21 March 2014

இந்த கருவை கலைக்க பெண்கள் கூட அஞ்சுவதில்லை !

''கோழி முட்டையிட்டு அடை காத்து குஞ்சு பொறிக்கும்னு சொன்னா என் பையன் நம்ப மாட்டேங்கிறான்டி  !''
''எப்படி நம்புவான் ?நாமதான் முட்டையை  வடைச் சட்டியில் பொறித்து சாப்பிடக் கொடுத்து  விடுகிறோமே !''

32 comments:

 1. ஆமாம் நிச்சயம் அறிய வாய்ப்பில்லைதான்

  ReplyDelete
  Replies
  1. பசும் பால்,எருமைப் பால் எங்கே இருக்கு ?பாக்கெட் பால்தானே இருக்குன்னு சொல்ற அபார்ட்மென்ட் தலைமுறை உருவாகியிடுச்சே!
   நன்றி

   Delete
 2. சிந்தனைச் சித்தரே வாழிய வாழிய :))))
  (என்னமா யோசிக்கிறாங்க ! :)) )

  ReplyDelete
  Replies
  1. முட்டைப் பொரியல் பித்தரைப் போய் சிந்தனைச் சித்தர் என்பது பொருத்தமா ?
   (பசங்க நல்லாத்தான் யோசிக்கிறாங்க ,ஆனால்முட்டையில் இருந்து குஞ்சு வரும்னு தெரிய மாட்டேங்குது )
   நன்றி

   Delete
 3. Replies
  1. இயற்கையில் இருந்து எவ்வளவு தூரம் விலகிப் போய்க்கிட்டு இருக்கிறோம்?
   நன்றி

   Delete
 4. Replies
  1. IQ நாலேஜ் பையனுக்கு அதிகம் என்றாலும் முட்டை விஷயத்தில் கூமுட்டைதான் !
   நன்றி

   Delete
 5. மொக்கை கடி,,ஹஹஹா

  ReplyDelete
  Replies
  1. முட்டைப் பொறியல்,ஆம்லேட்ன்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா ?கரெக்டா மோப்பம் பிடிச்சு வந்துட்டீங்களே !
   நன்றி

   Delete
 6. Replies
  1. இது சட்டம் அனுமதிக்கிற கரு கலைப்புதானே லாயர் சார் ?
   நன்றி

   Delete
 7. ஹஹ்ஹஹ்ஹா!! ஆம்லெட்டும் 'அடை' மாதிரிதான இருக்கும்?

  ReplyDelete
  Replies
  1. அடைகாக்கப் படவேண்டிய முட்டை ,ஆம்லேட் ஆனால் மீண்டும் அடையாகும் விந்தையை உங்களால் புரிந்து கொண்டேன் !
   நன்றி

   Delete
 8. பின்னூட்டத்துக்கான உங்களுடைய ஒவ்வொரு பதிலும்கூட ஜோக்தான்! அசத்துங்க.

  ReplyDelete
  Replies
  1. மைதிலி மேடமும் அப்படித்தான் சொன்னார்கள் ,உங்களைப் போன்றோர் தரும் கமெண்ட்கள்தான் இந்த பாணி உருவாக காரணம் !ரசிக்கும் படியான கமெண்ட்கள் தொடரட்டும் !
   நன்றி

   Delete
 9. அதெப்படி நம்புறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும் பாலாறும் ஓடும் என்பது மாதிரியல்லவா இருக்கு??

  ReplyDelete
  Replies
  1. போறப் போக்கைப் பார்த்தால் ...நேரடியாக பார்த்தால் தான் கோழி முட்டைப் போடும் என்பதைகூட நம்புவீர்கள் போலிருக்கே !
   நன்றி

   Delete
 10. Replies
  1. இதை நம்ப முடியலைன்னா ..நெல்லில் இருந்து அரிசி வருதுன்னு சொன்னா நம்பவா போறான் ?
   நன்றி

   Delete
 11. பிராய்லர் கோழியோட முட்டைய - அடை வெச்சா - அது கூமுட்டையாகி விடுகின்றது
  எது எப்படியோ - சூடான கல்லில் கருவை ஊத்தும் போது - மனம் தவிக்கின்றது..
  அதனால், அந்த வகையறாக்களை - சாப்பிடுவதேயில்லை!..

