன்னதை நாங்க கேட்டுகிட்டுதானே இருந்தோம் !''

ஐ போனுக்காக ஐ யையும் விற்பார்களோ?

கண்ணை விற்று சித்திரம் வாங்கலாமா என்ற  நமது பழமொழியை  பொய்ப்பித்து விட்டார்கள் சீனர்கள் ...

19 October 2013

சாப்பாட்டு ராமனுக்கு படிப்பு ஏறணும்னா....!

''என்னங்க ,நம்ம பையனுக்கு வித வித வாசனையோடு நான் சமைச்சுக் கொடுக்கிறதை ஏன் நிறுத்தச் சொல்றீங்க ?''
''படிப்பு வாசனை தெரிஞ்சுகிட்டு இந்த வருசமாவது பாஸாகிற வழியைப் பார்க்கட்டுமே  !''

மீண்டும் வேண்டாம் , தர்ம[மில்லா]புரி சம்பவம் !

மறுபடியும் ஒரு தர்மபுரி சம்பவம் நடக்க கூடாதுன்னு வேண்டிக்குவோம் ...

18 October 2013

காதல் இப்படியும் தவிக்க வைக்குமோ ?

''உனக்கு லவ் லெட்டர் கொடுத்தவர் ப்ராய்லர் கோழிக்கறிக் கடை வச்சிருப்பார் போல இருக்குன்னு ஏன் சொல்றே ?''
''புரட்டாசி மாசம் எப்போ முடியும்னு 
காத்துக்கிடக்கிற ப்ராய்லர் கடைக்காரன் மாதிரி ,உன் பதிலுக்காக தவிச்சுக்கிட்டு இருக்கேன்னு எழுதியிருக்காரே !

இன்று முதல் இந்தியா 'இன்ஸ்டன்ட் 'வல்லரசு !

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.7 %மாக குறையுமென்று உலக வங்கி எச்சரிக்கிறது ...
2020ல் இந்தியா  வல்லரசு ஆகுமென்று அய்யா

17 October 2013

இருக்கிற பெண்டாட்டியை காப்பாத்திக்க ....!

''என்னங்க ,சிறந்த மேக்கப்மேனுக்கான  பரிசு வாங்கி இருக்கீங்க ,கட்டிக்கிட்ட பெண்டாட்டி எனக்கு மேக்கப் போடமாட்டேன்னு  ஏன் சொல்றீங்க ?''
'' சுமாரா இருந்த மொத பெண்டாட்டிக்கு மேக்கப் போட்டேன் ...அவளையும் ஒருத்தன் தள்ளிக்கிட்டு போய்விட்டானே !''


ஆடம்பர உலகம் இது !

ஆழ்கடலின் அமைதியை ...
அலைகளின் ஆர்ப்பாட்டத்தால் யாராலும் உணர முடிவதில்லை !

16 October 2013

! நிசப்தம்: திருட்டு சாமியார்கள்

! நிசப்தம்: திருட்டு சாமியார்கள்...ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுகிறவன் இருக்கத்தானே செய்வான் ?

மனைவி ,சயனைட் எது பெட்டர்?

''என்னங்க ,சயனைட்னா என்னான்னு கேட்டா 'அதுவும் உன்னே மாதிரிதான் ஆனால் குணத்திலே நேர் எதிர் 'னு சொல்றீங்களே ,எப்படி ?''
''அது உடனே ஆளைக் கொல்லும்,ஆனா நீ அப்படி இல்லையே !''


NRI க்கள் அந்நிய நாட்டில் சுதந்திர பிரஜைகள் !

அமெரிக்க நரி நாட்டாண்மை செய்தே கிடைக்கு ரெண்டு ஆடுகளை தின்று கொழுத்துப் போய் திரிவது கருத்துக்கணிப்பில் நிரூபணம் ஆகியுள்ளது ...

15 October 2013

மனைவி அமைதியா இருந்தா பரவாயில்லை ,மாணவன் ?

''கேட்ட கேள்விக்கு பசங்க யாரும் பதில் சொல்லாததால் வாத்தியார் நொந்து போய்விட்டாரா ,அப்படி என்ன கேட்டார் ?''
''முட்டாளோட கேள்விக்கு பதில் சொல்லக் கூடாது ...புரிஞ்சுதான்னு கேட்டார்!''

