18 May 2014

ரயில் பயணத்தில் இப்படியுமா சோதனை வரும் ?

''ஏன்யா பெருசு ,பக்கத்து சீட்டிலே வந்து உட்கார்ந்துகிட்டு ஓயாம டயத்தைக்  கேக்கிறீயே ...கடியாரம் நின்னு பத்து நிமிஷமாச்சு !''
''கோவிச்சுக்காதீங்க தம்பி  ,கடியாரம் எப்ப நின்னுருக்குன்னு  பார்த்துச் சொல்லுங்க !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!இது அந்த 'சமந்தா 'ஈ இல்லை !


''யாரும் வாங்க வரலேன்னா அந்த ஸ்வீட் 

கடைக்காரர் என்ன பண்ணுவார் ?''

''ஈ ஓட்டிக்கிட்டு இருப்பார் !''

''யாராவது  வந்தா ?''

''அப்பவும் ஈயை  ஓட்டித்தான் ஆகணும் !''
   

சிரி'கவிதை!கண்ணா ,பிரியாணி தின்ன ஆசையா ?

பிளைன் பிரியாணி வாங்கக்கூட 
கையில் காசில்லாமல் இருக்கலாம் ...
நம்பிக்கை இருந்தால் ...
பிளேன்லேயே  பிரியாணி வாங்கிச் சாப்பிடலாம் !30 comments:

 1. வணக்கம்
  ஆகா ஆகா... நகைச்சுவை அருமையாக உள்ளது...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. பத்து நிமிஷமா ஓடலைன்னு சொன்னாலும் நின்ற நேரத்தைக் கூட்டிக்க நினைக்கிறாரே,விவரமான ஆள்தான் !
   நன்றி

   Delete
 2. 1) விடாக்கொண்டன் கொடாக்கண்டன்!
  2) உண்மையான ஜோக்.
  3) ஆஹா...

  ReplyDelete
  Replies
  1. 1.அடுத்த படியா செல்லுலே நேரத்தைப் பார்த்துச் சொல்லுங்க என்பாரோ ?
   2.கடைப் பெயர் ஹரிச்சந்திரன் ஸ்வீட் ஸ்டாலா இருக்குமோ ?
   3.பறக்கிற பிளேன்லேசூடு பறக்கிற பிரியாணின்னா நல்லாத்தான் இருக்கும் !
   நன்றி

   Delete
 3. Replies
  1. நீங்களும் சாட்சிகளை இப்படித்தான் மடக்கி மடக்கி கேள்வி கேட்பீங்களா ?
   நன்றி

   Delete
 4. அட கடவுளே! கடிகாரம் எப்ப நின்னுருக்குன்னு பார்த்துச் சொல்லக் கேட்கிறியளே!

  ReplyDelete
  Replies
  1. அப்பத்தானே, உண்மையான நேரத்தை இன்னொருவரிடம் கேட்டு உறுதிப் படுத்திக்க முடியும் ?
   நன்றி

   Delete
  2. நேரம் கேட்டவர விடுங்க இப்படியெல்லாம் நகைசுவைகளைச் சிந்திச்சு
   எழுதின பகவஞ்சிதான் விவகாரமான ஆளு :)))

   Delete
  3. அய்யய்யோ ,உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா ?இனிமே எப்படி வெளியே நான் தலை காட்டுவேன் ?ஒரு ஆறுதல் ,நீங்க சொல்ற ஆள் பகவான்ஜி இல்லை ..பகவஞ்சிதானே ?அது நான் இல்லைன்னு ..(கற்பூரம் அணைத்து...வேண்டாம் வேண்டாம் சுடும் )..சொல்லத் தயார்!
   நன்றி

   Delete
  4. சரி விடுங்க சகோ இத நாங்க நம்பிட்டோம் :))))))))

   Delete
  5. நானும் உங்களை நம்புறேன் )))

   Delete
 5. வெவராமான ஆளுதான். வுட்டா, தம்பி கைல கடியாரம் வச்சிருக்க. பைல ஏதாவது பணம் வெச்சிருக்கியா அப்டீம்பாரு.

