21 April 2014

நான் வெஜ் சமைக்கத் தெரிந்தாலும் இதை செய்ய முடியுமா ?

''வீட்டிலே ஒரு பெருச்சாளி அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்குன்னு சொல்றே ,ஆனா அடிக்காதீங்கன்னு ஏன் சொல்றே ?''
''கொன்றால்  பாவம் தின்றால் போச்சுன்னு சொல்றாங்க ,எலிக்கறியை யாருங்க சாப்பிடுறது?''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....


பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் மட்டுமில்லை ....!

''இன்ஸ்பெக்டர் அய்யா ,உங்க மக வாழ்க்கைப் படப் போறது வசதியான இடத்தில் தானா ?''
''என்ன அப்படி கேட்டுட்டீங்க ,பையனோட அப்பா மாசமானா நமக்கே லட்ச ரூபா மாமூல் கொடுத்துக்கிட்டு இருக்காரே !''

28 comments:

 1. அப்ப நீங்க வீட்டுல எலி எல்லாம் வளர்க்கிறீங்களா????

  ReplyDelete
  Replies
  1. விலைவாசி தாறுமாறா ஏறிப் போச்சு,உங்களை மாதிரி வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு கறி விருந்து வைக்க வேண்டாமா ?
   நன்றி

   Delete
  2. ஆஹா. மின்னாடியே சொல்லிட்டீங்க. அதனால உங்க வீட்டுக்கு ஒரு பெரிய கும்பிடு.

   Delete
  3. அப்படியெல்லாம் சொல்லப்படாது ,அன்பாய் அவுல் கொடுத்தாலும் 'பகுத் அச்சா'ன்னு சொல்லி சாப்பிடுறதுதான் நமது பண்பாடுங்கிறதை மறக்கலாமா ?
   நன்றி

   Delete
  4. ஹலோ, அவல் எங்கேயிருக்கு, எலிக்கறி எங்க இருக்கு. உங்களுக்கே இது அநியாயமா தெரியலையா. அதுவும் ஒரு சைவக்காரனிடம் எலிக்கறி சாபிடுங்கன்னு சொன்னா எப்படியிருக்கும்???

   Delete
  5. இந்தப் பாட்டை நீங்கள் கேட்டு இருப்பீர்களே ...
   #சைவப் பொருளாய் இருப்பவனே அன்று
   ஓட்டல் கறியை கேட்டவனே....
   ஹிஹி...பிள்ளைக்கறியை கேட்டவனே...
   அதே அதே சபாபதே! அதே அதே சபாபதே!#
   அந்த சொக்கனே பிள்ளைக் கறி கேட்டு சாப்பிட்டதா புராணம் இருக்கிறது ,இந்த சொக்கன் எலிக்கறி சாப்பிடக் கூடாதா ?
   நன்றி

   Delete
 2. சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு பயந்து பெருச்சாளியை அடிக்காம இருந்தா ,புவ்வாவுக்கு இவங்களே லாட்டரி அடிக்க வேண்டியதா போகும் !
   நன்றி

   Delete
 3. Replies
  1. பெருச்சாளியை அடிக்கலாமா , சட்டம் என்ன சொல்கிறது லாயர்?
   நன்றி

   Delete
 4. பாம்புக்கறியே சாப்பிடும் போது....

  ReplyDelete
  Replies
  1. பாம்பு தின்கிற ஊருக்குப் போனா நடுக்கண்டம் எனக்குன்னு பழமொழியே இருக்கிறதைப் பார்த்தா ,ரொம்ப காலமாவே சாப்பிடும் வழக்கம் இருக்கும் போலிருக்கே !
   நன்றி

   Delete
 5. என்ன ஜி! நாய்கறி, DD சொல்லி இருப்பது போல் பாம்புக் கறி எல்லாம் சாப்பிடும் போது எலிக் கறி என்ன?......அப்படியெ பூனைக் கறி கூட......??!!!!!!

  த.ம.

  பஹகவான் ஜி பயணத்தில் இருந்ததால் வலைப்பூக்களுக்கு வர முடியவில்லை......மன்னிக்கவும்...

  ReplyDelete
  Replies
  1. அவா அதையெல்லாம் சாப்பிடுறவாமாதிரி தெரியலையே ?

   .அதனாலென்ன ,குறும்படம் எடுப்பதில் பிசியாகி விட்டீர்களோ என்று நினைத்து விட்டேன் !
   நன்றி

   Delete
 6. இப்ப.. எலிக்கு நல்ல நேரமா!.. கெட்ட நேரமா?..

  ReplyDelete
  Replies
  1. எலிக்கு நல்ல நேரம்தான் ,அடிக்கப் போற ரெண்டுகால் பெருச்சாளிக்கு கெட்ட நேரம் !
   நன்றி

   Delete
 7. கறிக் கடைக்கு இவ்வளவு ஆதரவு இருக்கா!...

  ReplyDelete
  Replies
  1. ஒரு நிமிடம் பறக்கிற ஈசலையே வறுத்து தின்கிற உலகமாச்சே இது ,கறிக்கு சொல்லவா வேணும் ?
   நன்றி

   Delete
 8. போன வருசம்தான் ரொம்ப ஃபார்ம்ல இருந்துருக்கீங்க போல? சூப்பரான காமடி.

  ReplyDelete
  Replies
  1. சுடச்சுட பீட்சா சாப்பிடத்தான் சிலர் ஆசைப் படுகிறார்கள் ,உங்களுக்கு பழைய சோறுதான் பிடிக்கிறது ,நான் எப்போதும் இரண்டையும் கலந்து கட்டி அடிக்கிறேன் !
   நன்றி

   Delete
 9. ரெண்டுமே கலக்கல்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. கலக்கல்தான் ,பழமொழிதான் இனிமே எப்படி சொல்றதுன்னு யோசிக்க வைக்குதா ?
   நன்றி

   Delete
 10. சேதுபதி சொல்வது போல ''..ப்பா...''
  என்று தான் சொல்ல வருகுது....

  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. கடி தாங்க முடியலேன்னு சொல்லத் தோணுதா ?
   நன்றி

   Delete
 11. எங்க வீட்டுலேயும் ஒரு பெருச்சாளி ரெம்ப அநியாயம் பன்னுதுங்க..... அடிக்க முடியலிங்க...

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு நாலு காலா ,ரெண்டுகாலா ?பார்த்து சொல்லுங்க !
   நன்றி

   Delete
 12. Replies
  1. ஏதோ ஒரு அர்த்தத்தோடத்தான் சிரிக்கிறீங்க போலிருக்கே !
   நன்றி

   Delete