30 November 2013

டாடி எனக்கு ஒரு டவுட்டு !

'' பஸ்களில்  டிரைவர்கள் எதுக்குப்பா?''
''ஏண்டா ,இப்படி கேட்கிறே ?''
''கண்டக்டர் விசிலை  ஒருதரம் ஊதினா நிக்குது ,ரெண்டாவது தரம் ஊதினா போகுதே !''

உயிருக்கு உயிரான நண்பர்கள் போலிருக்கே !

''ஹலோ ,யாரு தினேஷா ?''
''இல்லேப்பா , தினேஷ் அம்மா நான்,அவன் குளிச்சுக்கிட்டிருக்கானே !'' 
''சாரி ,ராங் நம்பர் !''


29 November 2013

சுயநலமில்லா விருந்தாளிகளாய் ஆக்கியது,எது ?

''சர்க்கரை நோயாளிகள்  பெருகிட்டாங்கன்னு  டாக்டர்கள் சொன்னப்போ கூட  நம்பலே ,விருந்து பரிமாறுகிறவர் சொல்லும் போது நம்பத்தான் வேண்டியிருக்கா ,ஏன் ?''
''பக்கத்து இலைக்கு பாயாசம் ஊற்றச் சொல்லி இப்போ யாருமே சொல்றதில்லையாம் !''

டைவர்ஸ் அதிர்ச்சி மனைவிக்கா ,கணவனுக்கா ?

''அதிர்ச்சியான செய்தியைச் சொன்னால் விக்கல் நின்னுடும்னு ,என் மனைவிகிட்டே உன்னை டைவர்ஸ் செய்யப் போறேன்னு சொன்னேன் ...''
''விக்கல் நின்றதா ?''
''விக்கல் நின்னுடுச்சு ,எப்போ டைவர்ஸ் பண்ணப் போறீங்கன்னு அனத்த ஆரம்பிச்சுட்டாளே !''
                                           

28 November 2013

அன்று ஆனுக்கு 17,ஜானுக்கு 21... இன்றுவரை ஜாலிதான் !

 ஓடிப்  போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா என்று நம்ம ஊர் இளசுகள் இப்போதுதான் பாடிக்கொண்டிருக்கிறார்கள் ...

வேண்டாத மேனேஜரை விரட்டும் வழி ?

''ஆபீசுக்கு போகும்போது ,வெங்காய வெடியை ஏண்டா என் கையிலே கொடுக்கிறே ?''
''புதுசா வந்த மானேஜர் ரொம்ப மோசம் ,அவருக்கு  சீக்கிரம் வேட்டு வைக்கணும்னு நீங்க தானேப்பா சொல்லிக்கிட்டு இருந்தீங்க !''

 

27 November 2013

பாரத ரத்னா வாங்கினால் நடிகை மார்க்கெட் போயிடுமா ?

'' முதல் படத்திலேயே என் நடிப்புக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப் போறாங்களாம் ,என்ன செய்யலாம் அம்மா  ?''
''சம்பாதிக்கவேண்டிய இந்த வயசுலே 
பாரத ரத்னா விருதா...வேண்டாம்னு சொல்லிடும்மா !''

26 November 2013

அகலக்கால் வைக்கிறது என்னைக்கும் ஆபத்துதான் !

''கண்டக்டர்  அகலக்கால் வச்சுக்கிறது வழக்கம்தானே ,இதுக்காகவா சஸ்பென்ட் பண்ணிட்டாங்க ?''
''அகலக்கால் வைச்சு டிக்கெட் போட்டு கொடுத்து இருந்தா பரவாயில்லை ,காசை  மட்டும்தானே   வாங்கி போட்டுகிட்டாரு? ''


25 November 2013

ஆக்கிரமிப்பு நடப்பதன் காரணம் இதுதானா ?

சென்ற வெள்ளிக்கிழமை சென்னை 
உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் அனைத்தும் ...
பொதுமக்கள் யாரும் நுழைய முடியாதபடி இழுத்து மூடப் பட்டனவாம் ...
நீதிபதிகள் ,வக்கீல்கள் யாரும் வரவில்லையா ...
இல்லை கோர்ட் புறக்கணிப்பா ...

