3 January 2014

கஞ்சாவைக் கூட அஞ்சாமல் விற்கும் நிலை வந்தால் ...?

தமிழர்கள் ஆகிய நாம் பெருமைப்படும் படியான ஒரு சரித்திரச் சாதனை புத்தாண்டில் நிகழ்ந்து உள்ளது ...
புது வருசத்தைக் கொண்டாட தமிழ்'குடிமகன் /ள் டாஸ்மாக்கில் செலவிட்ட தொகை 25௦ கோடியாம் ...

வெள்ளையன்கூட அவன் புத்தாண்டுப் பிறப்பை இவ்வளவு செலவு செய்து கொண்டாடி இருப்பானாவென்று தெரியவில்லை ...
இந்த புதுமை இங்கே நடக்கும் சமயத்தில் ...
அமெரிக்க மாகாணம் கொலராடோவில் இன்னொரு புதுமை அரங்கேறி உள்ளது ...
கஞ்சா பயிரிடவும்,விற்பனை செய்யவும் அரசாங்கமே அனுமதித்து உள்ளது ...
மலேசியா ,சிங்கப்பூரில் கஞ்சா வைத்து இருந்தாலே மரண தண்டனை ...
ஆனால் கொலராடோவில் மக்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருக்க சட்ட திட்டம் வகுத்து இருக்கிறார்களாம் ...
1 8 வயதானவர்களுக்கு தினசரி 28 கிராம் மட்டுமே விற்க அனுமதியாம் ...
போதைக்கு அடிமையானவர்கள்  மனமும் உடலும் கெட்டு,நிறைய பொய்பேசுவதாகவும் ,திருட்டு ,கொள்ளை ,பாலியல் வன்முறை ,சமூக விரோத காரியங்கள் செய்வதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன ...
ஆனால் ,ஆள்பவர்களுக்கு கஜானா ரொம்பினால் போதும் போலிருக்கிறது ...
கொலராடோ வழிகாட்டி விட்டது ...
அடுத்த படியாக அமெரிக்காவில் உள்ள மற்ற மாகாணங்களும் இதை பின்பற்றும் ...
அமெரிக்கச் சீரழிவுக் கலாச்சாரம் இங்கேயும்  பரவும்  காலம் வெகு தூரத்தில் இல்லை ...
தெருவுக்கு தெரு அரசாங்கமே கஞ்சாக் கடைகளைத் திறந்து மக்களை  வாழ வைக்கப் போகிறது  !38 comments:

 1. இந்த போஸ்ட்ட கொஞ்சம் அம்மாவுக்கு ஈ மெயில் பண்ணிவிடுங்களேன் தமிழக அரசுக்கு மேலும் வருமானம் வர புதிய வழி கிடைச்சமாதிரி இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. என் சார்பா நீங்களே பண்ணிடுங்க ,அதுக்கு அப்புறம் வாசல்லே ஆட்டோ சத்தம் கேக்குதுன்னு வருத்தப் படாதீங்க !
   முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி

   Delete
 2. Replies
  1. பூமிக்கு பாரமாய் ,போதை அடிமைகள் வாழ்வதை விட சாவதே நல்லது !
   நன்றி

   Delete
 3. வணக்கம்
  தலைவா....
  இனித்தான் நல்ல காலம் பிறந்திருக்கு....


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நல்ல காலம் பொறக்குதுன்னு குடு குடுப்பைக்காரனுக்கு சொல்லி ஊரெல்லாம்அடிக்கச் சொல்லிடுவோமா ?
   நன்றி

   Delete
 4. Replies
  1. நம் ஆயுள் காலத்திலேயே பார்க்கத்தானே போறோம் !
   நன்றி

   Delete
 5. "அமெரிக்கச் சீரழிவுக் கலாச்சாரம் " என்று பொத்தாம் பொதுவாய் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை சார்.. மும்பையில் அரசாங்க அனுமதியுடன் "ரெட் லைட்" ஏரியா இருப்பதால் இந்திய கலாச்சாரம் ஏன் கெட்டுப் போனதாக நீங்கள் சொல்ல வில்லை. கொலோரோடோவில் அமேரிக்கா அனுமதித்ததும் கலாச்சார சீர்கேடுகளுக்கு தாயகமாய் அமெரிக்காவை சித்தரிப்பது மட்டும் விந்தையாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. ரெட் லைட் மூலம் எந்த நாடாக இருக்கும் ?AIDS எங்கிருந்து வந்தது ?உலகமெங்கும் போர் பதற்றம் நீடிக்க எந்த நாட்டுக் கொள்கை காரணம் ?நம் தனிப்பட்ட விசயங்களையும் ஓட்டு பார்ப்பது யார் ?அசஞ்சே அம்பலப் படுத்தியும் கூட இன்னுமா அமெரிக்க மோகம் ?
   நன்றி

