Friday, 28 February 2014

இப்படி இக்கு வைக்கும் காரணம் என்ன ?

''தலைவர் வெளியிட்டு இருக்கிற வேட்பாளர் பட்டியலை பார்த்துட்டு ,அவர் முன்னாள் ரயில்வே அதிகாரியான்னு ஏன் கேக்கிறே ?''
''இந்த பட்டியலில் உள்ளவர்கள் கடைசி நேர  மாறுதலுக்கு உட்பட்டவர்கள் என்று பின் குறிப்பிலே சொல்லி இருக்காரே !''

22 comments:

  1. சரியாகத் தான் சொல்லி உள்ளார்...!

    ReplyDelete
    Replies
    1. கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வது (பெட்டி கொடுப்பது )உங்கள் திறமை என்பது இதன் உள்ளர்த்தமோ?
      நன்றி

      Delete
  2. நல்லவேளை ” பயணிகள் கவனிக்கவும்!” என்று தலைவர் சொல்லாமல் விட்டார்!

    ReplyDelete
    Replies
    1. டெல்லி வரை செல்லும் பார்லிமென்ட் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராய் இருக்கின்றது ,கள்ள வோட்டில் ஜெயித்த நல்லவர்கள் ஓசியில் செல்ல அரிய சந்தர்ப்பம் என்றும் அழைக்காமல் விட்டாரே !
      நன்றி

      Delete
  3. Replies
    1. தலைவரின் பின்குறிப்புதான் பலரின் வயிற்றில் புளியைக் கரைப்பதாக கேள்வி !
      நன்றி

      Delete
  4. நல்லது நடந்தால் சிரிதான்
    தலைவா எனது கொம்பியூட்டர் பழுதாகி விட்டது இணையம் வருவது குறையும்
    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கம்ப்யூட்டருக்கும் விரைவில் நல்லது நடந்தால் எனக்கும் சரிதான் !
      நன்றி

      Delete
  5. ஆகா இடம் கிடைத்து விட்டது என்று துள்ளி குதித்தவர்கள் மனதில் ஒரு இக்கு விழுந்து இருப்பதாகத் தெரிகிறது !
    நன்றி

    ReplyDelete
  6. நான் கூறியதை நிரூபர்கள் தவறாக வெளியிட்டு விட்டார்கள் என்று சொல்லிச் சொல்லி அவருக்கே அலுத்துப்போச்சு. இப்ப புது பாயிண்டுக்கு வந்துட்டாரு.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. புது பாயிண்டையும் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள் ,,நான் சொல்ல வந்தது என்னான்னா ..என்றும் புதிய வியாக்கியானம் அடுத்து செய்வார் ,அதையும் நிருபர்கள் திரித்து வெளியிடுவார்கள் .இது ஒரு மெகாத் தொடர் !
      நன்றி

      Delete
  7. அடுத்து "மியூஸிகல் சேர்" தான்

    ReplyDelete
    Replies
    1. மியூசிகல் சேர் 'பெட்டி மேலே பெட்டி வந்து கொட்டுகிற நேரம் இது 'என்ற பாட்டின் நடுவில் பாட்டுக்கு நடக்கும் !
      நன்றி

      Delete
  8. Replies
    1. சிரித்து என்னை சிந்திக்க வைத்ததற்கு நன்றி !

      Delete
  9. Replies
    1. 7வது வோட்டினால் மகுடம் ஏறாது ,வாசகர் பரிந்துரையில் வரும் ...ஓகேவா ?
      நன்றி

      Delete
  10. இப்போ இப்படித்தானே நடக்குது...

    ReplyDelete
    Replies
    1. நடப்பது தெரிகிறது ,நடப்பதற்கு திரைமறைவில் நடப்பது நமக்கு தெரிவதில்லை !
      நன்றி

      Delete
  11. வேட்பாளர் பட்டியலுக்கும்
    பிற்குறிப்புத் தேவையா?

    ReplyDelete
    Replies
    1. பெட்டி கலக்சனுக்கு தேவைப் படுதே!
      நன்றி

      Delete