மருமகளின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா ?

''சாரி ஆண்ட்டி ,நான் எறிந்த ரப்பர் பால்தான்  உங்க மாமியார் நெற்றியில் பட்டது ...நல்ல வேளை ஒண்ணும் ஆகலே,அதுக்கு நீங்க ஏன் நூறு ரூபாய் கொடுக்கிறீங்க  !''
''நல்ல கார்க் பால் வாங்கி இனிமேல் விளையாடுங்க !''


24 November 2013

மனைவியின் மீதான ஆசை ,அவதியாய் ஆனதேன் ?

''வர வர உன் வீட்டுக்காரர் உன்னை பார்க்கப் பிடிக்காம கிண்டல் அடிக்கிறாரா ,எப்படிடீ?''
''ரூபாவதிங்கிற என் பெயரை ரூப அவதின்னு சொல்றாரே !''பொண்ணைப் பற்றி தரகர் சொல்வதை கவனமா கேட்கணும் !

''யோவ் தரகரே ,பொண்ணு குண்டா இருக்கும்னு முன்னாடியே ஏன் சொல்லலே ?''
''சேலையே கட்டிவந்தாலே தாவணியில் வர்ற மாதிரி இருக்கும்ன்னு சொன்னேனே !''

23 November 2013

ஜோக்காளியுடன் ஜாலி பயணம் செய்தோருக்கு நன்றி !

உங்களின் அன்பு ஜோக்காளி ...
கடந்த 5.1௦ .13 அன்று முதல் பிறந்த நாளை கொண்டாடி இருக்க வேண்டும் ...ஆனால் கொண்டாடவில்லை ...
7 .1 1 .1 3 அன்று தமிழ் மணத்தாயின்  மடியில் தவழத் தொடங்கிய முதலாம் ஆண்டுவிழா ...அதையும் கொண்டாடவில்லை...

உடனே பிள்ளைப் பேறு ,பாட்டிக்கு கேடு ?

''எனக்கு இப்போ பிள்ளைப் பெத்துக்க இஷ்டமே இல்லைடீ ,என் மாமியாருக்காக  உடனே பெத்துக்க வேண்டி இருக்கு !''
''மாமியார் மேல் உனக்கு இவ்வளவு பாசமா ?''
''அட நீ வேற ,பேரப் பிள்ளையைப் பார்த்தபிறகுதான் கண்ணை மூடுவேன்னு அந்தக் கிழம் சொல்லுதே !''

22 November 2013

பிடித்தமானவர்களுக்கு பிடித்ததை தருவது நல்லதுதானே !

''என்ன சொல்கிறீர்கள்  அமைச்சரே ,பக்கத்து நாட்டு அரசன் சேனையுடன் வருகிறானா ?என்ன செய்வதென்றே புரிய வில்லையே ?''
''பதறாதீர்கள் மன்னா ,உங்கள் நட்புறவை நாடி ...உங்களுக்கு விருப்பமான சேனையுடன் வருகிறார் என்பதை சொல்ல வந்தேன் ,அதற்குள் ...!''

21 November 2013

வயசுப் பொண்ணு ஆசைக்கு தடை போடலாமா ?

''நான் ஆசை ஆசையா வாங்கிவந்த ஊதா கலர் ரிப்பனை சடையிலே போட்டுக்க தடை போடுறீங்களே ,ஏம்ப்பா ?''
''கண்ட கண்ட காலிப் பசங்க 'யார் உனக்கு அப்பன் 'ன்னு  மரியாதை இல்லாமே என்னை கிண்டல் பண்ணுவாங்களேன்னுதாம்மா !''

20 November 2013

ஏக'ப்பட்ட' பத்தினி விரதனா பட்டிமன்ற பேச்சாளர் ?

''விதவை  என்று ஒற்றைச் சொல்லைச் சொல்லி கேவலப்படுத்தும் ஆணாதிக்க சமூகமே ,விதவைக்கு  எதிர்ப்பதமாக ஒற்றை  ஆண்பாற் சொல்கூட இல்லையே என்று வருத்தப் படுகிறேன் 'என்று பேசிவிட்டு அமர்ந்து இருக்கும் எதிர் அணி தலைவியைப் பார்த்து கேட்கிறேன் ...பத்தினி என்பதற்கும் தான் எதிர்ப்பதமாக எந்த ஒற்றை சொல்லும் இல்லை என்பதற்காக நாங்கள்  வருத்தப்படுகிறோமா?''


