27 April 2014

இந்த காதல் தாலியில் முடியாது என்பதால் வந்த கனவோ ?

''டார்லிங் ,நேற்று ஒரு கெட்ட கனவு ...நீயும் நானும் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருக்கிறோம் !''
''அய்யய்யோ ,அப்புறம் ?''
''நீயும்தானே படுத்திருந்தே ,நடந்தது உனக்குத்தான் தெரியுமே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....


''டைப்பிஸ்ட் சாந்திகிட்டே யாரும் வாலாட்ட 

மாட்டேங்கிறார்களே ,ஏன் ?''


''அவங்க டைப் 'அடிக்கிற ' வேகத்தைப் பார்த்தே 

அரண்டு போயிருக்காங்களே !''

'சிரி'கவிதை!எது நிம்மதி காதலா ,கல்யாணமா ?

காதலே நிம்மதி என்று ...

திருமணம் முடிந்த சில நாளிலேயே புரிந்துவிடுகிறது !

28 comments:

 1. "//காதலே நிம்மதி//" -
  உங்களோட ஆதங்கம் எனக்கு நல்லா புரியுது. பாவம் நீங்க கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்கார்ம் செஞ்சிருக்கீங்க!!!!!

  ReplyDelete
  Replies
  1. காதல்லே காசு மட்டும்தான் செலவானது ,கல்யாணமானதும் உடல் உழைப்பும் தரவேண்டி இருக்கேன்னு சொல்றாரோ ?
   கொளுத்துற வெயிலைப் பார்த்தால் கண் சூரிய நமஸ்காரம் பண்ணுமா?
   நன்றி

   Delete
 2. வணக்கம்
  தலைவா.

  ஆகா...ஆகா... நன்றாக உள்ளது நகைச்சுவை.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. இப்படி பொதுவாச் சொன்னா ,அப்புறம் எப்படி என் தொழில் புத்தியைக் காட்டுறது ?
   நன்றி

   Delete
 3. Replies
  1. வாத்தியாரே நீங்களுமா இந்த முடிவுக்கு வந்துட்டீங்க ?
   நன்றி

   Delete
 4. தாமதமாக புரிந்து பயனில்லை... ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. அதுக்காக காலம் பூரா காதலித்துக் கொண்டே இருக்க முடியுமா ?
   நன்றி

   Delete
 5. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
  Replies
  1. நிகண்டு ஜோக்காளி ஏற்கனவே சேர்ந்து விட்டதை கண்டு கொண்டால் தேவலே !
   நன்றி

   Delete
 6. 1) அதானே!..

  2) அடேங்கப்பா!..

  3) அடப்பாவமே!..

  ReplyDelete
  Replies
  1. 1.நான்கு கண்கள் காணும் ஒரே கனவு காதல்னு கவிதைத்தனமாச் சொன்னாலும் நிஜக் கனவை ஒரே நேரத்தில் இருவரும் காண சாத்தியம் இல்லையே !
   2.அடிக்கும் போது ரெண்டு கையை வேற பயன்படுத்தறாங்க !
   3.ஆசை அறுபது நாள் ,மோகம் முப்பது நாள் ஆக மொத்தம் தொண்ணூறு நாள்தான் ஆகுது ,அதற்குள் இந்த சலிப்பா ?

   Delete
 7. காதலும் நிம்மதிதான்/

  ReplyDelete
  Replies
  1. கல்யாணமும் நிம்மதிதான்னு நேரடியா சொல்ல முடியலையா ,விமலன் ஜி ?
   நன்றி

   Delete
 8. ''அய்யய்யோ ,அப்புறம் ?''................அதான் எனக்கு தெரியாதே.........

  ReplyDelete
  Replies
  1. அந்த கால ,டணால் தங்கவேலு சரஸ்வதி காமெடி டயலாக் மாதிரி இருக்கே !
   நன்றி

   Delete
 9. எனக்குத்தெரியும் நீங்க ஏதாவது மாத்திபொய்சொல்றிங்களானு பாத்தேன் ???!!!!

  ReplyDelete
  Replies
  1. இப்படி காதலி சொல்லி இருந்தால் ..இந்த ஜோடியை லைலா மஜ்னு ,அம்பிகாபதி அமராவதி வரிசையில் தாராளமாய் சேரத்து விடலாம்தானே ?
   நன்றி

   Delete
 10. ஜோக் இரண்டும் கலகல! கவிதை உண்மை சொல்கிறது! ஹாஹா! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஆனால் இந்த உண்மை பலரையும் சுடுகிறதே !
   நன்றி

   Delete
 11. Replies
  1. ரசித்தால் மட்டும் போதாதே ஜி !
   நன்றி

   Delete
 12. சிந்திக்க வைக்கும் சிறந்த பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. உண்மயைத்தான் சொல்லுறியளா ?
   நன்றி

   Delete
 13. மிக மிக அருமை
  எப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள் ?
  ஆச்சரியமாகத்தான் இருக்கிறது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete