31 March 2014

இருமனம் இணைவது திருமணம் தானே ?

''கல்யாண தரகர் முன்பு வெல்டிங் பட்டறை வைச்சுக்கிட்டு இருந்தார்னு எப்படி சொல்றே ?''
''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே போட்டுக்கிட்டு இருக்காரே!''

30 March 2014

மனைவியிடமா வாய்தா கேட்பது ?

''உன் வீட்டுக்காரர் வக்கீலாச்சே ,அவரை ஏன்  டைவர்ஸ் பண்ணிட்டே?''
''எதைக் கேட்டாலும்  அடுத்த மாசம் பார்ப்போம்னு 'வாய்தா 'கேக்கிறாரே !''29 March 2014

கணவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க ?

"எதுக்கு இரண்டு தோசைக்கல்லை வாங்குறே ?"
"என்ன செய்றது ?உங்களுக்கு சுடச் சுட தோசை வேணும் ,தோசை வேகிற வேகத்தைவிட, நீங்க அதை உள்ளே தள்ளுற வேகம் அதிகமா இருக்கே  !"28 March 2014

வயசுக் கோளாறுக்கு எப்படி சந்தோசப் படுறது ?

''டாக்டர்  ,என் மகளுக்கு வந்திருக்கிறது வயிற்றுக் கோளாறு இல்லே ,வயசுக் கோளாறுன்னு ஏன் சொல்றீங்க?''
''கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா வேற எப்படிச் சொல்றது?''27 March 2014

இது உண்மையா ?பெண்கள்தான் சொல்லணும் !

''நம்ம வீட்டில் நடக்கிறதெல்லாம் வெளியே போயிடுதுன்னு வாய் பேச முடியாத வேலைக்காரியை வச்சுக்கிட்டியே ,இப்ப ஏன் அவளை வேண்டாங்கிறே ?''
''நாலு வீட்டிலே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலைன்னா எனக்கு மண்டை வெடிச்சிடும் போலிருக்கே !''

26 March 2014

கணவனின் புத்தி மனைவிக்குத் தெரியாதா ?

''என் கிளாஸ்  டீச்சரை  வந்து பார்த்ததில் இருந்து ,அப்பா என்னை அடித்துக்கொண்டே இருக்கிறார் ,ஏன்னு  கேளு அம்மா !''
''உன் கிளாஸ்  டீச்சரை நீ மிஸ் ன்னு சொன்னதை அவர் மிஸ்டேக்கா புரிஞ்சிக்கிட்டார் போலிருக்கு  ,என்னன்னு கேக்கிறேன் !''


25 March 2014

கைவிடக் கூடாதுன்னு அவங்களே சொல்லிட்டாங்களா ?

''என்னாலே நம்பவே முடியலே ,டாஸ்மாக் கடையிலே அவ்வையாரின் ஆத்திச் சூடி வரிகளா ?''
''ஆமா ,ஊக்க'மது' கைவிடேல்னு எழுதி இருக்காங்களே !''

24 March 2014

இந்த தைலம் அவருக்கு நல்ல மாற்றத்தைக் கொடுத்திருக்கு !

''அதோ ,அங்கே வர்ற வழுக்கைத் தலைக் காரருக்கு கரடி மாதிரி உடம்பு பூரா முடியா   இருக்கே ,எப்படி ஆச்சு ?''
''வழுக்கைத் தலையில் முடி வளரும் தைலத்தால் இப்படி சைடுஎபெக்ட் ஆயிடுச்சாம்  !''

23 March 2014

தலை நகரிலும் தொடரும் தலைவரின் அந்தரங்க லீலைகள் !

''நம்ம தலைவர் டெல்லிக்குப் போனாலும் அவர் லீலைகளை விடமாட்டாரா ,ஏன் ?''
''டெல்லி  VIA ஆக்ரா டிரெயின்லே போறோம் சரி ,டெல்லியில் வயாக்கிரா எங்கே கிடைக்கும்னு கேட்கிறாரே !''

22 March 2014

துணை (எழுத்து ) எவ்வளவு முக்கியம்னு இப்ப புரியுதா ?

''என்ன மெக்கானிக்  ,பஸ்ஸை எடுக்கவர்ற என்கிட்டே வேப்பிலைக் கொத்தைக் கொடுக்கிறீங்களே ,ஏன் ?''
''பிரேக் பிடித்தால் வண்டி முன்னால் 'பேய் 'நிற்கிறது என்று புகார் நோட்டிலே நீங்கதானே எழுதி இருந்தீங்க ,அதான் !''21 March 2014

இந்த கருவை கலைக்க பெண்கள் கூட அஞ்சுவதில்லை !

