Friday, 2 May 2014

கரப்பான் பூச்சியிடம் உள்ள பயம் கூட கணவனிடம் ...?

''உங்க மீசையைப் பார்த்தா எனக்கு கரப்பான்பூச்சி ஞாபகம்தான் வருது !''
''உங்களுக்கு வருது சரி ,கரப்பான் பூச்சிக்குப் பயப்படுற என் மனைவிக்கு  வர்ற மாதிரி தெரியலையே ?''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!மாப்பிள்ளை 'CHEF 'ப்பா இருப்பாரோ ?

'' கல்யாணமான புதுசுல நான் அடிக்கடி  என்

பிறந்தகத்துக்கு போவேன் ,நீயேன் வரவே 

மாட்டேங்கிறே ?''

''நான் என்னம்மா  செய்றது ?அப்பா சமையலைவிட 

அவர் சமையல் அருமையா இருக்கே !''

'சிரி'கவிதை!மடியிலே கணவன் ,மனதிலே காதலனா ?

'ஒன் பை டூ 'டீயே 

எனக்கு பிடிக்காதாகையால் ...

என்னை ...என்னை மட்டுமே 

விரும்பும் பெண் தேவை !


20 comments:

  1. இந்த விஷயம் அந்த அமாவுக்கு தெரிஞ்சு போன உள்ள மீசையும்
    இல்லாமல் போயிடும் ஜாக்கிருத :))))))))

    ReplyDelete
    Replies
    1. இப்படி வேற சொல்லிக்கிட்டு அலையிறீங்களான்னு உதைக்காமே விட்டா சரி !
      நன்றி

      Delete
  2. Replies
    1. மனுஷன் எப்படியெல்லாம் பயமுறுத்த நினைச்சாலும் நடக்க மாட்டேங்குதே !
      நன்றி

      Delete
  3. உங்களுடைய புகைப்படத்தில் உள்ள மீசையை பார்த்தால் பயம் வருவதற்கு பதில் சிரிப்பு தான் வரும் போல இருக்கே!!!! ஹி... ஹி....

    உண்மையை சொல்லுங்க, இரண்டாவது ஜோக் உங்களுடைய அனுபவம் தானே???

    ReplyDelete
    Replies
    1. என் ஜோக்கைப் படித்து வராத சிரிப்பு ,மீசையைப் பார்த்தா வருது ?கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்னு சொல்ற மாதிரி இருக்கே !

      என் மாமனாரின் கைப் பக்குவத்தை சாப்பிட பிடிக்காமல் என் மாமியார் ,என் கல்யாணத்தின் முன்பே போய் சேர்ந்து விட்டார் என்பதே உண்மை !
      நன்றி

      Delete
  4. முதல் ஜோக் 'ஹா' (பெண்கள் ஆண்கள் பக்கத்தில் இருக்கும்போதுதான் கரப்பான் போச்சிக்கு பயப்படுவதாக சமீபத்தில் எங்கேயோ படிச்சேனே...!)

    இரண்டாம் ஜோக் "ஹா...ஹா...ஹா"

    மூன்றாவது : பொண்டாட்'டீ'யைத் தேடுகிறார் போல!

    ReplyDelete
    Replies
    1. படிச்சிருக்க மாட்டீங்க ,உங்க அனுபவமா இருக்கும் !

      நீங்க chefஆ இல்லையென்றாலும் சிகப்பா இருப்பீங்க ,அப்படித்தானே ?

      இவருக்கு எதிலுமே கட்டிங் பிடிக்காது !
      நன்றி

      Delete
  5. அப்படி ஐடியா பண்ணி கரப்பான் மீசை வைத்தும்
    பயப்படவில்லையென்றால் என்னதான் செய்வது ?

    ReplyDelete
    Replies
    1. இது ஐடியான்னு தெரிஞ்சா ...கரப்பான் பூச்சியை அடித்த துடைப்பத்தாலை அவரையும் அடிப்பாங்க போலிருக்கே !
      நன்றி

      Delete
  6. Replies
    1. மூணுக்கும் சேர்த்து த ம மூன்றா வாத்தியாரே ?
      நன்றி

      Delete
  7. 1. கரப்பான் பூச்சியா?..
    2. நல்ல பொண்ணு!..
    3. !?..

    ReplyDelete
    Replies
    1. 1 கணவனுக்கு பயப்படாத மனைவிகளைப் பயமுறுத்தும் கரப்பான் பூச்சியேதான் !
      2.புருசனின் கைமனத்திற்குஅடிமையான பொண்ணு !
      3.காலம் கெட்டு கிடக்கு,பொண்ணு தேடுறவன் இப்படி விளம்பரம் தர வேண்டியிருக்கே !
      நன்றி

      Delete

  8. கரப்பான் பூச்சிக்கும்
    மாப்பிள்ளை மீசைக்கும்
    முடிச்சுப் போட்டாச்சா?

    ReplyDelete
    Replies
    1. முடிச்சு வாங்கிகிட்டவ மீசைக்கு பயப்படுற மாதிரி தெரியலையே ?
      நன்றி

      Delete
  9. மூன்றுமே பிடித்தது! :)))

    அவர் சமையல் அப்பா சமையலை விட நன்று! :)))) அடடா என்னவொரு ரசனை!

    ReplyDelete
    Replies
    1. மூன்றும் பிடிச்சதுன்னு மூன்று நாள் கழித்து கமெண்ட் போட்டதற்கு நன்றி !

      வம்சமே உட்கார்ந்து சாப்பிடுற வழக்கம் உள்ளவங்க போல !
      நன்றி

      Delete
  10. அந்தாளு கடைல ஸ்ப்ரே டப்பால இருந்த கரப்பான்பூச்சி படத்த கடக்காறரு முன்னாலயே இது பெரிய கொசுன்னு சொல்லி சம்சாரத்த ஏமாத்திப்புட்டாரு. வாங்குனா மீசேல அடிச்சிருவான்னு பயமாம்.

    கோபாலன்

    ReplyDelete