4 April 2014

கணவன்கிட்டே உரிமையா சண்டை போடலாம் ,வெளியில் ?

''என்னங்க , என் குரல்லே நடுக்கம் தெரியுதுன்னு பாட்டுப்போட்டி தேர்வில் இருந்து என்னை நீக்கிட்டாங்க !''
''என் புருஷனையே நடுங்க வைக்கிற என் குரல்லே நடுக்கமான்னு சண்டை போட்டிருக்க வேண்டியது தானே ?''38 comments:

 1. நடுக்கமா என் பாட்டிலா?
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. நெற்றிக்கண் திறப்பினும் நடுக்கம் நடுக்கமே என்று ரிஜெக்ட் செய்து விட்டார்களே !
   நன்றி

   Delete
 2. அதானே...? தேர்வு செய்பவர்களை நடுங்க வைக்க வேண்டாமோ...?

  ReplyDelete
  Replies
  1. உன் வீரத்தை உன் புருசனோட வச்சுக்கோன்னு நடுவர்கள் குத்துக் கல்லாட்டம் உட்கார்ந்துக் கொண்டு முதல் கட்ட தேர்விலேயே எலிமினேட் செய்துவிட்டார்களே !
   நன்றி

   Delete
 3. அனுபவ ஜோக் போல தெரியுதே ஜி? ;-) ஹஹஹா..

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. லேபிள்ளே சமூகம் என்று போட்டுள்ளேன் ,சமூகத்தில் நீங்களும் நானும் அடக்கம்தானே ?
   நன்றி

   Delete
 4. வணக்கம்
  தலைவா.....

  மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்......சூப்பர்......
  வாழ்த்துக்கள்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  ReplyDelete
  Replies
  1. கல்யாணம் ஆனபிறகு ஏன் பலபேர் நாத்திகவாதிகளாய் ஆகி விடுகிறார்கள் என்று இப்ப புரியுது !
   நன்றி

   Delete
 5. இன்னைக்குத் தான், வீட்டுக்காரர் சத்தமா பேசி இருக்கிறார் - போலிருக்கின்றது!..

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பு இப்போதானே கிடைச்சிருக்கு ?
   நன்றி

   Delete
 6. அந்த குரலுக்கு புருஷனை மட்டும் தான் நடுங்க வைக்க தெரியுமாம்!!!!!

  ReplyDelete
  Replies
  1. சமயங்களில் குளிர் ஜூரம் கூட தந்துவிடுமாம் !
   நன்றி

   Delete
 7. அது கணவன் விட்ட சாபமோ என்னவோ யார் கண்டா?

  ReplyDelete
  Replies
  1. ஆமா அவர் பெரிய விச்வாமித்திரர் ,சாபம் விட்டா பலிச்சிடப் போகுதாக்கும் ?என்று போட்டு தாக்கியதாக கேள்விபட்டேன் !
   நன்றி

   Delete
 8. பாத்துப் பேசணும். ஏங்க, அப்ப நான் மாமியாரப் பாத்து பயப்படறேன் கறீங்களான்னு ஆரம்பிச்சுருவாங்க.

  கோபாலன்

  ReplyDelete
  Replies
  1. சேச்சே ,மாமியாருக்கு பயப்படுறதுக்குத்தான் புருசனோட அப்பா (வி )இருக்காரே !
   நன்றி

   Delete
 9. புருஷனை ‘ஆட்டி’ வைக்கிறது போதாதா? இந்தம்மா பாட்டுப் ’போட்டி’கெல்லாம் ஏன் போகுது?

  ReplyDelete
  Replies
  1. ஆடலை வீட்டிலே ரசிக்கலாம் ,பாடலை வெளியிலே ரசிக்க வைக்கலாமேன்னு நினைச்சதிலே ஒண்ணும் தப்பில்லையே ?
   நன்றி

   Delete
 10. புருஷனை ‘ஆட்டி’ வைக்கிறது போதாதா? இந்தம்மா பாட்டுப் ’போட்டி’கெல்லாம் ஏன் போகுது?

  ReplyDelete
  Replies
  1. ஆட்டு'வித்தால் ' யார் ஒருவர்ஆடாதாரே கண்ணான்னு அந்த அம்மா பாடி இருப்பாங்களோ ?
   நன்றி

   Delete
 11. வீட்டுல் புலி வெளியில எலி (யோ?)

  ReplyDelete
  Replies
  1. இல்லை வீட்டிலே கிளி ,வெளியிலே பாட கிலி!
   நன்றி

   Delete
 12. Replies
  1. குரல் நடுக்கத்தை நிறுத்த என்ன செய்யலாம்னு ஒரு ஐடியா சொல்லுங்க சுரேஷ் ஜி !
   நன்றி

   Delete
 13. வணக்கம் சகோதரர்
  புருசன் நடுங்கனதை அங்கேயெல்லாம் போய் டமாரம் அடிக்கனுமானு விட்டுட்டாங்களோ என்னவோ! சிரிக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. பாட்டுக்கு செலக்சன் நடக்கிற ரெக்கார்டிங் தியேட்டரில் அனாவசியமா பேசக்கூடாதுன்னு கறாரா சொல்லிட்டாங்களே !
   நன்றி

   Delete
 14. எல்லா இடத்திலும் சண்டை போட்டா ஜெயிக்க முடியுங்களா,,,,,???

  ReplyDelete
  Replies
  1. அதுக்காகத்தான் ஓரடி முன்னே போய் ஈரடி பின்னே வந்துட்டாங்க !
   நன்றி

   Delete
 15. இந்தமுறை ஜோக்கை உங்க replies தூக்கி சாப்பிடுடுச்சு போங்க!
  கொஞ்சம் லேட்டா வரதும் நல்லது தானோ?!!!

  ReplyDelete
  Replies
  1. அது சரி ,எல்லோரும் இப்படி நினைச்சா கமெண்ட் யார் போடுறது ?
   (பசங்க கிளாசுக்கு லேட்டா வந்தா உங்களுக்கு பிடிக்குமா டீச்சர் ?}
   நன்றி

   Delete
  2. ok ,ஒத்துக்குறேன். அடுத்தமுறை reply பார்க்க வரும்போது rest of the ஜோக்கை (கமெண்ட்) பார்த்துகிறேன்:)

   Delete
  3. நிதானமா சிந்தித்து நல்ல முடிவை எடுத்ததற்கு நன்றி !

   Delete
 16. Replies
  1. மனுஷன் இப்படி போட்டு வாங்குராறேன்னு சிரிக்கிறீங்களா ஜி ?
   நன்றி

   Delete
 17. புருஷனையே நடுங்க வைக்கிற
  குரலைப் பார்த்து
  குரல்லே நடுக்கம் தெரியுதுன்னு
  எப்படிச் சொல்லலாம்?

  ReplyDelete
  Replies
  1. அதுக்குத்தான் ,எந்த கோர்ட்டுக்கு போய் நியாயம் கேட்கலாம்னு சொல்லுங்களேன் !
   நன்றி

   Delete
 18. ஹாஹஹாஹஹா.....நல்ல ஜோக்! ஆனா கூட்டம் தப்பிசுதுனு சொல்லுங்க!

  த.ம.

  ReplyDelete
  Replies
  1. அந்தக் கூட்டத்திலே இருந்த நாமளும் தப்பிச்சிட்டோம்னுதான் படுது!
   நன்றி

   Delete