கொசுக் கடியில் இருந்து விடுதலையாக ....!

தக்காளிக்கு கொசுவை விரட்டும் சக்தி உண்டென்று ஆராய்ந்து கண்டுபிடித்து இருக்கிறார்கள் ...
தக்காளி சாறை பூசிக் கொள்வதா ?
தக்காளி சாஸை தடவிக் கொள்வதா ?
தக்காளி ரசத்தைக் குடித்தால் போதுமா ?
தக்காளியை கடித்தாலே போதுமா ?
தக்காளி செடியை படுக்கையை சுற்றி வைத்துக் கொள்ளலாமா ?
தக்காளியை  படுக்கை முழுவதும் பிழியலாமா ?
இதில் எதை செய்தால் கொசுக்கடியில் தப்பிக்கலாம் என்று ஆராய வேண்டியது உங்கள் பொறுப்பு ...
இதுக்கு கொசுக்கடியே தேவலை என்றால் ...விட்டு விடுங்கள் !
14 October 2013

மனைவியின் சக்தி வாய்ந்த ஆயுதம் !

''என்னங்க ,ஆயுத பூஜையில் வைக்க ஆயுதம் கொண்டு வரச் சொல்லிட்டு ,கையிலே சின்ன பாட்டிலை எதுக்கு கொடுக்கிறீங்க ?''
''கண்ணீரைப் பிடிக்கத்தான் ...அதைதானே நீ 
ஆயுதமா பயன்படுத்தி காரியம் சாதிச்சுக்கிறே!''

இந்திய பல்கலைகழகங்கள் TOP10ல் வரும் ...எதில் ?

உலகத்திலே  தலைசிறந்த நூறு பல்கலைகழகங்களில்  ஒன்றுகூட இந்தியாவில் இல்லையாம் ...
இந்த ஆராய்ச்சி முடிவை அறிவித்தவர்கள் ...
நன்கொடை எனும் முக்கிய காரணியை முக்கிய விசயமாய் எடுத்துக் கொண்டு புள்ளி விவரத்தை திரட்டவில்லை போலிருக்கிறது !

13 October 2013

எலைட் பார் விளம்பரத்திலே பஞ்ச் டயலாக்கா ?

''பேப்பரில்  ,டாஸ்மாக் கடை ஏசி  வசதியுடன்  எலைட்  பார் விளம்பரத்திலே பஞ்ச் டயலாக்கா ,எப்படி ?''
''போருக்கு போகாதவன் அரசனும் இல்லை .பாருக்கு வராதவன் குடிமகனும் இல்லைன்னுதான் !''


ஜெயிக்கப் போறது கொள்கையா ?காசு பணமா ?

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இருந்து வாக்காளர்களுக்கு ...
ஓட்டு போட்டதற்கான ஒப்புகைச் சீட்டை தேர்தல் கமிஷன் தரவிருக்கிறதாம்!
அதிலே எந்த கட்சிக்கு ஓட்டுபோட்டுள்ளார்கள் என்ற விபரமும் இருந்தால் பேமென்ட்டுக்கு வசதியாய் இருக்கும் என ஓட்டை விற்கும் இந்நாட்டு மன்னர்களும் ,கட்சிகளும் எதிர்ப்பார்க்கிறார்கள் !
இதுவரை குதிரை பேரம் MLA,MPகளுடன் தான் நடந்து கொண்டுள்ளது ...
இனிமேல்  வாக்காளர்களுடணும் நடக்கும் !வாழ்க 'பண'நாயகம் !

12 October 2013

அந்த நர்ஸ், 2013 மிஸ் சென்னைனா பரவாயில்லே ...இல்லைன்னா?

''அழுது வடிஞ்சுகிட்டு இருந்த ஆஸ்பத்திரியிலே, புது போர்டு வைச்சதும் ஆண்கள் கூட்டம் அலை மோதுதே ,எப்படி ?''
''மிஸ் சென்னை பட்டம் வென்ற அழகி ,நர்ஸாய் பணிபுரியும் பெருமை படைத்ததுன்னு விளம்பரம் பண்ணி இருக்காங்களே !''