  ReplyDelete
  Replies
  1. #பிராய்லர் கோழியோட முட்டைய - அடை வெச்சா - அது கூமுட்டையாகி விடுகின்றது#அப்படின்னா பிராய்லர் கோழி எங்கே இருந்து வருது ?நாமக்கல்லில் இருந்தா ?நாமக்கல்லுக்கு எங்கே இருந்து வருது ?இந்த ஆராய்ச்சி முடியாது போலிருக்கே ,மறுபடியும் முட்டையில் இருந்து கோழியா ,கோழியில் இருந்து முட்டையான்னு ஆராயணும் போலிருக்கே !

   அவனவன் ஆம்லெட்டை ஒரே தடவையில் முழுங்கணும்னு தவியா தவிக்கிறான் ,நீங்க என்னடான்னா ...!
   நன்றி

   Delete
  2. அன்பின் ஜீ!..
   இந்த பிராய்லர் வகையறாக்கள் - மரபணு மாற்றம் செய்யப்பட்டவை. அதிக பட்சம் 45 நாட்களுக்கு மேல் உயிர் வாழாதவை. இவற்றால் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் எழுந்து நிற்க முடியாது.

   அறுக்கப்படாமல் விட்டால் - அவைகளாகவே - எடை தாங்காமல் - உள்ளுறுப்புகள் பழுதடைந்து பரலோகம் போய்ச் சேர்ந்து விடுகின்றன.

   அறுபடுவதற்காக கூண்டில் அடைக்கப்பட்டிருப்பவை பெட்டைக் கோழிகள்.
   அவை ஒரு போதும் இணை சேர்ந்ததேயில்லை. அவற்றுக்கு அந்தக் கொடுப்பினை கூட இல்லை. முட்டையிடுபவை வேறு.

   சேகரிக்கப்படும் முட்டைகள் ஒன்று கூட பாழாகாமல் - இன்குபேட்டரில் பொரிக்கப்படுகின்றன. பின் அவற்றை நாம் பொரித்து எடுக்கின்றோம்!..

   வாயில்லா ஜீவன்கள் அறுபடும் போது படும் வேதனை காணச் சகிக்காது!..

   Delete
  3. அய்யோ பாவம் பிராய்லர் கோழிகள் ஆயிள்காலம் ஒரு மண்டல நாட்கள்தானா?நம்மாளுங்க மண்டல பூஜை செய்யும் நாட்களில் மட்டும்தான்
   கோழி சாப்பிடா விரதம் இருக்கிறார்கள் !
   தென்றல் வலைப்பூவில் திரு .ஜெயராஜன் அவர்கள் பதிவில் படித்தது ஞாபகம் வருகிறது ....ஒரு ஞானி ,ஒரு குயவன் செய்த மட்பாண்டங்களை உடைக்கிறார் ,ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கோபமாக குயவன் கேட்கிறான் ,அதற்கு ஞானி சொல்கிறார் ..உன் படைப்புக்களை உடைத்தால் உனக்கு கோபம் வருவது போலத்தானே ,உயிர்ப் பலி கொடுக்கும்போது கடவுளுக்கும் கோபம் வரும் என்கிறார் !
   வாயில்லா ஜீவன்களை கடவுளின் பெயரை சொல்லி அறுப்பதும் ஆறறிவு உள்ளவன் செய்யக்கூடிய செயலாய் தோன்றவில்லை .
   கோழிக் கறிசாப்பிடுபவர்களை விட அதிகமாக கோழிகளை பற்றிய விபரம் சொன்னதற்கு நன்றி

   Delete
  4. துரை செல்வராஜூ அவர்கள் சொல்வது சரியே! முட்டை சைவம் என்று சொல்லப்படுவ்தும் அதனால்தான். அதாவத் பலரும் நினைத்திருப்பது பெண் கோழியும் சேவலும் இணைந்தால் தன் முட்டை என்று! இல்லை! கோழியைச் சேவலுடன் இணையவிடாமல் இடும் முட்டைகள் தான் மார்க்கெட்டில் வருவது!..சேவலுடன் இனைந்தால் அவை அடைகாக்கப்ப்ட்டு குஞ்சுகள் வெளிவரும்! இணையாமல் வரும் முட்டைகளில் குஞ்சு வராது!

   பாவம் கோழிகள்!

   Delete
 12. அட.... கோழி இதெல்லாம் செய்யுமா...?

  இங்க மஷினில் தானே குஞ்சு பொறிக்கிறாங்க....

  ReplyDelete
  Replies
  1. இந்த கொடுமை நடப்பது நீங்கள் இருக்கும் பிரான்சிலா ,இப்போ வந்து இருக்கும் நம்ம ஊரிலா ?
   நன்றி

   Delete
 13. ஹஹாஹஹ்....பாவங்க கோழி!

  த.ம

  ReplyDelete