13 May 2014

அப்பன் திருந்தாமல் பிள்ளை திருந்துமா ?

''திருடிக் கொண்டா வந்தேனு கேட்டு ,உங்கப்பா
தோலை உரிச்சிட்டாரா   ,அப்புறம் ?''
''முழு வாழைப் பழத்தையும் அவரே சாப்பிட்டு விட்டார் !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!அக்னி வெயிலினால் வந்த மறதி !

''இப்படி கோடை மழையிலே நனைஞ்சிக்கிட்டு வந்து 

இருக்கீங்களே ,கொண்டு போன குடை என்னாச்சு ?''

''இதோ இருக்கே ...கோடை வெயிலை தடுக்கத்தானே

அதை வைச்சுக்கிட்டு இருக்கேன் ?''

'சிரி'கவிதை!இழப்பதற்கு ஒன்றுமில்லையா இதை தவிர ?

வெட்டப் பட்டு மடியில் விழும் 

முடிகளைப் பார்க்கையில் ,,,

'முடி 'யாட்சி இழந்த மன்னனைப் போலாகிறேன் !

இதற்கே இப்படிஎன்றால் 

இன்றைய ஆளும் 'மன்னர்களுக்கு '...

பதவி சுகத்தை இழக்க எப்படி மனசு வரும் ?

38 comments:

 1. Replies
  1. சீனி ஜி ,நீங்க வாழைப்பழ தொழில் சறுக்கி விழுந்து இருக்க மாட்டீங்கன்னு நம்புகிறேன் !
   நன்றி

   Delete
 2. வணக்கம்

  3நகைச்சுவையும் அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி ரூபன் ஜி !

   Delete
 3. நல்ல அப்பா.

  சிரி கவிதையில்....

  இன்றைய ஆளும் மன்னர்களுக்கு மண்டையில் முடி இருக்கிறதா...?

  ReplyDelete
  Replies
  1. பிள்ளைக்கு தராத நல்ல அப்பா ?
   முடி இல்லை என்றாலும் பதவிசுகமும் விட மாட்டேங்குது தற்போது மறுமணமும் செய்துக்கும் ஆசையும் வந்துருக்கு !
   நன்றி

   Delete
 4. Replies
  1. கோடை மழைவந்தால் இரண்டு குடை தேவைப்படுதாமே ?
   நன்றி

   Delete
 5. Replies
  1. இவர்கள்தான் மு(கு )டியாட்சி மன்னர்களா ?
   நன்றி

   Delete
 6. Replies
  1. இதுக்கு அர்த்தம் குலுங்கி குலுங்கி சிரிப்பதா .ஜமான் ஜி ?
   நன்றி

   Delete
 7. 1. நல்ல முன்னுதாரணமான அப்பன்.. நாடும் வீடும் விளங்கிடும்.
  2. பாவம்.. வெயில் கொடுமையில் - இப்படி ஆகிவிட்டது!..
  3. மண்டையில தான் மிச்சம் இருக்கே!?..

  ReplyDelete
  Replies
  1. 1.ரெண்டு பேரின் தோலையும் உரிச்சா நல்லதுதான் இல்லையா ?
   2.நல்லவேளை ,மழைக்கு கருப்பு குடையும் ,வெயிலுக்கு வேறு குடையும் என்று மாற்றி மாற்றி பிடிக்காமல் போனாரே !
   3.எப்படியும் ஜெயிக்கணுங்கிற வில்லத்தன எண்ணத்தைஒழிக்க முடியாதே !
   நன்றி

   Delete
 8. ஹாஹா அப்பனும் பிள்ளையும் கில்லாடிங்க போல!

  சிரிகவிதை மிகவும் அருமை! ரசித்தோம்!

  த.ம.

  ReplyDelete
  Replies
  1. பிச்சை எடுத்தாராம் பெருமாள் ,பிடுங்கி தின்னாராம் அனுமார் மாதிரியில்லே இருக்கு ?
   மீண்டும் வளரும் மயிர் இழக்கவே மனமில்லை .உயிராய் நினைக்கிற பதவியை விட எப்படி மனம் வரும் ?
   நன்றி

   Delete
 9. அரசியல்வாதி கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. அரசியல்வாதிகள் அருமையானவர்கள் என்று சொல்ற காலம் எப்போ வருமோ ?
   நன்றி

   Delete
 10. திருட்டு
  வாழைப்பழம்
  உடலில ஒட்டாதே!

  ReplyDelete
  Replies
  1. அதனால் தான் முழுசாவே அப்பனே சாப்பிட்டு விட்டார் போலிருக்கு ,அந்த நல்ல மனசுக்காரர் !
   நன்றி

   Delete
 11. அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளையாக நிருபிச்சுட்டான் மகன்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் DNA டெஸ்ட் செய்யவே வேண்டாம் ,அவரோட பிள்ளைதான் !
   நன்றி

   Delete
 12. குடையை எதுக்கு வாங்கினாறோ அதுக்கு மட்டும் தான் பயன்படுத்தி இருக்கார். கண்டபடி அனாவசியமா பயன்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதைப்பார்த்தால் நம்மளைப்போல் அதிபுத்திசாலியாகத்தான் இருப்பார்.

  ReplyDelete
  Replies
  1. இப்படிப்பட்ட அதிபுத்திசாலிகள் இருப்பதால் தான் கொஞ்ச நஞ்சமாவது மழை பெய்கிறது !
   நன்றி

   Delete
 13. ஆஹா, இதைத்தான் தொலை உரிக்கிறதுன்னு சொல்லுவாங்களோ!!!!

  ReplyDelete
  Replies
  1. முதலிலேயே தெரிந்து இருந்தால் எக்கசக்கமா தோலை உ றித்து இருப்பீங்க இல்லையா சொக்கன் ஜி ?
   நன்றி

   Delete
 14. 1. ஹா.ஹா...ஹா..
  2. ஹா.ஹா.ஹா.ஹா.
  3. ஹா...ஹா..ஹா...

  ReplyDelete
  Replies
  1. 1.ந .ன்.றி...
   2.ந ...ன்...றி...
   3.ந ..ன்..றி...

   Delete
 15. மூன்றுமே கலக்கல்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நாளைக்கு இரண்டு ஜோக் போடப்போறேன் ,உங்க டெம்பிளேட்டை மாற்றி வச்சுக்குங்க ,சுரேஷ் ஜி !
   நன்றி

   Delete
 16. நல்லாயிருக்கு சார்/

  ReplyDelete
  Replies
  1. எது, தோலை உரித்ததா ?
   நன்றி

   Delete
 17. ஓஹோ
  உரிச்சது அந்தத் தோலா ?
  நல்ல களவாணிக் குடும்பம்

  ReplyDelete
  Replies
  1. நமக்கு இப்படி 'பழம்' கொடுத்து விட்டானே பொடிப்பய !
   நன்றி

   Delete
 18. நல்ல பகிர்வு. ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. டெல்லி வெயிலுக்கு பயந்து இங்கே வந்து இருக்கீங்க ,எப்படி பீல் பண்றீங்க ?
   நன்றி

   Delete