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொண்டால் ...?

நம்ம ஊர் லாரி,பஸ்களின் பின்னால் ...
பத்து மீட்டர் இடைவெளிவிட்டு வரவும் என்றெழுதி இருப்பதை படித்து இருப்போம் ...
சீனாவில் வெண்சோ நகரிலுள்ள இரு பாலர் பள்ளி ,கடைபிடிக்க  வேண்டிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது ...
மாணவர் மாணவி இடையே எப்போதும் அரை மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது கூட பரவாயில்லை ...
ஹான்க்சோ நகரில் உள்ள பள்ளி அறிவிப்பை படித்தால் அழுவதா  சிரிப்பதாவென்று புரியவில்லை !
மாணவனுக்கும் மாணவனுக்கும் .மாணவிக்கும் மாணவிக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டுமாம் !
தலைக்கீழாய் பொறந்து இப்படி ஏன் தலைக்கீழாய் அலைகிறார்கள் என்று புரியவில்லை !11 October 2013

நையாண்டி படத்து பேர் மட்டுமில்லே !

''இன்னைக்கு ரீலிசான படத்தைப் பார்த்தியே ,உனக்கென்ன தோணுது ?''
''அந்த நடிகையும் ,டைரக்டரும் சண்டை போடுற மாதிரி ,நம்மளை எல்லாம் நையாண்டி பண்ணிக்கிட்டு இருந்திருக்காங்கன்னு தோணுது !''

திருமணமாகா பெண்களுக்கு ஆயுள் குறைவு !

அமெரிக்க கலிபோர்னியா பல்கலைகழகம் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளது ...
திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் ...
திருமணம் முடித்த பெண்கள் ...
இருவரில் அதிக நாள் உயிரோடு இருப்பது திருமணமான பெண்கள்தானாம் !
காரணம் ,அவர்களின் கையில் பணப் புழக்கம்  கூடுவதால் ஏற்படும் மகிழ்ச்சிதானாம்  !
நம் ஊரிலும் பல்கலை கழகங்கள்இருக்கின்றன ...
இதுபோல் ஆண்களை ஆய்வு செய்து முடிவை வெளியிட்டால் ...
ஆண்கள் தங்கள் ஆயுளை கூட்டிக்கொள்வதா...
குறைத்துக் கொள்வதாவென்று ஒரு முடிவுக்கு வர வசதியாய் இருக்கும் !

10 October 2013

காண்டம் என்றால் ஆங்கில அர்த்தமே வேறு !

''பதுங்கு குழியை பார்வையிட்ட மன்னர் ...இதென்ன ஒதுங்கு குழியான்னு ஏன் கோபமா சத்தம் போடுறார் ?''
''உள்ளே நாலு காண்டம் கிடக்குறதை பார்த்துட்டாரே !''

காதலிக்கவும் இனி கற்றுக் கொள்ளலாம் !

இன்னும் சில வருடங்களில் ...
டாக்டர் வக்கீல் ஆடிட்டர் போல் 
காதல் ஸ்பெசலிஸ்ட்களும் கடை திறக்க இருக்கிறார்கள் ...
குறைந்து விடுமா ?ஒரு தலைக் காதல்...
மறைந்து விடுமா ?ஆசிட் வீச்சுக்கள்...
காதலர்கள் தற்கொலைகள் காணாமல்
போய்விடுமா? 
விடை காண காத்திருப்போம் ...
2014ம் ஆண்டு முதல் கொல்கத்தா பிரெசிடென்சி 
பல்கலைகழகம் 'காதல் 'படிப்பை துவங்குகிறது !
காதல் ஏன் வருகிறது ?
காதலின் நன்மை தீமைகள் என்னவென்று 
சொல்லித்தரப் போகிறார்களாம் !
இந்த படிப்பில் சேர காதலித்து  இருக்க வேண்டுமா ?
காதலில் தோற்றவர்களுக்கு கட்டண சலுகை உண்டாவென்று இனிமேல் தெரிய வரும் !
புதுப் பாடப் பிரிவில் ...
கள்ளக் காதல்,காமசூத்ரா விளக்கங்களும் தந்தால் நாட்டிற்கு மிகவும் நல்லது !