19 November 2013

'டாஸ்மாக்'கை மூடினா இவருக்கு லாபம் !

''குற்ற எண்ணிக்கை குறையுங்கிற நோக்கத்திலே ,டாஸ்மாக் மதுக் கடைகளை மூடணும்னு நம்ம ஏட்டு ஏகாம்பரம் சொல்றது நியாயம் தானே ?''
''அட நீ வேற ,கள்ளச் சாராய மாமூல் நிறைய கிடைக்கும்னு அவர் அப்படி சொல்றாரு !''

18 November 2013

சம்சார ஆசை இன்னும் அவருக்கு குறையலே!

''என் வீட்டுக்காரர் மாலை போட்டுகிட்டார்,உன் வீட்டுக்காரர் போட்டுக்கலையாடீ ?''
''ஹும்...அவராவது போட்டுக்கிறதாவது ,இன்னொருத்தி கழுத்துலே வேணுமானா மாலை போட நினைப்பார் !''


17 November 2013

ஜாக்கெட்டுக்கு லேடிஸ் டைய்லர்தான் OK !

''என்னங்க ,உங்க சட்டையை சரியா தைக்கிற டைய்லர்கிட்டே ... என் ஜாக்கெட்டையும் கொடுக்கிறேன்னு சொன்னா ஏன் வேணாம்னு எரிஞ்சு விழுறீங்க ?'' 
''அந்த எழவிலே போறவன்  பார்வையிலேயே அளவை எடுப்பானே !''

16 November 2013

உப்பு விலை ஏறினால் உடம்புக்கு நல்லதா ?

மீண்டும் ஒரு உப்பு சத்தியாக்கிரகம் செய்ய வேண்டும் போலிருக்கிறது ...
மிசோரம் உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்களில் உப்பு கிலோ ரூபாய் முன்னூறாம்...
உப்பே கிடைக்காது என்று வதந்தி பரவியதால் இந்த விலையேற்றமாம்...
வதந்தியின் வேகம் மங்கள்யான் ராக்கெட்டுக்குகூட  இருக்குமா என்று தெரியவில்லை ...
ஏற்கனவே கோழிக்கறி விலையே கிலோ ரூபாய் எண்பது விற்கும் போது  வெங்காயம் விலை நூறானது ...
இப்போ உப்பு விலை முன்னூறு என்றால் ...
ஒருகாலத்தில் உப்புதான் சம்பளமாய் தரப் பட்டதாம் ,இப்போ சம்பளமே உப்பு வாங்க
காணாது  போலிருக்கே ...
உப்பு பதுக்கியவர்களைக் கண்டு பிடித்து 'உப்புக் கண்டம் 'போடுமா அரசு ?
இல்லை ,'உ'ப்புக்கு சப்பாணியாய் ...வதந்தி பரப்பியோர் என்று நாலு பேரை கைது செய்துவிட்டோம் என்று கடமையை முடித்துக் கொள்வார்களா ?
சாதா உப்பு விலையே கேட்கும் போதே அயோடெக்சை தேடச் சொல்கிறது ...
அயோடின் உப்பு என்றால் ஐந்நூறு ரூபாய் ஆக்கி விடுவார்களோ ?
உப்பின்றி சாப்பிட நேர்ந்தால் மக்கள் வரும் தேர்தலில் சொரணை உள்ளவர்கள் என்பதைக் காட்டுவார்கள் !

தங்க நகைங்க HALL MARK தானா நல்லாப் பாருங்க !

''HALLMARK ன்னு போட்டு இருக்கு ,ஆனா  வாங்கின நகைங்க கறுத்துப் போச்சு !''
''கடையிலே போய் கேட்க வேண்டியது தானே ?''
''நல்லாப் பாருங்க ,நாங்க HALF MASS ன்னுதான் அதிலே போட்டு இருக்கோம்னு சொல்றாங்க !''15 November 2013

கற்பழிப்பை மகிழ்ச்சியாக அனுபவிப்பதா ?

