12 March 2014

முதல் ராத்திரியிலேயே தெரிஞ்சு போச்சு !

''கல்யாணமாகி முதல் ராத்திரிதான் முடிஞ்சுருக்கு ...டாஸ்மாக்கிலே வேலைப் பார்க்கிறவரை ஏண்டா கட்டிக்கிட்டோம்னு இருக்குன்னு சலிச்சுக்கிறீயே,ஏண்டி ?''
''நான் வீட்டுலேயும் 'விட்டுக் கொடுப்பேன்'னு கனவு  காணாதேன்னு சொல்றாரே !''


28 comments:

 1. ஓஹோ...! ஹா... ஹா...

  வீட்டுக் - விட்டுக்...?

  ReplyDelete
  Replies
  1. MA படிச்சிட்டு இப்படி பாட்டில்லே இருந்து கிளாஸ்லே 'விட்டுக் கொடுக்கிற 'வேலையைப் பார்க்கிறோமேன்னுஒரு தாழ்வு மனப்பான்மை அவருக்கு இருக்கிறனாலே, முதல் ராத்திரியே கறாரா இப்படி சொல்லிட்டார்ன்னு நானும் 'விட்டு' அடிச்சா நீங்க ரசிக்காமலா போய்விடுவீர்கள் ?(இருங்க மூச்சு வாங்கிக்கிறேன் )
   நன்றி

   Delete
 2. வணக்கம் ஜி... உங்களுக்கும் உதவலாம்...

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-4.html

  ReplyDelete
  Replies
  1. அவசியம் எனக்கு உதவும் பதிவுதான் ,பயன்படுத்திக் கொள்கிறேன் .
   நன்றி

   Delete
 3. சர்க்காரு சாராயத்தால குடும்பத்துலயும் கொயப்பமா...?

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ,கடையிலே விட்டுக் கொடுத்ததால் குழப்பம் ,வீட்டுலே விட்டுக் கொடுக்காததால் குழப்பம் !
   நன்றி

   Delete
 4. அவங்க.. எல்லாம் சரியாத் தானே சொல்றாங்க!?..

  ReplyDelete
  Replies
  1. விட்டுக் கொடுப்பார்ன்னு தாலி கட்டிகிட்டது தப்பாபோச்சேன்னு சொல்றதுதானே ?
   நன்றி

   Delete
 5. Replies
  1. தலைப்பைப் பார்த்து வந்து பல்பு வாங்கினதைச் சொல்றீங்களா ,கோவை ஆவி ஜி ?
   நன்றி

   Delete
 6. மது-மாது ஜோக்? கொஞ்சநேரம் கழிச்சுத்தான் புரியுது

  ReplyDelete
  Replies
  1. ரெண்டுமே போதை சமாசாரமாச்சே ,லேட்டாகத்தான் வேலை செய்யும் !
   நன்றி

   Delete
 7. விட்டுக் கொடுப்பேன், ஊத்திக் குடுப்பேன்..... எப்படி சொன்னாலும் வீட்டம்மாவுக்கு புரிஞ்சிருக்கும் :))

  ReplyDelete
  Replies
  1. போகப்போக புரிஞ்சுக்குவாங்க !
   நன்றி

   Delete
 8. ஹாஹாஹாஆ! ஜி! அது என்ன ஜி?!!! வீட்டுக் கொடுப்பேன்? விட்டுக் கொடுப்பேன் இல்லையோ! ம்ம்ம்ம் பரவாயில்லை இது போல ஜோக்குகள் எல்லாம் புரிந்து கொள்ள முடியதா என்ன??!!!!!!!!!!!!!

  இந்த மது படுத்தும்பாடு இந்த மாதுக்களை ரொம்பவே படுத்துகிறதோ?!!!!

  த.ம.+

  துளசிதரன் (என் தோழியின் ஐடி யில் அவர் இட்ட சில drafts வாசித்துக் கொண்டிருந்ததால் அதிலிருந்து இந்த பின்னூட்டம். ஆனால் சென்னையில் இருந்தாலும் அவரும் இதை வாசித்தார் பின்னூட்டமும் சேர்ந்துதான் என்பது வேறு விஷயம்!! )

  ReplyDelete
  Replies
  1. மது மாது என்றாலே மூளை இப்படி தப்பு தப்பா டைப்படிக்கும் போலிருக்கிறது,ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டியது தான் !
   மது மாதுக்களை மட்டுமல்ல சாதுக்களைக் கூட பாதை மாற்றிவிடுமே !
   இவ்வளவு சிரமப்பட்டு கமெண்ட் போட்டதற்கு நன்றி

   Delete
 9. அறத்துன்பம்!(தர்ம சங்கடம்)

  ReplyDelete
  Replies
  1. அற்றாக் ஷாப்பினால் வந்த துன்பம்னும் சொல்லலாம் அய்யா !
   நன்றி

   Delete
 10. கல்யாணமாகி
  முதல் ராத்திரிதான் முடிஞ்சுருக்கு
  அதற்குள்ளே
  விட்டுக் கொடுப்பேன்'னு
  கனவு காணாதேன்னு
  குண்டொன்றைப் போட்டால்
  வீடு வெடிச்சுச் சிதறும் போல...

  ReplyDelete
  Replies
  1. தெரியாமச் சொல்லி விட்டோமேன்னு அவரே வருத்தப் படும் நாள் வெகு தொலைவில் இல்லை !
   நன்றி

   Delete
 11. முதல் ராத்திரியிலேயே தண்ணி அடித்துவிட்டு மனைவியிடம் உளறியிருப்பாரோ?

  ReplyDelete
  Replies
  1. அதையும் விட்டு கொடுக்க முடியாதுன்னு சிம்பாலிக்கா காட்டி இருப்பாரோ !
   நன்றி

   Delete
 12. முதலில் புரியவில்லை! உங்கள் விளக்கம் புரியவைத்தது! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சிந்திக்க வைக்கும் ஜோக் என்றால் சும்மாவா ?விளக்கம்தான் புரிய வைத்ததா ?அப்பா நான் சிந்திக்க வைக்கலையா ?அவ்வவ்வ்வ்வ் ...எழுதிய என்னை மன்னியுங்கள் சுரேஷ் ஜி !
   நன்றி

   Delete
 13. அதானே..... எல்லா இடத்திலும் விட்டுக் கொடுக்க முடியுமா! :)

  ReplyDelete
  Replies
  1. தன்மானம் தடுக்குமே !
   நன்றி

   Delete
 14. எனக்குதான் ஒண்னும் புரியலை! எல்லாரும் குத்தறாங்க நாமும் குத்துவோம். தர்ம அடிதானே... ஹி... ஹி...

  ReplyDelete
  Replies
  1. விட்டுக் கொடுக்கிறதை வேலை இடத்தில் மட்டுமே அவர் செய்வாராம் ,இப்போ புரியுதா ?
   நன்றி

   Delete