9 October 2013

இணையத்தில் பெண்கள் மேய்வதும் ,ஆண்கள் ....?

இந்திய ஜனத் தொகையோ 120கோடி ,அதில்  இணையத்தை பயன்படுத்துவோர் 15கோடி ,அதில் ஆண்களின் எண்ணிக்கை 9கோடி ,
6கோடி பெண்களில் ...
பதினெட்டில் இருந்து முப்பத்தைந்து வயதுள்ள 
ஆயிரம் பெண்களை சர்வே செய்ததில் அவர்கள் இணையத்தில் பார்ப்பது ...
உடை ,உணவு ,நகைகள் சம்பந்தமாகத் தானாம் !
இது கூகுள் சர்வே ...
பெரும்பாலான ஆண்கள் எதைப் பார்க்கிறார்கள் என்பதையும் சர்வே செய்தால் ......?அவ்வ்வ்வ் ...
கூகுள் ஆண்டவர் காப்பாற்றி விட்டார் என்றே படுகிறது !

இந்த ஜோடி பெத்துகிட்டது ரெண்டுதான் !

''வீட்டிலே அரை டஜன்பிள்ளைங்களை வச்சுகிட்டு, குடும்பக்கட்டுபாட்டை கடைப்பிடிக்கிறோம்னு  சொல்றது ,நியாயமா ?''
''நாங்க பெத்துகிட்டது ரெண்டுதாங்க ,கல்யாணத்திற்கு முன்னாலே அவளுக்கு ரெண்டு,எனக்கு ரெண்டு குழந்தைகளும் இருந்ததுங்க !''

8 October 2013

ரம்பா ,ஊர்வசி ,மேனகா மூவரும் இருப்பது இதில்தானாம்!

''அவர் ஏன் 'ரம்'மட்டுமே குடிக்கிறார் ?''
''Rampaa,Urvasi,Menakaa மூவரோட டான்சையும் பார்த்த த்ரில் அதிலேதான் அவருக்கு கிடைக்குதாம் !''

டெங்குக்கு மருந்தில்லை !கொசுவுக்கும் ஒரு முடிவில்லையா ?

கின்னஸ் சாதனை செய்ததற்காக 
பாராட்ட முடியவில்லை ...
காரணம் ,இந்த சாதனையால் வருடம் தோறும் 
இறந்தோர் எண்ணிக்கை இருபது கோடியாம் !
உலகிலேயே மோசமான உயிரினம் என்று 
சாதனைக் கிரீடம் சூட்டிக் கொண்டிருப்பவர் ...
திருவாளர் 'கொசு 'வார்  தான் !

7 October 2013

ஓடிப் போய் கல்யாணம் கட்டிக்கலாமா ?

''நம்ம ரெண்டு பேரும்  143ன்னு சொல்லிக் கிட்டாலும்,அதுக்கு  ரெண்டு பேர் வீட்டுலேயும் 144போட்டுட்டாங்க ...அடுத்து  என்ன செய்றது ?''
''123 ஜூட்னு சொல்லி ஓடிறவேண்டியது தான் ,வேற வழி  ?''

எல்லோருமே 'அசைவ 'தீவிரவாதிகள் தான் !

நாம் உண்ணும் கேப்சூல் மாத்திரையின் மேலுறை... 
புரதப் பொருட்களால் ஆனதாம் ...
அது மிருகங்களின் கொம்பு ,குருத்து எலும்புகளை 
கரைத்து எடுத்து தயாரிக்கப் படுகிறதாம் ...
அதன் பெயரும் 'ஜெலாட்டின் 'தானாம் !


6 October 2013

இவர்கள் லஞ்சம் வாங்குவதும் 'நாட்டு நலன் 'கருதித்தான்!

