20 January 2014

நன்றி சொல்லும் நேரமிது !

அன்பார்ந்த வலையுலக உறவுகளே ...
இன்று காலையில் ஜோக்காளியின் முகத்தில் இன்ப அதிர்ச்சி ...
தமிழ்மண ரேங்க் வரிசையில் Top 1௦ல்  படியேறி விட்டான் ...
பார்வைகளின் எண்ணிக்கையிலும் ஒண்ணரைலட்சத்தை தாண்டியிருந்தான்...

5 .1 ௦.1 2 ல் பிறந்த ஜோக்காளி ,7 .1 1. 1 2 ல் தமிழ் மணத் 
தொட்டிலில் கையை காலை ஆட்டத் தொடங்கினான் ...
இன்றோடு 434 நாட்கள் கடந்த நிலையில் ...
சிறியதும் ,பெரியதுமாக 9 ௦ 9 பதிவுகள் போட்ட நிலையில் இந்த உச்சத்தை தொட்டு இருக்கிறான் ...
இதற்கு உதவிய நெஞ்சங்களை மறக்க முடியுமா ?
வலைப் பூவை முதலில் வடிவமைத்து தந்த அருமை மகன் அஜய் சந்தனுக்கும்...
வலைப்பூவில் நான் விரும்பிய  மேம்பாடுகளை செய்த நண்பர் தமிழ் வாசி பிரகாஷ் அவர்களுக்கும்...
தினசரி கருத்துக்கள் மட்டுமல்ல... பிளாக் இன்னை பிளாக் காம்மாகி ...
வோட் பட்டனும் அமைத்து தந்து உச்சம் தொட உதவிய ...
வலை உலக விரல் வித்தகர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் ...
வலைச்சர அறிமுகமாய் என்னை ஆதரித்த  வே.நடன சபாபதி ,
குடந்தையூர் ஆர் .வி.சரவணன் ,திருமதி .அருணா செல்வம் ஆகியோருக்கும் நன்றி ...
அதிகபட்ச  கருத்துரைக்களைக் கூறி ஊக்குவிக்கும் ...
திருவாளர்கள் ரமணி அய்யா ,புலவர் இராமனுசம் அய்யா ,வெங்கட் நாகராஜ் ஜி ,சைதை அஜீஸ் ஜி ,திருமதி ராஜி ,அ .பாண்டியன் ஜி ,சே. குமார் ஜி,நம்பள்கி ஜி ,ஜீவலிங்கம் காசி ராஜலிங்கம் ஜி ,வா.மணிகண்டன் ஜி ,கவியாழிகண்ணதாசன் ஜி ,கரந்தை ஜெயகுமார் ஜி ,வி .துளசிதரன் ஜி ,T.Nமுரளிதரன் ஜி ,2 ௦ ௦ 8ரூபன் ஜி ,கவிதை வீதி சௌந்தர் ஜி ,'மின்னல் வரிகள் 'பால கணேஷ் ஜி .கோவை ஆவி ஜி ஆகியோருக்கும் ...
மேலும் பல நூற்றுக்கணக்கான கருத்துரை இட்ட நண்பர்களுக்கும் ,லட்சக்கணக்கான வாசக நெஞ்சங்களுக்கும் நன்றி ...
உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் நெஞ்சங்களுக்கு பதிவுகளை கொண்டு சென்ற தமிழ் மணம் ,இன்ட்லி ,தமிழ் வெளி ,ஹாரம் திரட்டிக்கும் நன்றி ...
Face book ,Google+,Twitter ,வெட்டிபிளாக்கர் வழியாக follow செய்பவர்களுக்கும் நன்றி !
சிகரத்தைத் தொட என்றும்போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன் !
நன்றி !

30 comments:

 1. மிக்க மகிழ்ச்சி.... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. என் முதல் வணக்கத்துக்கு உரிய முதல்வரே ,வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 2. வாழ்த்துகள். ட்ரீட் எப்போ!?

  ReplyDelete
  Replies
  1. உங்க ஐந்நூறாவது பதிவுக்கு நீங்க கொடுக்காம விட்ட ட்ரீட்டுக்கு இதை அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க !
   நன்றி

   Delete
 3. "வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்"
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஓடத்தை நெருங்கியாச்சு ,இனிமே இன்னும் ஓட்டத்தைக் கூட்டணும்!
   வாழ்த்துக்கு நன்றி

   Delete
 4. வணக்கம் சகோதரர்
  காண்பதற்கே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. கருத்திட்ட அனைவரையும் நன்றியோடு நினைவு கூர்ந்த தங்கள் மனம் கண்டு நெகிழ்கிறேன். வாழ்த்துகள் சகோதரர். அப்புறம் அங்கேயும் திண்டுக்கல் தனபாலன் சகோதரர் தானா! எனக்கும் அவர் தான். அவரது பணியையும் நன்றியோடு நானும் பகிர்கிறேன். மகிழ்ச்சியான பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வலையுலகில் வாத்தியார்கள் அதிகம் ,மறக்க முடியுமா ?
   தனபாலன் சார் ஓசையின்றி நிறைய பதிவர்களுக்கு உதவி செய்து வருகிறார் ,அவரின் நல்ல மனதிற்கு மகிழ்ச்சி பொங்கட்டும் !
   வாழ்த்துக்கு நன்றி

   Delete
 5. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 6. மிக்க மகிழ்ச்சி நண்பரே
  சாதனைகள் தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் ஆதரவே எனக்கு ஊக்கம் !
   நன்றி

   Delete
 7. இன்னும்...இன்னும்...இன்னும்...உயர வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் ஆதரவு இருக்கையில் சிகரத்தை தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது !
   நன்றி

   Delete
 8. இந்த செய்தி, மிக மகிழ்ச்சி!
  தொடரட்டும் வெற்றியுலா!

  ReplyDelete
  Replies
  1. வெற்றி உலா வர வாழ்த்தியதற்கு நன்றி !

   Delete
 9. வணக்கம்
  தலைவா.....

  என்ன தலைவா... இம்புட்டு அளவு சொல்லித்திங்கள்... ஒரு விழா எடுத்திருக்க வேண்டும்.. அல்லவா?. என்னிடம் சொல்லி இருந்தால் எப்படி செய்திருப்போம்...மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. இந்த எழுத்துலகில் இன்னும் இன்னும் வளர எனது வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. படிக்கட்டு அமைத்து தந்தவர்களை எப்படி மறக்க முடியும் ?
   உங்கள் வருகையே எனக்கு விழாதான்,வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 10. ஆதரவுடன் , வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாய்தா வாங்காமல் உடன் ஆஜராகி வாழ்த்தியமைக்கு நன்றி !

   Delete
 11. மேன்மேலும் உயர என் உளங்கனிந்த வாழ்த்து!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆசீர்வாதத்திற்கு மிக்க நன்றி அய்யா !

   Delete
 12. மிக்க மகிழ்ச்சி..... விரைவில் முதலாம் இடத்தை அடைய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. முதல் மூன்று இடத்தில் உள்ள நந்திகளை பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே .பார்ப்போம் !
   வாழ்த்துக்கு நன்றி

   Delete
 13. மிக்க மகிழ்ச்சி
  சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சென்ற வாரமே தீர்க்கதரிசியாய் நீங்கள் சொன்னது பலித்து விட்டது .வாழ்த்துக்கு நன்றி

   Delete