கற்பழிக்கப் படும் போது ...
அண்ணே ,என்னை விட்டுடுங்கன்னு பெண்கேட்டால்...ஒரே  ஒரு வார்த்தைச் சொன்னால் கற்பழிப்பு நடக்காதுன்னு உளறிக் கொட்டிய சாமியார்   கற்பழிப்பு புகாரில் ஜெயிலில் உள்ளார் ...
இப்போது CBIஇயக்குனர் கூறிய கருத்தும் சர்ச்சைக்குள்ளாகி  இருக்கிறது ...
'கிரிக்கெட் சூதாட்டத்திற்கு விதிக்கப் பட்ட தடையை உங்களால் அமல் படுத்த முடியாது என்றால் ,அது கற்பழிப்புகளை தடுக்க முடியா விட்டால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் என்பது போல உள்ளதாக' அவர் சொன்னதால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி யுள்ளார் ...
உதாரணம் சொல்ல வேறு எதுவுமா தோன்றவில்லை ?
இப்போது 'யார் மனதும் புண் பட்டு இருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொன்னாலும் ...
பொறுப்பான பதவியில் இருப்பவர் இப்படிசொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று மகளிர் அமைப்புகள் கொடிப் பிடிக்கின்றன ...
பதவிவரும் போது பணிவு மட்டுமல்ல நாவடக்கமும் வர வேண்டும் போலிருக்கிறதே !

திருப்பதி மட்டுமா திருப்பம் தரும் ?

''திருப்பத்தூர் அவர் சர்வீசிலே உண்மையில் அவருக்கு திருப்பம் தந்த ஊர்ன்னு ஏன் சொல்றீங்க ?''
''அந்த ஊர்லேதானே லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமா மாட்டிக் கிட்டாரு !''

14 November 2013

தம்பதிக்குள் சண்டைன்னா இப்படி பண்ணக் கூடாது !

புருஷன் பெண்டாட்டிக்குள்ளே ஒத்து வரலேன்னா ...
சிலர்  நாகரீகமா டைவர்ஸ் செய்துக்கிறாங்க...
சிலர் கொல்லணும்னு   விபரீத முடிவெடுக்கிறாங்க ...
கொல்லணும்னு நினைக்கிறவங்களே பலி ஆக வேண்டி இருக்கும் ...
இதை விளக்க வேடிக்கை கதை இதோ ...
எப்பவும் வாக்குவாதம் நடக்கும் தம்பதிகளுக்குள்  உச்சபட்ச சண்டை நடக்குது ...
''உன்னை ப(ழி )லி வாங்காம விட மாட்டேன்''என்கிறான்  உத்தமபுருசன் ...
''அதையும் பார்க்கிறேன் ,உன்னாலே (மரியாதை ?)என்ன செய்ய முடியும் ?''
''வீட்டுக்கு பின்னாலே இருக்கிற ஆழமான குளத்திலே ''
''என்னை தள்ளிவிட ஐடியாவா ?''சீறுகிறாள் மனைவி ...
''இல்லை ,நானே விழலாம்னு இருக்கேன் ''
''சும்மா வாயிலே சொல்லக்கூடாது ,என் முன்னாலே விழுந்து காமி''ன்னு புருஷனை குளத்துக்கு இழுத்துட்டு போகிறாள் 'தர்ம 'பத்தினி ...
''எனக்கு நீச்சல்தெரியும் ,ஒருவேளை நீந்திப் பொழச்சுக்குவேன் ,அதனாலே என் கை இரண்டையும் பின்னால் கட்டி விடு ''
கண்கொள்ளாக் காட்சியை காணும் ஆவலில் கை இரண்டை கட்டுகிறாள் மனைவி ...
''இந்த நிலையில் ஓடிவந்து என்னால் குளத்தில் குதிக்க முடியாது ,நான் குளத்தங்கரையில் நிற்கிறேன் ,நீ ஓடிவந்து தள்ளி விடு ''
போல்ட் வால்ட் போட்டியில் கலந்துக் கொண்டவளைப் போல் ஓடிவருகிறாள்  ...
கடைசி  நொடியில் ,கணவன் விலகிக் கொள்ள ...
கண்ட்ரோல் செய்துக் கொண்டு நிற்க முடியாமல் குளத்தில் விழுந்த மனைவி கதறுகிறாள் ...
''காப்பாற்றுங்க ,காப்பாற்றுங்க !''
''காப்பாற்ற எனக்கும் ஆசைதான் ,நீதான் என் கையை கட்டிப் போட்டுவிட்டாயே ! ''
       நாம் எல்லாம் பிறக்கும் முன்பே இந்த கதை பிறந்து விட்டது ...
பிரசவித்தவர் கவிமணி  மாயூரம் வேதநாயகம் என்றால் நம்ப முடிகிறதா ?ஓடிப் போக நல்ல நேரம்தான் !

