16 May 2014

'டிபன்' கேரியரில் மனைவி 'சோறு' அனுப்பினால் வேண்டாம் என்பாரோ ?

அன்பான வலையுலக உறவுகளே ...
 ஜோக்காளி பயணத்தில் இன்று மைல் கல் ..
உங்களின் பார்வை எண்ணிக்கையில் 222222யை தாண்டி விட்டான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் !யை தாண்டி விட்டான் என்பதை  தெரிவித்துக் கொள்கிறேன்
 நன்றி ..நன்றி ..நன்றி ..நன்றி ..நன்றி ..நன்றி!
******************************************************
''டிபன் பாக்சை தமிழில் ஓரடுக்கு என்று தாராளமா சொல்லலாமே ...இதிலே  உனக்கென்ன சந்தேகம் ?''
''அப்படின்னா ஐந்து அடுக்கு பாதுகாப்பு உள்ள இடத்தில் ஓரடுக்கு வெடிகுண்டு வெடிப்பதை ஏன் தடுக்க முடியலே ?''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!பெருசு, வயசுப் பயலுங்க வாயை கிண்டலாமா ?

''மறைக்காம என்கிட்டே சொல்லுங்க ...என் வீட்டு வாசல்லே வந்து எதுக்கு பூவா ,தலையா போட்டு பார்த்துக்கிட்டு இருக்கீங்க ?''
''உங்க பொண்ணு தலையில ரோஜாப்பூ  இன்னைக்கி  இருக்குமா இருக்காதான்னு எங்களுக்குள் ஒரு பந்தயம் ...அதான் ...!''


'சிரி'கவிதை!மருத்துவர்கள் செய்யும் 'அரசியல் 'பிராக்டிஸ் !

சாவிலிருந்து காப்பாற்றி சாதிக்க வேண்டிய மருத்துவர்கள் ...
சாதிமோதலை உண்டாக்கி மக்களை சாகடிக்கிறார்கள் !

49 comments:

 1. வாழ்த்துக்கள் நண்பரே
  தங்களின் சாதனைகள் தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. தளத்தில் நிகழும் அந்த அற்புத நிகழ்வைக் காண ....விடியும் வரை காத்திருக்க முடிய வில்லை ...விடிந்து எழுந்து பார்த்தால் 222222யை தாண்டிப் போயிருந்தது ,,அடடா ,ஒரு அற்புதமான தருணத்தை இழந்து விட்டோமேன்னு பீலிங்க்ஸ் !இத்துடன் நேரடி வர்ணனை மொக்கையை முடித்துக் கொண்டு விடை பெறுகிறேன் ...
   பாராட்டுக்கு நன்றி !

   Delete
 2. முதல் தகவலுக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  1) "பயங்கர" ஜோக்!
  2) அநியாய ஜோக்!
  3) ஜோக்கல்ல, உண்மை.

  ReplyDelete
  Replies
  1. FIRயை பாராட்டி ,வாழ்த்தியதற்கு நன்றி !
   1)நல்ல வேளை.டிபன் பாக்ஸ் குண்டு வெடிக்கும் போது நாம அங்கே இல்லாம போனோம் !
   2)பார்த்து ரசிக்க நினைத்ததில் அநியாயமில்லை ,அதை அப்பனிடமே சொன்னதுதான் ....
   3)அந்த டாக்டருக்களுக்கு இன்று மரண அடி விழுமா ?
   நன்றி

   Delete
 3. சாதனைக்குப் பாராட்டுகள். இன்னும்...இன்னும்...இன்னும் சாதிக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் அன்பான ஆதரவால் எல்லாம் சாத்தியமே !
   நன்றி

   Delete
 4. இன்றைய நாளை உங்கள் நகைச்சுவை படித்து சிரித்து தொடங்குகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இன்று உங்களுக்கு மட்டுமல்ல ,நாட்டு மக்கள் அனைவருக்குமே நல்ல பொழுதாக விடியும் என நம்புகிறேன் (என் மொக்கையைப்படித்ததால் அல்ல ,தேர்தல் முடிவால் ))))
   நன்றி