   Delete
  2. பகவான்ஜி அது அமெரிக்க மோகம் அல்ல.. மேலும் நான் அமெரிக்காவை ஆதரிக்கவும் இல்லை.. "கலாச்சார சீர்கேடுகள்" பரவ காரணம் அமேரிக்கா மட்டுமல்ல..அந்தந்த நாட்டு மக்களும், ஆளும் 'வாதி' களும் தான் ன்னு சொல்ல வந்தேன்.. அமேரிக்கா ஒரு முன்னோடி என்று சொல்லும் பட்சத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு,.. :)

   Delete
  3. மனித உரிமைகள் என்று வாய்கிழியப் பேசிக்கொண்டே உலகத் தலைவர்களின் உரையாடல்களை ஒட்டுகேட்பது எந்த வித நியாயம் ?வல்லரசாகவே நீடிக்க வேண்டும் என்பதற்காக ,அமெரிக்க 'உலக தாதா 'வாகவே செயல்படுகிறது என்று உங்களுக்கும் தெரிந்ததுதானே ?
   தலைமை தாங்குபவர்கள் மக்களை நல்ல வழிக்கு கொண்டு வர வேண்டாமா ?
   சிறுபான்மை மக்கள் போதை அடிமைகள் என்பதற்காக பெரும் பான்மை மக்களையும் அந்த புதைக் குழிக்குள் தள்ளுவது நியாயமாகப் படவில்லை !
   நன்றி

   Delete
 6. விசித்திரமான ஆட்சியாளர்கள்தான்.
  மீன் வித்த காசு வீசாது என்று அதற்கு ஒரு சால்ஜாப் வேற சொல்வாங்க!
  இதை "ஆவி"கள்தான் ஆதரிப்பார்கள் என்பது நன்றாக புரிகிறது.
  மனிதர்களை ஆவிகளாக்க/பிரச்சனைகளிலிருந்து விடுவிக்க நல்ல திட்டம்தான்.
  புதுவருஷம் ரொம்ப நல்லா பிறந்திருக்கிறது.
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. புது வருசத்தில் என்னைப் பாதித்த முதல் செய்தி ..போக போக நிறைய பாதிக்கப் படுவேன் போலிருக்கே !
   நன்றி

   Delete
 7. இன்று ஆங்கில நாளிதழ்களில் இச்செய்தி படித்தேன்....

  நடக்கட்டும் நடக்கட்டும்!

  ReplyDelete
  Replies
  1. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்க முடியலையே !
   நன்றி

   Delete
 8. இங்க கஞ்சித் தண்ணிக்கே வழியில்லை இதுல கஞ்சா??!! ம்ம்ம்ம்ம்ம்ம் ஒண்ணும் சொல்றதுக்கில்லை பகவான் ஜி!! உலகம் எங்கேயோ போயிடுச்சு!!!

  த.ம.+

  ReplyDelete
  Replies
  1. அந்த கால சந்திர பாபு பாடல்தான் நினைவுக்கு வருகிறது ...டிங்கிரி டிட்யாலே ..உலகம் போறப் போக்கைப் பாரு ...
   நன்றி

   Delete
 9. அம்மா கஞ்சா பாக்கெட்டுக்கள் விரைவில் வரலாம்...
  டாஸ்மார்க் 250 கோடி... கஞ்சா எத்தனை கோடியோ.?

  ReplyDelete
  Replies
  1. நாளை இப்படி நடந்தாலும் நடந்துவிடலாம்!
   அம்மா படமும் இரட்டையிலையும் போட்டு, நல்ல காம்பினேஷந்தான்
   குமாரு ரொம்ப பயமுருத்திட்டீங்க!

   Delete
  2. இது நடந்தால் ஜோக்காளிக்கு ராயல்டி கிடைக்குமா ?
   நன்றி

   Delete
  3. ஐயோ! வேற வினையே வேண்டாம்!!!

   ஜோக்காளிக்கு ராய்ல்டி வேண்டுமென்றால் அம்மாவிடம் சேரணுமே!!!! செய்வீர்களா?!!!!!

   Delete
  4. தெரிந்தே குழியில் விழுவார்களா ?