''ஐயையோ ,கல்யாணம் கட்டிக்க நாம ஓடிப் போற நேரத்திலே உங்கப்பா எதிர்லே வர்றாரே ...?''
''ஒண்ணும் கவலைப் படாதீங்க ,அவராலே கண்டுக்க முடியாது ..அவருக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி !''

13 November 2013

அஞ்சு பெண்டாட்டியா ,அடி ஆத்தீ !

நான் அவனில்லை பட பாணியில்...
ஐந்து பெண்களைஏமாற்றி கல்யாணம் செய்து கொண்டதாக கைதாகி யுள்ளார்...
சினிமாப் பட டைரக்டர் ரவி தம்பி என்பவர் !
அவர் பத்தாவது படிக்கும் போதே ஒன்பதாவது படிக்கிறப் பெண்ணை காதலித்தாராம் ...

குறையைக் கூட நிறைவாய் சொல்பவர் !

''என்னங்க ,நம்ம புது வீட்டில் மாடிப்படி  இல்லாததை  உங்க நண்பர் நாசூக்கா சுட்டிக் காட்டிட்டு போறாரா ,எப்படி ?''
''வீட்டுக்கு வீடு வாசப்படி மாதிரி மாடிப் படி தேவை இல்லேங்கிறதை நம்ம வீட்டைப் பார்த்து தெரிஞ்சுகிட்டாராம் !''

12 November 2013

நடிகர் சூர்யா சொல்வது சரிதானா ?

நெய்க்கு தொன்னை ஆதாரமா ,தொன்னைக்கு நெய் ஆதாரமா என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது ...
வன்முறை காட்சிகள் ,ஆபாசக் காட்சிகள் ,சண்டைக் காட்சிகளை ஏன் வைக்கிறீர்கள் எனக் கேட்டால் ...

மேனேஜர் விரும்பாத CCTV கேமரா ,பிரைவசி ?

''ஆபீஸ் நேரத்திலே நெட்லே பார்க்கக்கூடாததை எந்த தைரியத்திலே பார்த்துகிட்டு இருக்கே !''
''லேடி P A எப்ப  மேனேஜர் ரூமுக்குப்போனாலும்  வர லேட்டாகுங்கிற  தைரியத்திலே தான் !

11 November 2013

பொன் மொழியைவிட பெண் உடல் மொழி பிடிக்கலாம் ?

       ''தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் கடுமையாய் உழைக்கணும் ,நீண்ட போராட்டத்திற்கு பிறகு கிடைக்கும் வெற்றியே நிலைக்கும் ,தன்னைத் தானே செதுக்கிக் கொள்வதில் உள்ள இன்பம் வேறெதிலும் இல்லை ,ஊட்டி விடப்படும் எந்த உணவிலும் சக்தி இல்லை ,ஒரு அரிசி என்றாலும் விதைத்து வளர்த்து ,அறுவடைசெய்து சாப்பிடு ,பிரபஞ்சத்தின் சுவையை அனுபவிப்பாய் !''
இப்படி நெஞ்சைத் தொடும் விதத்தில் தந்தை சொல்லும் அறிவுரையை எத்தனைப் பிள்ளைகள் கேட்பார்கள் ?
ஆனால் ,தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என வேத வாக்காய் ஏற்று சாதித்துக் காட்டிவுள்ளார் ஒரு பிரபல நட்சத்திரம் ...
அட்வைஸ் சொன்னவர் ...
இந்தியாவின் சார்பில் உலக அளவில் டென்னிஸ் பந்தாடியவர் !
அட்வைஸ்  கேட்டவர் ...
வாலிப நெஞ்சங்களை பந்தாடிக் கொண்டிருப்பவர் !