''கோழி முட்டையிட்டு அடை காத்து குஞ்சு பொறிக்கும்னு சொன்னா என் பையன் நம்ப மாட்டேங்கிறான்டி  !''
''எப்படி நம்புவான் ?நாமதான் முட்டையை  வடைச் சட்டியில் பொறித்து சாப்பிடக் கொடுத்து  விடுகிறோமே !''

20 March 2014

ஓமனக் குட்டி மனைவி ஆனதால் கிடைத்த பலன் !

'' நான் கேரளப் பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டது ,என் பையன் மூலமா உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
''மலையாளம் என் 'தாய் 'மொழி ,தமிழ் என் 'தந்தை 'மொழின்னு அவன் பயோடேட்டாவிலே எழுதி இருக்கானே !''


19 March 2014

நண்பனின் மனைவிக்கு என் மனைவியே தேவலே !

''என் சட்டை ,பனியன் கிழிஞ்சு இருக்கிறதைப் பார்த்தாலே என் மனைவியோட கோபம் உனக்கு புரிஞ்சு இருக்குமே ?''
''என் மனைவியோட கோபம் ,நான் சட்டை பனியனை கழட்டினாத்தான் உனக்கு புரியும் !''

18 March 2014

பெயரைப் பார்த்து சூப்பராய் இருக்கும்னு நினைக்கக்கூடாது !

''பிரியாணிக் கறி ரொம்ப 'சாப்டா 'இருக்குன்னு சாப்பிட்டுட்டு ,இப்போ வயித்திலே காக்கா கரையிறமாதிரி இருக்கா ..அந்த கடை பெயர் என்ன ?''
''My crow soft பிரியாணி கடைதான் !''17 March 2014

இதுக்கு அப்படியும் ஒரு அர்த்தம் இருக்குமோ ?

''எங்க கடை ஆப்பிள் மேலே  export qualityன்னு ஸ்டிக்கர் ஓட்டியிருக்கோம் ...அதாவது மேல் நாட்டுக்கு போகும்  தரம்னு ,உங்களுக்கென்ன சந்தேகம் ?''
''பிறகேன் ,நேற்று ஆப்பிளை சாப்பிட்டவுடனே என் நண்பர் மேலோகம் போய் சேர்ந்தார்?''
''ஸ்டிக்கரைக் கிழிக்காம சாப்பிட்டு இருப்பார் சார் !''

16 March 2014

சர்க்கரை நோய் இருந்தா இங்கே வேலை நிச்சயம் !

''அந்த ஸ்வீட் ஸ்டால்லே வேலைக்கு ஆள் எடுக்கிறாங்கலாமே ,என்ன தகுதி வேணுமாம் ?''
''அவசியம் சர்க்கரை நோய் இருக்கணுமாம் !''

விரலில் மையைத் தவிர 'இது 'வும் உண்டு வாக்காளனுக்கு !

'வாக்குச் 'சாவடி'ன்னு பெயர் வைத்தவன் தீர்க்கதரிசி !''
''ஏன்?''
''நம்ம வாக்கை வாங்கிட்டு ,இந்த அரசியல்வாதிங்க நம்மையே 'சாவடி'க்கிறாங்களே !''


இது தேர்தல் சீசன் ஆச்சே ,இந்த ஜோக் மீது பலரின் பார்வைப் பட வேண்டும் என்பதால் மீள் பதிவு இது !

15 March 2014

அவள் மேனி எழிலின் ரகசியம் இதுதானோ ?

''உப்பில்லா சோப்பு வேணுமா ,அப்படின்னா என்னம்மா ?''
''துணிக்கு போடுறது  உப்பு சோப்புன்னா, மேனிக்குப் போடுறது உப்பில்லா சோப்தானே?''

14 March 2014

காதலின் எல்லை எதுவரை ?

''இப்போ அழுது என்ன பிரயோசனம் ?உன் காதலன் உன்னை 
கை விடக் காரணம் நீதான் !''
''என்னடி சொல்றே ?''
''உன் மேலே கையை விட அவனை நீ அனுமதிச்சது தப்புதானே ?''

13 March 2014

ஆழம் இது அய்யா ,அந்த பொம்பளே மனசுதான்யா !

''என்னங்க ,பூனை கண்ணை மூடிக்கிட்டு பூலோகம் இருண்டு விட்டது என்று நினைக்குமாங்கிறது பழமொழி...இதை சொல்றதிலே உங்களுக்கென்ன சங்கடம் ?''
''நான் உனக்கு தாலிகட்டி இருபது வருசமாச்சு ...நீ  நினைக்கிறதையே  கண்டுபிடிக்க  முடியலே ,பூனை என்ன நினைக்குதுன்னு எப்படி கண்டுபிடிச்சாங்க ?''

