14 May 2014

காதலன் பட்ட கடனும் காதலி மேல்தானா ?

''டாக்டர் ,உங்ககிட்டே நர்ஸாய் வேலைப் பார்த்த என் மகள் பேஷண்ட்டை இழுத்துகிட்டு ஓடினது வாஸ்தவம்தான் ,அதுக்காக அவளுக்கு தர வேண்டிய சம்பளத்தைத் தர மாட்டேன்னு சொல்றது நியாயமா ?''
''ஓடிப் போன அந்த பேஷண்ட் கட்ட வேண்டிய பில்லுக்கு அது சரியாப் போச்சே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!புருசனுக்குத்தான் தலைஎழுத்து ,வேற வழியில்லையே !

''அந்த வீட்டு வேலையில் இருந்து ஏன் நின்னுட்டே ?''

''எஜமானி அம்மா புருசனுக்கு கொடுக்கிற பழையச் சோற்றையே 

எனக்கும் கொடுக்கிறாங்களே !''


'சிரி'கவிதை!சத்தமின்றி மூக்கு சிந்துவதும் ஒரு கலையே !

அடுத்தவர் மூக்கு சிந்துவது மட்டுமே 

அபஸ்வரமாய் கேட்கிறது !


38 comments:

 1. காதலன் பட்ட கடனும் காதலி மேல் போட்டாச்சா?
  பாவம் காதலி தான்...

  ReplyDelete
  Replies
  1. இன்னைக்கு டாக்டரை ஏமாற்றியவன் ,நாளைக்கு என்ன செய்வான்னு காதலி யோசிக்க வேண்டாமா ?
   நன்றி

   Delete
 2. Replies
  1. Labour Wages actன் படி டாகடர் மேல் கேஸை போடலாமா ,லாயர் சார் ?
   நன்றி

   Delete
 3. அது சரி, புருஷனுக்கு தான் தலையெழுத்து, பழைய சோற்றை சாப்பிடணும்னு. வேலைக்காரிக்கு என்ன தலையெழுத்தா அந்த பழைய சோற்றை சாப்பிடணும்னு!!!!

  ReplyDelete
  Replies
  1. இதுக்காக புருசனும் நாலு வீட்டை வச்சிக்க முடியுமா ?பாவம் தான் !
   நன்றி

   Delete
  2. நாலு வீட்டை வச்சிருந்தாலும் அவனுக்கு கிடைக்கப் போவது என்னமோ பழைய சோறு தான்!!!!

   Delete
 4. வணக்கம்
  ரசிக்கவைக்கும் நகைச்சுவை அருமையாக உள்ளது...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. காதலுக்கு கண்ணில்லை என்பதை நீங்களும் ரசிக்கிறீங்க போலிருக்கு !
   நன்றி

   Delete
 5. நோயாளி பட்ட கடன். வித்தியாசமான சிந்தனை.இனிமேல் சம்பளம் வாங்கிக் கொண்டுதான ஓடுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் கொஞ்சம் கூடவே வாங்கிக் கொண்டு ஓடிப் போனாலும்
   தப்பில்ல டாக்டர்கள் நோயாளியை வைத்தே தான் முன்னேறி
   வந்தவர்கள் :)))

   Delete
  2. வடபோச்சேன்னு டாகடர் வருத்தத்தில் இருக்கும் போது,எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்தியா அனுப்புவார் ?
   நன்றி

   Delete
 6. அடடா, ஓடிப்போகும்போது சரியா போகவேண்டாம்? ஒரு நியாயம் தர்மம் இல்லையே!

  ReplyDelete
  Replies
  1. ஓடிப் போகணும்னு முடிவு எடுத்த பிறகு நியாயம் தர்மமாவது ?பில் கொடுக்காம போயிருந்தா கூட டாக்டர் வருத்தப் பட்டிருக்க மாட்டார் ,நர்சையும் இல்லே இழுத்துகிட்டு போயிட்டான் ?
   நன்றி

   Delete
 7. டாக்டர் "முன்னேறி" விடுவார்...!

