15 May 2014

ஆறின கஞ்சி ஆகாதுன்னு ஆக்கியவள் அறிய மாட்டாளா ?

''வியர்வைக் காயுமுன் கூலியைக் கொடுத்து விடுன்னு  சொல்றதை ,நம்ம தேர்தல் கமிஷனருக்கு ஞாபகப் படுத்தினால் நல்லதுன்னு ஏன் சொல்றீங்க ?''
''வோட்டுப் போட்டதற்கு விரல்லே வச்ச  மையும் காணாமப் போயிடுச்சு ,ரிசல்ட்டைச் சொல்ல இத்தனை நாளாகுதே!''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!பழசை மறக்க நினைத்தாலும் ....!

''டேய் மச்சி ,H B D ன்னு பேஸ் புக்கிலே பிறந்த நாள் வாழ்த்து அனுப்பாதேன்னு சொல்றீயே ,ஏன் ?''
''முந்தி நாம குடிச்ச 'எச்சி பீடி 'ஞாபகம் வருதே !''

'சிரி'கவிதை!மனைவியின் அர்ச்சனை ?கணவனின் கற்பனை ?

ஆயில் புல்லிங் செய்யும் போது 
அழகாய் தெரிகிறாள் மனைவி ...
வாயை மூடிக் கொண்டிருப்பதால் !34 comments:

 1. Replies
  1. வியர்வைக் காயுமுன் கூலியைக் கொடுத்து விடுன்னு சொன்னவர் நபி அவர்கள் என்பதை நினையூட்டி இருக்கலாமே ,சீனி ஜி !
   நன்றி

   Delete
 2. அருமை அருமை

  ReplyDelete
  Replies
  1. அருமை ,மனைவி வாயைமூடிக் கொண்டு இருப்பதுதானே ?
   நன்றி

   Delete
 3. HBD - அவருக்கு நியாபக சக்தி ரொம்பத்தான் அதிகமாக இருக்குதே!!!

  ReplyDelete
  Replies
  1. இருக்காதா பின்னே ,ஒரு பீடியை பத்து ரவுண்டு இழுத்தவங்களாச்சே?
   நன்றி

   Delete
 4. Replies
  1. ஆக்கப் பொறுத்தவங்க ஆறப் பொறுக்கணும்னு ஆகான்னு சொல்றீங்களா ?
   நன்றி

   Delete
 5. Replies
  1. தேர்தல் முடிவு நாளை வரப் போகிறது,ஆனாலும் பொறுமையாய் இருக்க முடியலை ,இல்லையா dd ஜி?
   நன்றி

   Delete
 6. Replies
  1. அருமைன்னுஒரே வார்த்தையில் சொல்லி, என்னை பதில் மொக்கை போடவிடாமல் பண்ணிட்டீங்களே!
   நன்றி

   Delete
  2. இன்னிக்கு தலை சுத்துது!..
   நல்ல வேளை... மூணாம் நம்பர் கேஸ் ஆயில் புல்லிங் ..ன்னு ஆகிப் போச்சு!..
   பினாயில் புல்லிங்.. ன்னு இருந்தா .....!?..... என்னாகி இருக்கும்!..

   Delete
  3. அழகாய் தெரிவதற்கு பதில் அஷ்ட கோணலாய் ஆகி இருக்கும் முகம் !
   நன்றி

   Delete
 7. Replies
  1. நபிகள் சொன்னது இதற்கெல்லாம் பொருத்தமாய் இருக்கிறது இல்லையா ஜமான் ஜி ?
   நன்றி

   Delete
 8. ஆறிய கஞ்சியே கிடைக்கலேன்னு ஒரு கூட்டம் பரிதவிக்குது.....

  ReplyDelete
  Replies
  1. அந்த கூட்டமும் தேர்தல் முடிவுக்கு ஆவலாய் இருக்கு !
   நன்றி

   Delete
 9. வணக்கம் சகோதரர்
  அனைத்தும் ரசிக்க வைக்கிறது. ஆயுள் பில்லிங் அசத்தல். நடக்கட்டும் நடக்கட்டும். தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தெரியாமல் கேட்கிறேன் ,உங்களுக்கு திருமணம் ஆகலே போலிருக்கே !
   நன்றி

   Delete
 10. 1) பொறுமையே போய்விடும் போலத்தான் இருக்கிறது!. நெருங்கி விட்டதே நாள்!
  2) :))))))))
  3) என்ன அன்பு!

  ReplyDelete
  Replies
  1. 1)இனிமேல் இப்படி நாள் தள்ளி எண்ணக் கூடாதுன்னு பொது நல வழக்கு யாரவது போட்டால் ஆதரிக்கலாம் !
   2)எச்சிக்கார பயலுங்களை நினைச்சா சிரிக்கத்தான் தோணும் !
   3)வாயைத் திறந்தால்தான் வம்பாயிடுதே !
   நன்றி

   Delete
 11. இன்னும் கொஞ்ச நேரம் தான்...வாக்காளார்கள் யார் யாருக்கு வேட்டு வச்சாங்கனு சொல்லிடுவாங்க

  ReplyDelete
  Replies
  1. வோட்டுதான் போட்டாங்க ,வேட்டுமா வச்சு இருக்காங்க ?
   நன்றி

   Delete
 12. ரெண்டுமே கலக்கல்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நீங்க வழக்கமா சொல்ற மூன்றுமே கலக்கல் கமெண்ட்டையே போடுங்க சுரேஷ் ஜி !
   நன்றி

   Delete
 13. கஞ்சி நல்லாயிருக்கு பகவான்ஜீ
  அன்புடன்.
  Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. நோன்பு கஞ்சியாச்சே நல்லாத்தான் இருக்கும் ,நபிகள் அவர்களின் வாசகத்தைப் போலவே !
   நன்றி

   Delete
 14. விடிந்தால் முடிவு
  முடிவு வந்தால்
  தெரியும் உண்மை!

  ReplyDelete
  Replies
  1. உண்மை ஊர் உலகுக்கெல்லாம் தெரிந்து விட்டது ..இதுக்குப் போய் இத்தனை நாளா ?
   நன்றி

   Delete
 15. எச்சி பீடி, ஆயில் புல்லிங் இரண்டுமே ரசித்தேன்....

  ReplyDelete
  Replies
  1. அது இரண்டையும் வாயில் வைத்துக் கொளபவர்கள் ரசிப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லே ,ஏன்னா ரெண்டு காரியத்தையும் நாம செய்யப் போறதில்லே !
   நன்றி

   Delete