5 March 2014

'பார்க்'கில் செய்யக் கூடாதது !

''அப்பாவை 'பார்க்'கில் வாக்கிங் மட்டும் போயிட்டு,வீட்டில் வந்து தியானம் பண்ணச் சொல்லு அம்மா !''
''ஏன் என்னடா ஆச்சு ?''
''கண்ணை மூடி தியானம் பண்ணினாராம் ,கண்ணை திறந்து பார்த்தா ,யாரோ சில்லறைக் காசை போட்டுட்டு போயிருந்தாங்களாம் !''

33 comments:

 1. சில்லரை வர்த்தகம் மாதிரி சில்லரை தியானம்னு ஏதாவது பண்ணியிருப்பாரு.

  கோபாலன்

  ReplyDelete
  Replies
  1. பையனுக்கு பாக்கெட்மணி தர்றதுக்குதான் இப்படி பண்ணி இருப்பாரோ ?
   நன்றி

   Delete
 2. Replies
  1. நீங்கள் புலவர் ...நாலு பேர் பார்க்க செய்யக் கூடாதது என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொண்டீர்கள் !நம்ம சைதை அஜீஸ் சார் எப்படி எடுத்துகிட்டு இருக்கார்னு கீழே படிச்சு பாருங்க அய்யா !
   நன்றி

   Delete
 3. தியானம் பண்றப்போ கையை நீட்டிக்கிட்டு ஒக்காந்துருப்பாரு அதான் காசு விழுந்துருச்சி:))

  ReplyDelete
  Replies
  1. பெரிய ஆம்தேவ் நினைப்புலே ரெண்டு கையிலேயும் சின் முத்திரையோட கண்ணை மூடிகிட்டது வம்பா போச்சே !
   நன்றி

   Delete
 4. நான் பொண்ணுக்குத்தான் ஏதோ பிரச்சனை பாய்ஃப்ரண்டால் என்று எண்ணிவிட்டேன்!

  ReplyDelete
  Replies
  1. இன்னும் மனசுலே மன்மத ராஜாவாகவே இருக்கீங்களே ,பாராட்டுக்கள் !
   நன்றி

   Delete
 5. இது நல்ல ஐடியாவா இருக்கே.....சின்னதா சைடு பிசினஸ் ஆரம்பிக்கலாம் போல !!!

  ReplyDelete
  Replies
  1. உடனடி பலன் தரும் சில்லறை தியானம்னு விளம்பரம் பண்ணிக்கலாம் !காசு கொட்டும் !
   நன்றி

   Delete
 6. இப்பலாம் சாமிஜிகளுக்கும் தான் காசு போடறாங்களே அதமாதிரிதான் இதுவும்!.....ஜி நாம கூட ட்ரை பண்ணலாம்! என்ன சொல்றீங்க!!!!

  த.ம.

  ReplyDelete
  Replies
  1. நாளை காலையில் செம்மொழிப் பூங்கா முன்னால் இடம் பிடிக்கலாம் ,வாங்களேன் !
   நன்றி

   Delete
 7. உண்மையான பிச்சைக்காரர்களுக்கே பணம் போட யோசிக்கும் இந்தக்காலத்தில் எங்கே பார்க்கில் உக்காருபவர்களுக்குப் போடப்போகிறார்கள்! ஆனால் ஜோக் அருமை

  ReplyDelete
  Replies
  1. இங்கே மதுரையில் தாமரை தொட்டி அருகில் ,வயதான தம்பதி ஜோடி, வாக்கிங் போகிறவர்களிடம் பிச்சை எடுப்பதை தினசரி காலையில் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் !அந்த காட்சியின் பாதிப்புதான் இந்த மொக்கை போட காரணம் ஜெயசீலன் !
   நன்றி

   Delete
 8. நல்ல வருமானம்தான் போலிருக்கு!

  ReplyDelete
  Replies
  1. இப்படியும் சம்பாதிக்கலாம் இப்ப புரிஞ்சுருக்கும் !
   நன்றி

   Delete
 9. வாக்கிங் போனமாதியும் ஆச்சு வருமானமும் வந்தமாதிரி ஆச்சு....பணத்தின் அருமை பிள்ளைகளுக்கு தெரியாது

  ReplyDelete
  Replies
  1. மேலுக்கு ஒன்னும் போடாம தாடியும் வளர்த்துகிட்டு உட்கார்ந்தா செம கலக்சன் தான் !
   பயபுள்ளே வயசானா புரிஞ்சுக்குவான் !
   நன்றி

   Delete
 10. அள்ள அள்ளக் குறையாத உங்கள் கற்பனை வளத்திற்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. எழுதியது கொஞ்சம்தான் ,எழுத வேண்டியது நிறைய இருக்கிறது என்று நினைப்பதால் கற்பனை ஊற்று வற்றுவதே இல்லை அய்யா !
   நன்றி

   Delete
 11. வெக்கப் படாமல் பிச்சை எடுக்கவும் இது ஒரு நல்ல வழி தானே ?.:)))))

  ReplyDelete
  Replies
  1. இதை விடவும் நல்ல வழியேது ?கௌரவப் பிச்சைன்னு சொல்றவங்க சொல்லிட்டு போகட்டும் ! !
   நன்றி

   Delete
 12. இப்படித் தியானம் செய்தால்
  அப்படி வருவாயும் கிட்டுதோ

  ReplyDelete
  Replies
  1. அழுக்கு சட்டை,பரட்டைத் தலையுடன் ,கைகளை நீட்டிய கோலத்தில் இருந்தால் வருவாய் கிட்டும் !
   நன்றி

   Delete
 13. நாட்டில் வள்ளல்தன்மை அதிகரித்து விட்டது

  ReplyDelete
  Replies
  1. இல்லையா பின்னே ?பைசாக்கள் ஒழிந்து அரை ரூபாய்தான் மினிமம் என்றாகி விட்டதே !
   நன்றி

   Delete
 14. Replies
  1. உங்கள் வள்ளல் தன்மைக்கும் நன்றி !

   Delete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. ஜோக்குக்கு சிரிச்சிட்டு மறுமொழிப் பக்கம் வந்தா,

  முதல் மறுமொழி மறுபடியும் சிரிக்க வச்சிருச்சு :)

  ReplyDelete
  Replies
  1. உங்களை போலவே கோபாலன் ஜியும் நல்ல ரசிப்பு தன்மை மிக்கவர் !
   நன்றி

   Delete
 17. ஒரு வேளை கலெக்‌ஷன் குறைவோ?:)))

  ReplyDelete
  Replies
  1. போக போகத்தானே பிக்கப் ஆகும் ?
   நன்றி

   Delete