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு அப்புறம் லேடி நர்ஸ் வேண்டாம்னு முடிவெடுத்தா வேண்டுமானால் முன்னேறுவார் !
   நன்றி

   Delete
 8. ஓடிப்போறப்போ சம்பளை பாக்கியையும் வாங்கிக்கிட்டு போக வேணாமோ? பைத்தியக்காரப் பொண்ணாருக்கே! சம்பளத்த சபலம் ஜெயிச்சிருச்சி :)

  ReplyDelete
  Replies
  1. இவனை நம்பி சம்பளம் வேண்டாம்னு சபலத்தில் ஓடிவந்தவ என்ன நொம்பலப் படப்போறாளோ?
   நன்றி

   Delete
 9. 1. நோயாளிய இழுத்துக்கிட்டுப் போனா - டாக்டர் எப்படி பொழைக்கிறது!?..
  2. இன்னுமா பழைய சோறு மிச்சமா இருக்கு!?..
  3. ........?

  சரி.. அழகர் ஆத்துல இறங்கறாரே.. போய்ப் பார்க்கலையா!..

  ReplyDelete
  Replies
  1. 1.நாட்டிலே நோயாளிகளுக்கா பஞ்சம் ?நர்ஸ் போச்சேன்னுதான் டாகடர் வருத்தப் படுறார் !
   2.புருசனுக்காக முதல் நாளே சேர்த்து வைக்கிறது மிச்சம் இல்லாமல் போகுமா ?
   3.Driving ஒரு silent art என்பார்கள் மூக்கு சிந்துவதையும் அப்படி செய்தால் நன்றாய் இருக்கும தானே ?

   அவர் எங்கே இறங்கினார் ...இறக்கி விட்டு எல்லோரும் வேடிக்கைஇல்லே பார்க்கிறாங்க ?
   நன்றி

   Delete
 10. அன்றாடம் ஏதாவது ஒன்றைக் கண்டு பிடிக்கின்றீர்களே அது எப்படி
  றூம் போட்டு யோசிப்பீங்களோ ?..:))))

  ReplyDelete
  Replies
  1. ரூம் போட்டு யோசிக்கணும்னா யார் வாடகை தர்றது ?
   நன்றி

   Delete
 11. எல்லாம் ஓடுறதுலே இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. நோயாளி கூட காதலன் ஆகிவிடுகிறான் ,காதல் படுத்தும் பாடு ஓடத்தானே செய்வார்கள் ?
   நன்றி

   Delete
 12. நல்ல வேளை கணக்கு நேராயிடிச்சி. இன்னும் கட்ட வேண்டியிருந்தா, இவர் தலையில் இறக்கியிருப்பார் டாக்டர்!

  ReplyDelete
  Replies
  1. அப்படி கட்டச் சொல்லி இருந்தா கட்டிட்டு போறது ,கல்யாணம்ன்னு ஓண்ணு பண்ணி இருந்தா எவ்வளவு செலவு பண்ணியிருப்பார் ?
   நன்றி

   Delete
 13. வேலைக்காரி ஜோக் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்டு வேலைக் காரிக்கும் காலையில் டிபன்தான் வேணும் அதுவும் சுடச் சுட !அப்ப பழசு ?ஹி ஹி
   நன்றி

   Delete
 14. படித்ததும் பிடித்தது மூன்றும்

  ReplyDelete
  Replies
  1. ஒண்ணு கூட குறையாததற்கு ரொம்ப சந்தோசப் படுறேன் அய்யா !
   நன்றி

   Delete
 15. ஆசுபத்ரீல பல நர்சுங்க கொஞ்சம் சத்தம் போடாதீங்க அப்டீங்கறாங்க. இந்த மாதிரி பேஷண்டு பயந்துட்டு வெளீல போய்ருவாருன்னுட்டா.

  கோபாலன்

  ReplyDelete
  Replies
  1. எல்லாரையும் அமைதியா இருக்கச் சொல்லிட்டு ..இந்த நர்ஸ் என்ன காரியம் பண்ணிக்கிட்டு இருந்திருக்கு பாருங்க !
   நன்றி

   Delete
 16. அதுவும் சரிதானே
  டாக்டரின் சாமர்த்தியத்தை மிகவும் ரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. டாக்டரா ,வழிப்பறி திருடனா ?அநியாயமா ஒரு பொண்ணு உழைச்ச காசை ஏமாற்ற நினைக்கிறாரே !
   நன்றி

   Delete
 17. மூன்றும் பிடித்தது...

  ReplyDelete