''நாட்டு நலன் கருதி பல கோடி செலவில் வாங்கிய நீர் மூழ்கி கப்பல்களை ராணுவத்தில் ஒப்படைக்கும் விழா நடந்ததே ...மந்திரி ,எம்பிக்கள் நீர்மூழ்கி கப்பலில் இறங்கிப் பார்த்தார்களா ?''
''கடுமையான நிதி நெருக்கடி நேரத்தில் இடைத்தேர்தல் நடத்த முடியாதுங்கிற 'நாட்டு நலன் 'கருதி அந்த ரிஸ்க்கை  எடுக்கலே !'' 

பயணிகள் மட்டுமல்ல ,பதிவர்களும் தெரிஞ்சுக்க வேண்டியது !


வெளிநாட்டிற்கு செல்லும் சீனர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது சீன அரசு ...
அது அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல ...
எல்லா  நாட்டு மக்களுக்கும்  பொருந்தும் !
நம் பதிவர்களுக்கு எப்படி பொருந்தும் என்றால் ...
      பொது கழிப்பிடங்களில் நீண்டநேரம் இருக்க வேண்டாம் !
[பதிவைப் பற்றி வெளியே வந்து யோசிங்க ]
      கழிப்பிடங்களை அசுத்தம் செய்யாதீர்கள் !
[உங்களின் பதிவு படிப்பவர் மனதில் வக்கிர எண்ணங்களை உருவாக்கக் கூடாது ]
      பொது இடங்களில் மூக்கை நோண்டக்கூடாது !
[பதிவுக்கு மண்டையை குடைந்துக்கலாம் ,மூக்கை நோண்டிக்கக்கூடாது ]
      நூடுல்சோ ,சூப்போ உண்கையில் சத்தம் வரக்கூடாது !
[நம் பதிவு  படிப்பவரின் பொறுமையை 'உறிஞ்சி'டக் கூடாது ]
     விமானங்களில் தரப்படும் உயிர் காப்பு உடைகளை திருடாதீர்கள் !
[சிந்தித்து எழுதுபவன் பதிவர் ,காப்பிபேஸ்ட் செய்வதும் திருட்டுதான் ]
மிக மிக முக்கியம் ...
     நீச்சல் குளத்தில் சிறுநீர் கழிக்காதீர்கள் !
[பதிவைப்போட முடியவில்லையென  பதட்டமோ ,பயமோ இருந்தால் மேற்கண்ட காரியம் தானாகவே நடந்து விடும் !] 

5 October 2013

143 ன்னா I LOVE YOU ,144 ன்னா...?

''நீ அந்த பொண்ணு கிட்டே 143 ன்னு சொன்னதுக்கு ,அவங்க வீ ட்டிலே அவளுக்கு 144  போட்டுட்டாங்களா, என்னடா சொல்ற ?''
''ஐ லவ் யு ன்னு சொன்னேன் , அவளை வீட்டை  விட்டு வெளியே போகக்கூடாதுன்னு  தடை உத்தரவு போட்டுட்டாங்களே !'' 
 

இசை கேட்டால் புவி அசைந்தாடுமா ?

மன்னர் அக்பர் அவையில் இசைக் கலைஞராக இருந்த தான்சேன் 
தீபக் ராகத்தை  பாடியபோது ...
மெழுகுவர்த்திகள் தானாக எரிந்தனவாம் ...
மேக் மல்ஹார் ராகத்தைப் பாடி மழையை வரவழைத்தாராம்...
நம்ம சிவாஜியும் தான்சேன் வேடமணிந்து பாடி ...
கோமா நிலையில் இருந்த ராணியை உயிர்த்தெழ வைக்கிறார் ...
இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்ற அந்த பாடல் அமைந்த  ராகத்தின் பெயர் ...
'எமன் 'கல்யாணியாம்,நம்ப முடிகிறதா ?  

4 October 2013

நடிகை பெயரை எதற்கெல்லாம் பயன் படுத்துவார்கள் ?

''காலத்திற்கேற்ற மாதிரி விளம்பரம்பண்றதாலே ,வியாபாரம் ஓஹோன்னு இருக்கா ,எப்படி ?''
''இன்றைய ஸ்பெசல் 'சமந்தா ரொட்டி 'ன்னு போட்டேன் ,பய புள்ளைங்க அள்ளிகிட்டு போயிட்டாங்களே!''


