28 April 2014

வாxயை மூடி பேசவும் முடியும் என்றால் .....!

''அந்த படத்தைப்  பார்க்கப் போறேன்னு 

சொன்னா ...காதை  மூடி கேட்கவும்னு ஏன் 

சொல்றீங்க ?''

''இரட்டை அர்த்த ஜோக்குகள் நிறைய இருக்கே !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!கல்யாணமானா ஒரே சோகம்தானா ?

''நீங்க கல்யாணத்திற்கு பிறகுதான் ஜோக் எழுத 

ஆரம்பிச்சீங்களா,ஏன் ?''


''நாமதான் சிரிக்க முடியலே ,மத்தவங்களாவது 

சிரிக்கட்டுமேன்னுதான் !''

'சிரி'கவிதை!குறள் வழி நடக்கும் நாய் !

சிலர் நாய் வாலை வெட்டிவிடுகிறார்கள் ...

நாய் வாலறுந்த பின்னாலும் 

வெட்டியவர்களை 'வெட்டி விடாமல் '

சுற்றி சுற்றி வருகிறதே !

45 comments:

 1. உண்மையச் சொல்லுங்கள் நீங்களும் கல்யாணம் ஆன பின்னாடி தான்
  ஜோக் எழுத வந்தீங்களா சகோதரா ?...:)))

  ReplyDelete
  Replies
  1. இங்கே கதையே தலைக்கீழ் ...நான் எழுத்தையே கட்டிக்கிட்டு அழுறேன்னு,என்னை கட்டிக்கிட்ட வூட்டம்மா அழுவுராக!
   நன்றி

   Delete
  2. இதுக்கும் சிரிப்புத்தானா ?
   நன்றி

   Delete
  3. நான் கேட்கனும்னு நினைத்தேன் . அவங்க கேட்டுடாங்க:))

   Delete
  4. உங்க சார்பா நான் அவங்களுக்கு நன்றி சொல்லி விடுகிறேன் !
   நன்றி

   Delete
 2. வணக்கம்
  காலைப் பொழுதில் கலகலப்பு.. நகைச்சுவை...நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ,இப்படி இல்லே விடியணும்?இங்கே என்னடாவென்றால் காலையிலேயே கரண்ட் போய்விடுகிறது !
   நன்றி

   Delete
 3. 'அந்தப்' படம் அப்படித்தானா!...

  சோக ஜோக் ஹிஹிஹி...

  விழிப்புணர்வு ஜோக் அருமை. அது ஜோக் அல்ல. பாடம்.

  ReplyDelete
  Replies
  1. அந்தப் படத்தில் இது போல் உண்டுன்னு கேள்விபட்டேன் !

   எவ்வளவு பெருந்தன்மையா சொல்லி இருக்கார் ?

   நல்ல நாய் ,இன்னொரு வாலிருந்திருந்தாலும் வெட்டச் சொல்லி இருக்கும் !
   நன்றி

   Delete
 4. இப்போது வரும் படங்களெல்லாம் கண்ணை மூடிக்கொண்டுதான் பார்க்கமுடியும்

  ReplyDelete
  Replies
  1. அதனாலதான் ஜனங்களும் காசை செலவழிக்காமல் பார்க்க நினைக்கிறார்கள் !
   நன்றி

   Delete
 5. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
  Replies
  1. இணைத்தாச்சே ,நன்றி !

   Delete
 6. படத்திற்கே போக வேண்டாம்... ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. படமே நம்மைத் தேடி TVல் வந்துடும் !
   நன்றி

   Delete
 7. அடடே... சிங்கிள் சோக்கு பட்ச்சுகினா... டபிள் சோக்கு பிரீயா பா...?

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  ReplyDelete
  Replies
  1. ஆமா ,சிங்கிள் ஜோக்கு ஆயிரம் டாலர் ,அடுத்ததெல்லாம் பிரீ தான்!
   நன்றி

   Delete
 8. இரண்டாம் ஜோக்... நீங்கள் ஒரு உண்மை விளம்பி! :)

  ReplyDelete
  Replies
  1. அப்ப,முதல் ஜோக்கில் சொல்லி இருப்பது பொய்யா ?எப்பூடி நம்ம எஸ்கேப் ?
   நன்றி

   Delete
 9. ஹா..ஹா...
  ஜீ ...பேசாம நீங்க எழுதின ஜோக்கை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமா போடலாம்...
  அதுவே ரெண்டு மூணு பாகங்கள் போகும் !!! வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. ஜோக்குக்கு வந்த ரசனையான கமேண்டுக்களையும் சேர்த்து தொகுத்தால் நல்லாத்தான் இருக்கும் ...ஆனால் என்ன வராத மொய் கணக்கிலே நான் ஒரு பத்தாயிரம் செலவு செய்ய வேண்டி இருக்கும் !
   வாழ்த்துக்கு நன்றி விமல் ஜி !