  கோபாலன்

  ReplyDelete
  Replies
  1. டயம் பார்க்க செல் இல்லை என்று சொன்னதுக்கு ...உங்க மனைவி கூட நீங்க கொஞ்சி கொஞ்சி பேசிகிட்டு இருந்ததை கேட்டேன்னு சொன்னவர் ,நீங்க சொன்ன மாதிரியும் கேட்பார் தான் !
   நன்றி

   Delete
 6. 1. இன்னிக்கு கடிகாரத்துக்கே நேரம் சரியில்லை!..
  2. எப்படியாவது ஸ்வீட்டை எல்லாம் ஓட்டித்தானே ஆகணும்!..
  3. பறக்கிறது எல்லாம் பிரியாணியா!?..

  ReplyDelete
  Replies
  1. 1. இப்படி கழுத்தை அறுக்கிற ஆளை கழுத்தை பிடித்து பஸ்ஸில் இருந்து வெளிய தள்ளி இருந்தா ,யாருக்கு நேரம் சரியில்லேன்னு தெரிஞ்சிருக்கும்!
   2.கூடையிலே கொண்டு வர்ற சூத்த கத்திரிக்காயேவித்து போகுது ,ஸ்வீட்டா விக்காது ?
   3.பறக்கிறதில் இருந்து கீழே விழுந்தால் மனுசனும் பிரியாணி தான் !
   நன்றி

   Delete
 7. மூன்றும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்ததோடு நிற்காமல் கமெண்ட்டும் போட்டதற்கு நன்றி !

   Delete
 8. மூன்றுமே சூப்பர்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. கலக்கல் போய் சூப்பர் வந்தது டும் டும் டும் ...வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 9. ஈ........... ஹ ஹா...!

  ReplyDelete
  Replies
  1. இந்த பதிவில் சமந்தா படம் போட்டிருந்தால் பலரும் வாய்க்குள்ளே ஈ போறது தெரியாம பார்த்திருக்கக் கூடும் !
   நன்றி

   Delete
 10. Replies
  1. புரோட்டா கார்த்தி அடுத்த கட்ட பட சூட்டிங் போயிட்டு வந்தீங்களா,dd ஜி?இன்னிக்கு லேட்டா வந்து இருக்கீங்கன்னு கேட்டேன் !
   நன்றி

   Delete
 11. எல்லாவற்றிற்கும் ...ஹா..ஹா... ..என்று சிரிக்கத் தான் வருகிறது....
  நன்றி..
  பயணம் தொடர வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்..

  ReplyDelete
  Replies
  1. அவரை போன்ற விடாக் கண்டன்களுடன் பயணம் என்றால் கசக்கும் ,உங்களைப் போன்ற இனிய உள்ளங்களுடன் என் பயணம் தொடர்கிறது !
   நன்றி

   Delete
 12. பக்கத்தில் இருப்பவரை கடுப்படிக்க வேண்டும் என்றால், இப்படியெல்லாம் கூட வழி இருக்கிறது என்று சொல்லிவிட்டீர்கள். நீங்க எல்லாம் ரொம்ப நல்லா இருப்பிங்க!!!!

  ReplyDelete
  Replies
  1. இன்னொரு வழியும் இருக்கிறது ,அது ...நாம் இறங்க வேண்டிய இடத்தை சொல்லி விட வேண்டியது ,அது வருவதற்குள் நூறு முறையாவது வந்துச்சா ,வந்துச்சான்னு கேட்கலாம் ...எப்பூடி ?நான் நூறு வருசமாவது நல்லா இருப்பேன்னு புரிஞ்சுக்குங்க !
   நன்றி

   Delete
 13. இந்த வருசத்த விட போன வருசம்தான் ரொம்ப ஃபார்ம்ல இருந்துருக்கீங்க போல. இருந்தாலும் வருசக் கணக்கான தினம் ஒரு ஜோக்குன்னு உங்களால மட்டுந்தான் எழுத முடியும் :)

  ReplyDelete
  Replies
  1. இன்றைய(20ம்தேதி ) பதிவைப் படித்த சகோ DD அவர்கள் ..Full பார்ம்லே இருக்கிறீங்க போலிருக்குன்னு சொல்லி இருக்கார் ,நீங்கள் போன வருஷம் இருந்ததா சொல்றீங்க ...இருவருமே சொல்றது சரிதான்னு படுது !
   நன்றி

   Delete