தாயும் சேயும் செய்யும் ஒரே காரியம் ?

''தூளியிலே குழந்தை கத்தி கத்தி அழுவுறதைக்கூட கேட்காம உங்கம்மா ஹால்லே என்னடா பண்ணிக்கிட்டிருக்கா ?''
''டி வி மெகா சீரியலைப் பார்த்து அம்மா அழுதுகிட்டு இருக்காங்கப்பா !''

10 November 2013

சாகசம் இளைஞர்களுக்குத்தான் சொந்தமா ?

வயசானாலே வரக் கூடாத ஆசையெல்லாம் வரும்னு சொல்றது சரிதான் போலிருக்கிறது ...அதுவும் நூறாவது பிறந்த நாளை இப்படி கொண்டாட வேண்டும் என்று...

கனவுக் கன்னி தெரியாமல் போயிருப்பாளா ?

''என்னங்க , தூங்குறப்போ கண்ணாடியை ஏன் மாட்டிக்கிறீங்க  ?''
''கனவுலே எல்லாமே கலங்கலாத்  தெரியுதே !''


9 November 2013

ரஜினியின் ஜப்பானிய ரசிகை தமிழக மருமகளானார்!

நமக்கு ஜப்பானிய புருஸ்லி ஜெட்லியை பிடிக்கும் ...
ஜப்பான் பெண் என்ஜீனியர்  'தனே அபே 'வுக்கு பிடிச்சதெல்லாம் நம்மூர் இட்லி தானாம் ...
சூப்பர் ஸ்டார் ரஜினியையும் பிடிச்சதாலோ என்னவோ ....
அவர் மனசுலேயும் எப்போ வரும் ,எப்படி வரும் தெரியாமல் இருந்த காதல் நிச்சயமாய் வந்தேவிட்டது ...

ஏற்கனவே மனைவி தண்டம்னு சொல்லுவா ...!

''அவருக்கு காந்தீயக் கொள்கையிலே ஈடுபாடு அதிகமாச்சு  சரி ,தண்டாயுதபாணிங்கிற பெயரை ஏன் கோதண்டன்னு மாத்திக்கணும்?''
''ஆயுத பாணியா  இருக்க பிடிக்கலையாம் !''

8 November 2013

தம்பதிகள் சண்டை தெருவையும் தாண்டியது !

தம்பதிகள் சண்டைதெருவுக்கு  வரக் கூடாது என்பார்கள் ...
நாகர்கோவில் அருகே ஒரு தம்பதியினரின் சண்டை ரயில் தண்டவாளத்திற்கே வந்த அதிசயம் நடந்துள்ளது ...
பிறந்த ஊர் பிராந்தநேரி என்பதாலோ என்னவோ

டாக்டர்களில் மட்டும்தான் போலி உண்டா?

''என்ன சொல்றீங்க ,அந்த பெட்லே படுத்து இருக்கிறவர் போலி நோயாளியா ?''
''ஆமா ,அவர் கிட்னி விற்க வந்தவராச்சே !'

7 November 2013

ஒண்ணரை லட்சம் மனை விலை அல்ல ,மனைவி விலை !

எல்லா ஊர்களிலும் விளைநிலங்களை கூறு போட்டு மனைகளாக்கி  விற்கிறார்கள் ...
ஆனால் ,கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மதுரையில் கொத்தனார் ஒருவர் மனைவியையே விற்று இருக்கிறார் ...

ஒரே கிட்னியால் இப்படியும் நன்மை இருக்கு !