இந்தியா சுய காலில் நிற்பது எப்போது ?

யானைக்கும் அடி சறுக்கும் ...
அமெரிக்காவில் எட்டு லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ...
தென்னையில் தேள் கொட்டினால் பனையில் நெறி கட்டணுமே...
இங்கே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு அமெரிக்க பொருளாதாரச் சரிவு தான் காரணம் என்றார்கள் !
உலக தாதா அமெரிக்க யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளட்டும் ...
அந்த மண் நம் தலையிலும் விழும் என்றால்... 
நாம் கடைப் பிடிப்பது சுய சார்பு பொருளாதாரக் கொள்கைதானா ?

3 October 2013

இந்த பயபுள்ளே பாஸ் ஆவானா ?

''பரீச்சை பேப்பர்லே  பிள்ளையார் சுழியைப்  போடுவதற்குப்பதிலா 'சரஸ்வதி துணை 'ன்னு ஏன் எழுதி இருக்கே ?''
''முன் டேபிள்லே உட்கார்ந்து பரீச்சை எழுதினவ பெயர்  சரஸ்வதி ஆச்சே !''

மழையில் நனைய ஆசை ,நிராசை ஆகிவிடுமா ?

வீட்டிலே நாலு வத்தல் வறுக்கும் போதே 
உட்கார முடியவில்லை ,தும்மல் வருகிறது ...
இரண்டாயிரத்து பதிமூணு கிலோ வத்தலைப் போட்டு ...
யாகம் செய்யப் போகிறார்களாம் , மழைவர வேண்டுமென்று !
வர்ற மழையையும் விரட்டி விடுவார்கள் போலிருக்கிறது ...
இப்படி சுற்று சூழலைக் கெடுத்து! 

2 October 2013

'சின்ன வீடும் ' பெரிய வீட்டுலே இருக்க முடியுமா ?

''இரண்டு பெட் ரூம் உள்ள வீடு வாங்கலாம்னு என் வீ ட்டுக்காரர்  சொன்னார் ,சந்தோசப் பட்டேன்..... ''
''அதுக்கென்ன இப்போ ?''
''இரண்டு பெட் ரூமுக்கும் ஒரே மனைவியான்னு கேக்கிறாரே ?''

'குல தெய்வம்' லாலுவை பழி வாங்கி விட்டதா ?

பசு மாட்டை தெய்வமாய் வணங்க வேண்டிய 'யாதவ் '...
அதற்கு போட வேண்டிய தீவன கணக்கிலேயே ஊழல் செய்ய ...
'நின்று கொல்லவேண்டிய  தெய்வம் 'கூட நிற்காமல் ...
 அவரை ஜெயிலில் தள்ளி இருக்கிறது ...
செய்வது தெய்வ குற்றம் என எண்ணிப் பார்க்காததால் ...
ஜெயில் கம்பிகளை எண்ணிக் கொண்டு இருக்கிறார் !
தண்டனை விபரம் கிடைத்த பின் அப்பீல் பண்ண இருக்கிறாராம் ...
அப்பவும் பீல் பண்ணுவதாக தெரியவில்லை !

1 October 2013

கணவனை கைக்குள் போட்டுக்க விரும்பாத பெண்ணும் உண்டா ?

''அந்த மந்திரவாதி பொண்ணுங்களை குறி வைச்சு ஏமாத்தி இருக்கானே ,எப்படி ?''
''தலையணை மந்திரம் இலவசமாகத் கற்றுத்தரப்படும்னு  சொல்லித்தான் !''

Thir'teen'ஐ லக்கி நம்பர் ஆக்குவது 'teen' ager கையில்தான் !

டீனேஜ் என்பது ... 
கனாக்காணும் காலம் மட்டுமல்ல ,
வினாக்காணும் காலமும் கூட !
தேர்வு வினாவுக்கு விடை சொல்லவேண்டிய பருவத்தில் ...
வேறு உணர்ச்சிக்கு விடை தேடிக் கொண்டிருந்தால்...
வாழ்க்கை முழுதும் கேள்விக் குறிதான் எஞ்சி நிற்கும் !