   Delete
 5. மேலும் மேலும் சிற(ரி)க்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நீங்க சிரிச்சாதான் எனக்கு தீபாவளி ,பொங்கல் ,கிறிஸ்மஸ் ,ரம்ஜான் ,புத்த பூர்ணிமா எல்லாமே !
   வாழ்த்துக்கு நன்றி

   Delete
 6. 2 கள் எல்லாம் 7முட்டையாக மாற வாழ்த்துக்கள்.அதற்குமுன்னால் இரண்டு அல்லது மூன்று போட்டுக்கொள்ளுங்கள். 20000000..............

  ReplyDelete
  Replies
  1. என் மொக்கை 'கள்'ளை குடிக்க நீங்க தயாராய் இருக்கும்போது ..ஏழு முட்டைகளை ஆம்லேட்டாய் போட்டு தர நான் தயார் !
   வாழ்த்துக்கு நன்றி

   Delete
 7. உங்க போன வருட ஜோக்குகள் எல்லாம் சுவையாக இருக்கு.. இந்த வருடம் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. ஒருவேளை இதெல்லாம் அடுத்த வருடம் படிக்க வேண்டுமோ? :) :)

  ReplyDelete
  Replies
  1. என்னை புதுப்பித்துக் கொள்ள கொஞ்ச நாள் டெல்லி பக்கம் போகப் போறேன் ,வரும்வரை நல்லா இருக்கிற மீள் பதிவுகளை படிக்கத்தான் போறீங்க ,ஆவி ஜி !
   நன்றி

   Delete
 8. வாழ்த்துக்கள் பகவான்ஜி!

  ReplyDelete
  Replies
  1. நீங்க எதிர்பார்த்த மாதிரி தேர்தல் முடிவு இருக்கா ,கவி ஜி ?
   வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 9. வாழ்த்துக்கள் சகோதரா இந்த எண்ணிக்கையானது மென்மேலும் பெருகட்டும்
  மனம் மகிழ நகைச்சுவைகளை அள்ளி வழங்கும் தங்கள் ஆக்கங்கள் சிறப்புற .

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்து எனக்கு ஊக்கத்தை தருகிறது !
   நன்றி

   Delete
 10. அட ஏழாவது ஓட்டைப் போட்டு இந்த ஆக்கத்தினை அரங்கில் ஏற்றிய பெருமை
  எனக்கே எனக்குத் தான் :))இதைத் தான் நன்றிக் கடன் என்று சொல்கிறார்களோ :)))

  ReplyDelete
  Replies
  1. வாசகர் பரிந்துரைக்கு அரங்கேற்றியதற்கு நன்றி !
   (கடன் பட்டார் நெஞ்சம் கலங்கி நிற்கிறேன் ))))

   Delete
 11. வணக்கம் சகோதரர்
  முதலில் தங்கள் மகத்தான சாதனைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். தினமும் நகைச்சுவைகள் எங்களை மகிழ்வுக்கும் தங்கள் பணிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும் உரித்தாகட்டும். இன்னும் பல சாதனைகளை மைல்கல்களை வலைப்பக்கத்தில் அடைய வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பாண்டியன் ஜி ,உங்களின் நீண்ட வாழ்த்திற்கு மிக்க நன்றி !

   Delete
 12. தங்களின் ஏறுமுகத்தைக் காட்டும் ஆறிரண்டுகளைக் (222222) கடந்தமைக்கு வாழ்த்துகள்.

  டிபன்' கேரியரில் வெடிகுண்டா
  எனக்குப் பசி வரமாட்டேங்குது!

  ReplyDelete
  Replies
  1. ஆறிரண்டை கடந்த பின்னும் அடங்க மறுக்கிறதே கற்பனைக் குதிரை ?