''என்ன நர்ஸ் சொல்றீங்க ,நான் சொன்ன உண்மைதான் என்னைக் காப்பாற்றி இருக்கா ?''
''ஒரு கிட்னி தான் உங்களுக்கு  இருக்குன்னு முன் கூட்டியே சொன்னதுனாலே ,டாக்டர்  பண்ண இருந்த ஆபரேசனை கேன்சல் பண்ணிட்டாரே !''
(ஜோக்காளியின் ஒரு தன்னிலை விளக்கம் ...
இன்றோடு ஜோக்காளி தமிழ் மணத்தில் இணைந்து சரியாக ஓராண்டு நிறைவு ...
படி படியாக முன்னேறி 40வது ரேங்க்கை  தொட்ட வேளையில் யார் கண் பட்டதோ இணைக்க முடியவில்லை ...கூகுள் ஆண்டவர்தான் அருள் புரியணும் !)

6 November 2013

கணவனை வேலை வாங்கும் மனைவி ?

''இப்போ பேட்டிங் பண்றது யாருன்னு நம்ம  பையன் கேட்டதுக்கு  'கலுவிதரனா'ன்னு சொன்னேன் ...நீ ஏன்,மீனைக் கொண்டுவந்து என் முன்னாடி வைக்கிறே  ?'' 
''கழுவிதரணுமான்னு நீங்க கேட்ட மாதிரி என் காதிலே விழுந்ததுங்க !''

மழலை அறிந்த முதல் ஒலி !

யார் தேற்றியும் அழுகையை நிறுத்தாத மழலை ...
தாயின் தோளில் சாய்ந்ததும் கப்சிப் ஆனது ...
வழக்கமாய் கேட்கும் லப்டப் ஒலி  கேட்டு !

5 November 2013

தங்க மோகம் குறைந்ததா தமிழக பெண்களுக்கு ?

தங்கம் கிராமுக்கு 137ரூபாய் குறைந்த போதிலும் ...
இவ்வாண்டு தீபாவளி காலத்தில் 38சதவீதம் விற்பனை சரிந்துள்ளது ...
இதற்கு காரணம் ...

மருமகளின் 'பன்றிக் 'காணிக்கை ?

''பன்றி உருவம் பொறிச்ச காசை நன்றிக் காணிக்கையா போடுறீயே ,பன்றிக்காய்ச்சல்  உங்க வீட்டுலே யாருக்காவது வந்து போச்சா ?''
''ஆமாம்டி,பன்றிக்காய்ச்சல்லே போய் சேர்ந்தது   என் மாமியார் ஆச்சே  !''

4 November 2013

நடிகை ஸ்வேதா மேனனுக்கு வந்த சோதனை !

களிமண்ணு என்ற மலையாளப் படத்தில் ...
தன் உண்மையான பிரசவக்காட்சியை காட்டிய ஸ்வேதா மேனனை யாரும் மறந்து இருக்கமாட்டார்கள் ...
எந்த நடிகையுமே செய்யத் தயங்கும் கேரக்டரை தயங்காமல் செய்த அவரிடமே ...

ஜாக்கிங் நல்லது வாக்கிங்கை விட !

'' வாக்கிங் பதிலா ஜாக்கிங் போகணும்னு ஏன் சொல்றீங்க டாக்டர் ?''
''நீங்க தானே  'பொடி'நடை நடந்தாலே தும்மலா வருதுன்னு சொன்னீங்க !''

தீபாவளி ரீலீஸ் ,ஆ 'ரம்பம் 'இன்று ஆரம்பம் -3


இந்த பதிவு... பாமினி பான்ட்டில் இருப்பதால் படிக்க முடியவில்லையெனில் ..சைடுபார் மேலேயுள்ள கேட்ஜெட்டில் க்ளிக்கி  பாமினி பாண்டை டவுன் லோட் இன்ஸ்டால் செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ...சிரமத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன் !  
(நேற்றைய தொடர்ச்சி ...)

ek;k nuz;L Ngh; tPl;Lf;Fk; ,ilapNy xNu xU jLg;Gr; Rth;jhd;. Mdh Mr;rphpak; ……… %l;il xz;Z$l ,y;iyNA!

3 November 2013

ஆயிரம் டன் தங்கம் கிடைக்குமா ?

இந்தியா இன்ஸ்டன்ட் வல்லரசு ஆகும் கனா 
தகர்ந்துவிட்டது ...
சாமியார் சோபன் சர்க்காரின் அருள்வாக்கை நம்பி ...
ஆயிரம் டன் தங்கத்திற்கு ஆசைப்பட்டு ...

அழகு நிலையம் செய்த 'அழகு 'காரியம் !

''ஏண்டி ,அந்த பியூட்டி பார்லர் விளம்பரத்திலே ' நாலே  நாளில் முகத்தில் உள்ள   கரும்புள்ளிகள்  மாயமா மறைஞ்சுடும்,இல்லேன்னா பணம் வாபஸ் 'னு போட்டு இருந்ததை நம்பி பத்தாயிரம் ரூபாய் கட்டினியே ,என்னாச்சு ?''
''மாயமாப் போச்சு ,அந்த பியூட்டி பார்லர் !''

தீபாவளி ரீலீஸ் ,ஆ 'ரம்பம் 'இன்று ஆரம்பம் -2

இந்த பதிவு... பாமினி பான்ட்டில் இருப்பதால் படிக்க முடியவில்லையெனில் ..சைடுபார் மேலேயுள்ள கேட்ஜெட்டில் க்ளிக்கி  பாமினி பாண்டை டவுன் லோட் இன்ஸ்டால் செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ...சிரமத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன் !  
(நேற்றைய தொடர்ச்சி ...)

%l;iliag; gpbj;J ePhpy; kpjf;ftpl;Lf; nfhy;Yk; [y rkhjp Kiwapy; rpukk; mjpfk; vd;gjhy; Fiythio %l;ilf; nfhiy Kiwiaf; fz;Lgpbj;Njd;.

2 November 2013

இதெல்லாம் கிரிமினல் குற்றமா ?

''வெள்ளையை  கருப்பாக்க  நீங்க உதவுறதா ,எங்களுக்கு தகவல் வந்திருக்கு ,அதனாலே கைது பண்றோம் !''
''உங்களுக்கு யாரோ தப்பா  தகவல் கொடுத்திருக்காங்க ,நான் வெள்ளை மயிருக்கு கருப்பு டை அடிக்கிற சாதாரண பார்பர் சார் !''

தீபாவளி ரீலீஸ் ,ஆ 'ரம்பம் 'இன்று ஆரம்பம் -1

முன் எச்சரிக்கை...இது 'அஜித்'தின் ஆரம்பம் அல்ல ...
இரத்த தானம் செய்ய விரும்பவர்கள் மட்டும் இனி தொடரலாம் ... 
இந்த பதிவு... பாமினி பான்ட்டில் இருப்பதால் படிக்க முடியவில்லையெனில் ..சைடுபார் மேலேயுள்ள கேட்ஜெட்டில் க்ளிக்கி  பாமினி பாண்டை டவுன் லோட் இன்ஸ்டால் செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ...சிரமத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன் !  
vd;W jPUk; ,e;j %l;ilapd; njhy;iy?


re;Njfg; Ngh;topfis re;Njfg; gpuhzpfs; vd;W ehk; nrhy;tJz;L. nrhy;yg;gLtJk; cz;L. ,g;gb MwwpTs;s kdpjidNa gpuhzpfs; thpirapy Nrh;j;jhfp tpl;ljhy;;

1 November 2013

பிணம் தூக்கியின் திகில் அனுபவம் !

உண்மையில் நடந்த சம்பவம் இது ...
குற்றால அருவியில் குளிப்பது எல்லோருக்கும் சுகமான அனுபவம்தான் ...
ஆனால் அதுவே ஒரு சிலருக்கு துக்கத்தை தந்து விடுகிறது ...

'பிடித்தமான 'புருஷனை எப்படி பிடிக்கும் ?

''ஒண்ணாந்தேதிவரவும்உனக்குபிடித்தமானவரே ,  பிடிக்காதவர் ஆயிட்டாரா,ஏண்டி ?''
''அவரோட சம்பளம் எல்லாப் பிடித்தமும் போக ஒண்ணும் தேறலையே !''
ஒரு 'முக்காத 'அறிவிப்பு ...நாளை முதல் ஜோக்காளியில் ஆ'ரம்பம் 'இன்று ஆரம்பம் ரீலிஸ் ஆகிறது ...காணத் தயாராகுங்கள் !