   Delete
 10. கஞ்சா அடிச்சுப் படுத்தா
  பசி தெரியாதும்பாங்க

  வேலை வெட்டிக்குப் போகாம
  கஞ்சா சாப்பிட்டுச் சாகும் புதிய கலாச்சாரத்தைப்
  பரப்புவதன் மூலம் ஜனத்தொகைக் குறைப்புக்கு
  இதுதான் எளிதான வழி என அரசு நினக்குதோ என்னவோ ?

  ReplyDelete
  Replies
  1. அது மட்டுமல்ல ,கொள்ளைக் கும்பலுக்கு எதிராக மக்களை சிந்திக்க விடாமல் செய்வதும் அடங்கும் !
   நன்றி

   Delete
  2. நல்ல யோசிக்க வைத்த பதில்!!

   Delete
 11. சிகரெட் கஞ்சாவை விட கொடியது! இது உண்மை!
  இங்கு medical marijuanaடாகடர்கள் அனுமதியுடன் வளர்க்கலாம்!
  அமெரிக்க்காவில் தேவடியாத் தொழில் குற்றம்; இந்தியாவில் அது ஆதி காலத்தில் கோவிலிலே இருந்தது; இன்று வரை அனுமதிக்கப்பட்ட தொழில்; உலகத்தில் நான்கு நாடுகளில் தான் இது அனுமதிக்கப்பட்ட தொழில்; நம் நாடு அதில் ஒன்று! உலகத்தில் உள்ள விலைமாதர்களில் மூன்றில் ஒன்று நம் பாரதநாட்டில்.

  எதற்கு எல்லாவற்றிற்கும் அமெரிக்காவுடன் நம் நாட்டை ஒப்பிடவேண்டும்.
  AIDS capitol India- இந்துயாவில் தமிழ் நாடு நம்பர் ஒன்; தமிழ்நாட்டில் சேலம் நாமக்கல் நம்பர் ஒன்.

  சர்க்கரை வியாதியில் நாம் தான் ராஜா! இப்படி நாம் இருக்கும் பொது நம் முதுகைப் பார்க்கவேண்டும். அமேரிக்கா எப்படி போனால் என்ன?
  ஏன் இந்தியாவில் இருபவர்கள் அமெரிக்காவுடன் ஒப்பீடு செய்யவேணும்; Is America a benchmark? இங்கு யாரும் இந்தியாவுடன் அப்படி ஒப்பீடு செய்வதில்லையே?
  சிந்தியுங்கள்....
  தமிழ்மணம் +1

  ReplyDelete
  Replies
  1. உலகத்தில் தோன்றிய முதல் தொழில் இதுதானே ?
   aidsஇன்று இந்திய நம்பர் ஒன்றாய் இருந்தாலும் பிறப்பிடம் அமெரிக்காதானே ?
   சர்க்கரை வியாதி நம் நாட்டில் ஒரு கட்டுப் பாட்டில்தான் இருந்தது ,செயற்கை உரங்கள் ,உலகமயமாக்கல் கொள்கை வந்த பின்தான் அதிகம் ஆனது என நினைக்கிறேன் !
   அமெரிக்காவில் நடக்கும் நல்லவைகள் இங்கு வந்து சேர்வதில்லை ,கெட்டவைகள் உடன் இறக்குமதி ஆகிவிடுவதுதான் என் வருத்தம் !
   நன்றி

   Delete
 12. [[aidsஇன்று இந்திய நம்பர் ஒன்றாய் இருந்தாலும் பிறப்பிடம் அமெரிக்காதானே ?]]

  தவறு! தவறு! பிறப்பிடம் இல்லை! அந்த வியாய்தியை கண்டுபிடுத்த்து அமெரிக்காவில் என்று கூறுவது தான் சரி! இருக்கும் வியாதிகளை கண்டுபிடித்தது எல்லாம் மேலை நாடுகள் தான். நாய் கடிச்சு இந்தியாவுலும் செத்தான்; மேலை நாடுகளில்ம் செத்தான்; ரேபீசை வியாதியை கண்டிடித்தான் என்றால் அங்கு அந்த வியாதி முதன் முதலில் உண்டானது என்று அர்த்தம் இல்லை!.

