12 May 2014

நகை உனக்கு ,ந டி கை நீ எனக்கு !

'' நகைக்கடை விளம்பரப் படத்திலே நடிச்ச நடிகைக்கு ,அதிபரோட டீலிங் ரொம்பப் பிடிச்சு போச்சாம்!''
''எப்படி?''
"அந்த நகைகளை   நீயே வைச்சுக்கோ ,உன்னை நான் வச்சுக்கிறேன்னுட்டாராம் !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!கொள்ளை அடித்தாலும் மாமூல் வந்திடணும் !


''இன்ஸ்பெக்டரான உங்க வீட்டுக்கே  வந்த நான்கு 

கொள்ளைக்காரர்களில் ஒருத்தரை மட்டும் ஏன் 

சுட்டீங்க ?''

''மத்த மூணு பேரும் மாமூலை ஒழுங்காக் 

கொடுக்கிறாங்களே !''

'சிரி'கவிதை!ஐன்ஸ்டீனும் செய்யாத வடை ஆராய்ச்சி !

வடைக்கு நடுவே ஓட்டைப் போட்டவன் 

ஆஞ்சனேய பக்தனாகத்தான் இருக்கணும் ...

வடையை மாலையாய் கோர்க்க வசதியாயிருக்கே !

34 comments:

 1. நடிகை, நகைக்கடைக்காரர் உடன்பாடு
  இன்றைய சமூகப் பொட்டுக்கேட்டை
  வெளிப்படுத்தும் செயல்பாடு!

  ReplyDelete
  Replies
  1. சரி விடுங்க ,நாம விளம்பரத்தை ரசிச்சிட்டு போவோமே !
   நன்றி

   Delete
 2. வெவரமான வெவகாரமான டீலிங்....!

  ReplyDelete
  Replies
  1. வெளிச்சத்திற்கு வராத டீலிங் கூட !
   நன்றி

   Delete
 3. நல்ல நகை! நகைக் கடை! விளம்பரம்!

  ReplyDelete
  Replies
  1. நகையும் நல்லாயிருக்கு ,நகைக் கடையும் நல்லாயிருக்கு ,இவங்க டீலிங் தான் நல்லாயில்லையோ?
   நன்றி

   Delete
 4. 1. நகை சுவையா இருந்திருக்குமோ!?..
  2. ஆத்தாடீ!?..
  3. பிரசாதம் கிடைச்சதா?.. இல்லையா!..

  ReplyDelete
  Replies
  1. 1.இல்லா விட்டால் சம்மதம் கிடைத்து இருக்காதே !
   2.நாட்டிலே இப்படித்தான் என்கவுண்டர் நடக்குதோ ?
   3.கிடைச்சது ,ஆனால் நடுவிலே கொஞ்சம் ஓட்டையைக் காணாம் !
   நன்றி

   Delete
 5. Replies
  1. அவளுக்கும் ஆசை வந்து அவனுக்கும் ஆசை வந்தா அரசாங்கம் கூட அதை
   தடுக்காதுன்னு ஒரு பாடலில் வருகிறதே ,சரிதானா லாயர் ?
   நன்றி

   Delete
 6. 3வது சிரி நன்கு பிடித்துள்ளது.
  .( No no Ellam pidiththathu.)
  இனிய வாழ்த்து சகோதரா.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. நன்கு பிடித்தது ஒண்ணு,சுமாரா பிடித்தது ரெண்டுன்னே வச்சுக்கலாமே !
   நன்றி

   Delete
 7. மாமூலா அவ்வளவு சீக்கிரம் யாரையும் சுட மாட்டாங்களே ! பயங்கர கோபம் போல இருக்கிறது.!!(மாமூல் கொடுக்கவில்லையென).

  ReplyDelete
  Replies
  1. மாமூல் மனுசனை இந்த பாடு படுத்துகிறதே !
   நன்றி

   Delete
 8. இதிலே கொடுத்து வைத்த புன்னியவான் யாரு??

  ReplyDelete
  Replies
  1. ஒண்ணு நகைக் கடை அதிபர் ,ரெண்டு மாமூலாய் தப்பித்த கொள்ளைக் காரன் ,மூணாவது வடைக் கடைக்காரர் !
   நன்றி

   Delete
 9. முதல் ஜோக்குல கொஞ்சம் காரம் தூக்கல்! ரெண்டாவது சூப்பர்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மூன்றாவது .... வடையில் எண்ணெய் ஜாஸ்தி ,ஒத்துக்கலையா ?
   நன்றி

   Delete
 10. நடிகை குள்ளே நகை உள்ளதை உண்மையிலேயே இன்றுதான் தெரிந்துகொண்டேன் நல்லரசனை ஐயா.
  Killergee
  www.Killergee.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. ஜோக்காளி உள்ள இடத்தில் கில்லர்ஜி இருப்பதை நானும் இன்றுதான் தெரிந்து கொண்டேன் !
   உங்களின் கதை சொல்லவா ...படித்தேன் ,அருமை !
   தொடர்கிறேன் ,தொடருங்கள் !
   நன்றி

   Delete
 11. ஹாஹஹா ....செம டீலிங்க்! நடிகையும் செம ஆளுதான்.......

  ReplyDelete
  Replies
  1. நகை அணிந்த நடிகையையும் ,கடையையும் நமக்கு காட்டிவிட்டு ,நகைக்கடையை அதிபர் தொலைக்காமல் இருந்தால் சரிதான் !
   நன்றி

   Delete
 12. முதல் ஜோக் - கவுண்டமணி செந்தில் ஜோக் மாதிரி இல்ல இருக்கு!!!!

  ReplyDelete
  Replies
  1. சரியாக ஊகித்து விட்டீர்கள் ..நடிகையோட காரை அவர் வச்சிருக்கார் ,நடிகையை யார் வச்சிருக்காங்க என்று கேட்ட ஜோக் நினைவுக்கு வந்திடுச்சா ?
   நன்றி

   Delete
 13. Replies
  1. நம்ம டீலிங் மாதிரி தானே ?
   நன்றி

   Delete
 14. சூப்பர் டீல்

  ReplyDelete
  Replies
  1. ஆனால் ,அவர் மனைவிக்கு பிடிக்கலையே !
   நன்றி

   Delete
 15. கேவலமான டீலிங்கா இருக்கே....

  ReplyDelete
  Replies
  1. சம்பந்தப் பட்டவர்களே டீலிங்கை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்ளும் போது,நம்ம கமெண்ட் அவங்க காதுலே ஏறுமா ?
   நன்றி

   Delete