   உங்களுக்கு பசியே வரலேங்கிறீங்க .அவர் டிபன் கேரியரில் டிபன் வரலேன்னு வருத்தப் படுகிறாரே !
   நன்றி

   Delete
 13. வாழ்த்துக்கள் நண்பரே! இரண்டு ஜோக்கும் சிறப்பு!

  ReplyDelete
  Replies
  1. ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் இருந்து கொண்டு ஆறிரண்டைபற்றி உங்கள் கருத்தென்ன சொல்லுங்க ,சுரேஷ் ஜி !
   நன்றி

   Delete
 14. மேலும் சிறக்க நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் மேலும் சிரிக்க இந்த வாழ்த்து எனக்கு ஊக்க மருந்து (?)!
   நன்றி

   Delete
 15. பார்வை எண்ணிக்கையில் 222222 பெற்ற திரு. பகவான்ஜீக்கு வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. இரண்டு ஆண்டு முடிவதற்குள் ஆறிரண்டை கடக்க முடிந்ததற்கு காரணம் ,உங்களின் ஆதரவே !
   நன்றி

   Delete
 16. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.


  ReplyDelete
  Replies
  1. நான் எழுதியதை நிறைய படித்தால் தான் கொஞ்சமாவது சிரிக்க முடியும் அப்படித்தானே சொக்கன் ஜி ?
   நன்றி

   Delete
 17. Replies
  1. மோடி ஜெயித்த மகிழ்ச்சியில் நீங்கள் ,அதேஅளவு மகிழ்ச்சியில் நானும் !
   நன்றி

   Delete
 18. சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்
  சாதனையாளரைத் தொடர்வதில்
  பெருமிதம் கொள்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. ஐயோ ,அக்னி வெயில் நேரத்தில் இப்படி ஐஸை தூக்கி என் தலையில் வைக்கிறீர்களே ,ஜல்ப் பிடித்து விடும் போலிருக்கு !
   நன்றி

   Delete
 19. அமுத ஜோக்கு சுரபிதான் நம்ம பகவான் ஜி! :)

  ReplyDelete
  Replies
  1. அமுத சுரபி என்பதே நல்ல கற்பனை ...அமுத ஜோக்கு சுரபியா ?
   நன்றி

   Delete
 20. Replies
  1. டிபன் பாக்சில் உண்மையில் டிபனை பார்த்த மாதிரி ரசித்தீர்கள் போலிருக்கு !
   நன்றி

   Delete
 21. இனிய பாராட்டுகள் !

  ReplyDelete
  Replies
  1. #மண்ணில் கால் வச்சதும் பரமசிவனும் பார்வதியும் நமக்கு ஆசி வழங்குனாங்க!!!#
   நீங்கள் எழுதிய மேற்கண்ட கடைசிவரி வரைக்கும் படிச்சிகிட்டு வருகிறேன் , நீங்கள் கால் பதித்த இடத்தில் ,நானும் அடுத்த மாதம் செல்ல இருப்பதால் உங்கள் பதிவு எனக்கு வழிகாட்டி !
   பரமசிவன்,பார்வதியின் ஆசி வாங்கிக் கொண்ட கையோடு எனக்கு நீங்கள் தந்து இருக்கும் பாராட்டை ஆசியாகவே நினைக்கிறேன் !
   நன்றி

   Delete
 22. தருக பலவும் வலையில் உலவும்! வாழ்த்து!

  ReplyDelete
  Replies
  1. ரத்தினச் சுருக்கமாய் நீங்கள் தந்த வாழ்த்து எருக்கமாய் இருக்கும் அய்யா ஜோக்காளியின் வளர்ச்சிக்கு !
   நன்றி

   Delete
 23. ஹாஹாஹா! இது தங்கள் ஜோக்கிற்கு!

  வாழ்த்துக்கள்! ஜி!

  தங்கள் சாதனை தொடரட்டும்! ஜி!

  ஜி ஜீ பூம்பாவாய் மிளிரட்டும்!

  ReplyDelete