  ReplyDelete
  Replies
  1. கீழே உள்ளதைப் படித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க நம்பல்கி ...
   #(எயிட்ஸ் எப்படி தோன்றியது என்ற கேள்வி பல்வேறு ஊகங்களைத் தாண்டி இன்று மெதுவாகக் கசிந்து வரும் உண்மை ஒன்று ஏகாதிபத்திய உலகமயமாதலின் சூறையாடலை அம்பலப்படுத்துகின்றது) ஆப்பிரிக்காவில் போலியோ போன்ற நோய்களைத் தடுக்க புதிய கண்டுபிடிப்பாகக் கண்டறிந்த தடுப்பூசியொன்றை திட்டமிட்டு மூன்றாம் உலக மக்கள் என்று கூறப்படும் வறிய நிலையிலுள்ள ஆப்பிரிக்காவின் கோடிக்கணக்கான மக்கள் மீது நோய் எதிர்ப்பு மருந்து என்று கூறி, எந்தவிதமான முன் பரிசோதனையுமின்றி ஏற்றிய தடுப்பூசிதான், எய்ட்சின் மூலமாகியது என்று தெரிய வருகின்றது. உலக பொருளாதாரத்தை சூறையாடும் அமைப்புக்களின் புதிய கண்டுபிடிப்புகள் கோடீஸ்வரர்களை உருவாக்கக் கூடிய மூலதனமாக இருப்பதால், புதிய கண்டுபிடிப்புகள் மக்கள் மீது நேரடியாகப் பரிசோதனை செய்யப்படுகின்றது. இதற்காகப் பயன்படும் மூன்றாம் உலக மக்கள் விஞ்ஞானிகளின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தின் அடிமைகள் என்றுதான் கருதப்படுகிறார்கள்.#

   Delete
  2. //உலக மக்கள் என்று கூறப்படும் வறிய நிலையிலுள்ள ஆப்பிரிக்காவின் கோடிக்கணக்கான மக்கள் மீது நோய் எதிர்ப்பு மருந்து என்று கூறி, எந்தவிதமான முன் பரிசோதனையுமின்றி ஏற்றிய தடுப்பூசிதான், எய்ட்சின் மூலமாகியது என்று தெரிய வருகின்றது.//

   Is there any evidence for the above statement. Always our guys blame U.S for every thing, If the above statement is true any body can verify the information through RTI in U.S (after 15 years). I am not sure abt the years but they always release the confidential information after certain years.

   Do you think that Indian Govt is not doing any illegal thing? All the Govts are involved in some kind of illegal activities.

   Delete
 13. அமெரிக்காவில் முழுக்க முழுக்க செயற்கை உரம் தான். இங்கு ஏன் இந்தியா அளவு அதிகமாக இல்லை. முன்பு சர்க்கரை வியாதியுடன் அதானால் வரும் கிட்னி செயல் இழப்பு, மாரடைப்பு..அப்படின்னு 60 வயதுக்கு முன்னாலே போய் செர்ந்துவிடுவான். இன்சுலின் கண்டுபிடக்வில்லை என்றால் இந்தியாவில் பணக்காரர்கள் பலர் அறுபது வயதிற்கு முன்பே இறந்து விடுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ,நமது அரிசி சாப்பாடும் சர்க்கரை வியாதிக்கு ஒரு காரணி எனச் சொல்லப்படுகிறது !
   நன்றி

   Delete
 14. //http://www.npr.org/blogs/health/2014/01/16/262481852/florida-bill-would-allow-marijuana-extract-for-child-seizures//
  ”வாரத்தில் பலநூறு முறை வலிப்பு ஏற்படும் குழந்தைகளுக்கு கஞ்சாவிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை சில துளிகள் உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் இருக்கிறது” என்பது போன்ற பரவலான பட்டறிவின்படி (இன்னும் முருத்துவ ரீதியாக நிரூபணமாகவில்லை) மருத்துவ காரணங்களுக்காக கஞ்சா வளர்க்க சில மாநிலங்களில் அனுமதி வளங்கப்பட்டுள்ளது. போதைக்காக அதை புகைப்பதை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

  பொத்தாம் பொதுவில் ”போலியோ மருந்தால் எயிட்ஸ் வந்தது”, “தடுப்பு ஊசியால் ஆட்டிஸம்” ஏற்படுகிறது என்று பரபரப்புக்காக எழுதுவதை தவிர்த்தால் நல்லது.

  ReplyDelete
  Replies
  1. நல்ல காரியங்களுக்காக கஞ்சா வளர்ப்பதை தவறு என்று நான் சொல்லவில்லை .
   பரபரப்புக்காக எழுதுவது எந்நாளும் ஏற்றுக் கொள்ள முடியாதுதான் !
   நன்றி

   Delete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete