Saturday, 12 April 2014

நடிகைக்கு ஆப்ரேசன்னா கிண்டல் செய்யலாமா ?

''அந்த நடிகைக்கு டான்ஸில் ஆப்ரேசன்னு கேள்விப்பட்டு ,டான்ஸ் மாஸ்டர்  கமெண்ட் அடிக்கிறாரா,எப்படி ?''
''அவர் டான்ஸில்தான் வீக் ,அவர் டான்ஸிலுமா  வீக்னு கேக்கிறார் !''


30 comments:

  1. Replies
    1. டான்சில்ஸ் பாதிக்கப் பட்டு இருக்கும் போது பேசினால் தொண்டையில் வலி ஏற்படும்,ஆபரேசன் முடிந்து சரியான பின் டான்ஸ் மாஸ்டருடன் தொண்டைக் கிழிய நடிகை ஒரு பெரிய சண்டை போடத்தான் போகிறார் !
      நன்றி

      Delete
  2. அதானே... கேட்கக் கூடாதே...!

    ReplyDelete
    Replies
    1. அதுவும் நடிகை எதிரே இல்லாதபோது இப்படி பேசலாமா ?
      நன்றி

      Delete
  3. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை ஏளனம் செய்யக்கூடாது..

    ReplyDelete
    Replies
    1. இந்த அடிப்படை நாகரீகம் கூட தெரியாம சினி பீல்டில் எப்படி குப்பை கொட்டுறார் ?இப்படிப் பட்டவர் டான்ஸ் சொல்லிக் கொடுத்தால் யாருக்குத்தான் டான்ஸ் வரும் ?
      நன்றி

      Delete
    2. உண்மைதான் இப்படியும் சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள் !

      Delete
    3. அப்படிப்பட்டவர்களிடம் ஒட்டுதல் வருவது சந்தேகம் தான் !
      நன்றி

      Delete
  4. :)

    துரை செல்வராஜூ: உண்மை தான்.

    ReplyDelete
    Replies
    1. இவர் இப்படி கிண்டல் அடிப்பார் என்று நடிகைக்கு தெரிந்து இருந்தால் .டான்சில் தொற்றுக் கிருமிகளை இவருக்கும் கொடுத்துவிட்டு போயிருப்பார் ,அப்ப தெரியும் தொண்டை வலின்னா என்னவென்று !
      நன்றி

      Delete
  5. சமீபத்தில் சமந்தாவுக்கு தானே டான்ஸில் வந்தது.. அப்போ அவர்தானா?? ( சும்மா கொளுத்தி போடுவோம்)

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ?எப்படி பாஸ் ,நாட்டுக்கு தேவையான நல்ல தகவல்களை எல்லாம் இப்படி விரல் நுனியிலே வச்சுருக்கீங்க ?
      சமந்தாவைக் கண்டாலே வாலிபப் பசங்க மனசு ஆட ஆரம்பித்து விடுகிறது ,இதில் அவர் வேறு ஆ( )டி காட்டவேண்டுமா ?
      நன்றி

      Delete
  6. ஆடிய ஆட்டத்தால் வீ்ககானது என்று டான்ஸ் மாஸ்டருக்கு தெரியாமல் போனது எப்படி?

    ReplyDelete
    Replies
    1. அவரே ஆட்டிவைக்கிற மாஸ்டர் ,அவருக்கு தெரியாமல் போகுமா ?
      நன்றி

      Delete
  7. Replies
    1. டான்ஸ் மாஸ்டர் பொருத்தமா ரசிக்கிற கமென்ட் அடிச்சு இருக்காரா ஜி ?
      நன்றி

      Delete
  8. கண்டிப்பாக டான்ஸ் மாஸ்டருக்கு இருக்கு ஆப்பு! பாவம் நடிகை!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. வைக்கிற ஆப்புலே 'ஆடி'த்தான் போகப் போறார் !
      நன்றி

      Delete
  9. டான்ஸில்
    டான்ஸில் தான்
    டான்ஸிலுமா
    ஆப்ரேசன்னு
    படிக்கையிலே
    என் தலை வெடிக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. உளநல பேணுதல் பணி செய்ற உங்களுக்கே தலை வெடிக்குதுன்னா,இதுக்கு விளக்கம் சொல்லணும்னா எனக்கு தலை வெடிச்சுரும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  10. நயந்தாராவுக்குதான் டான்ஸ் பிரச்சினை, டான்சில் பிரச்சினை யாருக்கு அவ்வவ்...

    ReplyDelete
    Replies
    1. அவங்களுக்கு டான்ஸ் பிரச்சினைன்னு நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் தெரியுது ,அவங்க நடந்தாலே நாட்டியம்தானே அவ்வ்வ்வ் !(இதை ,என் இல்லக்கிழத்தி படிக்காம இருக்க எந்த ஆண்டவனை வேண்டிக்கிறதுன்னு தெரியலே ! )
      நன்றி

      Delete
  11. அருமை அருமை

    ReplyDelete
    Replies
    1. டான்ஸும் அருமை ,டான்ஸிலும் அருமைதானே ?
      நன்றி

      Delete
  12. சூப்பர் அறுவை ஜோக். ஹா, ஹா,ஹா......

    ReplyDelete
    Replies
    1. அறுவைன்னா ஆங்கிலத்தில் ஆப்ரேசன்தானே ?
      நன்றி

      Delete