12 March 2014

முதல் ராத்திரியிலேயே தெரிஞ்சு போச்சு !

''கல்யாணமாகி முதல் ராத்திரிதான் முடிஞ்சுருக்கு ...டாஸ்மாக்கிலே வேலைப் பார்க்கிறவரை ஏண்டா கட்டிக்கிட்டோம்னு இருக்குன்னு சலிச்சுக்கிறீயே,ஏண்டி ?''
''நான் வீட்டுலேயும் 'விட்டுக் கொடுப்பேன்'னு கனவு  காணாதேன்னு சொல்றாரே !''


11 March 2014

கள்ளத் தொடர்புக்கு இந்த தண்டனை சரிதானே ?18+

''நம்ம ராஜா ,ராணிக்கு சிரச்சேத தண்டனைக் கொடுத்துட்டாரா ,ஏன் ?''
''மந்திரி வேஷத்திலே ராஜா அந்தப்புரம் போனாராம் ...வந்திருக்கிறது ராஜான்னு தெரியாம 'வாங்க மந்திரியாரே ,வந்து ரொம்ப நாளாச்சே 'ன்னு ராணி வரவேற்றாங்களாமே!''

10 March 2014

செவப்பா இருந்தா மார்பிள் சிலைன்னே சொல்லலாம் !

''கடவுள் ஏன் கல்லானார் ?''
''இதென்ன கேள்வி ,கல்லுலே செய்ஞ்சாங்க கல்லா இருக்கார் !''


9 March 2014

காதலி மனசுலே இன்னொருவனும் இருக்கிறானா ?


''ஏண்டா  சுரேஷ் ,குரலை மாற்றி  பேசியதால் காதலி மனசுலே இருக்கிறது யார்ன்னு தெரிஞ்சுகிட்டியா ,எப்படிடா ?''
''குரலை மாற்றிப் பேசினா எனக்கு தெரியாதா 'ரமேஷ்'ன்னு சொல்றாளே !''


இந்த ஜோக், நம்ம அய்யா புலவர் இராமாநுசம் அவர்கள் குழப்புகிறது என்று சொல்லி இருப்பதால் ...வேறொரு கோணத்தில் ....

''ஹலோ ,நீங்க குரலை மாற்றிப் பேசினா எனக்கு தெரியாதா ,நீங்க என் டார்லிங் ரமேஷ்தானே ?''
''அடிப்பாவி ,நான் சுரேஷ் பேசுறேன் ..உனக்கு என்னைத் தவிர ரமேஷ்ன்னுவேற ஒரு காதலன் இருக்கானா ?''8 March 2014

ஐந்தறிவுக்கு உள்ள விசுவாசம் ஆறறிவுக்கு இல்லையே !

விசுவாசம் மிகுந்தது நாய் மட்டுமல்ல ...
கிளியும்தான் என்று நிரூபித்து உள்ளது ...
சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடந்து இருக்கும் ஒரு கொலை சம்பவம் ...
நீலம்சர்மா என்னும் பெயர் கொண்ட பெண்மணி கொலை செய்யப் பட்டுள்ளார் ...
வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை போயுள்ளது ...
துப்பு கிடைத்த விதம் பற்றி கொலையான பெண்மணியின் கணவர் கூறியது ...
என் சகோதரி மகன் அசுதோஷ் சர்மாவை (30)வளர்ப்பு மகன் போல் பாவித்து வீட்டில் வளர்த்து வந்தேன் ...
என் மனைவி கொலை விசாரணைக்காக போலீசார் வரும்போது ...
என் மனைவி செல்லமாய் வளர்த்து வந்த கிளி ...
'ஆஷு,ஆஷு 'என்று கத்தியதுடன்..இயற்கைக்கு மாறாக விநோதமாக செய்கைகளுடன் சத்தம்போட்டது ...
இதை போலீசாரிடம் கூறினேன்...
அஷுதோசை விசாரித்ததில் குற்றத்தை அவன் ஒப்புக் கொண்டானாம்!
குற்றம் செய்து தப்ப நினைக்கையில் வீட்டு நாய் குறைத்ததாம் ...
அதையும் கொன்றிருக்கிறான் 'பசுத்தோல் போர்த்திய புலி 'அஷுதோஷ்!
ஐந்தறிவு ஜீவன்கள் கூட மனிதனுக்கு விசுவாசமாய் இருக்கின்றன ...
ஆறறிவு உள்ளவன்தான் வளர்ப்பு மகனாய் இருந்தாலும் ...
விசுவாசமின்றி கொலையும் கொள்ளையும் அடிக்கிறான் !