   Delete
 10. 1) இப்பவே தலைய சுத்துது!..

  2) சோகானந்த சுவாமிகள் இப்ப சுகம் தானே?..

  3) பாவம் அந்த நாய்..

  ReplyDelete
  Replies
  1. 1.இதுக்குத்தான் வாயை மூடிக்கிட்டு ஓவராப் பேசக்கூடாதுன்னு சொல்றது ...

   2 இஷ்ட மித்திர சிஷ்யைகளுடன் 'ஆண்' மீக ஆராய்ச்சியில் சுகம் சுகமே ...

   3 எஜமானன் நாண நாய்நயம் செய்தது பாவமா ?
   நன்றி

   Delete
 11. கல்யாணத்துக்குப் பிறகுதான் நகைச்சுவை உணர்வு அதிகமாகும் போலருக்கு! பிறருக்காகத்தான்னாலும் அதற்கும் ஒரு பெருந்தன்மை வேணுமே :))

  ReplyDelete
  Replies
  1. மனைவி ஆனவள் நகையை மட்டுமே ரசிக்க ஆரம்பித்து விடுகிறாள் ,கணவன் ஆனவன் மனைவியிடம் புன்னகையை மட்டுமே எதிர்ப்பார்ப்பதால் ,நகைச்சுவை உணர்வு அதிகமாகத்தானே செய்யும் ?
   நன்றி

   Delete
 12. மிகவும் ரசித்தேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. எதை ரசித்தீர்கள் ,காதல் ஜோடி வாய் மூடி பேசிக் கொள்வதையா?
   நன்றி

   Delete
 13. படங்களில்
  இரட்டை அர்த்த ஜோக்குகள்
  மலிஞ்சு போச்சு!

  ReplyDelete
  Replies
  1. இது மலிஞ்சு போன அளவிற்கு டிக்கெட் விலை மலிய மாட்டேன் என்கிறதே !
   நன்றி

   Delete
 14. Replies
  1. நம்ம பயபிள்ளைங்க கண்ணை மூடிககாம பார்க்கிற மாதிரி ,வாய் மூடி பேசவும்னு படம் வந்து இருக்கு அய்யா ,அந்த படத்தைப் பற்றி வாயைத் திறந்து பண்ண ,மினி விமர்சனம் தான்யா அது !
   நன்றி

   Delete
 15. தினசிரி ஜோக் அருமை! கலக்கல்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அன்னைக்கு எழுதினதே நல்லாயிருக்கு ,இல்லையா சுரேஷ் ஜி ?
   நன்றி

   Delete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. அட ! என்ன ஒற்றுமை பார்த்தீர்களா? நானும் வாயைமூடி பேசவும் பகிர்ந்துள்ளேன். நமக்குள் எங்கியோ கெமிஸ்ட்ரி ஒர்க் ஒவுட் ஆகி இருக்கு. !!!?????

  ReplyDelete
  Replies
  1. இப்படி எங்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருப்பதை யாரும் தப்பா
   எடுத்துக்காதீங்க...ப்ளீஸ்..அந்த மாதிரி உறவுக்கெல்லாம் தடை இருக்கே !
   நன்றி

   Delete
 18. ஆஹா, இப்பத்தான் தெரியுது, நீங்க எப்படி தினம் ஒரு ஜோக் எழுதுறீங்கன்னு!!!!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. நான் வீட்டில் சிரிக்காத காரணம் வேறு ...சிரித்து சிரித்து அல்சரே வந்து விடுவதால் சிரிப்பதே இல்லை ....அவ்வ்வ்வவ்வ்வ்வ் !
   நன்றி

   Delete
 19. அதையும தெரியாமா கேட்டுட்டா போச்சு.........

  ReplyDelete
  Replies
  1. படம் பார்த்த திருப்தி அப்போதானே கிடைக்கும் ?
   நன்றி

   Delete