Thursday, 13 February 2014

பெண்டாட்டிக்கு வந்த ' 2 இன் 1 'ஐடியா !

''இரும்புச் சத்து கூட்டிக்கணும்னு டாக்டர் சொன்னார் சரி ...அதுக்கு நீ என்ன செய்யப் போறே ?''
''உங்க ஸ்கூட்டரை தள்ளுவண்டிக்காரன்கிட்டே   தள்ளிட்டு பேரீச்சம்பழம்  வாங்கிச் சாப்பிடலாம்னு  இருக்கேங்க !''

18 comments:

  1. Replies
    1. பேரீச்சம் பழம் வாங்கி சாப்பிட வேண்டியதுதான்,அதுக்கு ஸ்கூட்டரை போட்டுதான் ஆகணுமா ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. பழைய இரும்பைக் கொடுத்தால் பதிலுக்கு இரும்புச் சத்து உள்ள பேரீச்சம் பழம் முதலில் கொடுத்தவன் தீர்க்கதரிசியாத்தான் இருக்கணும் !
      நன்றி

      Delete
  3. வணக்கம்

    நகைச்சுவை சூப்பர்....ஹ....ஹ...
    வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
    Replies
    1. சரியான 'லொட லோடா' ஸ்கூட்டர் போலிருக்கே !
      நன்றி

      Delete
  4. Replies
    1. சமயம் பார்த்து திட்டத்தை செயல் படுத்துறாங்களோ ?
      நன்றி

      Delete
  5. தமிழ்மணம் +1
    ஒரு கேள்வி!
    இப்ப எல்லாம் ஈயம் பித்தாளைக்கு பேரிச்சம்பழம் வியாபாரம் உண்டா?
    யார் இந்த நவீன பண்ட மாற்று முறையை கண்டுபடித்த அறிவாளி?

    ReplyDelete
    Replies
    1. இப்போது பழக்கத்தில் இல்லை ,சொல் வழக்கில் மட்டுமே உள்ளது !
      இப்போது மெடிகல் ரெப்கள் வந்து டாக்டர்களை கவனித்துவிட்டு செல்கிறார்கள் ,முன்பு பழைய இரும்பு வியாபாரிகளுக்கும் டாக்டர்களுக்கும் இந்த உறவு இருந்து இருக்கலாம் ,அறிவாளி யார் என்று தெரிகிறதா ?
      நன்றி

      Delete
  6. இரும்புச் சத்து வேணும்னு டாக்டர் சொன்னா... ஸ்கூட்டரையேல்ல உடைச்சு அந்த மனைவி சாப்பிடணும் நியாயமா? ஹி... ஹி... ஹி...!

    ReplyDelete
    Replies
    1. கால்சீயம் குறையுதுன்னா ,முழு சீயம் வாங்கி ,கால் சீயம் மட்டும் சாப்பிடச் சொல்வீங்க போலிருக்கே !
      நன்றி

      Delete
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

    வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரத்தில் உங்களையும் ,என்னையும் அறிமுகப் படுத்தாத பதிவர்கள் இல்லை போலிருக்கே ...இந்த விசயத்தில் நாம ரெண்டு பேருமே லக்கி ,இல்லையா தனபாலன் ஜி ?
      நன்றி

      Delete
  8. அழகான
    பண்டமாற்று
    வணிகத்தைப் படித்தேன்
    பழங்களை விட
    கீரை வகையிலே
    இரும்புச் சத்துக் கூடவே!

    ReplyDelete
    Replies
    1. ஸ்கூட்டருக்கு பேரீச்சம்பழமோ .கீரையோ எதைக் கொடுத்தாலும் சாப்பிடத்தயார் !
      நன்றி

      Delete
  9. செம ஐடியாவா இருக்கே......

    ReplyDelete
    Replies
    1. ஆனால் ,புருசன்காரன் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாரே !
      நன்றி

      Delete