மகளே இப்படி கேட்கும்விதமா நடந்துக்கலாமா,அப்பன் ?

இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 'கூறு கெட்ட அப்பன்'களுக்கு இந்த ஜோக் அர்ப்பணம் !
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
''அடி செருப்பாலே ,என்கிட்டேயே வந்து 'உங்க மகளை காதலிக்கிறேன் ,சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க 'ன்னு சொல்றீயே ,உனக்கு யார்ரா இந்த தைரியம் கொடுத்தது ?''
''உங்க மகதான் ...அவ சம்பாதியத்திலே உட்கார்ந்து சாப்பிடுற உங்களுக்கு ,அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணம் இல்லையாமே !''
7 March 2014

ஆதர்ச தம்பதிகளா இவங்களை எடுத்துக்ககூடாது !

''நீ பாதி,நான் பாதின்னு வாழ்வது  நல்லதுதானே ,அதுக்காக அந்த தம்பதிகள் மாதிரி இருக்ககூடாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
''ஒரு பாட்டில் புல் வாங்கி ஆளுக்கு பாதியை  ராவா அடிக்கிறாங்களே !''6 March 2014

ஹனீமூன் போகத் தயங்கும் கணவன் !

''என் காதல் விவகாரம் என் புருஷனுக்குத் தெரிஞ்சுருச்சு போல இருக்குடி !''
''ஏண்டி ?''
''மூணார் அல்லது கன்னியாகுமரிக்கு ஹனிமூன் போகலாம்னு  சொன்னேன் ,சேப்ட்டியா திரும்பி வர்ற மாதிரி இடமாப் பார்த்துச் சொல்லுங்கிறாரே !''


5 March 2014

'பார்க்'கில் செய்யக் கூடாதது !

''அப்பாவை 'பார்க்'கில் வாக்கிங் மட்டும் போயிட்டு,வீட்டில் வந்து தியானம் பண்ணச் சொல்லு அம்மா !''
''ஏன் என்னடா ஆச்சு ?''
''கண்ணை மூடி தியானம் பண்ணினாராம் ,கண்ணை திறந்து பார்த்தா ,யாரோ சில்லறைக் காசை போட்டுட்டு போயிருந்தாங்களாம் !''

4 March 2014

புருஷன் சாப்ட்வேர் என்ஜீனியர்னா பெருமையா சொல்லிக்கலாம் !

''புருஷன் பஸ்லே வேலைப் பார்க்கிறதா அவ பீற்றிக்கிறாளே ,யூனிபார்ம் டிரஸ்ஸை அவர் போட்டுக்கிற மாதிரி தெரியலையே ?''
''பிக்பாக்கெட் வேலைக்கு யூனிபார்ம் எதுக்கு ?''

3 March 2014

Maal சென்று தேடினால் இவர் கண்ணில் படுவாரா ?

''என் அருமை மவனே... நான் கும்பிடுற முருகன் எங்கே இருக்கார்னு கேட்கிறீயே ,நீ எங்கெல்லாம் தேடுனே ?''
''மால் முருகானு நீங்க பாடுறீங்களேன்னு எல்லா MALLலேயும் தேடித் பார்த்துட்டேன்பா !''

2 March 2014

இதுக்கு ரூம் போட்டு யோசிச்ச மாதிரி தெரியலே !

நகையை அடகு வைச்ச சீட்டை ரொம்ப பத்திரமா வச்சிக்கணும் போலிருக்கு ...
நகை திருப்புறதுக்கு முன்னாடியே மர்ம மனிதர்களிடம் கூட காட்ட வேண்டிய நிலைமை உண்டாகி விட்டது ...

மனைவியின் முன் ஜாக்கிரதை !

''வேலைக் காரி என் ஜீன்ஸ் பேன்ட் .சட்டைப் போட்டுக்கிட்டு  வர்றாளே ,ஏன் கொடுத்தே ?''
''என் சேலையைக் கட்டிக்கிட்டு வந்தா ...நான்னு நினைச்சு அவகிட்டே நீங்க ஏடாகூடமா நடந்துக்க  கூடாதுன்னுதான் !''

1 March 2014

மனைவியின் முறைப்பு ஒன்றே போதும் !

''

''இந்த படத்தைப் படத்தை பார்த்தா உன் வீட்டுக்காரர் எவ்வளவோ பரவாயில்லையா, ஏண்டி ?''
''ஒரு முறைப்பிலேயே எல்லாம் புரிஞ்சுக்கிறாரே !''